Site icon வே. மதிமாறன்

பார்ப்பனப் பெண்களுக்கு எதிரான சதி….

 

 

`பெண்ணைக் கேவலப்படுத்தியப் பார்ப்பனியம்….என்று சொல்லியிருக்கிறீர்களே, மற்ற ஜாதிக்காரர்கள் எல்லாம் தங்கள் பெண்களை மரியாதையாக நடத்தினார்களா?

கோபிகா

ல்லை. ஆனால் மற்ற ஜாதிக்காரர்களை விட தங்கள் ஜாதி பெண்களை மிக மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியவர்கள் பார்ப்பனர்கள்.

 சிறுமிகளை அல்லது இளம் பெண்களை வயதான ஆண்களுக்கு முறைப்படி  திருமணம் முடித்துக் கொடுப்பதை சாதாரண நிகழ்வாக கொண்டிருந்த சமூகம் அது.

அந்த பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கமாகத்தான் இன்றும் அவர்களின் திருமண முறையில் வளர்ந்த பெண்ணை தந்தை தன் மடியில் வைத்து தாரைவார்க்கிறார்‘.

(சிறுமியாக இருக்கும் `மணப்பெண்மணப்பந்தலில் அமராமல் எழுந்து ஓடிவிடும் என்பதால் ஏற்பட்ட பழக்கம் அது)

கணவன் இறந்தபிறகு மனைவியை பிணத்தோடு உடன் வைத்து எரிக்கிற பழக்கம், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டப் பிறகு, கணவனை இழந்த இளம் பெண்கள் அடுத்த ஆண்களின் பார்வைக்கு அசிங்கமாக தெரியவேண்டும் என்பதற்காக- மொட்டை அடித்து, காவிதுணி கொடுத்து, பெண்களை அவமானப்படுத்திய ஒரே சமூகம் பார்ப்பன சமூகம்தான்.

அதற்கு ஒரே ஒரு காரணம், வேறு ஜாதி ஆண்களின் கலப்பு தன் ஜாதிக்குள் நடந்து விடக்கூடாது என்பதுதான்.

இளம் விதவைகளை தன் பாலியல் வக்கிரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, அவர்களை கங்கையில் அமுக்கி கொன்றதும் பார்ப்பன சமூகம்தான்.

அதனால்தான் கங்கையில் போய் (காசி) இறப்பது புனிதம் என்கிற பொய் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

கங்கை என்கிற அந்த நதி, இன்னும் வற்றாமல் ஓடிக் கொண்டிருப்பதிற்குக் காரணம், அதில் அமுக்கிக் கொல்லப்பட்ட பார்ப்பன இளம் விதவைகளின் கண்ணீரால்தான் என்றால் அது மிகையாகாது.

அந்தக் கொடுமைகளைதான் வாட்டர்என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க தீபா மேத்தா முயற்சித்திபோது, கடுமையாக கண்டிக்கப்பட்டார்.

அதேபோல்,  வரதட்சணை என்கிற சமூக அவலத்தை, பிற சமூகத்தினர், பார்ப்பனச் சமூகத்திடம் இருந்தே கற்றுக் கொண்டனர்.

பெண் பார்க்கும் படலம்என்பதை ஒரு நிகழ்ச்சியாக, `பெண்ணுக்கு பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?` என்று இன்றுவரை அந்த அநாகரிகத்தை தீவிரமாக கடைபிடிக்கும் சமூகமும் அதுவே.

இன்றுகூட பார்ப்பன எழுத்தாளர்கள் மூலம் – நாவல், நாடகம், திரைப்படம் வழியாக பெண் பார்க்கும் படலமும், “ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா?” `பஜ்ஜி, சொஜ்ஜி`  போன்ற கலாச்சார சீர்கேடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம் போன்று கற்பிக்கப்பட்டு மற்ற சமூகங்களுக்கும், பெண்களுக்கு எதிரான அந்த சீர்கேடுகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

வே. மதிமாறன்

8-12-2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

Exit mobile version