தடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்

17 பேரை சுவர் கொன்றிருக்கிறது. சுவர் கொலை ஆயுதமாக மாறியதற்கு அதன் உயரமும் தரமற்ற தன்மையும் தான் காரணம். கட்டியவர்கள், அனுமதித்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
*
17 பேர் பலியானதை இயற்கை சீற்றத்தால் மரணம் என ஏற்றுக் கொள்; இல்லையேல் உன்னையும் அடித்தேக் கொல்வோம் என்ற பாணியில், தோழர் நாகை திருவள்ளுவன் உட்பட தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலிஸ் மீது நடவடிக்கை எடு.

*

அந்தச் சுவர் இடிந்து விழ வேண்டும் என்பதற்காகவே பராமரிக்காமல் விடப்பட்டிருக்கிறது. மரணம் நேர்ந்தால் இடத்தை காலி செய்து விடுவார்கள் என்ற திட்டத்தில்.
பிறகு, மாற்று இடம் என்ற பெயரில் நம் மக்களை அப்புறப்படுத்தும் வேலையும் ஆறாப் போட்டு நடக்கும்.
பாதிக்கப்பட்டவர் மீதே தடியடி நடத்திய அரசு அதைத்தான் செய்யும்.

Leave a Reply

%d bloggers like this: