உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

நம்ம சினிமாவுல கூட இப்படி வராது சண்டைக்காட்சி; பங்களாதேஷ்லேயோ இது அன்றாடம் காட்சி.

லகக்கோப்பை கிரிக்கெட்டின் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக பங்களாதேசில் நடைபெற்றது.

‘பாதிநாள் பட்டினி, மீதி நாள் ஒருவேளை’ என்று வாழுகிற பரிதாபத்திற்குரிய நாடு பங்களாதேஷ். இந்தியாவையே பணக்கார நாடாக பார்க்கும் பங்களாதேசுக்கு இது தேவையா?

இந்த வெட்டி வேலைக்காக தலைநகர் டாக்காவை சுத்தப்படுத்த 100 மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டிருக்கிறது பங்களாதேஷ் அரசு. சுத்தப்படுத்துவது என்பது நகரை பெருக்குவது மட்டுமல்ல; நகரத்திலிருந்தே, மனிதர்களையும் பெருக்கித் தள்ளுவது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குவியும் கிரிக்கெட் சூதாடிகளுக்காகவும், ஊதாரிகளுக்காகவும் சொந்தநாட்டு மக்களையே குப்பைகளைப் போல் பெருக்கி தள்ளியிருக்கிறது பங்களாதேஷ் அரசு.

சாலையோரத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களை, நகரத்திலிருந்து விரட்டியடித்திருக்கிறது. பிச்சைக்காரர்கள் பணம் கொடுத்து வீதிகளில் இருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். நடைபாதை வியாபாரிகளும் நகரத்தில் இருந்து அப்புறப்படுதப்பட்டிருக்கிறார்கள்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா:

“கிரிக்கெட் போட்டியானது நாட்டின் 14 கோடியே 60 இலட்சம் மக்களுக்கு கவுரவத்தை பெற்றுத்தரும்” என்று பெருமை பொங்க பேசியிருக்கிறார்.

கரகாட்டக்காரன் படத்தில், ‘தன்னை புகழ்ந்துபேசும்படி’ ஒருவருக்கு பணம் கொடுத்த செந்திலைப் பார்த்து கவுண்டமணி,“நீ வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இதெல்லாம் உனக்கு தேவையா?” என்பார். ஹசீனாவின் பேச்சு அதை நினைவூட்டுகிறது.

பெற்றோர்களை தனியாக தவிக்கவிடடு முறையான மருத்துவ உதவி செய்யாமல், அவர்கள் இறந்த பிறகு ‘பெருமைக்காக’ காரியத்தை விசேசமா நடத்துற ஊதாரி மகன்களைப்போல், பங்களாதேஷ் அரசு நடந்துகொண்டிருக்கிறது.

இஸ்லாமிய நாடோ, கிறிஸ்துவ நாடோ, இந்து நாடோ எந்த நாடாக இருந்தாலும் சொந்த நாட்டு எளிய மக்களை சுரண்டுவதில் ஒரே சிந்தனை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கும்பகோணத்திலிருந்து சித்தார்த் என்பவர், தங்கம் இதழில்,

‘உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை வெல்லுமா? என்று கேட்டிருந்தார்; அதற்கு நான் இப்படி பதில் எழுதினேன்,

பேரம் பேசிக்கிட்டு இருக்கிறாங்க, விலை படிஞ்சா வாங்கிட வேண்டியதுதான்.’

தொடர்புடையவை:

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை-`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

8 thoughts on “உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

  1. இஸ்லாமிய நாடோ, கிறிஸ்துவ நாடோ, இந்து நாடோ எந்த நாடாக இருந்தாலும் சொந்த நாட்டு எளிய மக்களை சுரண்டுவதில் ஒரே சிந்தனை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள்.//// Ivargalai enna dhan panna Mudiyum???

Leave a Reply

%d bloggers like this: