தலைவரின் கனிவு எங்களைக் கலங்கடித்தது

💞

10 நிமிடம்கூடத் தாமதம் ஆகல, லேட்டாயிடுச்சி என அவர் வருத்தம் தெரிவித்து வரவேற்றபோதே, நாங்க திக்கமுக்காடிட்டோம்.

அவர் நின்று கொண்டு எங்களை உட்காரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி உட்கார வைத்தப் பிறகு உட்கார்ந்தார்.

காபி குடிச்சிங்களா, சாப்டிங்களா என விசாரித்தபடியே;

துர்கா அம்மாவை அழைத்து என்னை அறிமுகம் செய்தார்.

அவர் ‘பார்த்திருக்கேன்’ என்றார். அவர் முகம் பெரும் வாட்டத்திலிருந்தது. காரணம் எல்லோருக்கும் தெரியும்.

‘சோகமாக எங்களை வரவேற்கிறார்’ என நாங்கள் வருத்தப்படக்கூடாது என்பதால் தலைவர்,

‘அவுங்க சகோதரி போன வாரம் இறந்துட்டாங்க. அதான் வருத்தமா இருக்கிறாங்க’ என்றார்.

இதை அவர் எங்களிடம் விளக்கவேண்டியதே இல்லை. அவரின் கரிசனை எங்களை நெகிழ வைத்தது.

என் மகன் திருமண அழைப்பிதழை தந்தேன். மகிழ்ச்சியோடு ‘வந்துடுறேன்’ என்றார். எனக்குக் கிறுகிறுன்னு ஆயிடுச்சி.

அவர் வரணும் என்பதற்காக தரவில்லை. அவர் கவனத்திற்கும், மணமக்கள் அவரிடம் வாழ்த்துப் பெறுவதற்கும்தான் அழைத்துப் போனேன்.

‘வீட்லதான் எளிய முறையில் திருமணம். உங்க வாழ்த்துரையை வாசித்த பிறகு மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்‘ என்றேன்.

வாழ்த்துரை தரேன். நேரில் வீட்டுக்கு வந்தும் மணமக்களை வாழ்த்துகிறேன்‘ என்றார்.

‘அதனால்தான் மணமக்களை இங்கேயே அழைத்து வந்திருக்கிறேன்’ என்றேன்.

‘நான் வரேன்’ உதவியாளர் திரு. தினேஷிடம் ‘26 போயிடுவோம்’ என்றார்.

எனக்குக் கண்கள் கலங்கிவிட்டது. அவமானமாகிவிட்டது.

திருமணப் பத்திரிகையில் அவர் படமோ அவர் பெயரோகூட நான் போடவில்லை.

சால்வை ஸ்வீட் ஒரு பழம் பூங்கொத்துகூடக் கொண்டுபோகவில்லை.

வெறும் 2 ரூபா பத்திரிகையோடுதான் அவர் முன் நின்றேன். அதுவும் பிரிண்ட் அவுட்.

நாடே தலைவர் நேரத்திற்காகக் காத்திருக்கும்போது, எளிய நாங்கள் மிக எளிதாகத் தலைவரை சந்தித்திவிட்டோம்.

என்னை அவருக்கு நினைவில் இருப்பதே பெரும் மகிழ்ச்சி. உடன் அவரின் பேரன்பு நிலைகுலையச் செய்தது.

காலை உணவுடன் கல்வித் தரும் வரலாற்று நாயகரை முதல்முறையாக நேருக்கு நேர், எனக்கான நேரத்தோடு சந்தித்தேன்.

என் நீண்ட திராவிட இயக்க அரசியல் பயணத்தில் நேற்றைய நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

பிப்ரவரி 26 திருமணநாள் மகிழ்ச்சியைப் பிப்ரவரி 11 தேதியே கொண்டாடிய நெகிழ்ச்சியான மகிழ்ச்சியோடு❣️

(என் இணையர், மருமகளுக்கு பின் கலைஞர் படம் மறையாமல் அமைந்தது, தற்செயலானதுதான் என்றாலும், அது பெண்களுக்கான ஒதுக்கீடு, சொத்துரிமையின் குறியீடு)

Leave a Reply

%d