காயல் பட்டினம் / கடத்தல் Gangster /முஸ்லிம் கொடி /சங்கி சம்பந்தி

இன்றுதான் பார்த்தேன். ஆப்கானில் ஆடு மேய்பவர் போல் தெரிகிறார். பின் முக்காட்டை விலக்கி ரங்க ராய சக்திவேல் நாயக்கர் என இரண்டு பெயருடன் ஜாதியைச் சொல்கிறார்.
அந்தப் பெயருக்கு அவ்வளவாக நெருக்கமில்லாத
காயல் பட்டினம் தன் ஊர் என்கிறார். தொழில் Gangster கடத்தல் மன்னன்.
Thug Life இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்கும் கதையாக இருக்கும் என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. காயல் பட்டினம் Gangster என்பது சங்கிகள், காயல் பட்டினம் முஸ்லிம்கள் குறித்துப் பரப்பி வைத்திருக்கிற அவதூறு என்று அறிக.
Thug Life லோகோவில் ஒரு பறவை பறக்கிறது பிறைநிலாவை உருவாக்கியபடி. அந்த பிறைக்குள் நட்சத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது முஸ்லிம் கொடியை நினைவுபடுத்தும் விதமாக. Thug Life அரபி வடிவில் எழுதப்பட்டிருக்கிறது.
விஸ்வரூபம் முதல் பகுதியின் முதல் விளம்பரம் தினத்தந்தியில் வந்தபோது இந்து பெயரான விஸ்வரூபத்தை அரபி லிபியில் எழுதியிருக்கிறார். பின்னணியில் அமெரிக்கா.
இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்கிற பாணியில் முஸ்லிம்கள் மீது குண்டு போடுவார் போல் தெரிகிறது என நான்தான் முதலில் எழுதினேன்.
பிறகுதான் எதிர்ப்பு உருவாகி வலுத்தது. படம் அதையே உறுதி செய்தது.
Thug Life அதையே நினைவுபடுத்துகிறது. மணிரத்தினத்துடன் கூட்டணி அதை உறுதிப்படுத்துகிறது.
தனிதனியாக இரண்டு பேருமே கைதேர்ந்த முற்போக்கு வேடமிட்ட சங்கிகள். ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
சங்கிகளின் குத்தாட்டத்திற்குப் பஞ்சம் இருக்காது. இஸ்லாமிய வெறுப்பும், சங்கித்தனமும் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கும் நல்லது. நமக்கும்தான். பார்ப்போம்.