அப்படி என்ன பொல்லாத பாரதியின் காலம்? – 2

(பாரதியார் பற்றிய ஆய்வு)

`பாரதி` ய ஜனதா பார்ட்டி2

  bharti-image1.jpg

பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்`  முளைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

னது சனாதனதர்மங்களோடே முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட பார்ப்பனர்கள், தனது ஜாதிக்குள் எந்த சீர்திருத்தக் கருத்துகளையும் அறிவிக்காமல், சுற்றிக்கை விடாமல் குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள்; மீசை வளர்த்துக் கொண்டார்கள்; சிரைத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் குலப் பெண்களுக்கு கல்வியை தீவிரமாகக் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.

இப்படியாக ஆண்களூம், பெண்களூம் அரசு உத்தியோகம் பார்க்கத் தயாரானார்கள்.

கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து, முக்காடு போட்டு மூலையில் உக்காத்தி வைச்ச பார்ப்பனியம், உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சியை தீட்டுஎன்று சொல்லி அவளை அந்த மூன்று நாளும் வீட்டுக்கு வெளியே ஒதுக்கி வைத்து, அவள் மீது தீண்டாமையை அனுஷ்டித்து பெண்ணைக் கேவலப்படுத்திய பார்ப்பனியம், எந்த அறிவிப்பும் இன்றி, அந்தக் கொடுமைகளைத் தன் ஜாதிக்குள் முற்றிலுமாக ஒழித்துக் கொண்டது.

இது, முதலாளித்துவ தாக்கத்தால் அன்றி வேறு எதனால்?

இப்படி பார்ப்பன ஜாதிக்குள் கல்வி கட்டாயமக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பாரதி – சமூக சீர்திருத்தம், பெண்கல்வி குறித்துப் பாடுகிறார்.

இது பாரதியிடம் மட்டும் நிகழ்ந்த மாற்றமல்ல, ஒட்டுமொத்தப் பார்ப்பன சமூகத்திலேயே நிகழ்ந்த மாற்றம்.

தன் நலனில் அக்கறை கொண்டு ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பனியம், வழக்கம்போல் அந்தக் கல்வியையும் அடுத்தவற் கற்காமல் இருப்பதற்கு, அனைத்துத் தடைகளையும் விதித்தது.

(மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்தது. பின்னர் வந்த நீதிக்கட்சி அரசு (பனகல் அரசர்) அதை நீக்கியது.)

அதையும் மீறி படித்தவர்களின் புகழை மறைத்தது.

ஆம், இதை முதலாளித்துவ வடிவம் பெற்ற சனாதன தர்மம் எனலாம்.

முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது. பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லை.

அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.

dr-muthulakshmi_reddi1.jpg

வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டு பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் செலக்டிவ் அம்னீஷியாவோ?’

ஆம், முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.

நிற்க.

தொடர் கட்டுரையாக எழுதும்போது, இந்துத்துவா என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த இந்துத்துவா என்கிற வார்த்தை இந்த மதத்தைப் பாதுகாப்பது போலவும், ‘இந்துத்துவாதான் மோசமானது இந்து மதம் மிகவும் நல்லதுஎன்பது போன்ற அர்த்தத்தைத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், இந்துத்துவா என்கிற வார்த்தையை இந்து மதம் என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்கேறன்.

                                                                                                                                                                                                              

தோழமையுடன்

                                                                                                                                                                                                                வே. மதிமாறன்

டிசம்பர் 2002

`பாரதி` ய ஜனதா பார்ட்டி` நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில்

                                                                                                                                                                                                                                                                                                                                                            -தொடரும்

இதன் முந்தைய பகுதியை படிக்க         பாரதி` ய ஜனதா பார்ட்டி

  

இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவின் மிக சிறந்த அறிவு ஜீவி என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்?

நா.சுந்தரன்,கோவை. 

ambedkar.jpg

டாக்டர் அம்பேத்கரை. இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்றுவரை இப்படி ஒரு அறிவாளியை இந்தியா கண்டதில்லை.

அவரின் பார்ப்பன எதிர்ப்பு. இந்து மத எதிர்ப்பு இவைகளுக்காக மட்டும் சொல்லவில்லை. விஷயங்களை அவர் அலசி ஆராய்கிற முறை, அந்த தர்க்கம் அலாதியானது. உலகத் தரம் வாய்ந்தது.

விவாதங்களில் எதிரிகளை மிகச் சரியாக கணித்து, மிகச் சிறப்பான தயாரிப்புகளோடு லாவகமான வார்த்தைகளால் அவர்களை தகர்த்தெறிகிற அம்பேத்கரின் முறை அழகோ அழகு.

பார்ப்பனப் பெண்கள் உட்பட இந்தியப் பெண்களுக்கு இன்று இந்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைத்திருக்கின்ற குறைந்தபட்ச பாதுகாப்பே அம்பேத்கர் போராடி பெற்று தந்தது தான்.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம்சம், ஒரு தார மணம், வன்கொடுமைகளுக்குத் தண்டனை இவைகளை சட்டமாக்க அவர் பட்ட சிரமமும், அவமானமும் அதிகம்.

அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பார்ப்பனர்கள், பண்ணையார்கள், பிரபுக்கள், ராஜாக்களிடையே அம்பேத்கர் பாய்ந்தும், பதுங்கியும் நடத்திய விவாதம் ஒரு ராஜ தந்திரம் தான். (நம்ம ஊர்ல இருந்து போன பட்டாபி சீதாராமய்யர், .வி.அளகேசன், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற ஜாதி வெறி பிடித்த, பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட லூசுகளும் அதில் உள்ளடக்கம்.)

ambedkar1.gif

அதேபோல் வட்டமேசை மாநாட்டில் அவர் தனிநபராக இருக்க, காந்தி உட்பட எதிரிகளை அம்பேத்கர் தன் வாதங்களால் தூக்கிப் போட்டு பந்தாடிய முறையை, படிக்க படிக்க பரவசமூட்டும்.

அது ஆயிரம் ஆண்டு கோபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றானாமே சிவன், அதை விட உயரம், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் விஸ்வரூபம்.

வே. மதிமாறன்

மே 2007 சமூக விழிப்புணர்வு

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

`பாரதி` ய ஜனதா பார்ட்டி

(பாரதியார் பற்றியான ஆய்வு)

அப்படியென்ன பொல்லாத பாரதியின் காலம்..?

வே. மதிமாறன்

 

bharathi1.jpg 

 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,

1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.

2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.

இதில் மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த – இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.

மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து – விஸ்கி பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை பொறுமையாக அமைதி காத்தார்கள்.

ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால், ‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும் நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி, முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.

மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்` செய்து கொண்டார்கள்.

ஆம்,

மன்னர்களிடம், மன்னர்களுக்குக் கீழ் ராஜ குருவாக, ஆலோசகராக இருந்த பார்ப்பனர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வருகைக்குப் பிறகு மன்னர்களைவிடவும் அதிக எல்லைகளைக் கொண்ட பகுதிகளை ஆண்டார்கள். மன்னர்கள் மண்ணைக் கவ்வினார்கள்.

ஏகாதிபத்தியம் கொண்டு வந்த முதலாளித்துவத்தை அடைய பார்ப்பனர்கள் ஏறிய அதி வேக வாகனம் எது தெரியுமா?

ஆங்கிலம்.

சமஸ்கிருதம் தெரியாத பார்ப்பனர்களைக் கூட நிறைய பார்க்கலாம். ஆனால், ஆங்கிலம் தெரியாத பார்ப்பனர்களைப் பார்ப்பது அரிது, அரிது பார்ப்பதரிது.

ஆங்கிலத்தின் மீதான இந்த அன்பு, அந்த மொழியின் மீது ஏற்பட்ட காதலா?

ஆம். அவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்கிறார்கள்.

பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்`  முளைத்தது.

இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

…..தொடரும்

ஈவ்டீசிங்

hindu-women.jpg

ச்சீ..

பொம்பளைங்க

நிம்மதியா வெளியே

போயிட்டு வரமுடியுதா?

குறுக்க வந்த

ஆபாசமா பேசுறான்.

பின்னால வந்து

துணிய புடிச்சு இழுக்கிறான்.

கூட்டத்துல உரசுறான்

ஆம்பிளைக்கு

இதுதான் அழகுன்னு நினைப்புப் போல

ரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”

  

பெண்களுக்கு எதிரான

வன்கொடுமைகளைக் கண்டித்து

காலையில் பக்கத்து விட்டு

பாபு அம்மாவிடம்

ஆவேசப்பட்ட

அம்பிகா அத்தைதான்

மாலை வீட்டில்

டீ.வியின் முன்

பவ்யமாக அமர்ந்து

குகி. கூவமின்

ஆன்மீக அருளுரை

கேட்டுக் கொண்டிருந்தாள்

   

என்ன பண்ணார் தெரியுமோ

நம்ம கிருஷ்ணர்,

பெண்கள் குளிச்சிண்டுருந்த

குளத்துக்குப் போய்

அவா துணியெல்லாம்

தூக்கிண்டு ஓடியாந்துட்டார்.

  

அதேபோல் நம்ம கந்தனும்

மாறுவேஷம் போட்டுண்டு

அவா அண்ணா

விநாயகர் உதவியோட

வள்ளியை

ஓட, ஓட

விரட்டி, விரட்டி

காதல் பண்ணார்.

  

நம்ம பகவான்களுக்கு

மானிட பெண்களோடு

விளையாடுறதுல தனி குஷி”

 

கேட்டுக் கொண்டிருந்த

மாதர் சங்க பொறுப்பாளர்

அம்பிகா அத்தை முகத்தில்

பக்தி கலந்த பூரிப்பிருந்தது.

     

வே. மதிமாறன்

2002 ல் தலித் முரசு இதழில் எழுதியது.

எது மாயத்தோற்றம்?

mat2.jpg நமது உணர்வை, அறிவை தீர்மானிப்பது புறமா ? அகமா ?

கே. குமார்.

அகமே தீர்மானிக்கிறது என்கிறது மதம். மதம் என்றால் இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களின் உள்ளடக்கமும் இதுதான். 

ஆதிசங்கரரில் இருந்து  ஜெர்மனைச் சேர்ந்த பெர்குலி பாதிரியார் வரை அகமே என்றுதான் தங்கள் வாதங்களை முன் வைக்கிறார்கள். 

‘இரவில் கயிறை பாம்பாக நினைத்து பயப்படுகிறாய். வெளிச்சத்தில் பார்க்கும்போது பாம்பல்ல கயிறு என்று உணர்கிறாய். நீ பாம்பாக நினைத்தால் பாம்பு. கயிறாக நினைத்தால் கயிறு, என்று  உலப்புகிறார் ஆதி சங்கரர். 

மேலோட்டமாக பார்த்தால் மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தோன்றும். அதை மதவாதிகளின் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால், அப்படித் தோன்றுவது தான் மாயத்தோற்றம். 

மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றால், குழந்தை பிறக்கும்போதே அறிவாளியாக, நல்லது கெட்டதை தெரிந்து கொண்டு பல்வேறு மொழிகளையும் பேச வேண்டும் அல்லவா ?

மாறாக,  நமக்கு நம் பெயரையே அடுத்தவர் வைத்து, பலரால் அழைக்கப்பட்டு அதன் பிறகு, “உங்க பேரு என்னங்க ?” என்றால், பெயர் சொல்லவே தெரிந்துகொள்கிறோம். நம் பெயரையே அடுத்தவர் சொல்லிதான் நாம் தெரிந்து கொள்கிறோம் என்றால், மற்ற விஷயங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ ?

ஒருபொருள் அல்லது ஒரு நபர் இல்லாவிடின் அவர்களை  அவைகளைப் பற்றியான கருத்தோ, அறிவோ நமக்குத் தோன்றாது. உணர்வும் அதோடு இணைந்ததே. 

நமது உணர்வை சமூகம்தான் தீர்மானிக்கிறது. இதை ஒரு எளிமயான உதாரணம் மூலம் புரிந்து கொள்வோம்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து, ஒரு பெண் கருவுறுகிறாள். குழந்தைக்கு  தாயாகப் போகிறாள் என்கிற செய்தி, அவளை அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவளுடைய தாயும் மகிழ்ச்சி அடைகிறாள். கணவன், கணவனின் குடும்பம் என்று எல்லா உறவினர்களுக்கும் கருவுற்றுச் செய்தி சொல்லப்படுகிறது. குடும்பமே விழா எடுத்து குதூகலிக்கிறது. 

இதே சம்பவத்தை கொஞ்சம் திருப்பிப் போட்டுப்  பார்ப்போம். திருமணத்திற்கு முன் அதே பெண் கருவுறுகிறாள். கருவுற்ற செய்தி, கருவுற்றப் அந்தப் பெண்ணையே திகலடைய வைக்கிறது. அவளுடைய தாய் அவமானத்தால் அலறுகிறாள். ஒட்டு மொத்த அந்தப் பெண்ணின் குடும்பமே பயந்துபோய் அந்தச் செய்தியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பாதுகாக்கிறது. குடும்பத்தையே சொல்ல முடியாத சோகம் சூழ்கிறது. 

சம்பவம் ஒன்றுதான்.

இவர்களின் உணர்வை எது தீர்மானிக்கிறது?

மனமா? சமூகமா?

**

2007 நவம்பர் 29 அன்று எழுதியது.

**

கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்

**

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

கண்ணீர் காசாகிறது

இது கதையல்ல.. நிஜம்

வே. மதிமாறன்

lax.jpg

லட்சுமி திறமையான நடிகை. அவர் நடிப்பின் முழு பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான், அதுவும் கதையல்ல நிஜத்தில்தான் அமைந்திருக்கிறது.

  

தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு.

(அவள் ஒரு தொடர்கதை)

தந்தையும் மகனும் பார்வையற்ற ஒரு பெண்ணுடன் உறவு

(எங்க ஊர் கண்ணகி)

தன் மகனின் காதல், கல்யாணத்தில் முடியாமல் தடுப்பதற்காக, மகன் காதலித்த பெண்ணின் அம்மாவை தான் மணம் முடித்து, மகனின் காதலியையே அவனுக்குச் சகோதரியாக மாற்றிய தந்தை.

(வானமே எல்லை)

அவுங்க அம்மாவை, இவரு பையன் காதலிப்பான்; இவனோட அப்பாவை அந்த அம்மாவோட பொண்ணு காதலிக்கும் (அபூர்வ ராகங்கள்)

இப்படிப் புரட்சிகர குணாம்சங்களோடு கதாபாத்திரங்களை உருவாக்கி, திரைப்படம் எடுத்த அந்த  பின் நவீனத்துவ பிதாமகன்யார் தெரியுமா?

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை,  வக்கிரங்களைக்

balac.jpgகண்டித்து, தன் பணத்தை எல்லாம் செலவு செய்யும் கதையல்ல நிஜம்நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பாளருடைய அப்பாவான, இயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் போற்றப்படும் இயக்குநர் வக்கிரம் கே.பாலச்சந்தர்தான்.

இவர் தனது படங்களில் பெண்களுக்கான குரலை மிக சத்தமாகக் கொடுப்பவர். ஆனால், தகாத கணவனை தள்ளி வைத்து விட்டு மறுமணம் செய்து கொள்ளத் தயாராகிற பெண்ணை  தன் முதல் கணவன் கதாபாத்திரமாக வந்து, எப்படியாவது அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவார். (அவர்கள், மனதில் உறுதி வேண்டும்)

தனது அரங்கேற்றம்படத்தில் பாலியல் தொழிலாளியாக இருக்கிற பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி, திருமணம் நடப்பதற்கு முன் அந்தப் பெண்ணை பைத்தியமாக்கி அலைய விடுவார். இது மட்டுமல்ல, திரைப்பட வரலாற்றிலேயே பல புதுமைகளை செய்தவரும் இவரே.

 

ek_duuje_ke_liye.jpgஏக்துஜே கேலியேபடத்தில் உலகிலேயே முதல் முறையாக கதாநாயகியின் வயிற்றில் பம்பரம் விட்டுக் கட்டியதோடு, அந்தப் பெண்ணின் தொப்புளில் மண்ணையும் கொட்டி மூடியவரும் இவரே.

மரோசரித்திராதெலுங்குப் படத்தில் உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு புதுமையைக் கையாண்டிருப்பார்.

கமலும் & சரிதாவும், காதல் தோல்வியால் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கரை ஒதுங்குவார்கள். கமல் குப்புறப்படுத்து செத்துக் கிடப்பார். சரிதா மல்லாக்கப் படுத்து செத்துக் கிடப்பார்.

ஆம், பெண்ணின் பிணத்தைக் கூட கவர்ச்சியாகக் காட்டிய ஒரே உலக மகா இயக்குநர் கே. பாலசந்தர்தான்.

. . .

கதையல்ல நிஜம்’  இந்த நிகழ்ச்சியால் ஒன்று சேர்ந்த குடும்பங்கள் என்று இரண்டு குடும்பங்களை, தொடர்ந்து தன் விளம்பரங்களில் காட்டிக் கொண்டு வருகிறார்கள். உண்மைதான்.

இந்த இரண்டு குடும்பங்களைத் தவிர, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த மீதி குடும்பங்கள்,  இனி ஜென்மத்துக்கும் ஒன்று சேர முடியாத அளவிற்கு கதையல்ல நிஜம்குழுவினர் வேலை பார்த்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

11 வயது சிறுவன் சொல்கிறான், ‘‘நான் வீட்டை விட்டு ஓடிப் போய் பிச்சை எடுத்தேன், திருடினேன், பொம்பளைங்கள கூட்டிக் கொடுத்தேன்’’ என்று, ‘‘அய்யோ’’ என்று பரிதாபத்துடன் ஆச்சரியப்பட்டு துக்கம் தாங்காமல் ‘‘ஒரு விளம்பர இடைவெளிக்குப் பிறகு..’’ என்று அறிவிக்கிறார் நடிகை லட்சுமி.

இனி அந்தச் சிறுவனின் அக்கம்பக்கம் அவனை எப்படி எதிர்கொள்ளும்? அவனைக் குறித்த இந்தக் காட்சிப் பதிவு அவன் எதிர்காலத்தை எந்த நிலையில் வரவேற்கும், என்கிற எந்த சமூகப் பொறுப்பும் அற்று அவலம் தோய்ந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சிஎன்கிற தொனியில் அவன் துயரத்தை பணம் பண்னும் இவர்களுக்கும், அந்தச் சிறுவனை திருடனாக்கி விபச்சாரத்தரகனாக்கி  பணம் சம்பாதித்த அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கண்ணீரும், கம்பலையுமாக ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறார். அதே கண்ணீரோடு குறுக்கிட்டு, ‘ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, நாம் மீண்டும் அழலாம்என்பது மாதிரி அறிவித்து விட்டு, குதூகலமான விளம்பரங்களைப் போட்டு, மிகச் சாதுர்யமாக அடுத்தவர் கண்ணீரில் காசு சம்பாதித்துக் கொடுக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண் நடிகை லட்சுமிக்கு ஒரு வேண்டுகோள்:

பொதுவாக இந்தியப் பெண்கள் ஆணுக்கான நுகர்பொருளாகவும், அது போக மீதி நேரங்களில், கலாச்சாரக் காப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். ( மதம் உட்பட கலாச்சாரம் என்று சொல்கிற எல்லாவற்றையும் பெண்தான் காப்பாற்ற வேண்டும்)

இந்த இந்தியச் சூழலில் சினிமா, தமிழ் சினிமா & ஆணாதிக்க பொறுக்கித் தனத்தின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம்.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்று ஆண்களால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கும் தமிழ் சினிமா, நடிகையாக வரும் பெண்ணை எப்படி வரவேற்கிறது என்றும், அந்தப் பெண்கள் சந்தித்த துயரங்கள் என்ன என்றும், அவர்களை நேரில் வரவழைத்து அவர்களின் துயரங்களை பகிர்ந்து கொள்வீர்களா?

குறிப்பாக, பாலச்சந்தர் படங்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதோடு, அவர் தன் படங்களில் நடித்த பெண்களை எந்த அளவுக்கு கண்ணியமாக நடத்தினார்? இல்லை, அடித்து உதைத்து, திட்டினாரா? என்பதையும் அந்தப் பெண்களிடம் பேட்டி கண்டு ஒளிபரப்புங்கள். அதை முதலில் உங்களில் இருந்தே தொடங்குங்கள்.

நீங்கள் அவர் இயக்கத்தில் நடித்திருக்கிறீர்கள். அவர் தயாரிப்பில் இயக்குநராகவும் இருந்திருக்கிறீர்கள். (மழலைப் பட்டாளம்)

இதற்கு உங்களைவிட சரியான, துணிவான நபர் வேறு யார்?

சொல்லுங்கள் உங்கள் துயரங்களை.

அடுத்தவர் துயர்களுக்காகக் கண்ணீர் சிந்திய உங்களுக்கு பிரதி உபகாரமாக, கண்ணீர் சிந்தக் காத்திருக்கிறோம்  அதே விளம்பர இடைவெளியோடு.

வாய்ப்புத் தருவீர்களா?

   

பெட்டிச் செய்தி

ஒரு பெண் சொல்கிறார்; என் மேலே சந்தேகப்பட்டு என்னைத் துன்புறுத்துறாரு, வீட்டுக்குள்ளே பூட்டி வெச்சிட்டு வெளியே போயிடறாரு’’

நடிகை லட்சுமி; ‘‘ஏன் இந்த மாதிரி பண்றீங்க? உங்க மனைவிதானே, சரி நடந்தது நடந்துப் போச்சு, ரெண்டு பேரும் குழந்தை மாதிரிதான் இருக்கீங்க, ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு அதிகமா இருக்கிறதுனாலே..’’

வீட்டுக்குள்ள பொண்டாட்டிய பூட்டி வெச்சிட்டுப் போறவன் குழந்தையாம்?! அவனுக்கு அன்பு வேறு அதிகமாம்!

உடனே சரி கைய புடிங்க, கட்டிப் புடிங்கஎன்று கவுன்சிலிங் வேற.

தங்கள் நிகழ்ச்சியின் மூலமாக ஒன்று சேர்ந்தவங்க எண்ணிக்கையை உயர்த்திட்டோம் அப்படிங்கற விளம்பரபெருமைக்காக ரொம்பவே அல்லாடுகிறார் லட்சுமி, அசிங்கமாக.

இதை அவராகவே செய்கிறாரா? இல்லை, மகா ஞாநிகளின் ஆலோசனையும் ஆசியும் பெற்று செய்கிறாரா?

***

மொட்டைத் தலையில் மயிர் முளைப்பது எப்படின்னு?’ ஒரு தீவிரமான ஆலோசனையை நடிகர் சோசொன்னார்னா, எவ்வளவு அபத்தமாக இருக்குமோ & அது மாதிரிதான் இருக்கு, ‘கணவன் & மனைவி ஒற்றுமையா இருக்கணும்; என்ன பிரச்சினை வந்தாலும் பிரியக்கூடாதுன்னு நடிகை லட்சுமி சொல்கிற அறிவுரையும்.

  

2003 ல் தலித் முரசில் எழுதியது. இது நடிகை லட்சுமியையும் கதையல்ல நிஜம் குழுவினரையும் நிரம்ப கடுப்பேற்றியதாக கேள்வி.

இதுதான் அறிவு நாணயமா?

 பெரியாரை சரியாக புரிந்து கொள்ள ஒரே வழி

stalin_photo.jpg 

பெரியாரைப் பற்றி ஆய்வு செய்து தடி தடி புத்தகங்கள் வெளியிட்ட புது பெரியாரிஸ்ட்டுகளான மார்க்சியஅறிஞர்கள், பெரியாரின் கம்யூனிச ஆதரவு பற்றி நிரம்பப் பூரிப்போடு புத்தகம் வெளியிட்டார்கள்.ஆனால் அவர்கள் தங்கள் சொந்தக் கருத்தை பெரியார் மீது ஏற்றி, பெரியாரின்  ஸ்டாலின் ஆதரவு நிலையை இருட்டடிப்பு செய்தார்கள். 

பெரியார் அயல் நாட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் நிர்வான சங்கத்தில் கலந்து கொண்டதை கூட மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் இன்னொரு மார்க்சியஅறிஞர். (ஒரு அனுபவமாகத்தான் பெரியார் நிர்வான சங்கத்திற்கு சென்றிருக்கிறாரே தவிர, அதை ஒரு தத்துவமாக பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)இவரும் பெரியாரின் ஸ்டாலின் ஆதரவை இருட்டடிப்பு செய்தார். 

periyar_in_russia.jpg

பெரியார், ஸ்டாலின் ஆட்சியை புகழந்து எழுதினார் என்பது மட்டுமல்ல, பல குழந்தைகளுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக திராவிட இயக்கமே ஸ்டாலின் ஆதரவு நிலையில்தான் இருந்தது. அதனால்தான் கலைஞர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார். நிற்க. 

உலகம் முழுக்க உள்ள கிறிஸ்தவர்கள் ஸ்டாலின் பெயரை வைக்க மாட்டார்கள். ஒருவேளை  தெரியாமல் வைத்துவிட்டாலும், அந்தப் பெயருக்கு எந்த பாதிரியும் ஞானஸ்நானம் செய்யமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (சர்ச்சுகளை எல்லாம் ஆஸ்பத்திரியா மாத்துன, பாதியார்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செஞ்சா, எந்தப் பாதிரி குழந்தைகளுக்கு ஸ்டாலின் பேரை வைப்பான்) 

மதவாதிகளை அச்சுறுத்துவதைப் போலவே ஸ்டாலின் என்கிற அந்த பெயர் போலி மார்க்சிய அறிஞர்களையும் அச்சுறுத்துகிறது, என்பது தற்செயலானது அல்ல.இந்த மூன்று அறிஞர்களும், பெரியாரின் ஸ்டாலின் ஆதரவை மட்டுமா இருட்டடிப்பு செய்தார்கள், அவரின் பாரதி எதிர்ப்பையும் இருட்டடிப்பு செய்தார்கள்.  

எங்களுக்கு பெரியாரின் இந்தக் கருத்துக்களில் உடன்பாடில்லை. ஆனால் அவர் இப்படி ஒரு நிலையில் இருந்திருக்கிறார்  என்று அதை பெரியாரின் கருத்தாக கூட பதிவு செய்ய மறுத்தார்கள். இதுதான் இவர்களின் அறிவு நாணயம்? 

lenin_and_stalin.jpg

பெரியாரின் ஸ்டாலின் ஆதரவும், பாரதி எதிர்ப்பும் இந்த அறிஞர்களை அச்சம் கொள்ள செய்து, பெரியார் இவர்களையே விமர்சிப்பது போல் தோன்றியது போலும். 

 ( நமது பாரதிய ஜனதா பார்ட்டிஎன்ற பாரதியின் விமர்சன நூலுக்குப் பிறகு பாரதி பற்றிய தங்கள் கருத்துகளில்  இந்து மூவரும் மவுனம் சாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) 

ஆகவே தோழர்களே, பெரியாரை சரியாக புரிந்து கொள்ள ஒரே வழி – பெரியாரைப் பற்றி படிக்காமல், பெரியாரையே படியுங்கள்.

வே. மதிமாறன்

ஸ்டாலினும் பெரியாரும்

soviet_union_stalin.jpg

‘உன் மதமா? என் மதமா? என்று உலகம் முழுக்க யூத, கிறித்துவ, இஸ்லாமிய, இந்து மதவாதிகள் முறுக்கிக் கொண்டு நின்றாலும், இவர்கள் சங்கமிக்கிற இடம் ஒன்று உண்டு. அது , கம்யூனிச எதிர்ப்பு. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் எதிர்ப்பு.

அறிவு ஜீவிகள், மார்க்சியத்தின் பின்னணியில் சிந்திப்பதாக சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள், கதை மேதைகள், கட்டுரையிலேயே கதை விடுபவர்கள், இன்னும் இலக்கியப் போர்வையோடு வரும் இந்து மத வெறியர்கள் & இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைச் சேறுகளை வாரி அடித்துக் கொண்டாலும், இவர்கள் ஒன்றுபடுகிற இடம் ஒன்று உண்டு.

அது, ஸ்டாலின் எதிர்ப்பு.

”ஸ்டாலின் ஒரு கொலைகாரன்”

”ஸ்டாலின் மக்கள் விரோதி”

”ஸ்டாலின் ஆட்சியில் சுதந்திரம் என்று பேச்சுக்கே இடம் கிடையாது.”

”ஸ்டாலின் ஆட்சி இரும்புத் திரை” என்றெல்லாம் இவர்களால் அவதூறு பரப்பப்படுகிற தலைவர் ஸ்டாலின் ஆட்சியை நேரில் கண்ட சாட்சியாக தலைவர் பெரியார்.

ஒடுக்கு முறைகளுக்குத் தாய்வீடாக இருக்கும் சிறைச்சாலை, ஸ்டாலின் ஆட்சியில் கைதிகளுக்கு வீடாகவும் தொழிற்சாலையாகவும் பயன்பட்டது என்று அந்த இரும்புத் திரையை விலக்கிக் காட்டுகிறார்.

ஆம். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில், சாதாரண குடிமகனுக்கு உள்ள சுதந்திரத்தை விட , சோவியத் நாட்டில் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச குடியரசில், கைதிகள் கூட எவ்வளவு சுதந்திரமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சாட்சியளிக்கிறார் தலைவர் பெரியார்.

 -வே. மதிமாறன்

அய்யா ஆனைமுத்து தொகுத்த, ‘பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள்என்ற நூலில், தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதியது:

 

periyar_1.jpg

 ‘Leaforthov’ ஜெயில் பார்க்க அழைக்கப்பட்டுப் போனோம். டைரக்டர் அறிமுகம் செய்யப்பட்டு அவர் எல்லாம் காட்டினார். மே First க்கு ஆக ஜெயில் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். கைதிகளுக்கு எவ்வித அடையாளமும் இல்லை. ஜெயில் என்பது பல பேக்டடரிகள் இருக்கிறது தான்.

பனீன், மொப்ளர் பின்னல் நெசவு பார்த்தோம். டைமன் பட்டில் நல்ல வேலைகள் செய்யப்படுகிறது. மற்றும் கோட்டுகள், ஓவர் கோட்டுகள் முதலியவை செய்யப்படுகின்றன.

சிறைக்கூட அறைகள் பார்த்தோம்; கட்டில் மேஜை நாற்காலி, கம்மோட், தண்ணீர்க் குழாய், பேசின், உஷ்ணம், புஸ்த்தகங்கள் அலமாரி ரேடியோ முதலியவைகள் இருக்கின்றன.

ஒரு ரூமுக்கு 2 அல்லது மூன்று பேர் உண்டு. ஒரு ரூம் 816 அளவு. அவர்களுக்கு க்ஷவரம் செய்யும் சலூன் உண்டு. சையன்சு அறை உண்டு. பத்திரிகைகள் படிக்கும் ரீடிங் ரூம், புஸ்த்தகங்கள் படிக்கும் லைபெரிரி, படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள், சித்திர வேலை கற்பித்தல் முதலியவை உண்டு.

இங்கு டிராமா, சினிமா ஆல்கள் பார்த்தோம். 17 வயது பையன் ஒருவன் பல திருட்டில் அகப்பட்டு 3 1/2  ஆண்டு தண்டனை அடைந்தவனைப் பார்த்து விசாரித்தோம். அவன் 2 ஆண்டு இங்கு இருந்து வேலை பழகி பிறகு தனி பேக்ட்டரிக்கு அனுப்பப்படுவான். இப்போது நெசவு வேலை செய்கிறான். இந்த ஜெயிலில் 600 கைதிகள் உண்டு.

இதை மாதிரி 4 அடுக்கு கட்டடம். இது புரக்ஷிக்கு முன் கட்டப்பட்ட ஜெயில் கட்டடம். சில திருத்தப்பாடு செய்திருக்கிறது. ஆனால், புது ஜெயில்கள் இன்னமும் நன்றாய்க் கட்டப்படுகின்றன. முன் ஒரு அறைக்கு ஒரே கைதி, இவன் எப்போதும் உள்ளேயே இருப்பான்.

முன்னால் இங்கு சர்ச்சு இருந்தது. இப்போது அது ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. ராத்திரி காலத்தில் கைதி சிறைக்குள் இருப்பான். அதுவும் இரவு 12 முதல் 5 மணிவரைதான் இருப்பான்.

ஒரு கைதி 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும்; அவர்களுக்கு சாப்பாடு துணி முதலியவை இல்லாமல் ஒரு கைதிக்கு மீ 30 ரூபிள் சம்பளம் உண்டு. அதில் பகுதியை அவன் இஷ்டப்படி செலவு செய்யலாம். அதாவது, இங்கு கடையில் அவனுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். மீதி மீ 15 ரூபிள் வீதம் சேர்த்து வைத்து விடுதலை ஆகிப் போகும் போது கையில் கொண்டு போவான். அவர்களுக்கு அடிக்கடி மீட்டிங்குகள் உண்டு.

தொழில் விஷயமான பிரசங்கம், சோஷியலிஸ்ட் பிரசங்கம் செய்வார்கள். 3 மணி நேரம் படிக்கலாம். 6 நாளில் 1 நாள் லீவு. 7 நாள், சிலர் 14 நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாம். குடியானவன் கைதி, கூட்டுப் பண்ணையத்துக்காரன் வருடத்தில் மூன்று மீ வீட்டுக்கு வேலைக்குப் போய்வரலாம். தினமும் தாராளமாய் வீட்டுக்குக் கடிதம் எழுதலாம்; பதில் பெறலாம். பத்திரிகை, புஸ்தகம் தாராளமாய்ப் பெறலாம்.

சாப்பாடு 2 வேளை; காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சாப்பாடு டீ வேண்டியது Free யாய் வேண்டிய வரை கிடைக்கும். தொழில்சாலை உடை தவிர மற்ற உடை அவர்கள் சொந்தத்தில் இஷ்டப்படி உடுத்திக் கொள்ளலாம்.

மே First க்கு100 பேர்களை ஒரு நாள் எல்லாம் வெளியில் போய் வர அனுமதிப்பார்கள். கைதிகளுக்கு என்று தனிப்பத்திரிகை உண்டு. அது மீ 3 முறை 5  கோபக் விலை. லைபெரிரியில் 8000 எட்டு ஆயிரம் புஸ்த்தகங்கள் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளும் வருகின்றன. 100க்கு 82 பேர்கள் ஜெயிலில் பத்திரிகைக்கு சந்தாதாரர்கள். செஸ் முதலிய கேம் விளையாட்டுச் சாமான்கள் இருக்கின்றன.

இங்குள்ள கைதிகள் குற்றம் செய்தால் இங்கேயே கைதிகளுக்குள் எலக்ட் செய்த ‘காம்ரேட் கோர்ட் ‘டில் விசாரித்து நீதி செலுத்துவார்கள். அந்தத் தீர்ப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஜெயில் அதிகாரிகள் 3 நாள் வரை மூடி வைத்திருக்கும் தண்டனை செய்வார்கள்.

12 முதல் 5 வரைதான் ஜெயில் அறை பூட்டி இருக்கும். மற்ற காலங்களில் திறந்தே இருக்கும். பிரரேட் கோர்ட் தண்டனை என்பது குறிப்பிட்ட காலத்துக்கு சில சவுகரியங்கள் இல்லாமல் செய்வது. அவரவர்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு புஸ்த்தகம் உண்டு. இது போல் மாஸ்கோவில் 6 ஜெயில் இருக்கின்றன. மொத்தம் 4000 நாலாயிரம் கைதிகள் உண்டு.

பெண்களுக்குத் தனி ஜெயில் உண்டு. (சில கைதிகள் தங்கள் அறைக்குள் ஸ்ட்டவ் வைத்திருந்தார்கள். மே First க்கு தங்கள் தங்கள் அறையை அலங்கரித்துக் கொண்டும் இருந்தார்கள்) மாஸ்கோ ஜில்லா பூராவுக்கும் சுற்றுப்பக்க கிராமங்களும் சேர்ந்து 4000  கைதிகள். இந்த ஜெயிலில் இருந்து போகும் கைதிகள் நல்ல வேலைக்காரர்களாகி விடுகிறார்கள். ஜெயில் காரணத்தினால் ஓட்டுக்கு அருகதை போய்விடாது.

இந்த டைரக்ட்டர், ரிவிலாஷனுக்கு முன் கொல்லு வேலை செய்து கொண்டிருந்தவர், ஜெயில் திருத்தமெல்லாம் அனேகமாய் இவருடைய முயற்சியிலேயே செய்யப்படுகிறது. இவர் பெயர் மவுலின். ரிவிலூஷனில் இவர் தண்டனை அடைந்து சைபேரியாவில் நாடு கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்; அரசியல் கைதியாயும் இருந்தவர். தான் போர்ட்சைட் வரை வந்திருப்பதாகச் சொன்னார். இவர் 29 வருடமாக கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்து வேலை செய்தவர். இவர் ஓல்ட் போல்ஸ்விக் மெம்பர். 15000 தொழிலாளிகளின் ஸ்ட்ரைக்கை லீட் செய்தவர்.

EVRகேழ்வி: ”இங்கு இவ்வளவு தாரளமாய்க் கைதிகள் விடப்படுகிறார்களே , ஓடிப் போவதில்லையா?”

பதில்: ”இதிலிருந்து ஒரு தடவை3 பேர் ஓடிப்போனார்கள். பிறகு தானாகவே வந்து விட்டார்கள். சில சமயங்களில் 100 பேர் 200 பேர் சர்க்கஸ் பார்க்க என்று விடப்படுவார்கள். அவர்கள் காவல் இல்லாமலேயே போய் விட்டுத் தாங்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள். காரணம், அவர்களது நல்ல, நடவடிக்கையும் மற்றும் வெளியில் அவர்களுக்கு டிக்கட் இல்லாமல் சுலபத்தில் சாப்பாட்டுச் சாமான், அறைகள் முதலியவை கிடைக்காததுமாகும்.”

ரெவிலூஷன்போது இந்த டைரக்ட்டரின் பெண்ஜாதி குழந்தைகள் எதிரிகளால் (ஒயிட்ஸ்களால்) கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர் ஆக்ஷியில் இது உள்பட 4 ஜெயில்கள் மேற்பார்வையில் இருக்கிறது.

இந்த 4 ஜெயிலில் இருந்து வருஷம் 1 க்கு 8 மிலியன் ரூபிள் மீதியாகிறது. 2300கைதிகளின் வேலையால் வருடம் 8000000 ரூபிள் சர்க்காருக்கு லாபம். அதாவது ஒரு கைதியால் மீ275 ரூபிள் மீதியாகிறது. கைதிகளுக்கு அதிகமான சுதந்திரமும் சவுகரியமும் உண்டு. நன்றாய் நடந்து கொள்ளுகின்றவர்களுக்கு அதிக சவுகரிமும் லாபமும் உண்டு

 

*

தலித் முரசில் 2001 சூனில் எழுதியது.

தொடர்புடையது:

ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர் அம்பேத்கர்-பிரபாகரன்-வ.உ.சி.

