இந்தியாவின் ஒரே சமூகநீதி திராவிட மாடல் அரசு

இந்தியாவின் ஒரே சமூகநீதி திராவிட மாடல் அரசு
*
2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன், உண்மையான ஆசிரியர் நாள் சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள்தான் என.
என் கருத்திற்கு அங்கீகாரம்போல் நமக்கான ஆசிரியர் Asiriyar K Veeramani அவர்கள் இன்று சாவித்திரி பாய் பூலே பிறந்தநாளை “பெண் கல்வி நாள்” எனக் கொண்டாடவேண்டும் என சமூகநீதியின் நாயகர் முதல்வர் தளபதி M. K. Stalin அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆசிரியருடன் நானும் இணைந்து கொள்கிறேன். மகிழ்ச்சி.
ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சிறப்பை அன்னை சாவித்திரிபாய் பூலே பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் சமூகநீதி முதல்வர் தளபதி என்பது கூடுதல் சிறப்பு😍
-வே.மதிமாறன்.
ஆசிரியரின் அறிக்கையின் ஒரு பகுதி
🔴உண்மையான ஆசிரியர் நாள்!
உண்மையில், ஆசிரியர் நாளாகக் கொண்டாடு வதற்கு முழுமையான தகுதி உடைய நாள் சாவித்திரி பாய் பூலே அவர்களின் பிறந்தநாளே ஆகும். அப்படி வேறொரு நாள் கொண்டாடப்படும் வழக்கம் ஏற்பட்டு விட்ட காரணத்தால், மகளிர் கல்விக்காகத் தன்னை ஒப்படைத்த பெருமைக்குரிய பெருமகளின் பிறந்தநாளான இந் நாளை “மகளிர் ஆசிரியர் நாள்” என்றோ, அல்லது “பெண் கல்வி நாள்” என்றோ சிறப்புடன் கொண்டாடலாம்!
இந்தியா முழுமையும் போற்றப்பட வேண்டிய சமூகநீதி நாயகர்கள் – முன்னோடிகள் ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, நாராயண குரு, சாகு மகராஜ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோராவர்.
🔴இந்தியாவுக்கே வழிகாட்டும் நாள்!
சமூகநீதிக் களத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு, சமூக நீதி நாளாகத் தந்தை பெரியார் பிறந்தநாளையும், சமத்துவ நாளாக பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடுதல் போல, இந் நாளையும் கொண்டாடி, இதிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
– கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்