“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது?”

அரசியல் சூழல், என் பிரச்சார முறை குறித்தும் விரிவாக விளக்கினார். என் பாதுகாப்புக் குறித்து அதிக அக்கறையோடு விசாரித்தார். அவர் நலன் அறிய போனவனிடம் ‘6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கவனமாக இருங்கள்’ என் நலனில் அக்கறை கொண்டார்.

ஆசிரியரின் உதவியாளர், ‘நிறைய இளைஞர்கள் வெளிநாட்டிலிருந்தும் மதிமாறன் பேச்சை கேட்டு பெரியார் கருத்தால் ஈர்க்கப்பட்டோம் என கழத்தோடு தொடர்பு கொள்கிறார்கள்’ என்றார். கேட்ட மாத்திரத்தில் ஆசிரியர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

கலைஞர் சிலை திறப்பு விழாவில் ஆசிரியரின் குரல் கம்பீரத்தோடு ‘யார் அது எனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னது?’ என்கிற தொனியில் ஒலித்தது. அதில் உற்சாகம் பெற்றே அவரை சந்திக்க சென்றேன்.
உற்சாகாத்தோடு நலமாக இருக்கிறார் ஆசிரியர். அவர் நலன் பெரியாரியத்தால் இயங்குகிறது.

Leave a Reply

%d bloggers like this: