கொரானாவை வெல்லும் வழி

காலரா, பிளேக் போன்றவை மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து முதலாளித்துவ நாடுகளுக்கும் வறுமையிலிருப்பவர்களிடமிருந்து வசதியானவர்களுக்கும் தொற்றிய நோய்.
அதனால்தான் கூட்டமாக வாழ்கிற எளிய மக்களை எளிதில் தொற்றி கொன்று குவித்துக் கொள்ளை நோயாக விஸ்வரூபம் எடுத்தது.

ஆனால், கொரானா வளர்ந்த அல்லது வணிகத்தில் தொழிலில் சுற்றுலாவில் முன்னணியில் இருக்கிற நாடுகளிலிருந்து குறிப்பாகச் சர்வதேச விமான நிலையங்களைப் பரபரப்பாக, பந்தாவாக வைத்திருக்கிற நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கும்
வசதியானவர்களிடமிருந்து வறுமையுள்ளவர்களுக்கும் பரவுவதால், இறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் கொரானா பரவலாக இல்லாததற்குக் காரணமும் இதுவே.

மருத்துவர்கள் இதற்கு மருந்து இல்லாததால்தான் கைகளைக் கழுவுவது கூட்டத்தைத் தவிர்ப்பது என எப்போதும் கடைபிடிக்கிற பொதுசுகாதார முறைகளையே கொரான வந்தவர்களுக்கும் வராமல் தடுப்பதற்கும் மருந்ததைப்போல் திரும்ப, திரும்பச் சொல்கிறார்கள்.

கூட்டமாக வறுமையில் வாழ்கிற நாடுகளில் கொரானா பரவினால் கொள்ளைநோயாக மாறும். மக்கள் வீட்டிலேயே இருப்பதினால் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.
அரசு ஒருவேளையாவது உணவையோ உணவுப் பொருட்களையே அவர்கள் இருக்குமிடம் தந்தால் மட்டுமே சாத்தியம். பட்டினி சாவே இல்லாமல் பார்த்துக் கொண்டால் கொரானா சாவே இல்லாமல் வெல்லலாம்.

மற்றபடி, பக்தியினால் மூடநம்பிக்கையினால் கொரானாவை ஒழித்து விடலாம் எனக் கும்பல் சேர்பவர்களுக்கும் ஊதாரியாகச் சுற்றித்திரிபவர்களுக்கும் உதை விழுந்தால் தான் தடுக்க முடியும்.

எல்லாச் சமூக மக்களையும் அவமானப்படுத்தியதைப்போல், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலம் என்பதைத் தடுத்த கும்பல்;
இந்த இக்கட்டான சூழலிலும் தன் ஜாதி பெருமையோடு தீண்டாமையை வலியுறுத்தி நியாயப்படுத்தி எல்லா சமூக மக்களையும் கேவலப்படுத்துகிறது. அந்தச் சமூக விரோதிகளின் வாயில் போலிஸ் லட்டி சார்ஜ் நடத்தினால், காவல்துறை திசை நோக்கி கையெடுத்து கும்பிட காத்திருக்கிறேன்-வே. மதிமாறன்.

Leave a Reply

%d bloggers like this: