இதுதான் பாரதியம்

 

 

 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 20
ஆறாவது அத்தியாயம்
 

 

 

 

பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து பட்லர்களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றியே பேச்சு.

அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு, உடனே விபூதி நாமத்தைப் பூசு; பள்ளிக்கூடம் வைத்துக் கொடு, கிணறு வெட்டிக் கொடு, இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச் சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு.

நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நாட்டுக்கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன்தரக்கூடிய கைகர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாகும் கைங்கர்யம்.”

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இப்படி கட, கடவென்று உத்தரவு போடுகிறாரே இந்த் கவிராஜன், எதனால்?

பார்ப்பனரல்லாதால் இயக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் பங்களிப்பும் தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் – பார்ப்பனர்களை அடித்து விட்டதாகக் கேள்விப்பட்டதினாலும் வந்த பாசம், இதில் கவனிக்கப்பட வேண்டிய வாசகம்,

அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்ந்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள்‘        –இதுவே பாரதியம்.

தொடரும்

 

 

 

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

 

 

 

 

 

 

2 thoughts on “இதுதான் பாரதியம்

  1. மாங்குளத்தில் கிளேமார்த் தாக்குதல்
    முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக் குழந்தையும் 2 சிறுவர்களும் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
    முல்லைத்தீவில் இருந்து புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்கு “8 சிறீ 6109” என்ற இலக்கம் கொண்ட பழைய மொறிஸ் மைனர் காரில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது நேற்று திங்கட்கிழமை இரவு 8:40 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் நடைபெற்றது.

    இதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

  2. பாரதியார் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. பாரதியாரைப் பற்றி நான் தமிழர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாரதிக்கு வக்காலத்து வாங்குவதால் எனக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் ஒன்றை புரிந்து
    கொள்ள வேண்டும். பாரதி சாதி, வர்க்க மறுப்பாளரே தவிர, கடவுள் மறுப்பாளர் இல்லை. பெரியார் சொன்னது போல ஒரு நிமிடம் கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்_ நோய், மூப்பு, மரணம்- இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான். ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- அதாவது மனிதன் உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா? இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்ன்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபிய டனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை! மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். அதை எந்தக் கொம்பன் ஆளும் தடுக்க முடியாது! மனித உயிர்அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்
    எனவே வெறுமணே உண்டு விட்டு, உறங்கி விட்டு காலையில் எழுந்து கடவுள் எங்கே காட்டு என்று கேட்பது நுனிப்புல் மேயும் முறையாகும்! மெரீனா கடல் கரையில் நின்று கொண்டு
    “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது! நான் கடவுளைப் பார்த்தது இல்லை. எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கடவுள் இல்லை என்பது Faradayன் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால்
    அதை யேற்றூக் கொள்ள நான் தாயார். பாரதியார், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் இல்லை. அவர் திராவிடர் கழக தொண்டர் போலவோ, Communist காட்சி Politbureau உரிப்பினார் போலவோ சிந்திக்க, செயல் பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பாரதியார் சுயமாக சிந்தித்த, யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் உடையவர். Communism, Periyaarism போல, பாரதிய்யாருடையது பாரதியாரிசம். அவர் தாழ்த்தப் பட்ட மக்கள்மீது பரிவு காட்டுவதைக் கொச்சைப் படுத்துவது, பாரதியாருக்கு ‘இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’ என்ற நிலை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது! நமக்கு பல்லாயிரம் கோடி சொத்து உடைய, கையில் இருந்து மோதிரம் வரவழைக்கும், Billionare ஆன்மீகவாதி தான் வேண்டும். சோற்றுக்கு வழியில்லமால் அலைந்த பாரதி ஆன்மீகவாதி நமக்கு தேவை இல்லை!

Leave a Reply

%d bloggers like this: