நவம்பர் 1 Vs ஜுலை 18 – தமிழ் எதிர்ப்பு தேசியமா? தமிழ் உணர்வு திராவிடமா?

முவேந்தர் காலத்தில் தனி நாடாக இருந்தபோது கூட இல்லாதது தமிழர்களுக்கு எனத் தேசியகீதம். தமிழ்த்தாய் வாழ்த்து – உருவாக்கியது கலைஞர், தி.மு.க.

இன்றும் எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு.


ஒரு மாநிலத்திற்கு நாடு எனப் பெயர் வைக்கிற துணிச்சல் அதுவும் முவேந்தர் காலத்திலும் இல்லாதது. செய்தது தி.மு.க. அண்ணா.

தமிழ்நாடு பெயரை கேட்டுக் காங்கிரஸ் அரசு நடுங்கியது. ஆனால், காங்கிரஸ்காரர் சங்கரலிங்கனாரின் தியாகத்திற்கு மரியாதை செய்தது திமுக.

2000 ஆண்டுகளில் தமிழர்களுக்கு தமிழ் அடையாளத்தைச் சட்டபூர்வாகத் தந்தது திராவிட முன்னேற்ற கழம் என்கிற திராவிட இயக்கம்தான்.
திராவிட எதிர்ப்புத் தமிழ்தேசியம் – திராவிட ஆதரவு தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பை புறம் தள்ளிவிட்டு நவ 1 தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள் என்றால், அவரகள் திமுக மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள்.

பெருமாள் இல்லாத திருப்பதிபோல், திமுக இல்லாமல் திருக்குறள் மாநாடு நடத்தியவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டு திமுகவை மட்டும் தவிர்த்து திருக்குறள் மாநாடு நடத்தயபோது அதைக் கண்டித்துத் தொடர்ந்து எழுதிய, பேசிய ஒரே பெரியாரிஸ்ட் நான் மட்டுமே. அதனாலேயே அவர்கள் என் மீது கூடுதல் வெறுப்போடு இருககிறார்கள்.


அதுபோல், தமிழ்நாட்டிற்குத் தனிக் கொடி அவசியமில்லை. கர்நாடகத்தில் அதைச் செய்தவர்கள் இனவாதிகளும் சங்கிகளும்தான். அவர்கள் நமக்கு முன்னோடிகளாக இருக்க முடியாது.
அப்படியே கொடி வைத்தாக வேண்டும் என்றால்,

‘பெரியார் படம் பொறித்த கொடி’ என்று கோரிக்கை வைப்பதுதான் பெரியாரிஸ்ட்டுக்கு அழகு. அவர்தான் முதலில் தமிழ்நாடு தனிநாடு என்ற முழக்கத்தை வைத்தவர்-வே. மதிமாறன்.

Leave a Reply

%d bloggers like this: