Site icon வே. மதிமாறன்

வண்டு முருகன்

 13-vadivelu6-300

‘யுவர் ஆனார் உங்களுக்குத் தெரியாத சட்டமில்லை. எந்த சட்டம் நல்ல சட்டமோ…’

பிரேமானந்தா புகழ், சட்டமேதை ராம் ஜெத்மலானி இன்று பெங்களுர் நீதி மன்றத்தில், ‘கருணாநிதியின் மகள் என்பதாலேயே கனிமொழி குறிவைக்கப்படுகிறார். கண்டிப்பாக கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டால்… கெடைக்குமா?

30 September at 12:39

‘18 வருஷத்திற்கு முன் ஒருவர் தப்பு செய்ததற்கு இப்ப தண்டிப்பது என்ன நியாயம்?’
-இப்படியாவது பேசுங்கப்பா.. கொஞ்சம் லாஜிக்காவது இருக்கும்.

30 September at 22:02

கனிமொழி, ஜெயலலிதா போன்று சமூகத்திற்கு முன் மாதிரியாக இருக்கிற அரசியல் அறிவு கொண்ட பெண்களின் சார்பாக மட்டுமல்ல;
பெண்களை பாலியல் வன்முறை செய்து கொடூரமாக கொலை செய்த தவத்திரு பிரேமானந்தா சுவாமிகளின் சார்பாகவும் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடியவர்தான் நம்ம சட்டமேதை ராம் ஜெத்மாலினி.

1 October at 09:24

இதுபோலவே தீர்ப்புக்கு பிறகு மேல் முறையீடு வந்தபோது பிரேமானந்தா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாடி, வாதாடி அவருக்கு ரெட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தார் ஜெத்மாலினி.
அதுபோல் இப்போது நடக்காது… நம்புவோமாக.

‘பிரேமானந்தா பெண்களுக்கு எதிராக இருந்தார்’ என்பதற்காக மரியாதைக்குரிய பெண்ணுரிமை போராளி ஜெத்மாலினி ‘உள்குத்து’ வைச்சி வாதாடி இருப்பார். அதான்.

1 October at 15:29 ·

தமிழர்களின் உயிர் ஆதாரமான காவேரி நீர் பிரச்சினையை, ஊழலோடு ஒப்பிட்டு பேசிய மோசடியை ஒரு போதும் வரலாறு மறக்காது. மன்னிக்காது.

October 

Exit mobile version