அதிமுக வை ஆதரிப்பது பி.ஜே.பி. யை ஆதரி்ப்பதுதான்

‘2013 -14 ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பிர்லா குரூப்பின் சகாரா நிறுனத்திடம் பணம் பெற்றார்’ என்று ராகுல் இன்று ஆதராத்தோடு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அந்த மோடி அரசுதான், தமிழகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை செய்து ஊழலை கண்டுபிடிக்கிறது.

இதைச் செய்வதற்கு மோடி அரசுக்கு யோக்கியதை இல்லை என்றாலும், இதை விட்டால் ஆளும் வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாவதற்கு வாய்ப்பே இல்லை.
புரட்சிகர, நேர்மையான அரசு வந்துதான் ஊழல் மீது நடிவடிக்கை எடுக்கணும் என்றால் ஊழல் வெளியே வரவே வராது.

அதிகாரப் போட்டி, பழி வாங்கும் நடவடிக்கை, ஆட்சியைக் கை பற்றுவதற்கான நோக்கம், ஆளும் கட்சி, எதிர் கட்சி சண்டை;
இந்திய ஜனநாயக அமைப்பில் இந்த முறையில் ஊழல்கள் அம்பலவாதைத் தவிர வேறு வழியே இல்லை.
அந்த வகையில் இந்த ரெய்டை நான் ஆதரிக்கிறேன்.
*
மற்ற கட்சிகளைப் போல் பி.ஜே.பி. வெறும் கட்சி மட்டுமல்ல, அது இந்து ஆதிக்கப் பண்பாட்டின் அடையாளம். அதற்கு அதிகாரத்தை விடத் தன் திட்டங்களை நடைமுறை படுத்துவதுதான் நோக்கம்.

ஆக, அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதால் பி.ஜே.பி. க்கு எந்த நன்மையும் இல்லை என்பது மட்டுமல்ல, நஷ்டம்.
உடனே தேர்தல் வந்தால், அதில் டெபாசிட் இழந்து, T. ராஜேந்திரை விடக் குறைவான ஓட்டு வாங்கப் போவது பி.ஜே.பி தான்.

ஆகையால், ஜெயலலிதா ஆட்சியிலிருந்தே நடந்த ஊழல் குற்றச்சாட்டை ஒட்டு மொத்தமாக ஓ. பன்னீர்செல்வம் மேல் சுமத்தி, அதிமுகவிலிருந்து வேறு ஒருவரை தேர்தெடுத்து தமிழக முதல்வராக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

பிறகு, அதிமுக அரசின் மூலமாகவே தன் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வதும், அதன் பிறகு தேர்தல் கூட்டணியில் அதிமுகவிடம் கூடுதல் சீட் வாங்கிக் கட்சியைத் தமிழகத்தில் பெரும் சக்தியாக வளர்த்துக் கொள்ளும்.

அதிமுகவில் பி.ஜே.பி. எதிர்ப்பு என்பது எப்போதும் இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த மிக மோசமான வன்முறைகளை ஒரு வார்த்தையால் கூடக் கண்டிக்கவில்லை. சமஸ்கிருதம், இந்தி திணிப்பு குறித்தும் அவர் வாய் திறந்ததில்லை.
ஜெயலலிதா இருக்கும்போது தவிர்க்கப்பட்ட நீட் தேர்வை இப்போது அதிமுக அரசு அமல் படுத்தியிருக்கிறது.

பி.ஜே.பி. சவாரி செய்தவதற்கு மிகப் பொருத்தமான கட்சி அதிமுக. ஆதிக்க ஜாதியை (பார்ப்பனர்) சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அதிமுக வையும் மத்தியில் பி.ஜே.பி. யையும் விரும்புவது அதனாலேதான்.

இன்னும் 4 ஆண்டுகள் அதிமுக அரசு சிக்கல் இல்லாமல் தொடர்நது நீடிப்பது பி.ஜே.பி.க்குதான் அதிக லாபம்.
(22-12-2016 அன்று பகல் 12 மணிக்குக் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்னது.)

‘பாஸ்.. நான் தான் பாஸ் எல்லாம்’

‘கருணாநிதி நான் முதல்வராவதை தடுத்துவிட்டார்’ என்ற நெடுஞ்செழியன் போன்றவரின் காழ்ப்புணர்ச்சியாலும் திமுக வில் பதவிக் கிடைக்காத திராவிட இயக்க தலைவர்களாலும் தங்கள் சுயலாபத்திற்காக, எம்.ஜி. ஆரை ‘புரட்சித் தலைவர்’ என்று ஏத்தி விட்டு உருவான கட்சிதான் அதிமுக.

அதே கருணாநிதி எதிர்ப்பு திராவிட இயக்க குரூப்புதான் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்று ஜாக்கி வைத்து காரியம் சாதித்தார்கள்.

ஆக, அதிமுகவில் கொள்கை, கோட்பாடு எல்லாம் கிடையாது. ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற ஒரே முழக்கம்.
அதனால்தான் ‘திராவிட இயக்க எதிரப்பு’ என்கிற பெயரில் கருணாநிதி எதிர்ப்பை மட்டும் பேசுகிற பார்ப்பனர்கள், தமிழ் தேசிய தலைவர்கள் மற்றும் பலரும் அதிமுகவின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

இன்னும் நெருக்கிப் பார்த்தால், அதிமுக வை ஆதரித்துப் பேசுபவர்களிடம் இவர்களில் யாரும் திராவிட இயக்க எதிர்ப்பு பேச மாட்டார்கள். திமுக வை ஆதரிக்கிறவர்களிடம் தான் பேசுவார்கள். சிலர் பெரியார் வரை திட்டுவார்கள்.

ஆக, மதவாத எதிர்ப்பாளர்கள் அதிமுகவிற்குள் ‘கொஞ்சம்’ போலத் திராவிட அய்டியாலஜியை தேடுவது, பயனற்றது. ஏனென்றால் அந்த அய்டியாலஜி அதிமுக காரர்களுக்கும் பயனற்றது.

அது மட்டுமல்ல அதிமுகவிற்குள் மோடியை, பி.ஜே.பி. யை எதிர்க்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை. இன்னும் சரியாகச் சொன்னால் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தான் அதிகம் இருக்கிறது. தனிப்பட்ட முறையிலும்.
இப்போது நடக்கிற பிரச்சினைகூட ‘மோடியிடம் யார் செல்வாக்கு பெறுவது? ‘பாஸ்.. நான் தான் பாஸ் எல்லாம்’ என்ற பாணியலானதுதான்.

இப்போதும் அவர்கள் பாஜக ஆதரவாளர்களாகதான் இருக்கிறார்கள்.
அதற்குச் சாட்சி. 500 ரூபாய் பிரச்சினையில் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் அதைக் கண்டித்து ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாததே சாட்சி.

இந்தியாவிலேயே ரூபாய் நோட்டு பிரச்சினையைக் கண்டிக்காத கட்சி பிஜேபியும் அதிமுகவும் மட்டும்தான்.

ஜாதி Vs ஜாதி

/விரைவில்/

ஜாதி Vs ஜாதி

இதுவரை சசிகலாவிற்காக ஜெயலலிதாவை ஆதரித்தவர்களும்,
ஜெயலலிதாவிற்காகச் சசிகலாவை ஆதரித்தவர்களும் இப்போது சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அப்போ, ஆதரித்தற்கான காரணம் ஜாதி . இப்போ சண்டையிட்டுக் கொள்வதற்கு காரணமும் ஜாதி.

/விரைவில்/

எவ்வளவு திறமையான கொள்ளைக்காரர்களும் பங்கு பிரிக்கும்போது கண்டிப்பா சண்டை போட்டுப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் காட்டியும் கொடுத்துப்பாங்க.

கோஸ்டி மோதலில் கண்டிப்பா எல்லா மர்மங்களும் வெளியே வரும். /விரைவில்/
07 November at 10:13

மனசாட்சிபடி மரணத்திற்கு நான் செய்த மரியாதை

மெல்லிசை மன்னர், ஆச்சி மனோரமா காலமானபோது புதியதலைமுறை தொலைக்காட்சி நேரலையில் கலந்துகொண்டேன். திரை, அரசியல், இசை பிரமுகர்களை விட நான்தான் அதிக நேரம் ஏறக்குறைய முழுமையாகவே இருந்தேன். அவர்களின் கலை சிறப்புகளை என் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். அதை நான் மிக விரும்பி செய்தேன்.

அப்துல் கலாம் அவர்கள் மரணத்தின் போதும், நா. முத்துக்குமார் இறந்தபோதும், இன்று முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தின்போதும் புதியதலைமுறை தொலைக்காட்சியினர் என்னை நேரலைக்கு அழைத்தார்கள்.

பொதுவாகத் திரைப்படப் பாடல் வரிகள் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது என்பதால்,
முத்துக்குமார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்ற காரணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.

முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம், இன்று முதல்வரின் மரணத்தின் நேரலையின் போதும் நான் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்டேன். காரணம் இருவர் குறித்தும் எனக்கு மிக அதிகமான விமர்சனங்கள் இருப்பதுதான்.

அப்படி அதிக விமர்சனங்கள் இருப்பதை முற்றிலுமாக மறைத்துச் செயற்கையாக பேசிக் கொண்டிருப்பது, இறந்தவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்ற எண்ணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.

என் மனசாட்சிபடி அவர்கள் இருவரின் மரணத்திற்கும் நான் செய்த மரியாதையாகக் கருதுகிறேன்.

‘கீரை விக்கிற கெழவி தள்ளிப்போ.. ’

மக்களிடமிருந்த 500, 1000 எல்லாம் எடுத்தாச்சு, அப்புறம் என்ன ATM மை இழுத்து முட வேண்டியதுதான். இனி கார்டு தேய்க்கிறவர்களக்கு மட்டும் தான் செலவு பண்ணும் உரிமை இருக்கிறது.
‘வீடு வீடா மீன், கீரை விக்கிறவங்க.. டெபிட் கார்டு தேய்கிற மிசின் வாங்க்கிக் வேண்டியதுதான்’ – அதாவது சொந்தமா இனி ஒரு கட்டு கீரை கூட வியாபாரம் பண்ணக்கூடாது.

‘கீரை விக்கிற கெழவி தள்ளிப்போ.. ஒளிமயமான இந்தியாவோட வெளிச்சத்த மறைக்காத. அம்பானி முகத்துல உன் நிழல் படுதுல்ல’
28 November at 10:13