Site icon வே. மதிமாறன்

அதையும் செய்வார்கள்

பிழைப்புவாதிகள் ஒரு கட்சியை எதிர்க்கும்போதும் லாபம் அடைவார்கள். ஆதரித்தால் அதைவிடவும் லாபம் என்றால் அதையும் செய்வார்கள். செய்திருக்கிறார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆம் பிழைப்புவாதத்தின் அடிப்படையே எதைச் செய்தால், யாரை பிடித்தால் பதவி பணம் பெறமுடியும் என திட்டமிட்டு செயல்படுவதுதான்.

நேர்மையை கூடஅவர்கள் அளவிற்குத் தீவிரமாக நேர்மையாளரால் கூட பேசமுடியாது.

ஆக, அவர்கள் நம் கட்சியை எதிர்க்கிறார்கள் என நாம் விமர்சிக்கும்போதும் அவர்களுக்கு லாபம். எதிர்ப்பை இன்னும் ஊதி அதையும் கணக்குக் காட்டி எதிர்தரப்பிடம் கூடுதலாக கல்லா கட்டுவார்கள்.

நம்மை ஆதரித்தால், பரம்பரை ஆதரவாளர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி நமக்கே அறிவுரைச் சொல்கிற அதிகாரத்தோடு மேலே ஏறி நிற்பார்கள். நின்றிருக்கிறார்கள்.

காரணம், அவர்கள் பிழைப்புவாதிகள்.
அதை கவனத்தில் கொண்டு அணுகுங்கள்-வே. மதிமாறன்.

Exit mobile version