NEET பயிற்சி மையங்களை மூடுவது
NEET பயிற்சி வகுப்பிற்காகச் செலவிடும் பணம், தன் பெற்றோருக்கான பெரும் சுமை. தேர்வு பெறாமல் போனால் குடும்பமே சோகமாக மாறிவிடும் என்ற குழுந்தைகளின் அச்சமும் தற்கொலைக்குத் தள்ளுகிறது.
தற்கொலை செய்து கொண்ட குழந்தை பேசுபொருளாகவும், அதற்குக் கிடைக்கிற முக்கியத்துவமும் NEET க்கு எதிரான பேராட்ட வடிவமாகவும் மாறுவது; குழந்தையின் தற்கொலையை நியாயமாக மாற்றி அதுபோன்ற எண்ணம் கொண்ட குழந்தைகளுக்கு அந்த மரணம் பரிந்துரைக்கப்படுகிறது.
NEET கொடூர மரணங்களின்போது தங்களின் சோகம், ஆற்றாமை, ‘என் எதிர்ப்பும்’ என்கிற கணக்காகதான் எதிர்கொள்ளப்படுகிறது. சிலர் இந்த அவலமான காலங்களில்தான் NEETக்கு எதிரான PUNCH டயலாக்குகளையும் உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொருமுறையும் கல்விக்கொலைகள் நடக்கும்போது NEETக்கு எதிரான நமது குரல் ஒப்பாரியாகாத்தான் ஒலிக்கிறது. NEET டை நிறுத்துவதுதான் நிரந்தரத் தீர்வு. தற்காலிக தீர்வு NEET பயிற்சி மையங்களை மூடுவது-வே.மதிமாறன்.