‘பாஸ்.. நான் தான் பாஸ் எல்லாம்’

‘கருணாநிதி நான் முதல்வராவதை தடுத்துவிட்டார்’ என்ற நெடுஞ்செழியன் போன்றவரின் காழ்ப்புணர்ச்சியாலும் திமுக வில் பதவிக் கிடைக்காத திராவிட இயக்க தலைவர்களாலும் தங்கள் சுயலாபத்திற்காக, எம்.ஜி. ஆரை ‘புரட்சித் தலைவர்’ என்று ஏத்தி விட்டு உருவான கட்சிதான் அதிமுக.

அதே கருணாநிதி எதிர்ப்பு திராவிட இயக்க குரூப்புதான் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்று ஜாக்கி வைத்து காரியம் சாதித்தார்கள்.

ஆக, அதிமுகவில் கொள்கை, கோட்பாடு எல்லாம் கிடையாது. ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற ஒரே முழக்கம்.
அதனால்தான் ‘திராவிட இயக்க எதிரப்பு’ என்கிற பெயரில் கருணாநிதி எதிர்ப்பை மட்டும் பேசுகிற பார்ப்பனர்கள், தமிழ் தேசிய தலைவர்கள் மற்றும் பலரும் அதிமுகவின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

இன்னும் நெருக்கிப் பார்த்தால், அதிமுக வை ஆதரித்துப் பேசுபவர்களிடம் இவர்களில் யாரும் திராவிட இயக்க எதிர்ப்பு பேச மாட்டார்கள். திமுக வை ஆதரிக்கிறவர்களிடம் தான் பேசுவார்கள். சிலர் பெரியார் வரை திட்டுவார்கள்.

ஆக, மதவாத எதிர்ப்பாளர்கள் அதிமுகவிற்குள் ‘கொஞ்சம்’ போலத் திராவிட அய்டியாலஜியை தேடுவது, பயனற்றது. ஏனென்றால் அந்த அய்டியாலஜி அதிமுக காரர்களுக்கும் பயனற்றது.

அது மட்டுமல்ல அதிமுகவிற்குள் மோடியை, பி.ஜே.பி. யை எதிர்க்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை. இன்னும் சரியாகச் சொன்னால் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தான் அதிகம் இருக்கிறது. தனிப்பட்ட முறையிலும்.
இப்போது நடக்கிற பிரச்சினைகூட ‘மோடியிடம் யார் செல்வாக்கு பெறுவது? ‘பாஸ்.. நான் தான் பாஸ் எல்லாம்’ என்ற பாணியலானதுதான்.

இப்போதும் அவர்கள் பாஜக ஆதரவாளர்களாகதான் இருக்கிறார்கள்.
அதற்குச் சாட்சி. 500 ரூபாய் பிரச்சினையில் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் அதைக் கண்டித்து ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாததே சாட்சி.

இந்தியாவிலேயே ரூபாய் நோட்டு பிரச்சினையைக் கண்டிக்காத கட்சி பிஜேபியும் அதிமுகவும் மட்டும்தான்.

ஜாதி Vs ஜாதி

/விரைவில்/

ஜாதி Vs ஜாதி

இதுவரை சசிகலாவிற்காக ஜெயலலிதாவை ஆதரித்தவர்களும்,
ஜெயலலிதாவிற்காகச் சசிகலாவை ஆதரித்தவர்களும் இப்போது சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அப்போ, ஆதரித்தற்கான காரணம் ஜாதி . இப்போ சண்டையிட்டுக் கொள்வதற்கு காரணமும் ஜாதி.