உபரியான சில்லறைகளே இல்லை

பக்தியைத் தாண்டி விநாயகர் சதுர்த்தி சிலைகள் தமிழ்நாட்டில் அதிகம் இருப்பதற்குக் காரணம், 1 வாரம் பொதுவெளியில் வைப்பதற்கு எந்தக் கட்டணமும் கட்டுப்பாடும் இல்லை. அதை மையமிட்டு நன்கொடையும் வசூலிக்கலாம். அதில் ஒரு லாபமும் இருக்கிறது என்பதே.
சிலை வைப்பதினால் தன் பகுதியில் தனக்குக் கிடைக்கிற முக்கியத்துவம். ஊர்வலங்களில் கட்டுப்பாடற்றக் கொண்டாட்டம் இவை உற்சாகத்தோடு அடுத்த பகுதிகளுக்குச் சிலை வைக்கப் பரிந்துரைக்கிறது.
உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் இங்கு நன்கொடையெல்லாம் வசூலிக்க முடியாது. காரணம் அந்த மக்களிடம் பணமல்ல, உபரியான சில்லறைகளே இல்லை. அதனால் அங்கு விநாயகர் சதுர்த்தி சிலைகள் பொதுவெளியில் பெரும்பாலும் இல்லை.
*
பின்னணியல் தெரிவது மதுரா கிருஷ்ணன் கோயில் அருகில் உள்ள குளம். இதில்தான் கிருஷ்ணன் லீலைகளில் ஈடுபட்டாரா தெரியவில்லை.
ஆனால், அவரின் தாயார் தேவகி அம்மையார் இந்தக் குளத்தில்தான் துணி துவைத்தார் என நம்பப்படுகிறது.