எதற்கு இது? இதனால் என்ன பயன்?

தீவிர திராவிட + திமுக எதிர்ப்பாளர்கள், திராவிடத்திற்குத் தொடர்பற்று ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன என்ற கண்ணோட்டம் கொண்டவர்கள் குறித்த ஆவணப்பட விழா.

எதற்கு இது? இதனால் என்ன பயன்?

இதை நடத்துவது காலச்சுவடு அல்லது உயிர்மை பதிப்பகமாக இருந்தால் கேள்வி இல்லை. பொது நூலகத்துறை?

பெரியார் – அண்ணா – கலைஞர் – பாரதிதாசன் இன்னும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் குறித்து ஒரு ஆவணப்படம் கூடவா வரவில்லை? அல்லது அவர்கள் எழுத்தாளர்கள் பட்டியலில் இல்லையா?

அதிமுக ஆட்சியில்தான் நம்மவர்கள் உள்ளேயே நுழைய முடியல.

காலச்சுவடு கண்ணோட்டம் மிகுந்த ஆபத்தானது.

(இதுவரை என்னுடைய புத்தகங்களுக்கு நூலக ஆர்டர் கிடைத்ததேயில்லை. இனிமேலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. வாழ்த்துகள்)

Leave a Reply

%d bloggers like this: