அசலான ஆக்ரா

தாஜ்மஹாலின் கிழக்கு வாயிலுக்கு அருகிலேயே இருக்கிறது. குறுக்கே தாஜ்மஹாலுக்காக கட்டப்பட்ட பிரம்மாண்ட சுவர் இந்தப் பகுதியை பார்வையிலிருந்து முற்றிலுமாக மறைக்கிறது. டிரம்ப் குஜராத் வந்தபோது குடிசைப் பகுதியை ஒளித்துவைக்க கட்டப்படட சுவரைப்போல்.

தலித் மக்கள், இஸ்லாமியர், இதர பிற்படுத்தப்பட்டவர் வாழும் பகுதி. நெரிசலாக இருக்கிறது மிக வேகமாக இயங்குகிறது.

ஆட்டோ, பைக், கார், சைக்கிள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதுபோல் நெருங்கி சென்று சட்டென விலகி செல்கிறார்கள்.

சுற்றுலாப் பயணிகளிடம் இருக்கும் ஷாஜகானின் கண்கள் இவர்களிடம் இல்லை. தாஜ்மஹாலை ஒரு பொருட்டாக அவர்கள் மதித்தாக தெரியவில்லை. அதற்கான நேரமும் அவர்களுக்கு இல்லை.

இங்குதான் சுவரில் டாக்டர் அம்பேத்கர், ஜோதி ராவ் பூலே, சாவித்திரி ஓவியங்களைப் பார்க்க முடிந்தது.

மண்ணின் மைந்தர்கள் வாழும் பகுதி எல்லா நகரங்களிலும் ஒரேமாதிரிதான் இருக்கிறது. இந்தப் பகுதிகளிலும் என் கண்ணுக்கு விநாயகர் சதுர்த்தி சிலைகள் தென்படவில்லை.

இது நான் எடுத்த படமல்ல.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading