நீதிக் கட்சி Vs பாரதி

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 21

ஆறாவது அத்தியாயம்

‘மடாதிபதிகளே! நாடடுக்கோட்டைச் செட்டிகளே! பணத்தை வாரிச் செலவிடுங்கள். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாகும் கைங்கர்யம்’ என்று வர்ணிக்கிறார்.

ஆனால்,

அதைச் செயலில் செய்த நீதிக்கட்சிக்காரர்களை தேசத் துரோகிகள் என்கிறார். நீதிக்கட்சி அரசு பொறுப்பேற்றவுடன்,
* ஆதிதிராவிடர்களுக்கு என்று மட்டுமான மிகப்பலவான பள்ளிகளை உருவாக்கலும் நடத்தலும்.

* ஆதிதிராவிடர்களுக்கு தொழிற்கல்வி அளிப்பதில் விவசாயத்துறை, கல்வித்துறை இரண்டும் தனியார் துறையில் நல்ல போட்டியுடன் நடைபெறும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை ஊக்குவித்தல்.

* கூட்டுறவு இயக்கத்தை ஆதிதிராவிடர்களிடையே ஊக்குவித்தல்.

* நீர் வசதியை மேம்படச் செய்தல்.

* நிலங்கள் வழங்குவதை விரைவுபடுத்தல்.

* மதுவிலக்கை ஊக்குவித்தல்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்கள்:

* நிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அமர்த்தப்படுகிறார்கள். அப்போது தொல்லைகள் ஏற்படுகின்றன.  இவற்றை நீக்க லேபர் கமிஷனரால் கூறப்பட்டு ரெவீன்யூ போர்டினால் பரிந்துரைக்கப்பட்டவை இவை:

நிலம் ஒரு கூட்டு அமைப்புக்குக் கொடுக்கப்படவேண்டும். அவ்வமைப்பு மூலதனம் வழங்க வேண்டும். சாதி மக்களிடமிருந்து எழும் எதிர்ப்பைச் சமாளிக்க, ஆதி திராவிடர்களுக்கு உதவ வேண்டும். நிலம் வழங்கப்பட்ட ஒரு உறுப்பினருக்கு நிலத்தின் மீது ஈடுபாடு கொள்ளச் செய்யும்போது, அந்தச் சொத்தை அவர் அடமானம் வைக்க ஒப்புதல் அளிக்கக் கூடாது. அவ்வாறே தாழ்த்தப்பட்டோருக்காகச் செயலாற்றும் மிஷனரிகள், பொது நல அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளுக்கு பி.எஸ்.ஓ. 15படி அவர்களுக்கு நிலங்களை ஒதுக்குவதில் மறுப்பதற்கில்லை என அரசு ஆணை பிறப்பித்தது. இச்செய்திகள், 11.08.1920 நாளிட்ட 1934 ஆம் எண் ஆணையில் காணப் பெறுவன.

* வேளாண்மைக்காக ஏராளமான நிலங்கள் இருக்கும் சிற்றூர்களில் ஆதிதிராவிடர்கள் வேளாண்மை செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங்களை அவர்களுக்காக ஒதுக்குதல்; மற்ற சிற்றூர்களிலும் தேவை என் மாவட்ட ஆட்சியாளர் எண்ணுவாரானால் இவ்வாறு செய்யலாம்.

* எண்ணற்ற புறம்போக்குப் பகுதிகளோ, அளக்கப்படாது உள்ள நிலங்களோ அயனுக்கு மாற்றப்படும்போது, எடுத்துக்காட்டாக ஒதுக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படும் போது, ஆதிதிராவிடர்களின் இன்றைய தேவைகளும் எதிர்காலத் தேவைகளும் குறித்து ஆராயலாம்.

* இந் நிலங்களைப் பெறுபவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கன்றி மற்றவர்களுக்கு மாற்றப்படாதவாறு நிலங்கள் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

* நிலத்தைப் பெறுபவர்கள் கட்டணம் செலுத்த முடியாதபடி மிக ஏழையராக இருப்பின், வழங்கப்படும் நிலங்களில் உள்ள மரங்களின் மதிப்பைத் தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ செய்யலாம். நில அளவைக்கான கட்டணமும் இவ்வாறு செய்யப்படலாம். – இத்தகவல்கள் 16.12.1921 நாளிட்ட 2815 எண் ஆணையில் உள்ளன.
(முனைவர் பு. ராசதுரை எழுதிய ‘நீதிக் கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூல்)

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்லாமல் குறவர், மீனவர், கள்ளர் சமுதாய மக்களுக்குமு நறைய திட்டங்கைள உருவாக்கித் தந்திருக்கிறது நீதிக்கட்சி அரசு.

இந்த நீதிக்கட்சிக் காரர்களைத்தான் தேசத் துரோகிகள் என்கிறார் நம் வரகவி. அப்படியானால் பாரதி பார்வையில் தேசாபிமானிகள்?

தொடரும்.

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

Leave a Reply

%d bloggers like this: