ஸ்டாலினும் பெரியாரும்

soviet_union_stalin.jpg

‘உன் மதமா? என் மதமா? என்று உலகம் முழுக்க யூத, கிறித்துவ, இஸ்லாமிய, இந்து மதவாதிகள் முறுக்கிக் கொண்டு நின்றாலும், இவர்கள் சங்கமிக்கிற இடம் ஒன்று உண்டு. அது , கம்யூனிச எதிர்ப்பு. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் எதிர்ப்பு.

அறிவு ஜீவிகள், மார்க்சியத்தின் பின்னணியில் சிந்திப்பதாக சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள், கதை மேதைகள், கட்டுரையிலேயே கதை விடுபவர்கள், இன்னும் இலக்கியப் போர்வையோடு வரும் இந்து மத வெறியர்கள் & இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைச் சேறுகளை வாரி அடித்துக் கொண்டாலும், இவர்கள் ஒன்றுபடுகிற இடம் ஒன்று உண்டு.

அது, ஸ்டாலின் எதிர்ப்பு.

”ஸ்டாலின் ஒரு கொலைகாரன்”

”ஸ்டாலின் மக்கள் விரோதி”

”ஸ்டாலின் ஆட்சியில் சுதந்திரம் என்று பேச்சுக்கே இடம் கிடையாது.”

”ஸ்டாலின் ஆட்சி இரும்புத் திரை” என்றெல்லாம் இவர்களால் அவதூறு பரப்பப்படுகிற தலைவர் ஸ்டாலின் ஆட்சியை நேரில் கண்ட சாட்சியாக தலைவர் பெரியார்.

ஒடுக்கு முறைகளுக்குத் தாய்வீடாக இருக்கும் சிறைச்சாலை, ஸ்டாலின் ஆட்சியில் கைதிகளுக்கு வீடாகவும் தொழிற்சாலையாகவும் பயன்பட்டது என்று அந்த இரும்புத் திரையை விலக்கிக் காட்டுகிறார்.

ஆம். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில், சாதாரண குடிமகனுக்கு உள்ள சுதந்திரத்தை விட , சோவியத் நாட்டில் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச குடியரசில், கைதிகள் கூட எவ்வளவு சுதந்திரமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சாட்சியளிக்கிறார் தலைவர் பெரியார்.

 -வே. மதிமாறன்

அய்யா ஆனைமுத்து தொகுத்த, ‘பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள்என்ற நூலில், தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதியது:

 

periyar_1.jpg

 ‘Leaforthov’ ஜெயில் பார்க்க அழைக்கப்பட்டுப் போனோம். டைரக்டர் அறிமுகம் செய்யப்பட்டு அவர் எல்லாம் காட்டினார். மே First க்கு ஆக ஜெயில் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். கைதிகளுக்கு எவ்வித அடையாளமும் இல்லை. ஜெயில் என்பது பல பேக்டடரிகள் இருக்கிறது தான்.

பனீன், மொப்ளர் பின்னல் நெசவு பார்த்தோம். டைமன் பட்டில் நல்ல வேலைகள் செய்யப்படுகிறது. மற்றும் கோட்டுகள், ஓவர் கோட்டுகள் முதலியவை செய்யப்படுகின்றன.

சிறைக்கூட அறைகள் பார்த்தோம்; கட்டில் மேஜை நாற்காலி, கம்மோட், தண்ணீர்க் குழாய், பேசின், உஷ்ணம், புஸ்த்தகங்கள் அலமாரி ரேடியோ முதலியவைகள் இருக்கின்றன.

ஒரு ரூமுக்கு 2 அல்லது மூன்று பேர் உண்டு. ஒரு ரூம் 816 அளவு. அவர்களுக்கு க்ஷவரம் செய்யும் சலூன் உண்டு. சையன்சு அறை உண்டு. பத்திரிகைகள் படிக்கும் ரீடிங் ரூம், புஸ்த்தகங்கள் படிக்கும் லைபெரிரி, படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள், சித்திர வேலை கற்பித்தல் முதலியவை உண்டு.

இங்கு டிராமா, சினிமா ஆல்கள் பார்த்தோம். 17 வயது பையன் ஒருவன் பல திருட்டில் அகப்பட்டு 3 1/2  ஆண்டு தண்டனை அடைந்தவனைப் பார்த்து விசாரித்தோம். அவன் 2 ஆண்டு இங்கு இருந்து வேலை பழகி பிறகு தனி பேக்ட்டரிக்கு அனுப்பப்படுவான். இப்போது நெசவு வேலை செய்கிறான். இந்த ஜெயிலில் 600 கைதிகள் உண்டு.

இதை மாதிரி 4 அடுக்கு கட்டடம். இது புரக்ஷிக்கு முன் கட்டப்பட்ட ஜெயில் கட்டடம். சில திருத்தப்பாடு செய்திருக்கிறது. ஆனால், புது ஜெயில்கள் இன்னமும் நன்றாய்க் கட்டப்படுகின்றன. முன் ஒரு அறைக்கு ஒரே கைதி, இவன் எப்போதும் உள்ளேயே இருப்பான்.

முன்னால் இங்கு சர்ச்சு இருந்தது. இப்போது அது ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. ராத்திரி காலத்தில் கைதி சிறைக்குள் இருப்பான். அதுவும் இரவு 12 முதல் 5 மணிவரைதான் இருப்பான்.

ஒரு கைதி 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும்; அவர்களுக்கு சாப்பாடு துணி முதலியவை இல்லாமல் ஒரு கைதிக்கு மீ 30 ரூபிள் சம்பளம் உண்டு. அதில் பகுதியை அவன் இஷ்டப்படி செலவு செய்யலாம். அதாவது, இங்கு கடையில் அவனுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். மீதி மீ 15 ரூபிள் வீதம் சேர்த்து வைத்து விடுதலை ஆகிப் போகும் போது கையில் கொண்டு போவான். அவர்களுக்கு அடிக்கடி மீட்டிங்குகள் உண்டு.

தொழில் விஷயமான பிரசங்கம், சோஷியலிஸ்ட் பிரசங்கம் செய்வார்கள். 3 மணி நேரம் படிக்கலாம். 6 நாளில் 1 நாள் லீவு. 7 நாள், சிலர் 14 நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாம். குடியானவன் கைதி, கூட்டுப் பண்ணையத்துக்காரன் வருடத்தில் மூன்று மீ வீட்டுக்கு வேலைக்குப் போய்வரலாம். தினமும் தாராளமாய் வீட்டுக்குக் கடிதம் எழுதலாம்; பதில் பெறலாம். பத்திரிகை, புஸ்தகம் தாராளமாய்ப் பெறலாம்.

சாப்பாடு 2 வேளை; காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சாப்பாடு டீ வேண்டியது Free யாய் வேண்டிய வரை கிடைக்கும். தொழில்சாலை உடை தவிர மற்ற உடை அவர்கள் சொந்தத்தில் இஷ்டப்படி உடுத்திக் கொள்ளலாம்.

மே First க்கு100 பேர்களை ஒரு நாள் எல்லாம் வெளியில் போய் வர அனுமதிப்பார்கள். கைதிகளுக்கு என்று தனிப்பத்திரிகை உண்டு. அது மீ 3 முறை 5  கோபக் விலை. லைபெரிரியில் 8000 எட்டு ஆயிரம் புஸ்த்தகங்கள் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளும் வருகின்றன. 100க்கு 82 பேர்கள் ஜெயிலில் பத்திரிகைக்கு சந்தாதாரர்கள். செஸ் முதலிய கேம் விளையாட்டுச் சாமான்கள் இருக்கின்றன.

இங்குள்ள கைதிகள் குற்றம் செய்தால் இங்கேயே கைதிகளுக்குள் எலக்ட் செய்த ‘காம்ரேட் கோர்ட் ‘டில் விசாரித்து நீதி செலுத்துவார்கள். அந்தத் தீர்ப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஜெயில் அதிகாரிகள் 3 நாள் வரை மூடி வைத்திருக்கும் தண்டனை செய்வார்கள்.

12 முதல் 5 வரைதான் ஜெயில் அறை பூட்டி இருக்கும். மற்ற காலங்களில் திறந்தே இருக்கும். பிரரேட் கோர்ட் தண்டனை என்பது குறிப்பிட்ட காலத்துக்கு சில சவுகரியங்கள் இல்லாமல் செய்வது. அவரவர்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு புஸ்த்தகம் உண்டு. இது போல் மாஸ்கோவில் 6 ஜெயில் இருக்கின்றன. மொத்தம் 4000 நாலாயிரம் கைதிகள் உண்டு.

பெண்களுக்குத் தனி ஜெயில் உண்டு. (சில கைதிகள் தங்கள் அறைக்குள் ஸ்ட்டவ் வைத்திருந்தார்கள். மே First க்கு தங்கள் தங்கள் அறையை அலங்கரித்துக் கொண்டும் இருந்தார்கள்) மாஸ்கோ ஜில்லா பூராவுக்கும் சுற்றுப்பக்க கிராமங்களும் சேர்ந்து 4000  கைதிகள். இந்த ஜெயிலில் இருந்து போகும் கைதிகள் நல்ல வேலைக்காரர்களாகி விடுகிறார்கள். ஜெயில் காரணத்தினால் ஓட்டுக்கு அருகதை போய்விடாது.

இந்த டைரக்ட்டர், ரிவிலாஷனுக்கு முன் கொல்லு வேலை செய்து கொண்டிருந்தவர், ஜெயில் திருத்தமெல்லாம் அனேகமாய் இவருடைய முயற்சியிலேயே செய்யப்படுகிறது. இவர் பெயர் மவுலின். ரிவிலூஷனில் இவர் தண்டனை அடைந்து சைபேரியாவில் நாடு கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்; அரசியல் கைதியாயும் இருந்தவர். தான் போர்ட்சைட் வரை வந்திருப்பதாகச் சொன்னார். இவர் 29 வருடமாக கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்து வேலை செய்தவர். இவர் ஓல்ட் போல்ஸ்விக் மெம்பர். 15000 தொழிலாளிகளின் ஸ்ட்ரைக்கை லீட் செய்தவர்.

EVRகேழ்வி: ”இங்கு இவ்வளவு தாரளமாய்க் கைதிகள் விடப்படுகிறார்களே , ஓடிப் போவதில்லையா?”

பதில்: ”இதிலிருந்து ஒரு தடவை3 பேர் ஓடிப்போனார்கள். பிறகு தானாகவே வந்து விட்டார்கள். சில சமயங்களில் 100 பேர் 200 பேர் சர்க்கஸ் பார்க்க என்று விடப்படுவார்கள். அவர்கள் காவல் இல்லாமலேயே போய் விட்டுத் தாங்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள். காரணம், அவர்களது நல்ல, நடவடிக்கையும் மற்றும் வெளியில் அவர்களுக்கு டிக்கட் இல்லாமல் சுலபத்தில் சாப்பாட்டுச் சாமான், அறைகள் முதலியவை கிடைக்காததுமாகும்.”

ரெவிலூஷன்போது இந்த டைரக்ட்டரின் பெண்ஜாதி குழந்தைகள் எதிரிகளால் (ஒயிட்ஸ்களால்) கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர் ஆக்ஷியில் இது உள்பட 4 ஜெயில்கள் மேற்பார்வையில் இருக்கிறது.

இந்த 4 ஜெயிலில் இருந்து வருஷம் 1 க்கு 8 மிலியன் ரூபிள் மீதியாகிறது. 2300கைதிகளின் வேலையால் வருடம் 8000000 ரூபிள் சர்க்காருக்கு லாபம். அதாவது ஒரு கைதியால் மீ275 ரூபிள் மீதியாகிறது. கைதிகளுக்கு அதிகமான சுதந்திரமும் சவுகரியமும் உண்டு. நன்றாய் நடந்து கொள்ளுகின்றவர்களுக்கு அதிக சவுகரிமும் லாபமும் உண்டு

 

*

தலித் முரசில் 2001 சூனில் எழுதியது.

தொடர்புடையது:

ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர் அம்பேத்கர்-பிரபாகரன்-வ.உ.சி.

முற்போக்கு பார்ப்பனீயம்

 வே. மதிமாறன்

 ambedkar_periyar1.jpg 

நீங்கள் இலக்கியப் பறையனாக இருக்க விரும்பவில்லையெனில், ஆங்கிலத்தில் எழுதுங்கள்”                 வாஸந்தி   இந்தியன் எக்ஸ்பிரஸ்’ –  25.3.03 

யாரடா சொன்னது & தமிழை நீச மொழியென்று, தீட்டு மொழியென்று.ஆங்கிலம் எனன் ஆண்டவன் பாஷையா? ஆங்கிலத்தில் எழுதுகிறவன் என்ன ஆறு கை அவதாரமா? தமிழில் எழுதுகிறவன் என்ன ஒடிந்த கையனா? 

தமிழ் வாழ்க, ஆங்கிலம் ஒழிகஎன்று மகாகவிபாரதியின் நடிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி கண்டிக்க வந்த ஞானக் கொள்ளுப் பேத்திவாசந்திக்கு,  பாரதியின் பரம்பரை புத்தி வேலை காட்டி விட்டது. 

ஈனப்பறையர்களேனும் & அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோஎன்று எழுதினானே மகாகவி’, அதே பாணியில், ‘‘என்னை ஏன் பறைச்சி மாதிரி நடத்துறீங்க. தமிழ்ல எழுதறதுனால என்னை தாழ்ந்த ஜாதிக்காரின்னு நினைச்சிங்களா?’’ என்கிற விஷப் பொருள் பொதிந்த அர்த்தத்தில் எழுதியிருக்கிறார்.  

இப்படி இழிவான பொருள்படும்படி கொள்ளுப் பேத்திதிட்டமிட்டு எழுதவில்லை. அவர்களின் இயல்பான உணர்வது.

சரி, தமிழில் எழுதுகிறவர்களை, ஆங்கில எழுத்தாளர்கள் அளவிற்கு மதிப்பதில்லை என்பது இருக்கட்டும்.

தமிழில் எழுதுகிறவர்களை, தமிழில் எழுதுகிறவர்களே மதிப்பதில்லையே! தலித் வாழ்க்கையைத் தனது அற்புதமான எழுத்தாற்றலால் அள்ளிக் கொட்டிய சிவகாமிக்கு கிடைத்த மரியாதையை விட கிராஸ் வேர்ட்என்ற வெளிநாட்டு விருதைப் பெற்ற பாமாவிற்குக் கிடைத்த மரியாதையைவிட, – எழுத்தாளர்களாகிய இந்துமதி, அனுராதா ரமணன், சிவசங்கரி, வாசந்தி இவர்களுக்கு வெகுஜன தமிழ்ப் பத்திரிகைகளில் கிடைத்த மரியாதை, புகழ், பெயர் கூடுதல்தானே? எப்படி அது?

அதுதான் உயர்ஜாதியில் பிறந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீடோ? ‘ஆமாம்என்கிறது பா.ஜ.க. 

‘‘ஏழை பார்ப்பனர்கள், குசேலன் காலத்தில் இருந்தே பொருளாதார ரீதியாக துன்பப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் குசேலன் என்கிற ஏழை பார்ப்பனருக்கு உதவ கிருஷ்ண பரமாத்மாஇருந்தான். இப்போது யார் இருக்கிறார்கள்’’ என்று அழுது புலம்பியது பார்ப்பன ஜனதா கட்சி (பா.ஜ.க) 

இந்தப் பார்ப்பனிய ஜாதி சங்கத்தில் எந்த ஜாதிக்காரன் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். தலைமைப் பொறுப்புக்கும் வரலாம். ஆனால், அடியாளாக இயங்க வேன்டும், பார்ப்பனிய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அப்படி அதீத அக்கறை கொண்டவர்களில் ஒருவர்தான் வெங்கையா (நாயுடு). இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்பவர். 

அண்மையில், ‘‘அய்யோ ஏழை உயர் ஜாதிக் காரர்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்களே, சோற்றுக்கு இல்லாமல் சாகிறார்களே, தாழ்ந்த நிலையில் தள்ளப்பட்டிருக்கிற இந்த உயர்ஜாதிக்காரர்களைக் காப்பாற்ற யாருமில்லையா?’’ என்ற ரீதியில் கதறி தன் கடமையை நிறைவேற்றினார். அவர் கடமைக்கும் கதறலுக்கும் உடனே பலன் கிடைத்தது. 

இதோ நான் இருக்கிறேன்என்று கிருஷ்ண பரமாத்மாவாஜ்பாய், மத்திய அரசு என்கிற தன் சக்கரத்தைச் சுழற்றி விட்டிருக்கிறார். அந்தச் சக்கரம் கழுத்தறுக்க கிளம்பியிருக்கிறது. 

ஆம், ‘உயர் ஜாதிகாரர்கள் வாழ வேண்டுமென்றால் தாழ்ந்தஜாதிக்காரர்கள் சாக வேண்டும்தானே. ஆனால், கிருஷ்ண பரமாத்மாசொல்கிறார், ‘யாருக்கும் சேதமில்லாமல் செய்வோம்என்று. அதாவது வலியில்லாமல் கழுத்தறுப்போம் என்று அர்த்தம். 

நினைத்தாலே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களில் நிறைய பேர் படித்து உயர் அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருந்தும் அலசி ஆராயும் அறிவாளிகள் இருந்தும், எழுச்சி மிக்க இயக்கங்கள் இருந்தும் & நம்மால் புதியதாக எந்த உரிமைகளையும் பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல, கிடைத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் திராணியற்றும் இருக்கிறோம். 

சுற்றி எதிரிகள் சூழ்ந்திருக்க, தனி ஒரு ஆளாக எதிரிகளைப் பந்தாடும் ஒரு கதாநாயகனைப் போல, அந்த அல்லாடிகளும், கில்லாடிகளும், கண்ணன்களும், குசேலன்களும் சூழ்ந்திருக்க, அவர்களையெல்லாம் குப்புறத்தள்ளி, பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்க, டாக்டர் அம்பேத்கரால் மட்டும் எப்படி முடிந்தது? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 

குசேலன் கதை, ரொம்ப பழைய கலத்திலிருந்தே பார்ப்பனர்கள் ஏழைகள்தான் என்பதை விளக்கிச் சொல்ல வந்த குறியீட்டுக் கதை. 27 குழந்தைகளைப் பெற்ற (பரிதாபத்திற்குரிய பெண்) குசேலன் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடுகிறது. தாண்டவத்தை நிறுத்த, தன் பால்ய நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி பெறுகிறான் என்பது தான் கதை. 

பார்ப்பனத் துயரைத் தாங்கி, ‘சென்டிமென்ட்டச்சோடு அத்தனை நூற்றாண்டுகளாகக் கேள்வி கேட்பாரற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் கதையை, போன நூற்றாண்டில் ஒருவர் தனது ஒரே கேள்வியால் தரைமட்டமாக்கி விட்டார். 

கேள்வி இதுதான்: ‘‘27 பிள்ளைகளைப் பெற்ற ஒருவன் பிச்சை எடுக்கிறான். எவ்வளவு பெரிய மோசடி இது. ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று பெற்றிருந்தாலும், 7 பிள்ளைகள் 20 வயதிற்குள் மேல் இருந்திருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் பிச்சை எடுக்கிறான் என்றால், அவன் குடும்பத்து யோக்யதை என்ன? உழைக்காமல் உண்பதே பார்ப்பன வாழ்க்கை & தர்மம்’’ என்பது போல் கேட்டிருப்பார் அவர். அப்படிக் கேட்டவர் தந்தை பெரியார். 

மிகப் பெரிய வறுமையை சித்தரிப்பதற்காக 27 குழந்தைகளைப் போட்டு திரைக்கதையை தயார் செய்திருக்கிறார்கள். அந்தத் திரைக் கதையில் உள்ள ஓட்டையை தனது நுட்பமான பகுத்தறிவினால் அம்பலப்படுத்தினார் பெரியார். அவருடைய சிந்தனையின் தைரியம் மாதிரியே அவருடைய லாஜிக்’, அதைச் சொல்லும், அவருடைய எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம். 

தைரியம் என்றவுடன்தான் இந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. 25.5.03 அன்று ஜெயா டி.வியில் மெல்லிசை மன்னரின் இசைப்பயணம்என்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனோடு முக்தா சீனிவாசன் உரையாடினார். 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ ‘நிலவே என்னிடம் நெருங்காதேபோன்ற நூற்றுக்கணக்கான சிறந்த பாடல்கலைக் கொடுத்த விஸ்வநாதன், மோசமான பாடல்களைக் கொடுத்தார் என்றால் அது முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த படங்களில்தான்.மிஸடர் மிராண்டா… நேரில் வரான்டா’ ‘நான் பொல்லாதவன்…ஐமுக்கு ஐம்மா ஐம்என்கிற மியூசிக்கோடு. நமக்கு இவைகளோடு இல்லை பிரச்சனை. அதன் பிறகு மிகப்பெரிய பிரகடனம் ஒன்றை செய்தார். 

