Site icon வே. மதிமாறன்

இதுதான் பாரதியம்

 

 

 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 20
ஆறாவது அத்தியாயம்
 

 

 

 

பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து பட்லர்களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றியே பேச்சு.

அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு, உடனே விபூதி நாமத்தைப் பூசு; பள்ளிக்கூடம் வைத்துக் கொடு, கிணறு வெட்டிக் கொடு, இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச் சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு.

நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நாட்டுக்கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன்தரக்கூடிய கைகர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாகும் கைங்கர்யம்.”

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இப்படி கட, கடவென்று உத்தரவு போடுகிறாரே இந்த் கவிராஜன், எதனால்?

பார்ப்பனரல்லாதால் இயக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் பங்களிப்பும் தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் – பார்ப்பனர்களை அடித்து விட்டதாகக் கேள்விப்பட்டதினாலும் வந்த பாசம், இதில் கவனிக்கப்பட வேண்டிய வாசகம்,

அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்ந்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள்‘        –இதுவே பாரதியம்.

தொடரும்

 

 

 

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

 

 

 

 

 

 

Exit mobile version