முற்போக்கு பார்ப்பனீயம்

 வே. மதிமாறன்

 ambedkar_periyar1.jpg 

நீங்கள் இலக்கியப் பறையனாக இருக்க விரும்பவில்லையெனில், ஆங்கிலத்தில் எழுதுங்கள்”                 வாஸந்தி   இந்தியன் எக்ஸ்பிரஸ்’ –  25.3.03 

யாரடா சொன்னது & தமிழை நீச மொழியென்று, தீட்டு மொழியென்று.ஆங்கிலம் எனன் ஆண்டவன் பாஷையா? ஆங்கிலத்தில் எழுதுகிறவன் என்ன ஆறு கை அவதாரமா? தமிழில் எழுதுகிறவன் என்ன ஒடிந்த கையனா? 

தமிழ் வாழ்க, ஆங்கிலம் ஒழிகஎன்று மகாகவிபாரதியின் நடிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி கண்டிக்க வந்த ஞானக் கொள்ளுப் பேத்திவாசந்திக்கு,  பாரதியின் பரம்பரை புத்தி வேலை காட்டி விட்டது. 

ஈனப்பறையர்களேனும் & அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோஎன்று எழுதினானே மகாகவி’, அதே பாணியில், ‘‘என்னை ஏன் பறைச்சி மாதிரி நடத்துறீங்க. தமிழ்ல எழுதறதுனால என்னை தாழ்ந்த ஜாதிக்காரின்னு நினைச்சிங்களா?’’ என்கிற விஷப் பொருள் பொதிந்த அர்த்தத்தில் எழுதியிருக்கிறார்.  

இப்படி இழிவான பொருள்படும்படி கொள்ளுப் பேத்திதிட்டமிட்டு எழுதவில்லை. அவர்களின் இயல்பான உணர்வது.

சரி, தமிழில் எழுதுகிறவர்களை, ஆங்கில எழுத்தாளர்கள் அளவிற்கு மதிப்பதில்லை என்பது இருக்கட்டும்.

தமிழில் எழுதுகிறவர்களை, தமிழில் எழுதுகிறவர்களே மதிப்பதில்லையே! தலித் வாழ்க்கையைத் தனது அற்புதமான எழுத்தாற்றலால் அள்ளிக் கொட்டிய சிவகாமிக்கு கிடைத்த மரியாதையை விட கிராஸ் வேர்ட்என்ற வெளிநாட்டு விருதைப் பெற்ற பாமாவிற்குக் கிடைத்த மரியாதையைவிட, – எழுத்தாளர்களாகிய இந்துமதி, அனுராதா ரமணன், சிவசங்கரி, வாசந்தி இவர்களுக்கு வெகுஜன தமிழ்ப் பத்திரிகைகளில் கிடைத்த மரியாதை, புகழ், பெயர் கூடுதல்தானே? எப்படி அது?

அதுதான் உயர்ஜாதியில் பிறந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீடோ? ‘ஆமாம்என்கிறது பா.ஜ.க. 

‘‘ஏழை பார்ப்பனர்கள், குசேலன் காலத்தில் இருந்தே பொருளாதார ரீதியாக துன்பப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் குசேலன் என்கிற ஏழை பார்ப்பனருக்கு உதவ கிருஷ்ண பரமாத்மாஇருந்தான். இப்போது யார் இருக்கிறார்கள்’’ என்று அழுது புலம்பியது பார்ப்பன ஜனதா கட்சி (பா.ஜ.க) 

இந்தப் பார்ப்பனிய ஜாதி சங்கத்தில் எந்த ஜாதிக்காரன் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். தலைமைப் பொறுப்புக்கும் வரலாம். ஆனால், அடியாளாக இயங்க வேன்டும், பார்ப்பனிய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அப்படி அதீத அக்கறை கொண்டவர்களில் ஒருவர்தான் வெங்கையா (நாயுடு). இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்பவர். 

அண்மையில், ‘‘அய்யோ ஏழை உயர் ஜாதிக் காரர்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்களே, சோற்றுக்கு இல்லாமல் சாகிறார்களே, தாழ்ந்த நிலையில் தள்ளப்பட்டிருக்கிற இந்த உயர்ஜாதிக்காரர்களைக் காப்பாற்ற யாருமில்லையா?’’ என்ற ரீதியில் கதறி தன் கடமையை நிறைவேற்றினார். அவர் கடமைக்கும் கதறலுக்கும் உடனே பலன் கிடைத்தது. 

இதோ நான் இருக்கிறேன்என்று கிருஷ்ண பரமாத்மாவாஜ்பாய், மத்திய அரசு என்கிற தன் சக்கரத்தைச் சுழற்றி விட்டிருக்கிறார். அந்தச் சக்கரம் கழுத்தறுக்க கிளம்பியிருக்கிறது. 

ஆம், ‘உயர் ஜாதிகாரர்கள் வாழ வேண்டுமென்றால் தாழ்ந்தஜாதிக்காரர்கள் சாக வேண்டும்தானே. ஆனால், கிருஷ்ண பரமாத்மாசொல்கிறார், ‘யாருக்கும் சேதமில்லாமல் செய்வோம்என்று. அதாவது வலியில்லாமல் கழுத்தறுப்போம் என்று அர்த்தம். 

நினைத்தாலே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களில் நிறைய பேர் படித்து உயர் அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருந்தும் அலசி ஆராயும் அறிவாளிகள் இருந்தும், எழுச்சி மிக்க இயக்கங்கள் இருந்தும் & நம்மால் புதியதாக எந்த உரிமைகளையும் பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல, கிடைத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் திராணியற்றும் இருக்கிறோம். 

சுற்றி எதிரிகள் சூழ்ந்திருக்க, தனி ஒரு ஆளாக எதிரிகளைப் பந்தாடும் ஒரு கதாநாயகனைப் போல, அந்த அல்லாடிகளும், கில்லாடிகளும், கண்ணன்களும், குசேலன்களும் சூழ்ந்திருக்க, அவர்களையெல்லாம் குப்புறத்தள்ளி, பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்க, டாக்டர் அம்பேத்கரால் மட்டும் எப்படி முடிந்தது? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 

குசேலன் கதை, ரொம்ப பழைய கலத்திலிருந்தே பார்ப்பனர்கள் ஏழைகள்தான் என்பதை விளக்கிச் சொல்ல வந்த குறியீட்டுக் கதை. 27 குழந்தைகளைப் பெற்ற (பரிதாபத்திற்குரிய பெண்) குசேலன் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடுகிறது. தாண்டவத்தை நிறுத்த, தன் பால்ய நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி பெறுகிறான் என்பது தான் கதை. 

பார்ப்பனத் துயரைத் தாங்கி, ‘சென்டிமென்ட்டச்சோடு அத்தனை நூற்றாண்டுகளாகக் கேள்வி கேட்பாரற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் கதையை, போன நூற்றாண்டில் ஒருவர் தனது ஒரே கேள்வியால் தரைமட்டமாக்கி விட்டார். 

கேள்வி இதுதான்: ‘‘27 பிள்ளைகளைப் பெற்ற ஒருவன் பிச்சை எடுக்கிறான். எவ்வளவு பெரிய மோசடி இது. ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று பெற்றிருந்தாலும், 7 பிள்ளைகள் 20 வயதிற்குள் மேல் இருந்திருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் பிச்சை எடுக்கிறான் என்றால், அவன் குடும்பத்து யோக்யதை என்ன? உழைக்காமல் உண்பதே பார்ப்பன வாழ்க்கை & தர்மம்’’ என்பது போல் கேட்டிருப்பார் அவர். அப்படிக் கேட்டவர் தந்தை பெரியார். 

மிகப் பெரிய வறுமையை சித்தரிப்பதற்காக 27 குழந்தைகளைப் போட்டு திரைக்கதையை தயார் செய்திருக்கிறார்கள். அந்தத் திரைக் கதையில் உள்ள ஓட்டையை தனது நுட்பமான பகுத்தறிவினால் அம்பலப்படுத்தினார் பெரியார். அவருடைய சிந்தனையின் தைரியம் மாதிரியே அவருடைய லாஜிக்’, அதைச் சொல்லும், அவருடைய எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம். 

தைரியம் என்றவுடன்தான் இந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. 25.5.03 அன்று ஜெயா டி.வியில் மெல்லிசை மன்னரின் இசைப்பயணம்என்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனோடு முக்தா சீனிவாசன் உரையாடினார். 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ ‘நிலவே என்னிடம் நெருங்காதேபோன்ற நூற்றுக்கணக்கான சிறந்த பாடல்கலைக் கொடுத்த விஸ்வநாதன், மோசமான பாடல்களைக் கொடுத்தார் என்றால் அது முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த படங்களில்தான்.மிஸடர் மிராண்டா… நேரில் வரான்டா’ ‘நான் பொல்லாதவன்…ஐமுக்கு ஐம்மா ஐம்என்கிற மியூசிக்கோடு. நமக்கு இவைகளோடு இல்லை பிரச்சனை. அதன் பிறகு மிகப்பெரிய பிரகடனம் ஒன்றை செய்தார். 

‘‘உலகத்திலேயே ரொம்ப தைரியமானவர் லெனின். அதற்குப் பிறகு ஜெயலலிதாதான்’’ என்றார். கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி, மிகச் சீரியசான முகபாவனையிலேயே சொல்லிமுடித்தார்.இவர் இயக்குநரானதற்கு பதில் நடிகர் ஆகியிருந்தால், இதுவரை சிறந்த நடிகருக்கான உலக விருதுஇந்தியாவிற்கு இல்லை என்கிற குறையைத் தீர்த்திருப்பார். (ஒரு வேளை ஜெயலலிதாவை வைத்து கடைசியாகப் படம் எடுத்த எடிட்டர் லெனினை குறிப்பிட்டுச் செல்லியிருப்பாரோ!) 

கூச்ச நாச்சமின்றி என்ற சொல்லைப் பயன்படுத்தியவுடன் அந்தச் சொல்லின் உருவகமான சீறி ஜெயேந்திர சரஸ்வதியின் கூச்ச நாச்சமற்ற அறிக்கைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.எந்த நேரமும் தலித் மக்களையே குறிவைத்து அக்கறையோடுதாங்குகிற இவர், சமீபத்தில் ஒரு தமிழ்த் தேசியத் தலைவரைப் போல், ‘‘இனி உங்களுக்கு ஆதி திராவிடர் என்ற பெயர் வேண்டாம். ஆதித் தமிழர் என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். 

ஆனாலும் ஜெயேந்திர சரஸ்வதி போன்ற பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பாரதியார் போன்ற முற்போக்குப் பார்ப்பனர்கள் கூட எதை வேண்டுமானாலும் ஒத்துக் கொள்கிறார்கள்’. ‘திராவிடன்என்ற சொல்லை சொன்னாலே, ஏதோ பச்சை மிளகாயை வைத்து போல பதட்டமாகிறார்கள். 

பார்ப்பனர்களின் இந்த திராவிடஎதிர்ப்புணர்விற்கு அணிசேர்ப்பது போல் அண்மைக்காலங்களில், தலித் அறிஞர்கள் பெரியார் உட்பட்ட ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையும் தலித் விரோதப் போக்குஎன்று ஆணியடிக்கிறார்கள். தலித் விடுதலைக்கு அறிஞர்கள் சொல்லுகிற தீவிரமான அலோசனைகளில் முக்கியமான ஒன்று, ‘பார்ப்பனர்களா நம் விரோதிகள்என்பது. 

பார்ப்பனர்களோடு சேர்ந்து தலித் விடுதலையை வென்றெடுக்கதலித் அறிஞர்கள் திறந்த மனதோடு ஆவலாக இருக்கலாம். ஆனால் அந்த நட்பை முடிவு செய்ய வேண்டியவர்கள் பார்ப்பனர்களாகத்தன் இருக்கிறார்கள். 

ஆனாலும், அண்மைக் காலங்களில் அதிகார மட்டத்திலும், அரசியலிலும், இலக்கிய வட்டத்திலும், இந்து மதப் பிரச்சார வடிவங்களிலும் பார்ப்பனர்களின் மிகத்தீவிரமான பகிரங்கமான தலித் விரோத போக்கு, பார்ப்பனத் தோழமையை விரும்புகிற தலித் அறிஞர்களைக் கூட, பார்ப்பனர்களுக்கு எதிராக இயங்க வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சும்மாவா சொன்னார் தலைவர் மா சே துங், 

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று அதை விட்டு வைப்பதில்லைஎன்று.

தலித் முரசுஇதழில் சூன் 2003ல் எழுதியது.

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?


community.jpg

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம்,வர்க்கம் என்று பேசுகிறார்கள்?

-சுந்தர் சார், திருச்சி.

 

திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது.

ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக  இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா?

தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?

நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.

ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.

டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.

இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையாஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.

சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் தகுதி-திறமையானபெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக பாடுபடுகிறஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள்.

கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே. இவ்வளவு ஏன்?

கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்?

அதாங்க வர்க்க பாசம். 

*

திரு. கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழில் நான் எழுதிய பதி்ல்

தொடர்புடையவை:

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

%d bloggers like this: