‘இறந்து போன பெண்ணிற்கு இந்த விபச்சார ஊடகங்களும்..’

‘இறந்து போன பெண்ணிற்கு இந்த விபச்சார ஊடகங்களும்..’
என்று கலைமாமணி Sve சேகர் SHARE செய்திருக்கிறார்.

ஆனால், ஊடகங்களுக்குக் கோபம் வரவில்லை என்பதுகூடப் பரவாயில்லை. அவர்களால் அவரைப் புறக்கணிக்கக் கூட முடியாது.

இவ்வளவு இழிவாகச் சொன்ன பிறகும் ‘இறந்து போன பெண்ணிற்கு..’ செய்தி வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சியில், நேற்று 11 ஆம் ஆண்டு விழா வாழ்த்துச் சொல்லி குழைகிறார் நாடக சாம்ராட் Sve S.
‘சத்திரியர்’ களின் வீரமோ இப்படிப் பார்ப்பனர்கள் முன் சரிந்து விழுகிறது.

ஏற்கனவே திரு. நாராயணனுடனான News7 Tamil விவகாரத்தில், கலைமாமணி Sve சேகரிடம் திரு. வைகுண்டராஜன், பவ்யமாகவும் என்னை மிகத் தரக்குறைவாகவும்
‘ அண்ணாச்சி எவன் அப்படிச் சொன்னானோ அவன இனி எங்க சேனல் உள்ளேயே விடமாட்டேன்’ என்று சொல்லியதாகச் சேகர் பதிவு செய்தார்.

இது என்னை மட்டுமல்ல, முற்போக்காளர்கள், சிறுபான்மை சமூகத்தவர்கள் அனைவரையும் அவமானப்படுத்திய செயல்.
‘Sve சேகருக்கு ஆட்சேபனை இல்லாத முற்போக்காளர்கள் மட்டும்தான் News7 Tamil நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்’ என்று இனி எனக்குப் பதில் கலந்து கொள்கிறவர்களையும் சேர்த்து அவமானப்படுத்தியது.

இதுவரை வைகுண்டராஜனோ, News7 Tamil நிர்வாகமோ கலைமாமணியைக் கண்டிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
‘விபச்சார ஊடகங்கள்’ – என்று சொன்ன பிறகும் சேகர் facebook ல் எழுதிய வேறு செய்தியை எடுத்துத் தங்கள் தொலைக்காட்சியில் வெளியிட மறக்கவும் இல்லை.

‘கெட்ட வார்த்தையில் திட்டினாலும் அதைத் திட்டுவதற்கான தகுதி, திறமை அவாள்களுக்கு மட்டுமே உண்டு’ என்று ‘அவாள்கள்’ மட்டுமே நினைப்பதில்லை என்பதுதான் எல்லா பண்பாட்டு அவமானங்களுக்கும் காரணம்.
8 september

WHOLESALE – ஏ.ஆர். ரஹ்மான்; ‘Sound வாங்கலியோ.. Sound’

எல்லாக் காட்சி ஊடகங்களுக்கும் ஒரே நாளில் சிறப்புப் பேட்டி. தன் தயாரிப்பை விற்பதற்கான விளம்பரம்.

ரஹ்மான் இசையை அல்ல, சப்தத்தை (Sound) ரிதமாகத் தயாரிக்கிறார். அதை இசை என்ற பெயரில் சந்தை படுத்துகிறார். சத்தத்தோடு கூவி, கூவி விற்றால்தான் பொருட்களை விற்க முடியும். அது பாடலாகாது.

அதுபோல் விளம்பரங்களுக்குச் சேர்க்கப்படும் பாடல்கள் அல்லது சத்தம் இசையாகாது. அதன் நோக்கம் பொருட்களை விற்பது.
அதன் தரத்தை மக்களின் ரசனை தீர்மானிப்பத்தில்லை. சந்தைதான் தீர்மானிக்கிறது.

அதனால் எப்படியாவது திட்டமிட்டு மக்கள் மீது திணிக்க வேண்டிய கட்டாயம் அவற்றிற்கு இருக்கிறது. இப்படித் திணிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் சந்தை சர்வதேச அளவில்.

ரஹ்மான் சந்ததைக்காகச் சப்தத்தைத் தயாரித்து இசை என்ற பெயரில் wholesale லுக்கு விற்கிறார். அதை வாங்குகிற சில்லரை விற்பனையாளர்கள் உலகத்திலேயே மிகச் சிறந்த பொருள் என்று கூவி கூவி விளம்பரப்படுத்துகிறார்கள்.

ஹாலிவுட் படங்களுக்கு இன்று இந்தியா பெரிய சந்தை. அதன் பொருட்டுதான் ‘இந்தி’ய திரையில் பிரபலமானவர்களின் பங்களிப்பை ஹாலிவுட் படங்களில் தொட்டுக் கொள்கிறார்கள். இந்தியில் பிரபலமான பிறகு ரஹ்மான் சர்வதேச சரக்காக மாறியதின் ரகசியமும் இதுதான்.

கோ க கோலா, பெப்சியும் இன்னும் சர்வதேச cosmetics கம்பெனிகளும் எப்படி ஜஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் இவர்களை உலக அழகிகளாகத் தேர்தெடுக்க வைத்து இந்திய சந்தையைப் பிடித்ததோ, அதுபோல் ரஹ்மானுக்கான இந்திய பின்னணி கொண்ட slumdog millionaire என்ற ஹாலிவுட் படத்தில் வாய்ப்பும் அதை ஒட்டி ஆஸ்கர் விருதும்.

அதனால் அவருக்கு எப்போதும் சந்தையில் பொருட்கள் விற்க வேண்டிய நெருக்கடி. ஆக, வியாபரிகள் மக்கள் எப்படி வாழ்கிறா்கள் என்று கவனிக்க மாட்டா்கள். அலட்சிப்படுத்துவார்கள்.

உயிரினங்களின் இயற்கையின் ஓசையும் மக்களின் வாழ்வியல் ஒலியையும் கேட்காதவர்களிடம் கற்பனையோ, உணர்வுகளோ இருக்காது. இவை இரண்டும் இல்லாதவர் இசையை ஒருபோதும் உருவாக்க முடியாது.
மற்றவர்களின் பாடல்களை, இசையை கேட்டு அதை தழுவுகிற டெக்னிக்கில்தான் கில்லாடியாக இருப்பார்கள். கலைக்கு டெக்னாலஜி தேவைப்படலாம். டெக்னாலஜி கலையாகாது.

தமிழ் திரைஇசையைத் தமிழர்களுக்கான இசையகாவே உயர்த்தி உன்னதமாக்கியவர் எம்.எஸ். விஸ்வநாதன். அதை உலக உன்னதமாக உயர்த்தியவர் இளையராஜா.

அதனால்தான் ‘நவீன’ ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களைக் கேட்பதைவிடவும் மிகப் பழைய எம்.எஸ்.வி. பாடல்களை அவர் காலத்தை விடவும் இப்போதுதான் அதிகம் கேட்கிறார்கள் தமிழர்கள். காரணம் அதில்தான் இசை இருக்கிறது.

திரை இசையின் உன்னதமோ இளையராஜாவோடு முடிந்துவிட்டது.
8 september

ஆசிரியர் தினம் கொண்டாட தகுதியான ஆசிரியர் ஒருவரே; அவர் இவரல்ல.- 5 நிமிடம்.

சுதேசிகளான தேச துரோகிகள் நீட்டி முழங்கும் NEET

புதிய கல்வி கொள்கையின் முன்னோட்டம் தான் NEET. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் மருத்துவக் கல்விக்கான மூடு விழாவிற்குப் பெயர் NEET; ஆரம்பக் கல்விக்கே ஆப்பு, அதுக்குப் பெயர் தான் புதிய கல்வி கொள்கை.

பார்ப்பனியமும் ஏகாதிபத்தியம் இணைந்த கைகளாக வேதக்கல்வி + தனியார் பள்ளி + இரண்டும் கலந்த நவீன கல்வி. இது மட்டுமேதான் திட்டம். பாடத் திட்டம்.

‘சுதேசி’ என்ற புனைபெயரில் பார்ப்பனிய – இந்து பெருமை பேசுகிறவர்கள், அதற்கு நேர் எதிராக ‘விதேசி’ அமெரிக்கா – அய்ரோப்பிய நாடுகளின் பெருமை பேசுவார்களே, அதே பாணி. ‘சமஸ்கிருத உணர்வு + ஆங்கில அறிவு = தேசபற்று’

பார்ப்பன மேன்மை + முதலாளித்துவக் கொள்ளை; இந்தக் கள்ளக்கூட்டுதான் இனி இந்தியாவின் உயிர்நாடி.

ஆக, NEET க்கு நாம் அடிக்கும் சாவு மணியே, தமிழர்களை மட்டுமல்ல, எளிய இந்தியர்களையே விடுதலை செய்வதற்கான நம்பிக்கை ஒலி.
– வே.மதிமாறன்