எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?
தேவர் மகன், சின்னக் கவுண்டர் போன்று சாதி பெயர்களிலும் ஆதிக்க சாதிகளை ஆதரித்தும் படம் வந்திருக்கிறதே?
–கு. அர்சுனன், விழுப்புரம்.
அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கிற அவமானப்படுத்துகிற சினிமாக்களாகவும் அவைகள் இருக்கின்றன.
இதுபோன்ற மோசடிகளை அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முற்போக்காளர்களாக அறியப்படுகிற இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள்.
பகுத்தறிவு மற்றும் இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்திய திராவிட இயக்க சினிமா, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிலைப் படுத்தவில்லை.
அண்ணா, கலைஞர் போன்றவர்களின் சினிமாக்களில் வந்த கதாநாயகன், பகுத்தறிவாளனாக, முற்போக்காளனாக இருந்தாலும் அவன் பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரனாகத்தான் இருந்தான். அதிலும் குறிப்பாக பிள்ளை, முதலி போன்ற ஜாதிகளில் இருந்தே.
இதில் ஒரே ஆறுதல், அந்த ஜாதிகளைப் பிரதிநிதித்துவபடுத்தாததும், அந்த ஜாதிக்குள் இருந்தே வில்லனை காட்டியதும்தான்.
‘மதுரைவீரன்’ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவான அருந்ததியர்கள் வழிபடும் கடவுள்.
மதுரைவீரனின் கதை சினிமாவாக மாறியபோது, அதில் ‘மதுரைவீரன் பிறப்பால் அருந்ததியர் இல்லை, அவரை அருந்ததியர்கள் (சினிமாவில் என்.எஸ். கிருஷ்ணன்-மதுரம்) எடுத்து வளர்த்தார்கள்’ என்று உல்டா செய்தார்கள்.
அந்தப் படத்தில் திராவிட இயக்கத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மதுரைவீரனாகவும், அப்போது திராவிட இயக்கத்தில் இருந்த, கண்ணதாசன் வசன கர்த்தாவாகவும் பங்காற்றி இருந்தார்கள்.
இதுபோன்றே, சமீபகாலத்தில் சினிமாவில் முற்போக்காளர்களாக அறியப்படும் இயக்குனர் மணிவண்ணன், சத்தியராஜ் இணைந்து உருவாக்கிய ‘ஆண்டான் – அடிமை’ படத்திலும் செருப்பு தைக்கும் அருந்ததியர் குடும்பத்தில் வளரும் கதாநாயகன் சத்தியராஜ், பிறப்பால் ஒரு பார்ப்பனர் அவரை அருந்ததியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்றுதான் வந்தது.
பாலாவின் பிதாமகனில் ‘ஒரு பெண் சுடுகாட்டில் குழந்தையை விட்டுவிட்டு போகிறாள், அதனால்தான் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை பார்த்தார். மற்றபடி அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை’ என்று காட்டப்பட்டது.
மிக நல்லவன், மிகத் திறமையானவன், நன்றாக ஆடுவான், பாடுவான், அறிவாளி, அழகன், அநீதியை தட்டிக் கேட்பவன் இதெல்லாம் கதாநாயகனுக்கான சிறப்புகளாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சிறப்புகளைப் போலவே கதாநாயகன் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவன் என்பதும் அவனுக்கான ‘சிறப்பாகவே’ காட்டப்படுகிறது.
ஜாதி ரீதியாக சக்கிலியராகவோ, பறையறாகவோ, பள்ளராகவோ கதாநாயகன் இருந்தால் ‘காதநாயக அந்தஸ்துக்கு இழுக்கு’ என்று ‘படைப்பாளர்கள்’ கருதுவதுதான் காரணம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இயக்குநராக வந்தால் அவரும் இதுபோன்ற முறையில்தான் படம் எடுக்கவேண்டும் என்று ஒரு ‘நியதி’ நிறுவப்பட்டிருக்கிறது. ஏனென்றால், படம் பார்க்கிற மிகப் பெருபான்மையான ‘ஜாதி இந்துக்கள்’ அல்லது தலித் அல்லாதவர்கள் அந்தப் படத்தை புறக்கணித்துவிடுவார்கள் என்பதும் அதற்குக் காரணமாக கருதப்படுகிறது.
இதில் வேடிக்கை, இன்று முன்னணியில் இருக்கிற மிகப் பெரிய கதாநாயகர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால், படத்தில் அவர்கள் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
மாறாக, அவர்கள் தங்களை தலித்தாக அடையாளம் காட்டிக் கொண்டால், தங்களின் கதாநாயக அந்தஸ்து தகர்ந்துவிடும் என்று அவர்கள் கருதுவதால்தான், தான் தலித் என்பதையும் மறைக்க முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே தன்னுடைய கிறிஸ்துவ மத அடையாளத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.
எனக்கு தெரிந்து, தமிழ் சினிமாவில், கதாநாயகன் தாழ்தத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக காட்டியது கே. பாக்கியராஜின் இது நம்ம ஆளு, சேரனின் பாரதி கண்ணமா இந்த இரண்டு படகள்தான். இவைகள் இரண்டும் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இரண்டுபேரும் ‘ஜாதி மறுப்பு, பெரியார், அம்பேத்கர், தமிழ்த் தேசியம்’ என்று பேசுகிற முற்போக்காளர்கள் இல்லை.
இந்த இரண்டு படங்களில் பாக்கியராஜின் இது நமம ஆளு படத்தை தான் சிறந்த படமாக கருதுகிறேன். சேரனின் பாரதி கண்ணமாவில் தேவர் வீட்டுப் பெண் தாழ்த்தப்பட்டவரை காதலிப்பதாக காட்டுகிற துணிச்சல் இருந்தாலும்,(இதற்காக அந்தப் படத்திற்கு எதிர்ப்பு வந்தது)
அதற்கு பரிகாரம் செய்வதைப்போல், தேவர் ஜாதிக்கார்கள் இந்த மண்ணின் மைந்தர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை நம்பி வேறு எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்வர்களாகவும் மிக மோசமான கருத்து பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பாக்கியராஜின் ‘இது நமம ஆளு’ படத்தில் தாழ்த்தப்பட்டர்களுக்கு சவரம் செய்கிற நாவிதர்தான் கதாநாயகன்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தங்கம் இதழை ஆன்லைன் வழியாக பார்க்க:
http://ebook.thangamonline.com/feb11/
தொடர்புடையவை:
‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி
பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்
பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
‘பேராண்மை’- சென்சாரின் சிறப்புகலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்
அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
==>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <==
.
ஒரு கை ஓசை படத்தில் சங்கிலி முருகனின் பாத்திரம் பாக்யராஜால் வடிவமைக்கப்பட்டது. ஹீரோவாக இல்லாவிட்டாலும் செகண்ட் ஹீரோ அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கும். அருமையான கதாபாத்திரம்.
படிப்பவர்களே ஜாதி உணர்வோடு இருக்கும் போது, சினிமாகாரர்களை சொல்லி என்ன பயன். சுதந்திரம் என்பது கொடுத்து வாங்கிக்கொள்வது அல்ல. நாமே எடுத்துக்கொள்வது. அது கூட தவறு. சுதந்திரம் நம்மிடம் எப்போதும் இருப்பது. நாய் குரைத்தால் நாம் ஒதுங்கி போவது இல்லையா. அது மாதிரி ஜாதி பெயர் சொல்லி ஒதுக்குபவர்களை நாய் என்று கருதி ஒதுங்கிவிடுங்கள்.
அலை ஓசை படத்தில் விஜயகாந்த் , வெண்ணிலா கபடிக்குழு படத்தின் நாயகன்,காதல் மற்றும் கூடல் நகரில் பரத் என நிறைய படங்களில் காட்டியிருக்கிறார்கள்.
///sEkkaaLi
அலை ஓசை படத்தில் விஜயகாந்த் , வெண்ணிலா கபடிக்குழு படத்தின் நாயகன்,காதல் மற்றும் கூடல் நகரில் பரத்////
தவறான தகவல்களை தந்திருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் படங்களில் அவர்கள் தாழ்த்தப்படடவர் என்று நேரடியாக எந்தக் காட்சியிலும் காட்டவில்லை.
pithamakanil mattum eppadi neradiyaka vikramin jaathi kattapatullathu???
Alamelu
///பாலாவின் பிதாமகனில் ‘ஒரு பெண் சுடுகாட்டில் குழந்தையை விட்டுவிட்டு போகிறாள், அதனால்தான் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை பார்த்தார். மற்றபடி அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை’ என்று காட்டப்பட்டது.///
கட்டுரையில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?
Jay Rajamanickam
///படிப்பவர்களே ஜாதி உணர்வோடு இருக்கும் போது, சினிமாகாரர்களை சொல்லி என்ன பயன். சுதந்திரம் என்பது கொடுத்து வாங்கிக்கொள்வது அல்ல. நாமே எடுத்துக்கொள்வது. அது கூட தவறு. சுதந்திரம் நம்மிடம் எப்போதும் இருப்பது. நாய் குரைத்தால் நாம் ஒதுங்கி போவது இல்லையா. அது மாதிரி ஜாதி பெயர் சொல்லி ஒதுக்குபவர்களை நாய் என்று கருதி ஒதுங்கிவிடுங்கள்.////
சரியான வார்த்தை
/* மிக நல்லவன், மிகத் திறமையானவன், நன்றாக ஆடுவான், பாடுவான், அறிவாளி, அழகன், அநீதியை தட்டிக் கேட்பவன் இதெல்லாம் கதாநாயகனுக்கான சிறப்புகளாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சிறப்புகளைப் போலவே கதாநாயகன் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவன் என்பதும் அவனுக்கான ‘சிறப்பாகவே’ காட்டப்படுகிறது */
மிக வேடிக்கையாக உள்ளது, ஏன் என்றால் தமிழ் சினிமாவில் எப்போழுதும் எழைகள்தான் பணக்காரனை எதிர்ப்பதாக அமைந்துள்ளது, பேராண்மை படத்தின் கதாநாயகன் என்ன மேல்சாதியா, மன்னன் படத்தில் ரசினி என்ன மேல்சாதியா? திருப்பாச்சியில், கில்லி படத்தில் விசய் என்ன மேல்சாதியா? கில்லி படத்தில் அவர் அப்பா ஒரு தாழ்ந்த சாதியில் பிறந்து அரசு துறையில் வேலை பார்ப்பவராக இருக்கலாம் இல்லையா,
நம் தமிழ் சினிமாவில் குழப்பமான விசயம் என்னவென்றால் தாழ்ந்த சாதியாக காட்டினாலும் அந்த கதாபாத்திங்கள் சாமிகும்பிடும் விதம்தான் சற்று குழப்பத்தை எற்படுத்துகிறது, அப்பறம் எல்லா படங்களிலும் பார்பனர்களை பெரிய இவர்களாக மிக நல்லவர்களா காட்டுவதுதான் ஜிரணிக்க முடியவில்லை எ-டு /* இந்த இரண்டு படங்களில் பாக்கியராஜின் இது நமம ஆளு படத்தை தான் சிறந்த படமாக கருதுகிறேன்.*/
சிறந்த படம் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் அதிலும்கூட அந்த தப்பு செய்த பார்ப்பனனை காப்பாற்ற அந்த நடிகர் சிறை செல்வது எந்த விதத்தில் சரி, அதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் மிக அபத்தம். தன் நண்பனின் குற்றத்துகாக, முதலாளின் குற்றத்துகாக ஒருவன் சிறைக்கு செல்வது முட்டாள்தனமான செயல் என்றாலும் அது அவனின் தனிப்பட்ட செயல்.
/*பாலாவின் பிதாமகனில் ‘ஒரு பெண் சுடுகாட்டில் குழந்தையை விட்டுவிட்டு போகிறாள், அதனால்தான் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை பார்த்தார். மற்றபடி அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை’ என்று காட்டப்பட்டது*/குழந்தையை விட்டுவிட்டு போகிற பெண் ஏன் ஒரு தாழ்ந்த சாதியாக இருக்க கூடாது.
அப்பறம் தமிழ்படத்தில் டீகடை என்றால் கேரள நாயர்(நாய்கள்) எதோ அவர்கள் இங்குவுள்ள ஒரு தமிழ் சாதிகளில் ஒருவர்போல, தமிழகம் தண்ணிர் கேட்டால் கர்நாட்டகத்தில் தமிழர்கள் மேல் வன்முறை வெறியாட்டம் நடத்தபடுகிறது. தமிழர்களை அண்டி பிழப்பு நடத்தும் மலையாளத்தான்களை ரொம்ப நல்லவர்களாகவும் தண்ணிர் தராத கேரள அரசுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி சித்தரிக்கபடுகிறது, மற்ற மாநிலங்கள் தமிழகத்தை எமாற்றலாம் ஆனால் தமிழர்கள் பொருமையாக இருக்க வேண்டும் எவ்வுளவு வன்முறைகள் அவர்கள் மேல் நடத்தபட்டாலும் சாகும்வரை பொருமையாக இருக்க வேண்டும்,
பரவாயில்லை நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனிவரும் காலங்கல் தமிழர்களின் காலமாக அமையட்டும்
வாழ்க தமிழ், வளர்க தமிழ்
i am sure you haven’t been to “Thevar Magan”
wat abt villadhi villan. (one satyaraj -dalit and hero; another brahmin and villian)?
திருப்பாச்சியில விஜய் ஆதிக்கசாதிகாரர் இல்லாவிட்டாலும். மேல்ஜாதியாகவே காட்டியிருந்தார்கள்.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயிலின் திரைக் கதாநாயகனாக நாவிதரின் மகனைத்தான் காட்டினார் .