‘‘உலகத்திலேயே ரொம்ப தைரியமானவர் லெனின். அதற்குப் பிறகு ஜெயலலிதாதான்’’ என்றார். கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி, மிகச் சீரியசான முகபாவனையிலேயே சொல்லிமுடித்தார்.இவர் இயக்குநரானதற்கு பதில் நடிகர் ஆகியிருந்தால், இதுவரை சிறந்த நடிகருக்கான உலக விருதுஇந்தியாவிற்கு இல்லை என்கிற குறையைத் தீர்த்திருப்பார். (ஒரு வேளை ஜெயலலிதாவை வைத்து கடைசியாகப் படம் எடுத்த எடிட்டர் லெனினை குறிப்பிட்டுச் செல்லியிருப்பாரோ!) 

கூச்ச நாச்சமின்றி என்ற சொல்லைப் பயன்படுத்தியவுடன் அந்தச் சொல்லின் உருவகமான சீறி ஜெயேந்திர சரஸ்வதியின் கூச்ச நாச்சமற்ற அறிக்கைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.எந்த நேரமும் தலித் மக்களையே குறிவைத்து அக்கறையோடுதாங்குகிற இவர், சமீபத்தில் ஒரு தமிழ்த் தேசியத் தலைவரைப் போல், ‘‘இனி உங்களுக்கு ஆதி திராவிடர் என்ற பெயர் வேண்டாம். ஆதித் தமிழர் என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். 

ஆனாலும் ஜெயேந்திர சரஸ்வதி போன்ற பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பாரதியார் போன்ற முற்போக்குப் பார்ப்பனர்கள் கூட எதை வேண்டுமானாலும் ஒத்துக் கொள்கிறார்கள்’. ‘திராவிடன்என்ற சொல்லை சொன்னாலே, ஏதோ பச்சை மிளகாயை வைத்து போல பதட்டமாகிறார்கள். 

பார்ப்பனர்களின் இந்த திராவிடஎதிர்ப்புணர்விற்கு அணிசேர்ப்பது போல் அண்மைக்காலங்களில், தலித் அறிஞர்கள் பெரியார் உட்பட்ட ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையும் தலித் விரோதப் போக்குஎன்று ஆணியடிக்கிறார்கள். தலித் விடுதலைக்கு அறிஞர்கள் சொல்லுகிற தீவிரமான அலோசனைகளில் முக்கியமான ஒன்று, ‘பார்ப்பனர்களா நம் விரோதிகள்என்பது. 

பார்ப்பனர்களோடு சேர்ந்து தலித் விடுதலையை வென்றெடுக்கதலித் அறிஞர்கள் திறந்த மனதோடு ஆவலாக இருக்கலாம். ஆனால் அந்த நட்பை முடிவு செய்ய வேண்டியவர்கள் பார்ப்பனர்களாகத்தன் இருக்கிறார்கள். 

ஆனாலும், அண்மைக் காலங்களில் அதிகார மட்டத்திலும், அரசியலிலும், இலக்கிய வட்டத்திலும், இந்து மதப் பிரச்சார வடிவங்களிலும் பார்ப்பனர்களின் மிகத்தீவிரமான பகிரங்கமான தலித் விரோத போக்கு, பார்ப்பனத் தோழமையை விரும்புகிற தலித் அறிஞர்களைக் கூட, பார்ப்பனர்களுக்கு எதிராக இயங்க வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சும்மாவா சொன்னார் தலைவர் மா சே துங், 

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று அதை விட்டு வைப்பதில்லைஎன்று.

தலித் முரசுஇதழில் சூன் 2003ல் எழுதியது.

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?


community.jpg

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம்,வர்க்கம் என்று பேசுகிறார்கள்?

-சுந்தர் சார், திருச்சி.

 

திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது.

ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக  இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா?

தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?

நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.

ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.

டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.

இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையாஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.

சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் தகுதி-திறமையானபெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக பாடுபடுகிறஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள்.

கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே. இவ்வளவு ஏன்?

கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்?

அதாங்க வர்க்க பாசம். 

*

திரு. கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழில் நான் எழுதிய பதி்ல்

தொடர்புடையவை:

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

வே. மதிமாறன்

30aug-samugam011.jpg

m-r-radha.jpg

ல்லாம் சிவம் மயம் என்பது போல, எல்லாம் பார்ப்பன மயமாக இருந்த காலம் அது. பார்ப்பனரல்லாத பணக்காரர்களிடம் வெள்ளையனுக்கு எதிரான உணர்வை தீவிரப்படுத்தி, அவர்களை தடியடியிலும், கள்ளுக் கடை மறியலிலும் தள்ளி – சொத்தையும் சுகத்தையும் இழக்க வைத்துவிட்டு, வெள்ளைக்காரனிடம் பார்ப்பனர்களுக்கான சலுகைகளைப் பெற்று அதிகார மட்டத்தில் பார்ப்பனர்கள் மட்டும் உச்சத்தில் இருந்த நேரம் அது.

ஈ.வே.ராமசாமி நாயக்கராக இருந்த பெரியாரையும் பார்ப்பனக் கூட்டம் அப்படித்தான் மடக்கி வைத்திருந்தது. அவர் பணத்தை நக்கித் தின்று, வெள்ளையனோடு கள்ளக்காதலில் ஈடுபட்டுக் கொண்டே, சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதாக படம் போட்டுக்கொண்டிருந்தன காங்கிரசில் இருந்த பார்ப்பனத் தலைமைகள்.

நம்பினார் அவர்களை பெரியார்.

தன் சொத்தின் பெரும்பகுதியை சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இழந்தார்.

அவர் அப்படியே தொடர்ந்திருந்தால், அவர் கொண்ட கொள்கையில் அவருக்கு இருந்த நேர்மையும், உறுதியையும் பயன்படுத்தி, பார்ப்பனர்கள் பெரியாருக்கு தூக்கு தண்டனையை வாங்கி தந்து தியாகி ஆக்கி, அவர் குடும்பத்தை பென்ஷன் எலிஜிபலுக்கு மாற்றி இருப்பார்கள்.

(ஒருவேளை பெரியாருக்கு தூக்கு தண்டனை தந்திருந்தால், வெள்ளைக்காரனைவிட பார்ப்பனர்கள்தான் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.)

வெள்ளையனின் ஆதிக்கத்தை விடவும், ‘சுதந்திர போராட்ட பார்ப்பனர்களின் ஜாதி வெறி (அந்தக் காலத்து வேதாந்தி, வ.வே.சு. ஐயரின் கொலைவெறி, ராஜாஜி போன்றவர்களின் நயவஞ்சகம்) குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அவர்களின் வன்மம்பெரியாரை கடுமையாகச் சுட்டது.

பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.

ஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.

***

திகார மட்டத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, 1916 ஆம் ஆண்டு நீதிக்கட்சி துவக்கப்பட்டது. அதுகாரும் வெள்ளையனை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் பார்ப்பன இயக்கம், முழுக்க முழுக்க நீதிக்கட்சிக்காரர்களையே எதிர்க்க ஆரம்பித்து விட்டது.

பூனைக்குட்டி அல்ல. பெருச்சாளியே வெளியே வந்தது. நீதிக்கட்சியை எதிர்ப்பதற்காக ஒரு கலைக்குழுவை தயார் செய்ததது, காங்கிரஸ் பார்ப்பன இயக்கம். சுதந்திர கீதங்களைபாடுவது என்கிற போர்வையில். கிட்டப்பா என்கிற பார்ப்பனரையும்- & பார்ப்பன கைகூலியும், சத்தியமூர்த்தி அய்யரின் கைப்பாவையும்மான கொடுமுடி கோகிலம் என்கிற கே.பி.சுந்தராம்பாள் போன்ற பல கலைஞர்களை விலைபேசி, அவர்களுக்கு பாரதியாரின் கவிதைகளையே பிரச்சார சாதனமாக தந்தது பார்ப்பனியம். பார்ப்பனர்களின் ஊதுகுழலாக இருந்த பாரதியின் பார்ப்பனத் தன்மை கொண்ட பாடல்களுக்காக, 1928 ஆம் ஆண்டு செம்படம்பர் 11 ந் தேதி பாரதியின் பாடல்களை தடை செய்ததது நீதிக்கட்சி அரசு.

kbs.jpg

அச்சமில்லை, அச்சமில்லைஎன்று நீதிக்கட்சி அரசை கண்டித்து கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள் கைகூலி கலைஞர்கள். மாற்று பிரச்சாரத்திற்கு நீதிக்கட்சி சார்பில் கலைஞர்கள் இல்லை. பார்ப்பனியத்தை திட்டவட்டமாக வரையறுக்கத் தவறியதால், தடுமாறியது நீதிக்கட்சி அரசும், நீதிக்கட்சியும்.

***

ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்- கம்யூனிசம் என்னும் பூதம். என்று கம்யூனிஸட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் சொன்னதுபோல், 1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்- தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது.

கடவுள், மத, சாதி எதிர்ப்பு என்று மட்டுமல்ல, – யாராவது உலக ஞானமான விசங்களையோ, புதுமையான கருத்துகளையோ, மெள்ள பேச ஆரம்பித்தாலே போதும், “இவன் சுனாமானாகாரன் என்று சொல்வது ஒரு அடையாளமாக இருந்தது. எழுத்தாளர் புதுமைப்பித்தனையும் கூட சுனாமானக்கரான்என்று தவறுதலாக அடையாளப்படுத்திருக்கிறார்கள்.

இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி சென்றது போல், மக்களை மையமிட்டு இயங்குகிற, நாடக கலைஞர்களிடம் ஊடுருவியது. கலைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தின் குடியரசுஇதழை மறைத்து வைத்துப் படித்தார்கள்.

அதன் தாக்கத்திற்கு பல கலைஞர்கள் ஆளானாலும், அறிவாளிகளை அது அதிக அளவில் ஈர்த்தது. அப்படி ஈர்க்கப்பட்ட அறிவாளிகள்தான் என்.எஸ்.கிருஷ்ணணும், எம்.ஆர்.ராதாவும்.

***

சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டு சரியாக பத்தாண்டுகள் கழித்து, அதாவது 1935 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பேச்சு வந்திருக்கிறது.

அப்படி பேச ஆரம்பித்த தமிழ்சினிமாவில் ஒன்று சதிலீலாவதிஇந்த படத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கே திரையுலகில் நுழைகிறார். அதுவரை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ்.கேவின் முதல் படம் இந்த சதிலீலவாதி.

இது என்.எஸ்.கேவிற்கு மட்டுமல்ல, எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர் இவர்களுக்கும் இதுதான் முதல்படம்.

திராவிட இயக்கச் சிந்தனை கொண்டவர்களில் முதலில் சினிமாவிற்கு போனது, பாரதிதாசன். அதன் பின் என்.எஸ்.கே., அண்ணா, கலைஞர்.

இந்த நான்கு பேரர்கள்தான் தங்கள் கொள்கைகளை சினிமாவில் சொல்லமுடியும் என்கிற நிலையை ஏற்படுத்தினர். இவர்களில் கலைஞரின் வசனமே ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது. அவர் வசனத்தில் இருந்த ஓசைநயம் மக்களை பெருமளவில் கவர்ந்தது.

அவர் வகுத்தப் பாதையை பின்பற்றிதான் பின்னாட்களில், ஏ.வி.பி.ஆசைதம்பி, சுரதா, தென்னரசு, அரங்கண்ணல், ராதாமணாளன், கண்ணதாசன், இரா. செழியன், முரசொலி மாறன் என்று பெரும்படையே கிளம்பி தமிழ் சினிமாவை தங்கள் வசப்படுத்தியது.

பிராணநாதா, ஸ்வாமிஎன்கிற பார்ப்பன மொழிழையயும், புராணக்கதைகளையும் ஒழித்துக்கட்டி – சமுக படங்களை கொண்டு வந்தது.

***

index_11.gif

சினிமாவில் வருவதற்கு முன்பே பெரியாரின் கருத்துகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்.எஸ்.கே. என்பதற்கு இதோ எம்.ஜி.ஆர். சாட்சியளிக்கிறார்;

சதிலீலாவதி என்ற கதையை படமெடுத்தப்போது அதில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நான், படக் கம்பெனியார் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கியிருந்த சமயம். . . . . . . . எங்கள் கம்பெனியில் இருந்த மணி என்பவர் பிராமண வகுப்பைச் சேர்நதவர். ஆகவே, சாப்பிடும் போது தனியாக உட்கார்ந்துதான் சாப்பிட விரும்புவார். அதாவது வேறு வகுப்பாருடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடமாட்டார். இந்தத் தவறான போக்கை நீக்கக் கருதிய என்.எஸ்.கே. . . . . . . . . . . . .கடைசியாக எப்படியும் தடுக்க வேண்டுமென முடிவு செய்து திட்டமும் தீட்டி எங்களுக்கெல்லாம் யார் யார் என்னென்ன செய்யவேண்டுமென்று யோசனையும் கூறினார்.

ஒரு நாள் மணி அவர்களும், மற்றவர்களும் சமையல் அறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே ஏதோ வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தவர், “என்னய்யா இது, எவ்வளவு நாழியா ரசம் கேக்கிறது? சேச்சேஎன்று சொல்லியபடி எழுந்து, ரசப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டுவந்தார். முன்பே திட்டமிட்டபடி நானும் மற்றவர்களும் சமையலறைக்குள் சென்று பொரியல், மோர், சாம்பார், முதலியவைகளைப் பாத்திரத்தோடு தூக்கிக் கொண்டு வந்து, நாங்களே பரிமாறிக் கொண்டோம். உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், சாம்பார் சாதத்தோடு அப்படியே உட்காந்திருந்தார்கள். ரசம், மோர், கறி முதலியனவெல்லாம் மற்றவர்களால் தீண்டப்பட்டுவிட்டதால், தீட்டாகிவிட்டதே ( ) என்ன செய்வார்கள்?

மணி அவர்களுக்கு ஒரே ஆத்திரம். மணி அவர்களோடு உணவருந்திய மற்ற பிராமண நண்பர்களும் கோபத்தோடு எழுந்து வெளியே வந்தார்கள். நாங்களோ பெருவாரியானவர்கள். என்ன செய்வார்கள்? என்.எஸ்.கே-யைக் கண்டிப்பதற்கோ பயம்.

எம்.ஜி.ஆர். நடத்தி 30-9-1957 ல் வெளிவந்த நடிகன் குரல்என்ற இதழில் எம்.ஜி.ஆர்.

இதே போன்று ஒரு அனுபவம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கும் இருந்திருக்கிறது. ஜெகநாத அய்யர் நாடக குழுவில் எம்.ஆர்.ராதா இருந்தபோது, நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டினுள் உள்ள சமையலறையில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் நுழையக்கூடாது என்கிற விதியை மீறி ஒரு முறை ராதா சமையலறையில நுழைந்து, என்ன அய்யர்வாள், சமைக்கிறீங்களா? இன்னைக்காவது ருசியா சமைங்க. என்று சொல்லிவிட்டார் அது பெரிய பிரச்சினை ஆகியிருக்கிறது.

பார்ப்பன நடிகர் ஒருவருக்கு தான் எச்சில் படித்தி குடித்தக் காப்பியை வேறு டம்பளிரில் ஊற்றி, குடிக்க வைத்திருக்கிறார். தன்னுடன் சக நடிகராக இருந்த பார்ப்பனர் டி.ஆர்.மகாலிங்கத்தை டேய் கறி தின்னுடா என்று அவரோடு வம்பு செய்திருக்கிறார். (டி.ஆர்.மகாலிங்கத்தின் கடைசிகாலத்தில் அவர் நொடிந்த நிலையில் இருந்த போது எம்.ஆர்.ராதா மட்டும்தான் உதவி செய்திருக்கிறார்.)

சொந்த வாழ்க்கையில் பெரியார் கொள்கைகளோடு வாழந்த இவர்கள் தனது நாடகங்களிலும், சினிமாவிலும் அதை தீவிரமாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இன்பவல்லிஎன்ற படத்தில ஒரு பாடல்; மந்திரத்தின் பேரைச் சொல்லி/ மாயக்காரர் தான்/ தந்திரமாய் செய்த ஏட்டை – கிளியே/ தாட்சண்யம் பார்க்காமல் கிழியே என்று பாடிக் கொண்டே வந்து கலைவாணர் பஞ்சாங்கத்தைக் கிழித்தெரிவார்.

அதுபோல் 1939 ல் வெளிவந்த திருநீலகண்டர்படத்தில், டி.எஸ்.துரைராஜ் சரஸ்வதி பிரம்மாவின் நாவில் உள்ளதாகவும், அவள் தனக்கு துணை நிற்க வேண்டும் என்று சொல்வார். அதற்கு கலைவாணர்; “மறையவன் (பிரம்மா) நாவில் அவள் (சரஸ்வதி)/ உறைவது நிஜமானால்/ மலஜலம் கழிப்பதும் எங்கே?” என்று கேட்பார்.

annamgrmk.jpg

அண்ணாவின் கதை வசனத்தில் உருவான நல்லதம்பிபடத்தில் வரும் கிந்தனார் காலடசேபத்தில், மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி/ மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே என்று பாடுவார். கலைஞர் வசனத்தில் என்.எஸ்.கே. தயாரித்து நடித்து வெளிவந்த மணமகள்’ ‘பணம்படங்களிலும் திராவிட இயக்க கருத்துகள் கொடிகட்டிப் பறந்தன.

திமுக துவங்கப்பட்டபோது, வெளிவந்த பணம்படத்தில் கலைவாணரின் ஆலோசனையின்படி கண்ணதாசன் எழுதிய, “தீனா…மூனா..கான-எங்கள்/தீனா…மூனா…கான/அறிவினைப் பெருக்கிடும்/ உறவினை வளர்த்திடும்/ பகுத்தறிவோடு நாட்டினர் வாழ/ திருக்குறள் தந்தார் பெரியார்/ வள்ளுவப் பெரியார்என்று பாடினார். இதேப்போல் கலைவாணரின் சோசலிச ஆதரவு கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது. 1951 ல் சோவியத் அரசின் அழைப்பை ஏற்று, ரஷ்யா சென்று வந்த அனுபவத்தை ஒரு கம்யூனிஸ்டைப் போல் பூரிப்போடு, என்.எஸ்.கே. பேசி பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது.

index_09.gif

சிரிப்புப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது இப்படி குறிப்பிடுகிறார்; நல்லா குலுங்கக் குலுங்கச் சிரிக்கணும். மனமாரச் சிரிக்கணும். ஆனா நீங்க சிரிச்சது எப்படி இருந்தது தெரியுமா? லெனின் கிராடில் இட்லர் சிரித்தானே, அப்படி இருந்தது. நான் வேண்டுவது அந்தச் சிரிப்பல்ல. அது மரணச் சிரிப்பு.

சோசலிசம்பெரியார்’, என்று மிகுந்த ஈடுபாட்டோடு இருந்த என்.எஸ்.கேவிற்கு அரசியல் ரீதியாக சின்னக் குறைபாடும் இருந்தது. காந்தியின் மீதும் அளவற்ற ஈடுபாட்டோடு இருந்தார். அந்த உணர்வு காந்தியின் மீதான பரிதாப உணர்ச்சியின் அடிப்படையில்தான் இருந்ததே தவிர. அரசியல் ரீதியாக இல்லை. அதனால்தான் மதுவிலக்கை தீவிரமாக பிரச்சாரம் செய்த கலைவாணரால், அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை.

ஆனால், நடிகவேள் எம்.ஆர்.ராதா அப்படியில்லை. அவருக்கு பெரியாரை தவிர இந்த உலகத்தில் வேறு தலைவர்களே இல்லை என்பதுதான் அவரின் உறுதியான எண்ணம். பெரியாரை தமிழர் தலைவர்என்று நாம் சொல்கிறோம். ஆனால் நடிகவேள் அவரை உலகத் தலைவர் என்று சொல்கிறார்.

அண்ணா, கலைஞர் இவர்களோடு ஆழமான நட்பும் மரியாதையும் நடிகவேளுக்கு இருந்தபோதும், பெரியாரோடு முரண்பட்டு திமுகவை உருவாக்கியபோது, ராதா பெரியோரோடு இருந்தார் என்பது மட்டுமல்ல, அவர்களை பொருள், பதவி நோய்க்கு ஆசைப்பட்டு போய்விட்டார்கள்என்று கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். அறிஞர், கலைஞர், நாவலர், காவலர் எல்லோரையும் பதவி மாளிகையில் போய் படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு தாமே தனித்து நின்று இனவுணர்ச்சிபோர்களத்தில் வாகைசூடியுள்ளார் பெரியார் என்று பேசியுள்ளார். பெரியாரை விட்டு பிரிந்துபோன குத்தூசி குருசாமியும் இவர் தாக்குதலுக்கு தப்பவில்லை.

பெரியாரை யாராவது தரக்குறைவாக திட்டி விட்டால் நடிகவேளால் தாங்க முடியாது. திட்டியவர் சமூகத்தில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அவர்களை கேவலப்படுத்தி பேசிவிடுவார்.

அப்படிதான் மாபொசி பெரியாரை கடுமையாக விமர்சித்த காலம் அது. தஞ்சையில் ரத்தக்கண்ணீர்நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. நாடகத்தில் ஒரு காட்சி, ராதாவின் தாய் இறந்து கிடக்கிறார். பிணத்தின் தலைமாட்டில் இருந்து கொண்டு ராதா இப்படி பேசுகிறார்; அம்மா, இன்னும் மாபொசியே சாவலியம்மா…அதுக்குள்ளே நீ செத்துபோய்ட்டியே என்று. இதுதான் நடிகவேள்.

ஒரு பத்தரிகையில் வாசகரின் கேள்விக்கு அவரின் பதில், நேரு, பெரியார், இராஜாஜி, அண்ணாத்துரை இவர்களின் பொதுப்படையான பொருளை கருத்தாழத்தோடு பேசக்கூடியவர்களை வரிசைப்படுத்தவும்?

எம்.ஆர்.ராதா: பெரியார்தான். வரிசை தேவையில்லை.

                                                            ***

இந்திய கலவரங்களின் கதாநாயகனான ராமன், பெரியாரிடம் செருப்படி பட்ட ராமன், எம்.ஆர்.ராதாவிடம் வாங்கிய உதை கொஞ்ச நஞ词சமல்ல. பெரியாரின் கருத்துகளை உள்ளடக்கி வால்மிகி ராமாயணத்தின் பின்னணியில் ராதா நடத்திய ராமாயணம்நாடகம், அன்றைய பா.ஜ.கவான காங்கிரசை நடுங்க நடுங்க வைத்தது.

mrradha.jpg

1928 ல் நீதிக்கட்சி, பாரதியின் கவிதைகளை தடைசெய்ததைப் போல் ராதாவின் நாடகங்களை தடை செய்து பழிதீரத்துக் கொண்டது காங்கிரஸ். தடையை கண்டித்து பெரியார், தமிழகம் எங்கும் ஆவேசமாக பேசினார். ராதா தடையை தந்திரமாக தகர்த்தார். தலைப்பை மாற்றி மீண்டும் நாடகத்தை நடத்திக் காட்டினார். அப்படியும் அடங்காத காங்கிரசும், பார்ப்பன கும்பலும் குண்டர்களை அனுப்பி நாடக அரங்கில் கலகம் ஏற்படுத்தினர். குண்டர்களை ஓட, ஓட விரட்டி அடித்து விட்டு, அதன் பிறகும் நாடகம் நடத்தியிருக்கிறார் நடிகவேள்.

ராமாயணம் நாடகத்தால் இந்துக்கள் மனம் புண்படுகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள் பார்ப்பனர்கள்.

அதற்கு நடிகவேள், என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள், கண்டிப்பாய் என் நாடகத்திற்கு வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறிவந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதை கண்டிப்பாய் அறியவும். அன்புடன் / எம்.ஆர்.ராதா. என்று விளம்பரப்படுத்தினார். அதற்குப் பிறகுதான் நாடகத்திற்கு கூட்டம் குவிந்திருக்கிறது.

வேறுவழியில்லாமல் காங்கிரஸ் போலிஸ், நடிகவேள் நாடகத்தில் ராமன் வேடம் போட்ட உடனேயே, அவரை கைது செய்திருக்கிறது. மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள். மக்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்து விரட்டியிருக்கறது போலிஸ். அப்படியும் கூட்டம் கலையவில்லை. ராதா வந்து மக்களிடம் நடப்பது காமராஜர் ஆட்சி. அவர் ஆட்சிக்கு எந்த இடையூறும் வரக்கூடாது. அமைதியாக கலைந்து போங்கள்என்று சொன்ன பிறகே மக்கள் விலகி சென்று இருக்கிறார்கள்.

ந்த நாடகத்திற்கு முன்பு கலைஞர் எழுதிய தூக்குமேடைசி.பி.சிற்றரசு எழுதிய போர்வாள்போன்ற நாடகங்களும் இதோபோல் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.

போர்வாள் நாடகத்தின் துவக்கமே, ‘பள்ளியில் படிக்கும் அன்பாதவன் ராமாயண பேச்சுப்போட்டியில் ராமனையும் சீதையையும் கேவலப்படுத்தி பேசினான்என்பதில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

தூக்குமேடை நாடகம், ‘மாரியம்மன் கோவிலுக்கு விளக்கு ஏற்ற வரும், மாரியம்மாள் மீது ஆசைபடும் பணக்காரர் அபிநய சுந்தர முதலியாருக்கு ஆசை. அதற்கு துணைபோக கோயில பூசாரியை பயன்படுத்துகிறார்என்றுதான் நாடகம துவங்கும்.

இந்த நாடகத்திற்கு தலைமை தாங்கிய &- அறிஞர், போராளி, பெரியாரின் தளபதியான அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அந்த மேடையில்தான் எம்.ஆர்.ராதாவிற்கு நடிகவேள் என்ற பட்டத்தை தந்தார். பின்னாட்களில் இந்த நாடகத்தை எழுதிய கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதா தந்தார்.

கம்யூனிசக் கருத்துக்களிலும் அதிக ஈடுபாடு கொண்டவராகவே இருந்திருக்கிறார் ராதா. அந்தக் காலத்தில நாடகங்களில், முன் திரையில் கடவுள் படங்களை தொங்கவிடுவதுதான் வழக்கம். ஆனால் நடிகவேள், உலக உருண்டையின் படம் வரைந்து, அதன் கீழ் உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்என்ற முழக்கத்தை எழுதி தொங்கவிட்டு இருக்கிறார். இடைவேளையின் போது ஆணும் பெண்ணும் அரிவாள் சுத்தி பிடித்திருப்பதுபோன்ற படுதாவை தொங்கவிட்டிருக்கிறார்.

கம்யூன்ஸட்டுகள் தலைமறைவாக இருந்தபோது, ப. ஜீவானந்தத்திற்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு வேண்டிய வசதிகளை செய்திருக்கிறார். அப்போது ஜீவா தந்தக் கடிதங்களை கொண்டு போய் ரகசியமாக ஒருவருக்கு கொடுத்திருக்கிறார். அவைகள் புரட்சிகர கடிதங்கள் என்ற நினைப்பில். ஆனால் அவை அனைத்தும் தன் காதலி பத்மாவதிக்கு ஜீவா எழுதிய காதல் கடிதங்கள் என்பது பின்னர்தான் நடிகவேளுக்கு தெரிய வந்திருக்கிறது.

கம்யூனிசம் பற்றி பெரியாரின் நிலை என்னவாக இருந்ததோ, அதுதான் எம்.ஆர்.ராதாவின் நிலையும். பெரியாரின் வாளாக தன் காலம் முழுக்க சுழன்று கொண்டே இருந்தார் நடிகவேள்.

 

***

திகமாக எடுத்துக் கொண்டதில் கொஞ்சமாக திருப்பி தந்து தங்களை தர்மபிரபுக்களாக காட்டிக் கொண்டவர்கள் ஏராளம். அப்படிக்கூட பெரியார் இயக்கத்துக்கு பணம் தர எத்தனை தர்ம பிரபுக்கள் வருவார்கள்? தன் கருத்துக்களை மட்டுமல்ல, தன் பணத்தையும் வாரி வழங்கியிருக்கிறார்கள் கலைவாணரும், நடிகவேளும்,

கலைவாணர் என்.எஸ்.கே. தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை திராவிட இயக்கத்து தந்திருக்கிறார்.

நடிகவேள் எம்.ஆர். ராதாவோ, ஬ான் சம்பாதியத்தையே கழத்திற்குதான் தந்திருக்கிறார்.

கலைவாணருக்கு பெரியாரிடம் பிடித்தக் கருத்துகள் ஏராளம் உண்டு.

நடிகவேளுக்கோ பெரியாரிடம் பிடிக்காத கருத்துகளே கிடையாது.

கலைவாணர் பெரியார் கருத்துகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

நடிகவேளோ, பெரியாராகவே இருந்தார்.

ஆம், கலைவாணர் தந்தை பெரியாரின் கழுத்தை அலங்கரித்த பூமாலையாக இருந்தார்.

நடிகவேள், அநீதிகளுக்கு எதிராக தந்தை பெரியார் உயர்த்திய கரத்தில் போர்வாளாக ஒளிந்தார். *

பயன்பட்டவை:

குடியரசு

நடிகன் குரல்கலைவாணர் மலர்

கம்யூனிஸ் கட்சி அறிக்கை

என்,எஸ்,கேவின் நான் கண்ட சோவியத் ரஷ்யா

ப.சோழநாடனின் கே.பி.சுந்தரம்பாள் வரலாறு

திராவிட இயக்க எழுத்தளார்கள் பற்றி அட்டைப்படமும் ஆசிரியர் யார் என்ற தகவலும் கிழிந்து போயிருந்த ஒரு புத்தகம்

தஞ்சை சோமசுந்தரம் எழுதிய பெரயாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா

விந்தனின் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

இரா.வேங்கடாசலபதயின் திராவிட இயக்கமும் வேளாளரும்

* 1907 ஆம் ஆண்டு பிறந்த நடிகவேளுக்கு நூற்றாண்டு நிறைவடையப்போகிறது.

* 1908 ஆம் ஆண்டு பிறந்த கலைவாணருக்கு நூற்றாண்டு துவங்குகிறது.

கருஞ்சட்டைத் தமிழர்மாத இதழ் & நவம்பர், 2007

தாய்மை விற்பனைக்கு

-வே. மதிமாறன்

p1.jpg

பெண் என்ன பிள்ளை பெறும் எந்திரமா?” என்று கேட்டார் பெரியார்.

ஆம்என்கிறது இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம். குழந்தை பாக்கியம்இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகிவருகிறார்கள்.

இவர்களின் கருப்பையில் ஆணின் உயிர் அணு செலுத்தப்பட்டு, கரு உண்டாக்கப்படுகிறது. அவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தந்தால், ‘கணிசமான பணம்தரப்படுகிறது.

ஆம், தாய்மை ஒரு தொழிலாகமாற்றப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் வறுமையைக் காரணம் காட்டி, ஏழைகளைச் சூறையாடுகிற சமூகம். இந்த முறையும் ஏழைப் பெண்களின் வறுமைக்கு மாற்றாக தாய்மையைச் சூறையாடியிருக்கிறது.

மனித உறவுகளில் உன்னதம் என்று சொல்லப்படுகிற தாய்மையையும் வர்த்தகமாயிருக்கிறது.

வசதியான தம்பதிகளுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடு அல்லது குழந்தைப் பெற்றுக் கெள்ளும் பிராசஸ்ரொம்ப இம்சைஎன்ற காரணத்தால் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் அற்ற மனைவி, அதனால் தனது சொத்துக்கு வாரிசு அற்று போய்விடுமே என்ற ஏக்கம்இவைகளே வாடகைத் தாய்மார்களை உருவாக்கி வருகிறது.

குழந்தை பெற்றுத்தரும் வரை பத்து மாத காலத்துக்கு இந்தப்பெண்கள் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும். குழந்தைப் பெற்றவுடன் தொப்புள் கொடியோடு குழந்தைக்கும் தாய்க்குமான உறவைத் துண்டித்து கொள்ளவேண்டும்.

ஒருவேளை பிறக்கும் குழந்தை ஊனமுற்று இருந்தால், அந்தக் குழந்தையை தாயிடமே விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.

கருவுருகிற பெண் தன் உணவை, தன் சுவாசத்தை, தன் உயிரையே ஊட்டித்தான் குழந்தையைச் சுமக்கிறாள். ஒரு பெண் தாய்மை அடைவது என்பது ஓய்வு நேரத்தில் மெல்லிய வயலினிசையை கேட்பது போல், இனிமையான அனுபவம் அல்ல. அது உயிர் வலி.

pic3.jpg

எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும், தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துகிறவர்கள் மீது, கட்டுக்கடங்காத அளவுக்கு வெறுப்பு வருவது மனித இயல்பு. ஆனால், ஒரு பெண்ணை மறுபிறப்பு அடைய வைப்பது மாதிரி பிறக்கிறது குழந்தை.என்னை இம்சைப் படுத்திய குழந்தை எனக்க வேண்டாம்என்று எந்த தாயாவது குழந்தையை தள்ளி வைப்பாளா?

மாறாக, ‘தன்னைவிட குழந்தைதான் முக்கியம்என்கிற உணர்வைதான் ஒரு பெண்ணின் மனதில் கர்ப்பகால நாட்களும், பிரசவவலி என்கிற அந்த மரண தரிசனமும் ஏற்படுத்தி இருக்கும். அதுதான் தாய்மை.

சமூக விரோதியால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கருவுகிற பெண், குழந்தைப் பேற்றுக்கொண்டாலும், ‘ச்சீ இந்தக் குழந்தை எவனோ ஒரு பொறுக்கியால் வந்தது. இது எனக்கு வேண்டாம்என்று தள்ளி வைக்கமாட்டாள். ஏனென்றால், அது அவள் குழந்தை.

இந்த உணர்வு தாய்மையைத் தவிர வேறு எந்த உறவுகளிலும் கிடையாது. (குழந்தை வளர வளர எதையும் தானாக செய்து கொள்கிற அறிவு வர வர அந்தப்பாசம் தாய்க்கு குறைந்து கொண்டு வருவதும் இயல்பே)

ஆணின் பங்களிப்பு என்பது குழந்தை வளர்ப்பிலும் குறைவே. பெரும்பாலும் குழந்தைக்கும், தகப்பனுக்குமான உறவு குழந்தையின் ஆரோக்கியமான நேரங்களில் குழந்தையை கொஞ்சுவது, குழந்தையோடு விளையாடுவது என்பதாகவே இருக்கிறது.

இன்னும் சரியாக வரையறுத்து ஒரே வரியில் சொல்வதானால், குழந்தையைக் கொஞ்சுவதால் தகப்பனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தன் மகிழ்ச்சிக்காகவே அவன் குழந்தையைக் கொஞ்சுகிறான்’.

ஆனால் ஒரு தாய், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத நேரங்களில் குழந்தையோடு அதிக நேரம் செலவிடுகிறாள். குழந்தையின் துன்பத்தைத் தன் துனபமாக அனுபவிக்கிறாள்.

குழந்தையைக் குளிப்பாட்டுவது, மலம் கழித்தத் குழந்தையைக் கழுவி சுத்தப்படுத்துவது இவைகள் எல்லாம் தாயின் வேலைகளே.

பல இரவுகளில் குழந்தையின் அழுகைச் சத்தம் தாயைப் பதட்டப்படுத்திவிடும். ஆனால், தந்தையோ எரிச்சலடைவான்.

வாடகைத் தாய்மார்களை உருவாக்குகிறவர்கள், பெண்களின் இந்த உணர்வுகளை மதிப்பதில்லை. இந்த முறை பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிற உடல் மற்றும் உளவியல் சார்ந்த வன்முறையாகவே இருக்கிறது.

***

கணவன்- மனைவிக்குள் தகராறு. ஒருவரை ஒருவர் வேவு பார்த்துக் கொண்டு நேர்ந்து வாழ்வதைவிட , இனி பிரிந்து வாழ்வது இருவருக்கும் மரியாதைஎன்று முடிவுசெய்து சட்டரீதியாக தங்கள் விவாதத்தை ரத்து செய்து கொள்கிறார்கள், அப்படி ரத்து செய்து கொள்ளுபோது குழந்தைகளை பங்கிடுகிற துயரமும் நடைபெறுகிறது.

அதுவரை குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கெடுக்காத கணவன், மனைவியுடனான மணமுறிவின் போது மட்டும் குழந்தை மீது அதிக உரிமை கொண்டாடுபவனாகக் காட்டிக் கொள்கிறான். தன் மனைவியின் உயிர் ஆதாரதம் குழந்தைதான் என்பது அவனுக்குத் தெரியும்.

மனைவியின் மீது வெறுப்புக் கொண்ட கணவன், உளவியல் ரீதியாக அவளைத் துன்புறுத்த, குழந்தைகளை அவளிடம் இருந்து பிரிக்க பெரிதும் முயற்சி எடுத்து குழந்தையை சட்டரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ அல்லது குழந்தையிடம் தாயைப் பற்றி மிக மோசமான அபிப்பிராயத்தை உண்டாக்கி, குழந்தை மனதில் தாயின் மீது வெறுப்பு ஏற்படச் செய்தோ பிரித்துக் கொண்டு போன கணவன், குழந்தைகளை நல்லமுறையில் £வளர்ப்பதில்லை என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாடகைத் தாய்மார்கள் முறையால் இனி அடாவடி ஆண்கள் சார்பாக, ‘குழந்தைகள் மீது தாய்மார்களுக்கு உரிமையில்லைஎன்கிற ஒரு பொதுக்கருத்து பரவ வாய்ப்பிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

ஆக இந்த நவீன விஞ்ஞான முறை பெண்களை கால் டாக்சி யைப் போல் ஒரு பொருளாகப் பாவிக்கிறது. பொதுவாகவே இன்றைய நவீன விஞ்ஞான முறைகள் மக்களின் நலன் சார்ந்து இருப்பதை விட, வர்த்தகம் நலன் சார்ந்தே இயங்குகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவ விஞ்ஞானம் பங்கு மார்க்கெட் போல்தான் நடந்துகொள்கிறது. அதனால்தான் அது எந்த ஒருநோயையும் முற்றிலுமாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில்லை.

எய்ட்ஸ், கேன்சர் மட்டுமல்ல – சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா இந்த நோய்களையும் முற்றிலுமாகக் குணப்படுத்த இன்று வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவைகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்குத்தான் மருந்துகள் உண்டு.

ஆம், ஒருவர் ஆஸ்துமா நோயாளியாகவோ, சர்க்கரை வியாதிக்காரராகவோ, இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்வராகவோ இருந்தால் அவர் சாகும்வரை அந்த நோய்கள் அவரை விட்டு விலகாது. மருந்து மாத்திரைகளோடே அவர் மல்லுக்கட்ட வேண்டும். அதுதான் மருந்துக் கம்பெனிகளுக்கு நல்லது. அதனால்தான் ஆயிரத்தில் ஒருவருக்கு வருகிற உறையாத ரத்தம்போன்ற நோய்களுக்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை, ஆயிரத்தில் ஒருவர் மருந்து வாங்கினால் வியாபாரம் எப்படி நடக்கும்?

***

maternity_expecting_small_c.jpg

மருத்துவ விஞ்ஞானத்தின் இந்த நவீன வடிவமான வாடகைத் தாய்மார்கள் முறையால், அதிக லாபம் அடையப்போவது மருத்துவ வர்த்தகம்தான். சமூக ரீதியாக இந்த முறை பெரிய தீங்கையே ஏற்படுத்தும், அதுவும் இந்திய போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் இந்த முறை பெருமளவில் பயன்படுத்தப்படும். காரணம், இந்த முறைக்கு பணக்கார நாட்டுப் பெண்கள் உடன் படமாட்டார்கள். அப்படியே உடன்பட்டாலும் மிகப் பெரிய அளவில் பணம் கேட்பார்கள். அதனால் மலிவு விலையில் தாய்மார்கள் இந்தியாவில் கிடைப்பார்கள் என்பதால், வெளிநாட்டினரும் இந்தியத் தாய்மார்களின் தாய்மையைச் சூறையாட அதிக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே மாற்றுச்சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தங்களின் வறுமையை போக்க, சிறுநீரத்தை விற்றனர் நமது நெசவாளர்களும், விவசாயிகளும் என்பது நமது ஞாபகத்தில் கவலையோடு பதிவாகியிருக்கிறது.

ஆக, இந்த நவீன மருத்துவ விஞ்ஞானம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டுப் பெண்களின் உணர்வுகள் மீது, உரிமைகள் மீது தொடுத்து இருக்கிற தாக்குதலாகவே இருக்கிறது.

இப்படி , தாய்மையை வர்த்தகமாக அனுமதித்தால், இன்று எல்லாப் பொருட்களும் பிளாஸ்டிக் கவரில் கிடைப்பது மாதிரி, இன்னும் கொஞ்சநாளில் தாய்ப்பாலும் சாஷேயில் (Sache) கிடைக்கும் அவல நிலையும் வந்துவிடும்.

குங்குமம்வார இதழ், 13.8.2006

மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியார்?

sami1.jpg

ந்தச் சாமியார் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிருந்தார். அதுவும் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். பெண்களின் மத்தியில் மிகப் பிரபலமாவதற்குக்  காரணம்  என்ன?

ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி’ (Speciality) இருப்பது போல் இவருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி ’ இருந்தது.

அது குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைவரம் அளிப்பது.

‘அரசமரத்தைச் சுற்றி, அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரையும் சுற்றி பிரயோஜனமில்லாமல் போனவர்கள், சாமியாரை சுற்றி வந்தால், சட்டென்று குமட்டிக்கொண்டு வரும்’ என்ற செய்தி பலராலும், பரவலாக அதிசயமாக பேசப்பட்டு வந்தது.

இப்படி ஒரு ‘அதிசயம்’ தன்னிடம் இருப்பதாக பேசிக் கொள்வதை கேள்விப் பட்டு சாமியாரும் அதிசயப்பட்டுப் போவார். இப்படியாக ராஜயோகத்தில் பல நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில்.

ஒரு நாள் அந்த Infertility Research சாமியரை, அதான் மலட்டுத்தன்மையைப் போக்கும் மகப்பேறு சாமியாரைப் பார்க்க ஒரு பெண் வந்தார்.

அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இந்த D.G.O சாமியார் திடுக்கிட்டுப் போனார். சாமியாரைப் பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் திடுக்கிட்டுப் போனார்.

இப்படி இருவரும்,‘திடுக் திடுக்’ படக் காரணம் என்ன? இருவரின் கடந்தகால வாழ்க்கையிலும், சட்டென்று உதறிக் கொள்ள முடியாத உறவொன்று இருந்தது.

என்ன உறவு?

கணவன் – மனைவி உறவு. நமது குழந்தை வர சாமியாருக்கு குடும்பமே ஒன்று சேர்ந்து மிகவும் குதூகலத்தோடு ஒரு திருமணத்தை நடத்தி வைத்திருந்தது.

ஆனால் நம் சாமியார், ஒரு உண்மையை மறைத்ததே. அந்தத் திருமணத்தை செய்து கொண்டிருந்தார்.

திருமணத்திற்குப் பிறகு பல பொய்களை கூறியும், நாடகம் நடத்தியும் கூட அந்த உண்மையை அவரால் மனைவியிடம் மறைக்க முடியவில்லை.

ஆம், அவர் தாம்பத்திய உறவில் ஈடுபட சுத்தமாக ஆர்வமற்றுக் கிடந்தார்.

இரவில் பெண் அவருக்கு ஒரு பேயைப் போல் தெரிந்தாள் போலும்.ஒரு நள்ளிரவில், கும்மிருட்டில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு எடுத்தார் ஓட்டம். பிறகு அவர் புகழ்பெற்ற பிள்ளைவர சாமியாரானார்.

‘எங்கோ கண்காணாத இடத்துக்கு போன தன் கணவனை கண்டுபிடித்து தர வேண்டும்’  என்று கேட்டுக் கொள்ளவே சாமியாரை நோக்கி வந்திருந்தார் அந்தப் பெண்.

ன்னொரு சாமியார், இவர் அகில இந்திய புகழ் பெற்றவர். இந்தியாவின் பெரிய அரசியல் தலைவர்களிலிருந்து, மிகப் பெரிய பணக்காரர்கள்வரை இவரின் சீடர்கள்.

‘இவர் பேசவே வேண்டாம். பார்த்தாலே போதும். நமது பிரச்சனைகள் அகலும். நாம் ஒரு பரவச நிலைக்கு செல்வோம்’ என்கிறார்கள் அவரின் பக்தர்கள். பலரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் இந்தப் ‘பரவச சாமியாருக்கு’ ஒரு பிரச்சினை வந்தது. பார்வைக் கோளாறு.

தன் எதிரில் நிற்பது யார் என்பது தெரியாமலேயே பார்த்துக்(?)கொண்டிருப்பார் சாமியார்.

இப்படி கண்பார்வை மங்கிப்போய் கிடந்த சாமியாரைப் பார்த்து, பரவசமடைய புகழ் பெற்ற கண்மருத்துவர் ஒருவர், காஞ்சிபுரம் வந்து ‘ஸ்வாமி’ களின் காலடியில் விழுந்தார்.

வந்திருப்பது கண் டாக்டர் என்பதை கேட்டுத் தெரிந்துக் கொண்டார் ‘பரவசம்.’

தன் குறைகளைச் சொல்லி, ஆறுதலும், ஆசியும் வாங்க வந்த டாக்டரிடம், தன் குறையைச் சொல்லி வருத்தப்பட்டார் பரவச சாமியார்.

டாக்டரும் பணிவோடும், பக்தியோடும் ஒரு நல்ல மங்களகரமான நாளில் – கண்அறுவை சிகிச்சை செய்து, பரவச சாமியாருக்கு ‘அறிவுரை’ வழங்கினார்.

“தலைக்கு குளிக்காதீர்கள். குளித்தால் கண்ணுக்கு ஆபத்து”என்றார்.

‘இவன் என்ன எனக்கு அறிவுரை வழங்குவது? அது என் வேலையாயிற்றே ’ என்ற எண்ணம் பரவசத்திற்கு வந்துவிட்டது போலும். தீபாவளி அன்று தலைக்கு ‘கங்கா ஸ்நானம்’ செய்ய, அந்தக் கண் குருடானது.

பின் நாட்களில், ‘அறிஞர்களும்- அரசியல் தலைவர்களும்’ அந்தக் கண்ணைப் பார்த்துதான் சொன்னார்கள், “அருள் வழிகிறது. ஒளி தெரிகிறது. பிரகாசிக்கிறது” என்று.

ஆனால், பரவசம் நினைத்துக் கொண்டு இருப்பார். ‘அடப்பாவிகளா உங்களுக்கு என் கண்ணுல அருள் வழியுது, ஒளி தெரியுது ஆனா எனக்கு கண்ணே தெரியிலடா’.

    ந்த இரண்டு சாமியார்களின் சம்பவங்களிலும் வெளிப்படுகிற செய்தி, வழுக்கைத் தலையில் முடி வளர மருத்துவம் செய்வதாக சொல்லுகிற டாக்டரே, வழுக்கை மண்டையாக இருப்பதுபோல்,எந்த விசயத்திற்காக அவர்கள் மற்றவர்களுக்கு அருளாசி வழங்கினார்களோ, அந்த விசயத்திலேயே அவர்கள் பாதிக்கப்பட்டுக் கிடந்தார்கள்.

பிரச்சினைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்?’ என்று அல்லாடுகிற மக்களை, பொய்சொல்லி, ஏமாற்றி அவர்களை கேலிக்குரியவர்களாக்கி, அவமானப்படுத்துகிறார்கள் சாமியார்களும், அவர்களை முன் நிறுத்தி லாபம் சம்பாதிக்கும் நபர்களும்.

ஒரு துறவி, சாமியார் என்பவர் தனிப்பட்ட முறையில் ஆன்மீக தேடல்களில் ஈடுபட்டு காடு, மலை என்று பைத்தியம்போல் அலைந்து கொண்டிருந்தால் அதைப்பற்றி நமக்கு கவலையுமில்லை. கேள்வியுமில்லை.

எல்லா மனிதர்களைப்போலவே, அரிப்பெடுத்தால் சொரிந்துக் கொண்டு, உண்டு உறங்கி, கழித்து  வாழ்கிற மனிதனை மற்ற மனிதர்களை விட அதீத சக்தி படைத்தவன் என்று சொல்லுகிற அநாகரீகத்தை எப்படி சகித்துக் கொள்வது ?

மக்களின் மூளையில் வலை விரிக்கிற அந்த மோசடியை எப்படி பொறுத்துக்கொள்வது ?

“எல்லா சாமியார்களும் அப்படி இல்லை. சில போலிச் சாமியார்களால், சாமியார்களுக்கே கெட்டப்பெயர்”  என்று விளக்குகிறார்கள் சிலர்.

மாட்றவரைக்கும் சாமியார்.

மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா?

1994 -க்கு முன் பிரேமானந்தாவும் சாமியார்தான்.

பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக சாமியாரிடம் சென்று, பின் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள். சாமியாரிடம் ஆசி வாங்கச் சென்று, குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு தற்கொலைச் செய்து கொண்ட குடும்பங்கள் ஏராளம். பாலியல் வன்முறைக்கும், கொலைகளுக்கும் ஆளான பெண்களும், சிறுவர்களும்  அதைவிட ஏராளம்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு சில சாமியார்கள், நடுத்தர வர்க்கத்திற்கென்று சில சாமியார்கள், வசதி படைத்தவர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு பிரபலமானவர்களுக்கென்று சில சாமியார்கள்.

இப்படி வர்க்க வேறுபாடுகளோடும், இந்த ஜாதிக்கு இந்த சாமியார் என்றும் வகை வகையாக பிரித்திருக்கிறார்கள், பற்றற்ற சாமியார்கள்.

‘எல்லாம் சரிதான். ஏதோ கொஞ்சம் மனநிம்மதிக்கு சாமியாரைப் பார்த்தா, அது கூட தப்பா?

சக மனிதர்களின் மீது நம்பிக்கையின்மை, பொறாமை, ஆத்திரம் அவர்களின் பிரச்சினைகளில், துயரங்களில் பங்கெடுக்காத அதைப்பற்றி கொஞ்சமும் அக்கரையற்றத் தன்மை, எந்த நேரமும்  தன்னைப்பற்றியான ஞாபங்களிலேயே மூழ்கி கிடப்பது, பொருளாதார பின்னணியோடு நிறைய எதிர்கால திட்டங்களை (ஆசைகளை) வளர்த்துக் கொள்வது, இவைகளே சாமியார்களையும் நோக்கி பயணப்படுவதற்குக் காரணம்.

துயரங்களில் துவண்டு போகிற மனிதனுக்கு ஆதரவாக கரம் நீட்டுங்கள். அதுவே தியானம். அது உங்களின் துயரங்களின் போது திரும்ப நீளும்.

‘இவனோடு பழகுவதால் லாபம்’ ‘இவனோடு பழகி என்ன லாபம்? என்று நட்பை கூட்டி கழித்து, கணக்குப் பார்க்காதீர்கள்.

எந்த வேலையும் இன்றி சோம்பேறியாக கொழுத்துக் கிடக்கிற சாமியார்களின் கால்களில் விழாதீர்கள். அவர்களின் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்காதீர்கள்.

உங்களைச் சுற்றி இருக்கிற மனிதர்களின் வாழ்க்கையை உற்று நோக்குங்கள். தனது  வாழ்க்கையில் ஓய்வென்பதே இல்லாமல் 70-வயதுக்கும் மேலும் கொளுத்தும் வெயிலில் கை வண்டி இழுத்து உழைக்கிற அந்த முதியவரின் வாழ்க்கைச்சொல்லும் ஆயிரம் அர்த்தம். தனது தள்ளாத வயதிலும், கூடை நிறைய பொருள்களை வைத்து, அதை தலையில் சுமந்து, மாடி மாடியாக ஏறி வீதி வீதியாக சென்று ஒரு பத்து ரூபாய்க்காக படாதப்பாடுபடும் அந்த மூதாட்டியின் துயரங்களை புரிந்துக் கொள்ளுங்கள், வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்.

**

தினகரன் வசந்தம்இதழில் 2002 ஆம் ஆண்டு எழுதியது.

தொடர்புடையதுதான்:

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

ஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்

Karunanidhi

 

தமிழக அரசு, தமிழ்சினிமாவிற்கும் அதன் நடிகர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறது.

அபராதம் விதிக்க வேண்டிய படங்களுக்குப் பரிசும், தண்டனை தர வேண்டிய நடிகர்களுக்கு விருதும் தந்து, அவர்களை பெருமைப் படுத்துவதன் மூலமாக தன்னை  மீண்டும் சிறுமைபடுத்திக் கொண்டது தமிழ அரசு.

கோழைகளும், சந்தர்ப்பவாதிகளும், சமூகவிரோதிகளுமாக நிரம்பியிருக்கிற இந்த தமிழ்சினிமாவின் காக்கா கூட்டம், மீண்டும் கலைஞரை ‘காக்கா’ பிடித்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் காக்காகளில் முதன்மை காக்காவான ரஜினிகாந்த் என்கிற கழிசடை காக்கா இந்த நிகழ்ச்சியில் பேசும்போது;

“சேது சமுத்திர திட்டம் பத்தி ரொம்ப சீரியசா இருக்காங்க. அதைப் பத்தி பல விஷயம் சொல்றாங்க. இவ்ளோ ஆழம், அகலம், லாபம், நஷ்டம்னு சொல்றாங்க. சரியா, தப்பான்னு தெரியாது. ஆனா, அதுல ஒரு சென்சிட்டி£வன விஷயத்துக்கு எப்படியோ உயிர் வந்து, உருவெடுத்து பெரிய பூதகரமா வளர்ந்திருக்கு. அதை ஊதி, நெருப்பாக்கி, தீயாக்கி என்னென்னவோ செய்ய, சில வேலை நடக்கு. நமக்கு காரியம் நடக்கணும். தென்னிந்திய அரசியல் தலைவர் கலைஞர். அவருக்கு வட இந்தியத் தலைவர்கள் நண்பர்களா இருக்காங்க. பெரியவங்க உக்காந்து பேசி முடிவெடுத்தா, அது நல்ல முடிவா இருக்கும்னு நம்பறேன் ” இப்படி தமிழ்நாட்டு மேல நிரம்ப அக்கறை கொண்ட நபர் போல பேசிக் கொண்டு வந்து, கலைஞர் பெருமையை எல்லாம் குறிப்பிட்டு, பின்னாடி மெல்ல ஒரு ஊசி ஏத்தியிருக்கு இந்த காரிய பைத்தியம்.

இந்த வரியை மீண்டும் ஒரு முறை உன்னிபா படிச்சு பாருங்க: “தென்னிந்திய அரசியல் தலைவர் கலைஞர். அவருக்கு வட இந்தியத் தலைவர்கள் நண்பர்களா இருக்காங்க. பெரியவங்க உக்காந்து பேசி முடிவெடுத்தா, அது நல்ல முடிவா இருக்கும்னு நம்பறேன்” இந்த வரிதான் அந்த ஊசி. (‘சோ’ வோட ஆலோசனை போலும்)

“சேது பாலம் விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. அந்த மண்திட்டை பெயர்த்து தகர்த்துக்கொண்டுதான் திட்டம் நிறைவேறும்” என்று தெளிவாக அறிவித்திருக்கிறார், முதல்வர்.

அதன் பிறகும் அவரை வட இந்திய தலைவர்களோடு உட்கார்ந்து பேசச் சொல்கிறது ரஜினி.

வட இந்திய தலைவர்களில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் காங்கிரஸ்காரர்களோ, லாலுவோ, முலாயம்சிங்கோ அல்ல.
அப்படியானால் யாரோடு உட்கார்நது பேசுவது?

அத்வானி, வாஜ்பாய், வேதாந்தி இந்த மேதைகளோடு பேசச் சொல்லுகிறது, அந்த மேதை. என்ன கொழுப்பு பாத்தீங்களா?

‘வேதாந்தி’ என்கிறவன் “கருணாநிதியின் தலையை கொண்டு வா” என்று சொன்னதைக் கண்டித்து, எந்த கருத்தையும் சொல்லாத இந்த காக்கா, பெரிய மாமேதை மாதிரி, முதல்வருக்கு அறிவுரை சொல்லுது. எல்லாம் நம்ம கொடுக்கிற இடம்தான்.

“வேலியில போற ஒனாணை வேட்டியில எடுத்து உட்டுகிட்டு- –& –குத்துது, கொடையுதுன்னு சொல்லறதுல என்ன பிரயோஜனம்?” அப்பிடின்னு சொல்லுவாங்களே, அது இதுதான் போலும்?

“தலையை வெட்டிக்கிட்டு வா” என்று சொன்ன வேதாந்தியை கண்டித்து, கமல், ரஜினின்னு சினமாகாரனுங்க யாரும் கண்டிக்கல என்பதுகூட பெரிய விஷயமில்லை. பெரியாரா நடிச்சாரே, புரட்சி தமிழன் சத்தியராஜ், அவருகூட வாயே திறக்கல.

vairamuthu.JPG

இவ்வளவு சந்தர்பவாதிகள் நிறைந்திருக்கிற இந்த சினிமாவில், வேதாந்தியை துணிச்சலுடன் கடுமையாக கண்டித்த – கவிஞர் வைரமுத்துவிற்கும், கவிஞர் அறிவுமதிக்கும், இயக்குநர் சீமானுக்கும் நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக இயக்குநர் சீமானை பற்றி சொல்ல வேண்டும்.
தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை ஒளித்து வைத்துக் கொண்டு, தனது சந்தர்பவாதத்தை பகிரங்கபடுத்திக் கொள்கிற தன்மை இப்போது பரவலாக எல்லா மட்டங்களிலும் பரவி இருக்கிறது. அதுவும் சினிமாவில்  சொல்லவே வேண்டாம்.

அப்படிப்பட்ட சினிமாத்துறையில் முன்னணி இயக்குநராக இருக்கிற, – மக்களிடம் பிரபலமான ஒருவர் –& பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மத மறுப்பு, இடஒதுக்கீடு ஆதரவு போன்ற பெரியார் கொள்கைகளை மிக துணிச்சலோடு பேசுவது சாதாரணமான விஷயமல்ல. அதற்கு ஒரு தில்லு வேணும். அந்த தில்லோடு திறமையாக பேசுகிறார் சீமான்.

seemaan.jpg

பெரியாரின் போர்வாளாக இருந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மிக ஆவேசமாக, கோபம் கொப்பளிக்க பேசக் கூடியவர் என்று  படித்திருக்கிறேன். அவர்  எப்படி எல்லாம் பேசியிருப்பார் என்று நான்  உருவாக படித்திருந்தேன்.

13.10.2007 அன்று சென்னையில் சுபவீ  நடத்திய ‘மணல் திட்டும் மதவெறியும்’ என்ற பொதுக்கூட்டத்தில் சீமானின் பேச்சை முதல் முறையாக கேட்டேன். பட்டுக்கோட்டை அழகிரி பற்றிய என்னுடைய உருவகத்துக்கு ஒரு உருவமாக இருந்தது சீமானின் பேச்சு.

திரையுலகில் இருந்து நமக்கு மீண்டும் ஒரு எம்.ஆர்.ராதா கிடைத்திருக்கிறார். வாழ்த்துகள் சீமான்.

டிரைலர்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்லதொடர் வருகுது; நல்லதொடர் வருகுது;

சாதிகள் அதிருது; சண்டைகள் வருகுது

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ

வேதபுரத் தாருக்கு நல்லபுத்தி சொல்லு.

விரைவில் நமது வலைப் பதிவில் தொடராக வருகிறது,

பாரதியின் புகழுக்கு புள்ளி வைத்த புத்தகம்……

வே.மதிமாறனின் பாரதிய ஜனதா பார்ட்டி

book2.jpg

2000 ஏப்ரல் முதல் 2001 சனவரி வரை, ‘தலித் முரசுஇதழில் தொடராகவும் பிற்பாடு புத்தகமாக முதல் பதிப்பு 2003லும், இரண்டாம் பதிப்பும் 2005லும் வெளியாகி, பாராட்டுக் கூட்டங்களையும், கண்டனக் கூட்டங்களையும் சமமாக சந்தித்த புத்தகம்.

பாரதியோடு தன்னையும் சேர்த்து அடையாப்படுத்திக் கொண்டதால், இந்த புத்தகத்தைப் பற்றி முற்போக்காளர்கள்பலர் முகம் சுளித்தார்கள்.

“‘இவ்வளவு நாள் பாரதியோடு அன்பாக பழகி விட்டு இப்போது திடிர் என்று எப்படி பாரதியை விட்டு விலகுவது?” என்று அறிவுஜீவிகள்தங்கள் இயலாமையை கோபமாக வெளிபடுத்தினார்கள்.

உன்னை குறித்து இப்படி எல்லாம் எழுதுகிறார்களே, அதற்கு நீயும் உடைந்தையாக இருக்கிறாயே? ‘பாரதி, நான் ஏது செய்வேனடா?” என்று பேராசிரியப் பெருமக்கள் புலம்பினார்கள்.

இப்படி பலபேரின் வயித்தெரிச்சலைக கொட்டிக் கொண்ட பாரதியார் குறித்த இந்த ஆய்வு, நமது வலைப் பதவில் தொடராக வர இருக்கிறது.

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

பார்ப்போம்.

“ராம… ராம….”

rama2.gif

ஸ்ரீ இராமஜெயம்

வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி;

ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள்.

உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை, என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், “ஹா-புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளைக்கா என் புதல்வியைக் கொடுத்தேன்.என்று தம்மை நொந்து கொள்வார்.

இம் மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை

(அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழி பெயர்ப்பு)

நமக்கு ஒரு பிரச்சினை, அவமானம் என்றால் ராமனிடம் முறையிடலாம். ஆனால் ராமனுக்கே பெரிய அவமானம் என்றால் யாருக்கிட்ட போய் முறையிடுவது?

(‘தங்கப்பதக்கம்சினிமாவுல, சிவாஜிகிட்ட பிரமிளா பேசுன வசன பாணியில் படிக்கவும்)

சீதை தன் கணவன் ராமனை இப்படி கேவலமாக பேசிய இந்த சுட்சுவேஷனுக்குப் பொருத்தமாக ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் பாடிய எந்துகோ… ராமா… ஈ… ஜென்மமு…என்கிற கீர்த்தனையை இப்படி புரிந்து கொள்ளலாம்,

உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்

வே.மதிமாறன்

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

38691590.jpg

.

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

பனை ஏறும்தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க

இதுமுடி

வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

என்னங்க

பெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?

இப்படி இந்தியா டுடே

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

.

-‘இனிமாத இதழ், 1993 அக்டோபர்

ஜாதி ஒழிப்பே லட்சியம்

%d bloggers like this: