Category Archives: கட்டுரைகள்

வே.மதிமாறன் கட்டுரைகள்

முஸ்லிமாக வாழ்ந்து பார்

கொந்தளித்த மதிமாறன் | Mathimaran Hindu Muslim | #Ve.Mathimaran | H.Raja & BJP

மாட்டுக்கறி?

இந்தியாவின் சாதி சிஸ்டம்! வெளுத்து வாங்கும் எழுத்தாளர் வே.மதிமாறன்- 2017

நன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகர்கள், மாணவர்கள் சூழ சிறப்பாக நடந்தது.
திண்டுக்கல் லியோனி அவர்கள் தன் துணைவியாருடன் பார்வையாளர் வரிசையில். ‘உங்கள் பேச்சைக் கேட்பதற்காவே வந்தேன்’ எனக் கட்டித் தழுவி பாராட்டினார். மகிழ்ச்சி.

18 தேதி தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் போராட்ட வாழ்வியலை நிகழ்கால அரசியலோடும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்போடும் பேசினேன். நன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.

போராடாமல் கிடைத்த ஒதுக்கீடு

தொழிலாளர் யூனியனில் முதலாளிகளும் உறுப்பினர் /பார்ப்பனருக்கும் 10% ஒதுக்கிடு/

அத்தியார்

அத்தி வரதருக்கு அமோக வசூல். மீண்டும் தண்ணிக்குள் போவதில் சிக்கல்.
கரையிலிருந்தால் பார்ப்பனிய மேன்மையை, பிஜேபியை வளர்க்கலாம்.
/தண்ணீரிலேயே மலராத தாமரை தரையிலா மலரப்போகுது/

*

திருட்டுக்கு பயந்து அத்தி வரதரை தண்ணிக்குள் மறைச்சிங்க. சரி. ஆனா, திருடர்கள் வரதராஜ பெருமாள மட்டும் ஏன் விட்டு வைச்சாங்க?

மாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்

சேகர் பாபு MLA எழுப்பியி பிரச்சினை /தலைமைச் செயலகத்திற்கு எதிரேயே பிச்சைக்காரர்கள்/

ஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்?

புதுவை, பெரியார், அம்பேத்கர்

15 தேதி மாலை புதுச்சேரியில் தலித்தல்லாதவர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா மற்றும் தோழர்களின் சிறப்பான முயற்சியில், ஜாதி வெறி படுகொலைகளை கண்டித்து 1.30 நிமிடம் பேசினேன்.

‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்

எம்.ஜி.ஆரை முன்னுறுத்தி தமிழகத்தைக் கொள்ளையடித்த கும்பல் மெல்ல ரஜினியின் பின் அணியாகுது. பள்ளிக் கல்வியைத் தனியார் மயமாக்கி, உயர் கல்வியைச் சூதாட்டமாக்கியவர் புரட்சித்தலைவர். அவர் ஆட்சியில் M.L.A. வாக, மந்திரியாக இருந்தவர்களே மருத்துவம், பொறியியல் கல்வி வியாபாரிகளாக அவதாரம் எடுத்தார்கள்.

அதில் ஒருவர்தான் A.C. சண்முகம். அதை மிக முறைகேடாகக் கையாண்டவர். அவர் பல்கலைக்கழத்திற்கு அங்கீகாரம் இல்லை என்று தெரிந்தும் பல மாணவர் வாழ்க்கையைச் சீரழித்தவர்.

கூவம் ஆற்றை ஆக்கிரமத்து அதில் பல்கலைக்கழகம் கட்டியவர். ஜெயலலிதா ஆட்சியில்தான், ஆக்கிரமித்த கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டது.

அந்தக் கல்வி யோக்கியர் கல்லூரியில் நின்று கொண்டு, இந்த ஆன்மீக யோக்கியர் கல்வியின் சிறப்புக் குறித்துப் பேசுகிறார்.

இவ்வளவு நாள் எம்.ஜி.ஆரின் சிறப்புகள், அவரோடான உறவுகள் குறித்துப் பேசாமல் இப்போது அள்ளிவிடுறார்.
சரி இருக்கட்டும். ‘வந்தவர்களுக்கெல்லாம் வாரிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்’ என்று அவர்களிடம் வாங்கியவர்கள் சொல்கிறார்கள். நீங்க என்ன ரசிகர்களுக்குக் குடுத்தீங்க?

இந்த ஆன்மீகம் அரசியலுக்கு வந்த பிறகு சமீபத்தில், கன்னியாக்குமரி தமிழன் புயலால் சிதைந்து, சீரழிந்தபோதுகூட அதைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லாமல், கர்நாடக ராகவேந்திரா மடத்துக்கு 10 கோடியை கொடுத்துட்டு,
இங்க நம்மகிட்ட வந்து பதவி கேக்குறார். இளிச்சவாயன் நாமதானே?

விரைவில் ஆன்மீகத்தோட சினிமாக்கள், கண்டிப்பா சட்டத்திற்குப் புறம்பா தமிழர்களைக் கொள்ளையடிக்கிற கட்டணத்தோடு வரும். அப்போ நாமளும் அதே ‘ஆன்மீக’ அரசியலையே கையாள்வோம். ஆன்மீகமே amount தானே.

இந்த ஆன்மீக மூட்டப் பூச்சியை நசுக்க அம்பேத்ரியம், பெரியாரியம், மார்ச்சியம் எல்லாம் தேவையில்லை.
‘தமிழ் ராக்கர்ஸ்’ போதும்.
மார்ச் 5. இரவு 10 மணி.