எனது புத்தகங்கள்

 

gandhi

இரண்டாம் பதிப்பு

*

முதல் பதிப்பு சென்ற ஆண்டு புத்தகக் காட்சி முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன் வந்தது. மூன்றே மாதத்தில் முதல் பதிப்பு விற்றும் தீர்ந்தது.

என்னுடைய இணைய பக்கதில் தோழர்கள் எழுதிய விமர்சனத்தை தவிர வேறு எதிலும் நூல் அறிமுகம் கூட வராமலேயே, புத்தகத்தைப் படித்த தோழர்களின் பரிந்துரையினாலேயே சாத்தியமானது.

 அதன் பிறகு  இனிய தோழர் அமரசேன் முயற்சியில் ஆரணியில் அறிமுக விழா நடந்தது. சிந்தனையாளன் இதழில் நூல் அறிமுகம் பகுதியில் இடம்பெற்றது. இனிய தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவருடைய Facebook ல்  அறிமுகம் செய்து எழுதினார்.

என் அன்பிற்கினிய தோழர் அரசெழிலன் என் இணையத்தில் இந்தப் புத்தகத்திற்கு தோழர்கள் எழுதிய விமர்சனத்தை தொகுத்து ‘நாளை விடியம்’ சிறப்பிதழாகவே போன மாதம்  கொண்டுவந்தார்.

தோழர்கள் அனைவருக்கும்  நன்றியை என் சார்பாகவும் வெளியீட்டாளர் தோழர் டார்வின் தாசன் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனாலும் காந்திய அபிமானிகள் காந்தி குறித்த என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கிறார்கள்.

இத்தனைக்கும்,

‘காந்தியை சாட்சியாக வைத்தே,காந்தியின் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறேன்.

இரண்டில் ஒன்று முடிவு காண வேண்டும்.

ஒன்று என் கேள்விகளுக்குரிய பதில்களைச் சொல்லி, என்னை காந்தியவாதியாக மாற்ற வேண்டும்.

முடியவில்லை என்றால், அவர்கள் காந்தியை விட்டொழிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்து தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இவைகளோடு காந்தியத்தையும் கலந்து பேசுபவர்களில் இருந்து, கதை எழுதும் காந்திய இலக்கியவாதிகள், காங்கிரஸ்காரர்கள் உட்பட,

கதர் காந்தியவாதிகள் முதல், கார்ப்பரேட் காந்தியவாதிகள் வரை சகலவிதமான காந்தியவாதிகளுக்கும் இதை சவாலாக சொல்கிறேன்.

ஆட்டத்திற்கு நான் ரெடி.

 நீங்க ரெடியா?’ என்று வெளிப்படையாக எழுதியிருந்தேன். இன்றுவரை சத்தமில்லை.

*

இப்போது மூன்றாம் பதிப்பும் வந்து விட்டது.

**

Sankara Madam

ஜாதி வெறியர்கள் ஜாதி அபிமானத்தோடு இருப்பது இயல்பு; அதனால்தான் அவர்கள் ஜாதி வெறியர்கள்

ஜாதி ஒழிப்பாளர்களும் ஜாதி அபிமானத்தோடு இருப்பது அசிங்கம்; அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்க முடியவில்லை.

‘முற்போக்காளர்’களில்கூட தன் ஜாதிக்காரர்களைத் தேடிப் பார்த்து பழகுகிற, ஆதரிக்கிற, நிறுவுகிற தமிழகத்து ‘ஜாதி வெறி’ சூழலில்;

ஜாதி வெறிக்கும் தலித் விரோதத்திற்கும் எதிராக தனது பத்திரிகையில் எழுதிய காரணத்தால், தன் ஜாதிக்காரர்களாலேயே கொலை செய்யப்பட்டார் பத்திரிகையாளர் தினகரன்.

ஜாதிய பின்னணி இல்லாத காரணத்தால், ‘ஜாதி ஒழிப்பு’ பேசுகிறவர்களாலும் மறக்கப்பட்ட ..

தினகரன் என்கிற அந்த போராளியின் நினைவுகளுக்கு..

*

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..
*

காதலாகி கடுப்பாகி

வே.மதிமாறன்

book1.jpg

மதம்-ஜாதி எப்படி உண்மையில்லையோ, உண்மையில்லாத செய்திகளை உள்ளடக்கிய மனிதர்களை உயர்ந்தவர்கள்-தாழ்ந்தவர்கள் என்று பிரிப்பது எந்த அளவுக்கு மோசடியானதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாதது, அறிவாளி-முட்டாள்பேதம்.

அறிவாளிக்கான இலக்கணம் என்ன?

அறிவென்பது என்ன?

நிறையப் படிப்பதா?

பங்கு மார்க்கெட், ஹவாலா இன்னும் தனியார், அரசு நிறுவனங்களில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பரவிக் கிடக்கும் ஊழல்களுக்கு யார் பொறுப்பு?

புள்ளிவிவரங்களைத் தெரிந்துவைத்திருப்பதா?

அப்படியானால் இயந்திரங்களே மனிதனை விட மகத்தான அறிவு படைத்ததா?

புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பதா?

அப்படியானால் ஒரு நெல்லை நூறு நெல்லாக மாற்றியவன் யார்?

விஞ்ஞானம் என்பது என்ன?

குடுவைகளோடு மட்டும் குடித்தனம் நடத்துவதா?

அவர் மட்டும்தான் அறிவாளி என்றால், கால் செருப்புகளைக் கண்டுபிடித்தவன் விஞ்ஞானி அல்லாமல் வேறுயார்?

துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், அணு உலைகளையும், அணுகுண்டுகளையும் கண்டுபிடித்து அழிவுக்கு வழிவகுத்தவர்களை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவனில்லையா நூறு நெல்லாக மாற்றுபவனும், காலணிகளைத் தைப்பவனும்.

***

 

பாரதிய ஜனதா பார்ட்டி

வே.மதிமாறன்

book2.jpg

பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.

காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச பெரியவாளெல்லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னுசொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.

***

பாரதிய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்

பாரதிகடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு

கி.பார்த்திபராஜா

தம்பி நான் ஏது செய்வேணடா?

பாரதி பற்றி பாரதிபுத்திரன்

இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்

ந.இரவீந்திரன்

***

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

மருதையன்

வே.மதிமாறன்

book3.jpg

பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.

பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லைஎன்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்என்று நிராகரிக்கவும் செய்தார்.

பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லைஎன்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

மருதையன்

 

மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

வே.மதிமாறன்

***

 

நான்யாருக்கும்அடிமையில்லை

எனக்கடிமையாருமில்லை

வே. மதிமாறன்

விலைரூ. 45

டாக்டர்அம்பேத்கரின்இந்துமத, பார்ப்பனியஎதிர்ப்புவீச்சின்விஸ்வரூபம்.

நூலிலிருந்து…..

ஜாதிஆதிக்கத்திற்குஎதிராகபெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும்போராடியபோராளியைப்புரிந்துகொள்ளுங்கள்தலித்அல்லாதவர்களே.

***

வே. மதிமாறன் பதில்கள்

…..அதற்கு விழிப்புணர்வு ஆசிரியர், காமராஜ், “கேள்வி பதில் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அதை நீங்களே எழுதுங்கள்” என்றார்.

“நான் எழுதுவதை விட, மிக பிரபலமான எழுத்தாளர்கள் யாரையாவது எழுத வையுங்கள். அது பத்திரிகைக்கு விளம்பரமாகும்” என்றேன். ஆனால் அவர் என்னையே எழுதும்படிக் கட்டாயப்படுத்தினார்.

‘சோ, சுஜாதா, மதன், சுந்தர ராமசாமி, ஞாநி’ இவர்களாலேயே கேள்விகளுக்குப் பதில்கள் எழுதமுடியும்போது, என்னால் முடியாதா என்ன?’ என்று துணிந்து ஒத்துக் கொண்டேன். ‘விழிப்புணர்’வில் ஆரம்பித்து ‘சமூக விழிப்புணர்வு’ வரை மொத்தம் ஆறு இதழ்களில் பதில்கள் எழுதினேன்.

என் பதில்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மாரக்ஸ், பெரியார், அம்பேத்கர் பற்றியும் கலை, இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த ஞானம் உடையவர்களில் இருந்து இவைகள் பற்றி எதுவும் தெரியாத நபர்கள் வரை பதில்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

அந்த கவனம் – பாராட்டுதலாக, கோபமாக, எரிச்சலாக, பொறாமையாக பல்வேறு வடிவங்களில் `அவதாரம்` எடுத்தது.

நமது பதில்களின் தாக்கத்தால், ‘பத்தவைச்சிட்டியே பரட்ட’ என்கிற பாணியில் புதிதாக சில பத்திரிகைகளிளும் ‘கேள்வி பதில்’ பகுதியைத் துவங்கின.

சில எழுத்தாளர்களும் ஆர்வ மிகுதியால் நமது பாணியை பின்பற்றி, கேள்விக்கு பதில்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வாழ்த்துகள். இப்படி ஒரு அலையை உருவாக்கியதற்காகக் தோழர் கு. காமராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்.

முன்னுரையில் வே. மதிமாறன்…

பக்கங்கள் 88. விலை ரூ. 35.

அங்குசம் வெளியீடு

******

mr-radha-wrapper2

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

வே. மதிமாறன்

விலைரூ. 15

பெரியார்கொள்கைகளில், எம்.ஆர். ராதாஎன்.எஸ்.கேவின்பங்களிப்பு.

எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும்ஒன்றாககருதுகிறதமிழ்நாடுமுற்போக்குஎழுத்தாளர்சங்கத்திற்குகண்டனம்

நூலிலிருந்து…..

பொதுவாகபார்ப்பனஜாதிவெறி, தமிழர்களுக்குதீமையையேசெய்திருந்தாலும், இந்தஒருவிஷயத்தில்மட்டும்பார்ப்பனியம்தமிழர்களுக்குநன்மையைசெய்தது.

ஆம். அதுதந்தைபெரியார்என்கிறமகத்தானதலைவனைதமிழர்களுக்குத்தந்தது.

*****

cd1வே. மதிமாறன்பதில்கள்நூல்அறிமுகவிழாஉரைகள்

விலை: 35

தமிழேந்தி

விடுதலைராசேந்திரன்

பெரியார்தாசன்

கௌத்தூர்மணி

மருதையன்

இவர்கள்பேசியபேச்சுகள்அடங்கியஎம்.பி 3

தொடர்புக்கு;

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

43 thoughts on “எனது புத்தகங்கள்

 1. ஜனவரி 2008 புதிய கலாச்சாரம் இதழில் தங்களது கட்டுரையை வாசித்தேன்…
  வாஸந்தியின் பார்ப்பன திமிருக்கு சரியான எதிர்வினை…
  சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பார்ப்பணர்களுக்கும் பாரதீய ஜனதாவிற்கும் என்ன நிலைபாடு இருக்கிறதோ அதற்கு இணையான
  கருத்தை சில தமிழ் தேசிய வாதிகளும் கொண்டிருக்கிறார்கள் (காண்க மண்ண்மொழி).

  அதுபோல ராமன், பெருமாள் போன்றவர்கள் தமிழ் கடவுள் என மணி அரசன் கூறுகிறார் (தமிழர் கண்ணோட்டம்). இன்றைக்கு தமிழ்துவம் இந்துதுவமாகவே இருக்கிறது…

  இதுபற்றியும் எழுதுங்களேன்…

  – குமரன்தாஸ்

 2. தோழரே!

  நான் பெரியார் தொண்டன்(நன்றியோடு).
  தங்கள் எழுத்து மிக வீரியத்தோடு இருக்கிறது.
  தங்கள் நூல்களை வாங்க ஆவலாக உள்ளேன், தகவல் தெரிவிக்கவும்.

  அதேபோல என் வலைப்பூவுக்கு தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.
  வாய்ப்பு இருந்தால், தங்கள் தொலைபேசி எண்ணை தந்து உதவவும்.

  நன்றி
  மகிழ்நன்.
  9892738667.

 3. தோழர் மதிமாறன் தங்களின் மேலான் கருத்துக்களை இந்த குழுமத்தில் விவாத்தில் வைக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

  http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=8383044&tid=5201147353349304961&na=3&nst=304&nid=8383044-5201147353349304961-5203082609765606618

 4. Dear brother,

  I have read yours Bharathiya Janatha party , Bharathi Baktharkalin Kalla Mounam , Ve.Mathimaran Pathilgal very nice and very powerfull thoughts.

  Best wishes

  Truly your Freind

  P.Selvaraj,Neelangarai,Chennai-600 041.

 5. Dear Brother Mathimaran Sir,

  Thanks a lot for your open comments on every article. For the last 10 months only I have been reading your articles. I came to know your address through salesian Seithi Malar. Congratulations and please keep it up for the (Muke nayagan’s service) Dr. Ambedkhar’s work. We are now only came to know the wright way and how to live agood life. We will support to you all along the way for the joint venture of Dalits.
  with kind regards. I. Periyanayagam, 199 Sagaya Nagar, Tirupattur-635 601.

 6. “காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

  காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.

  இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

  ‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

  கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

  என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே///

  எப்படி தான் சிந்திப்பீர்களோ.ரூம் போட்டு சிந்திகிங்களோ..?
  பார்ப்பானியம் தெரிகிறது என்கீர்கள்,உங்களதில் தலீத்தியம் தெரிகிறது என்று நான் குற்றம் சொல்லட்டமா?
  கருப்பு நிறத்தில் ஒரு குட்டி,கருஞ்சாந்து நிறத்தில் ஒரு குட்டி ஆனால் அவை அனைத்து ஒரு தாய் பூனையின் குட்டிகள் தானே என்று பாடினாரே அது உங்கள் கண்ணுக்கு புலப்பட வில்லையா?
  அய்யரை.பார்ப்பான் என்று சொன்ன காலமும் போச்சே என்று பாடினாரே அது தெரியவில்லை,
  இந்த புத்தக்த்தை விலை கொடுத்து வேறு வாங்கவேண்டுமா?
  காசி நகரத்து புலவர் என்று எழுதியதால் என்ன பிரச்சனை உங்களுக்கு,
  சகிக்கலை,
  ஆமாம் உங்களுக்கு அம்பெதகர் தவிர மற்ற நல்ல தலைவர்கள் யாரும் கண்ணுக்கு தெரியமாட்டார்களா?அம்பெதகாரை பாராட்டுவது புகழ்வது தவறல்ல,ஆனால் அதற்காக மற்ற உத்தமர்களை தேடி துருவி குற்றம் கண்டு பிடித்து தாக்கவேண்டியதில்லை,
  இறுதியில் தலீத,தாழ்த்தபட்டவர்கள் தமிழர்கள் இல்லை,அவர்கள் தனி இனம் என்று சொல்லப்போகிறீர்களா? ஆகவே தலீதகளுக்கு தனி நாடு வேண்டும் என்பீர்களா?
  அப்படி என்றால் அந்த நாட்டில் மராட்டிய தலீத்,குஜாத்தி தலீத,தெலுங்கு தலீத்,தமிழ் தலீத எல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்வீர்களா?
  அப்போது பிரச்சனை எதுவும் வராதா?
  தலீத,செட்டி,முதலியார் என்பது இடைப்பட்ட காலத்தில் வந்த மனிதன் உருவாக்கிய பிரிவுகள் அன்றி அது இனம் அல்ல,
  அந்த பிரிவுகள் இன்றைய காலக்கட்டத்தில் தேவையில்லை,அதில் மாற்று கருத்து இல்லை,ஆனால் அதுவே ஒரு இனம் போல் கருதுவது தவறு,நாம் தமிழர்கள் ,திராவிடர்கள்,இது தான் இன ரீதியாக் ஆராய்ச்சி உண்மை,ஆகவே தமிழனாக ஒன்றுபடுவோம்,தமிழர்களை மதிப்போம்,பாரதியார் ஒரு உண்மை தமிழர்,அவரை குறை கூறுவதால் நீங்கள் தமிழரிடம் பிரிவினையை சாதிரீதியாக ஏற்படுத்துகிறீர்கள்,

 7. நல்ல புத்தகத்திற்கு அழகு,நாம் என்ன செய்ய வேண்டும்,நம் அடுத்த இலக்கு என்ன?நாம் எப்படி இருக்க வேண்டும்?எப்படி உயரவேண்டும் என்பதை அலசுவதாக இருக்க வேண்டும்,

  ஈழப்போராட்டத்தை பற்றிய புத்தகத்தில் கூட .தமிழர்களின் பிரச்சனைகள்,அவர்களது வரலாறு,கலாச்சாரம் ,மொழி எப்படி காக்கப்பட வேண்டும் என்பதை பற்றி தான் அதிகம் பேசும்,சிங்களவ அரசியல்வாதிகள் தமிழர்களை எப்படி ஒதுக்குகிறார்கள் என்ற அளவில் தான் குறிப்பு இருக்கு,
  யாரும் சந்திரிகா இப்படி செய்து விட்டாள்,பண்டாரநாயகா கொடியவன்,ராஜபக்‌ஷேவை ஒதைகக் வேண்டும் என்று பிறரை தாக்கி பேசுவது இருக்காது,
  ராஜபக்சே திட்டவது அல்ல வேலை,அடுத்து தமிழன் உரிமைக்கு எந்த வகையில் தன் போராட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தான் நாம் யோசிக்க வேண்டும்.
  சும்மா மற்றவர்களை திட்டுவது,குறை கூறுவது மட்டுமே நல்ல புத்தகம் ஆகாது,
  பார்ப்பனர்கள் ,பார்பனியத்தை திட்டாமல் ஒரு புத்தகம் உஙக்ளிடம் ஒரு புத்தகம் இருக்கிறது,
  பார்ப்பனர்களை திட்டுவதை விடுத்து,நாம் தாழ்த்தபட்ட மக்கள்,தலீத்கள் எப்படி முன்னுக்கு வரவேண்டும்,எப்படி கல்வி கற்று முன்னுக்கு வர வேண்டும்,என்பதை யோசிக்க வேண்டும்,நம்மிடம் உள்ள குறைகள் என்ன,அதில் இருந்து விடுபட்டு மற்ற சமூகத்தினருக்கு சமமாக நம் சமூகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்பதை பேச வேண்டும் புத்தகம்,
  அம்பெதகர் ,பெரியார் காலம் இல்லை இப்போது,இன்று பணம் தான் பிரதானமாக இருக்கிறது,
  வசதிபடைத்தவன் என்றால் அவன் எந்த சாதி யிருந்தாலும் பழகுவார்கள்,
  ஆகவே நம் சமூகத்தை கல்வி மற்று பொருளாதார ரீதியில் எப்படி முன்னுக்கு கொண்டு வருவது எப்படி என்று யோசித்து புத்தகம் எழுதினால் பயன் உள்ளது,அதை விடுத்து அவன் சரியில்லை,அவன் பார்ப்பான்,அவன் முதலி,அவன் செட்டி,அவன் புத்தி இப்படி என்று எழுதுவது நல்ல சிந்தனை ஆகாது,

 8. வரலாற்றை பார்த்தால் சாதி பாகுபாடை ,ஏற்ற தாழ்வை எதிர்த்து போராடியவர்கள் அதனால் பாதிக்க பட்ட தாழ்த்தபட்ட தலீதகள அல்ல,மற்ற சாதி பிரிவை சார்ந்தவர்கள் தான் முதலில் குரல் கொடுத்தார்கள்,
  நான் குறிப்பிட்ட மதிக்க தக்க தலைவர்கள் காந்தி,அம்பெதகர்,பாரதியார்,வ.உ.சி,பாரதிதாசன்,தலைவர் பிரபாகரன் இவர்கள் யாரும் என் வகுப்பை சார்ந்தவர் அல்ல .
  ஆனால் நீங்கள்?
  நான் தமிழனாக,மனிதனாக யோசிக்கிறேன்,ஆகவே சமூகத்திற்கு தங்கள் பங்களிப்பை அளித்தவர்கள் அனைவரையும் மதிக்கிறேன்,
  ஆனால் நீங்கள் ?

 9. பிராமணிய எதிர்ப்பு அக்காலத்தில் சரி,.ஆனால் இந்து மத எதிர்ப்பு அவசியமற்றது,
  இந்து மதம் பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல,அர்ச்சகராக இருப்பதாலேயே இந்து மதம் அவர்களுக்கு சொந்தம் என்று எண்ணுவது மடமை.
  அக்காலத்திலும் கோயில்கள் பலவற்றை கட்டியவர்கள் பிராமணர்கள் அல்ல மற்ற வகுப்பை சார்ந்த தமிழர்கள்,
  கோயில் கட்டியவனுக்கு தானே சொந்தம் அன்றி அதில் அர்ச்சகராக வேலை பார்ப்பவருக்கு சொந்தமாகிவிடாது,
  பிராமணியம் பிராமணர்களிடம் மட்டும் இல்லை அது மற்ற சாதியினரிடமும் இருக்கிறது என்று அன்றே பெரியார் கூறியுள்ளார்,
  பிராமணியத்தை எதிர்ப்பதுடன் பிராமணர்களது இந்து மதம் அதனால் அதையும் எதிர்ப்போம் என்பது ,மத மாற்ற நினைக்கு கிறீஸ்துவ மற்று இஸ்லாமியருக்கு சாதகமாகிவிடும்,
  இன்று வெளி நாட்டில் இருந்து இந்தியர்களின் வறுமையை ,அறியாமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்ய கிறீஸ்துவ அமைப்புகளுக்கு கோடி கணக்கில் பணம் வருகிறது,
  நம்மிடம் உள்ள சாதி வேற்றுமையை அந்த அந்நிய சக்திகள் பயன்படுத்தி கொள்ளூம்,
  நான் கிறீஸ்துவத்திற்கோ அல்லது இஸ்லாத்திற்கோ எதிரானவன்,ஆனால் அவை தமிழனை தமிழனாக வாழ உதவுமா என்ற ஐயம் என்னுள் இருக்கிறது,
  ஆகவே இந்து மத எதிர்ப்பை பிரச்சாரம் செய்வதால் அறியாமையில் வாழும் மக்கள் அதனால் மதம் மாற வாய்ப்பாகிவிடும்,இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிருங்கள்,பிராமணியத்தை எதிருங்கள்,
  பிராமணியத்திற்கு பதில் வேறு பதம் வைத்தால் தேவலை,காரணம் பிராமணியம் என்பது எதோ பிராமணர்களுக்கு எதிரானது மட்டும் என்று பொருள் கொள்கிறார்கள்,
  இன்று தலீதகளிடமும்,முதலியார்களிடமும்,செட்டியார்களிடமும்,தேவர்களிடமும் பிராமணியம் காணப்படுகிறது,
  ஆகவே பிராமணியத்திற்கு வேறு சொல் வைத்து அதை ஒழிப்போம்,
  தமிழ் இனம் காப்போம்,மதம் மாற்றத்தை (அறியாமல் நிகழும்) தடுப்போம்,

 10. Dear friends,

  Really, I have to proud to have human like you people because our old people are passing their commends like ” there is no social conscious for youth, nowadays no one bothers about our society”. After reading all your commends as above, really I am glad to say that we are living in a real Tamil Nadu. As per Mr. Venkatesh commends, everybody is behaving like brahmin(Mudaliar,chettiyar, udayar ….yar…yars).
  In fact, Brahmins are ready to tie knot with Dalits rathan than others. Moreover, if we keep on insisting about castism, then it will survive for a long. The casts feeling starts with our ancestors, if they have social conscious and human nature then the youngster will follow the same.

  All the best

 11. good evening sir. your books in very nice. i am first visit in .your book in available store pls tell me.

 12. தோழர் மதிமாறன், ஆயிரம் விமர்சனங்கள் அதனால் என்ன? எழுதுங்கள், உங்கள் எழுத்து எங்களை போன்றவர்களுக்கு உற்சாகமளிக்கிறது.

 13. very intersting and highly informative. want to buy all ur books and recommend my friends.pls send details.

 14. naan ithuvari ungal puthgam padithathillai aanaal ippoluthu padikka aarvamagairukkirathu

 15. எங்கே நான் உங்கள் புத்தகங்களை வாங்க முடியும் ….?

 16. /******** இன்று வெளி நாட்டில் இருந்து இந்தியர்களின் வறுமையை ,அறியாமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்ய கிறீஸ்துவ அமைப்புகளுக்கு கோடி கணக்கில் பணம் வருகிறது, ****/

  யான் அந்த இந்தியர்களின் வறுமையை ஹிந்து மதம் போக்க வில்லை …பதில் இருக்கா வெங்கடேஷ் ?

  பதில் இருக்காது என்ன பண்ணனும்னு நானே சொல்லறன் நல்லா கேட்டுகோ …

  கிறீஸ்துவ அமைப்புகளுக்கு கோடி கணக்கில் பணம் வரத விட அதிகமா திருப்தி கோவில்la கொட்டுதே வெங்கடேஷ்…

  திருப்தி கோவில் போய் கோடிகனக்குல கொட்டிட்டு வர ஹிந்துக்கள் பக்கத்துக்கு வீடுல இருக்க ஏழைக்கு 100 ரூபா தருவாங்களா? ஏலையா இருக்கறது அவனோட தலவிதின்னு சொல்லி அவன சாகர வரைக்கும் ஏழையாவே சாகடிகரிங்க …அவனுக்கு வாழ வழி பண்ணி அவனோட வாழ்க்கை தரத்த கொஞ்சம் மாத்தறது வெங்கடேசுக்கு பொறுக்கலையா? இல்ல கசகுதா ? யாண்ட வெண்ண திருப்பதி உண்டி காச கொஞ்சம் இந்த ஏழைகளுக்கு தந்து அவனோட வாழ்க்கை தரத்த மாத்தனா அவன் யாண்டா மதம் மாறான் ? ..

  திருபதி கோவில வெங்கிய பாக்க ஏழைக்கு தனி வரிசை.. பணக்காரனுக்கு தனி வரிசை…இதுலே தெரியல உங்க மதத்தோட லட்சணம் ? இந்த கேவலம் வேற எந்த மதத்துலயும் இல்லைட !!! இத மொத மாத்துங்கட …

 17. /******** இன்று வெளி நாட்டில் இருந்து இந்தியர்களின் வறுமையை ,அறியாமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்ய கிறீஸ்துவ அமைப்புகளுக்கு கோடி கணக்கில் பணம் வருகிறது, ****/

  யான் அந்த இந்தியர்களின் வறுமையை ஹிந்து மதம் போக்க வில்லை …பதில் இருக்கா வெங்கடேஷ் ?

  பதில் இருக்காது என்ன பண்ணனும்னு நானே சொல்லறன் நல்லா கேட்டுகோ …

  கிறீஸ்துவ அமைப்புகளுக்கு கோடி கணக்கில் பணம் வரத விட அதிகமா திருப்தி கோவில்la கொட்டுதே வெங்கடேஷ்…

  திருப்தி கோவில் போய் கோடிகனக்குல கொட்டிட்டு வர ஹிந்துக்கள் பக்கத்துக்கு வீடுல இருக்க ஏழைக்கு 100 ரூபா தருவாங்களா? ஏலையா இருக்கறது அவனோட தலவிதின்னு சொல்லி அவன சாகர வரைக்கும் ஏழையாவே சாகடிகரிங்க …அவனுக்கு வாழ வழி பண்ணி அவனோட வாழ்க்கை தரத்த கொஞ்சம் மாத்தறது வெங்கடேசுக்கு பொறுக்கலையா? இல்ல கசகுதா ? யாண்ட வெண்ண திருப்பதி உண்டி காச கொஞ்சம் இந்த ஏழைகளுக்கு தந்து அவனோட வாழ்க்கை தரத்த மாத்தனா அவன் யாண்டா மதம் மாறான் ? ..

  திருபதி கோவில வெங்கிய பாக்க ஏழைக்கு தனி வரிசை.. பணக்காரனுக்கு தனி வரிசை…இதுலே தெரியல உங்க மதத்தோட லட்சணம் ? இந்த கேவலம் வேற எந்த மதத்துலயும் இல்லைட !!! இத மொத மாத்துங்கட

 18. இன்று அழுக்கு பிறந்தநாள் – தந்தை பெரியார் !!!
  உண்மையா ?

 19. அய்யா உங்கள் பாரதிய ஜனதா பார்ட்டி படித்தேன் அருமை. ஹிந்துயிசம் என்ற வைரஸ் பற்றி அறிந்தேன் நன்றி. மேலும் தொடரட்டும் எழுத்து போர் வாழ்த்துகள் நன்றி

 20. மதத்தில் எந்த மதம் முற்போக்கு ? எந்த மதம் பிற்போக்கு?.சிந்து முதல்,குமரி வரை, பரந்து பட்டநிலப்பகுதியில் வாழ்ந்த, பல்வேறு இனக்குழுக்கள் . தங்கள் குழு வாழ்நிலைக்காக வாழ்ந்து மரணித்த{அர்பணித்த} மாவீரர்களை[பெண்&ஆண்]நடுகல்நட்டு வணங்கி வழிபட்டு ,தலைமுறை கடந்து குலதெய்வமாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர் .
  அந்த பல்வேறு இனக்குழுக்களின் சமூகத்தன்மையை உள்வாங்கி செரித்த ஆரியம் ,…ஆரிய இனக்குழுநலனை முதன்மையாகவும்,
  ஆளும்வர்க்கநலனை[நிலப்பிரபுத்துவநலனை] பிரதானமாகவும்கொண்டு,
  பிராமண,சத்திரிய,வைசிய,சூத்திர,ஆதிசண்டாள,சமூகபடிநிலைகளை
  [-நுட்பமான,பல்வேறு உட்பொதிவுடன் -]சமைத்து ஊட்டியது .
  அதுவே இந்து மதமாவும் ,இந்திய தேசியமாகவும் உருப்பெற்றது.
  அந்த சமூக கட்டமைப்பை உடைபடாமல் இன்றும் காப்பதே நம் அவலம்.

 21. Dear Sir
  Please send me the book seller from whom I can buy all your books.
  Thanks

 22. Mathimara Hindu matha unarvai patri thondai kiziya koovugira nee, thulkka christia matha unarvai patri sakala ottaiyaium moodi kondiruppathu yean

 23. Bro,I can purchase u r books in online. u have any website address pls share me

 24. வணக்கம் அண்ணா,
  தங்கள் புத்தகம் எப்படி வாங்க? கொஞ்சம்
  பதில் அளித்தால் மிகவும் பயன் அளிக்கும் எனக்கு!!!

 25. வணக்கம் ஐயா…

  நான் அசோக்நகர்ல இருக்கேன் ….
  எனக்கு நீங்க எழுதிய புத்தகம் வாங்கனும் எங்கு கிடைக்கும்….
  நன்றி

 26. உங்கள் புத்தகங்களை வாங்க விலாசத்தை மட்டும் இணைதளத்தில் வெளியிடுங்கள். தினம் தினம் கேட்பவர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள்.

 27. தோழர், வே. மதிமாறன் அவர்களுக்கு வணக்கம், தங்களின் அனைத்து நூல்களை பெற வேண்டும் அதற்கு நான் எந்த பதிப்பகத்தை அனுகவேண்டும், விலாசம் தேவை. அல்லது தங்களிடம் இருந்தால் எனது விலாசத்திற்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, சா. ஜோதிமணி, அ. ஆ. மே. நி. பள்ளி, கிருஷ்ணகிரி.635001.கை.பேசி.எண்.9543789072.

Leave a Reply

%d bloggers like this: