அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளா?
பகிரங்க உறவிலிருந்து கள்ள உறவுக்கு
பாஜக – அதிமுக இடையே நடக்கும் இன்றைய காட்சியை நான் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
பாஜகவோடு பகிரங்க உறவிலிருந்து விலகி இனி தேர்தல் வரை கள்ள உறவு. தேர்தலுக்குப் பிறகு பகிரங்கம்.
அதற்குச் சாட்சி, பாஜக வை விமர்சிப்பதாகச் சொல்கிற அதிமுக பிரமுகர்கள் மிகக் கவனமாக மோடி, அமித்ஷா குறித்து ஒரு வார்த்தை பேசுவதில்லை.
கூட்டணி முறிவிற்கான காரணங்களில் பாஜக அரசின் மதவாத தமிழர் விரோத செயல்களை மறைமுகமாகக்கூடக் குறிப்பிடவில்லை. அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளா?
அவர்களின் அடுத்த இலக்கு திமுக கூட்டணிக் கட்சிகள்.
பாஜகவும் அதிமுகவும் வேறல்ல.
10 ஆண்டுகள் அதிமுக. 10 ஆண்டுகள் பாஜக. தமிழ்நாட்டையும் இந்தியாவையும் சீரழித்தக் கட்சிகள்.
இந்தப் புரிந்தல் கூட்டணிக் கட்சிகளுக்கும் உண்டு என நம்புகிறேன். இது கொள்கைக் கூட்டணியல்லவா?
பார்ப்போம்-25 செப்டம்பர். மாலை 6 மணி
எங்கள் தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேசுகிறார். அதனால் அவரை மாற்றுங்கள், இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் – இதுதான் அதிமுக செய்திருக்க வேண்டியது.
மாறாக அண்ணாமலையை காரணம் காட்டி கூட்டணியை முறித்துக் கொள்வது அமித்ஷா எழுதிக் கொடுத்தது.