Site icon வே. மதிமாறன்

‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

பாரதி` ஜனதா பார்ட்டி` என்ற உங்கள் நூலில், பாரதி கவிதையில் உள்ள வடிவம், அழகியல் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்று நாகர்ஜுனன் என்ற அறிவுஜீவி தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறாரே?

விஜய் ஜா னகி

பாரதி` ஜனதா பார்ட்டி` புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே,

தன்னைப்
படிப்பவனை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
அடிமையாக்கி
வைத்துக் கொள்ளும்
பாரதியின்
கவிதை என்னும்
‘லாகிரி வஸ்து’ விற்கு

என்று குறிபிட்டு இருந்தேன்.

எனது கட்டுரைகளிலும், பேட்டியிலும் அதைப்பற்றி சொல்லியிருக்கிறேன்.

தோழர் மருதையனும் நானும் எழுதிய பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்` புத்தகத்தில் தோழர் மருதையன் பாரதி ரசிகர்களின் ரசிக மனோபாவம் பற்றி விரிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

எனினும் பாரதி ரசிகர்களான அறிவுஜீவிகள்‘,

தலைவரை எவன் என்ன கொறை சொன்னாலும் அவர் ஸ்டைலுக்கு ஈடாகுமா?` என்கிற ரஜினி ரசிகரின் பாணியில், பாரதியின் கவிதை குறித்து குதூகளிக்கிறார்கள்.

இவர்கள் குதூகளிப்பதற்கான உள்ளடக்கம் ரஜினி ரசிகர்களை ஒத்திருந்தாலும், வடிவம் Intellectual approach ல் இருக்கிறது. அறிவாளிகள் அல்லவா?

அதனால்தான் அது பழைய பாணி, இது புதிய பாணி என்கிற சொத்தை விளக்கங்கள் எல்லாம் வருகிறது.

பழைய பாணி என்பதற்காக ஒரு விஷயத்தை முற்றிலும் நிராகரிப்பது, புதிய பாணி என்கிற ஒரே காரணத்திற்காக ஒரு விஷயத்தை முற்றிலும் ஏற்றுகொள்வது, என்பதுதான் அறிவு நாணயமா?

காலில் செருப்பு போடுவது பழயை பாணிதான். புது பாணியாய் இருக்கட்டும் என்பதற்காக செருப்பை தலையில் தூக்கி வைத்துக் கொள்ளமுடியுமா?

ஆனால், இந்த புதுமை விரும்பிகள்தான், பார்ப்பன பழைமையில் ஊறிய பாரதியின் கவிதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இன்னும் புது பாணியைப் போலவே பின்பற்றப்படுகிறது இந்த பழைய பாணி…. (இது ரொம்ப பழசு)

கேட்டால்,பாரதியின் காலகாட்டம்` என்ற புளித்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விட்டால்,மனுஸ்ருமிதியை எழுதிய மனுவின் காலகட்டத்தையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மனு, பாரதிக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அல்லவா? அன்றைய காலச்சூழல் அப்படி` என்றும் காதில் பூ சூற்றுவார்கள்.

இது போன்ற அற்பவாதத்தையே மீண்டும் மீண்டும்…..சொல்லி சுய ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

நரேந்திர மோடி ஆட்சியில் இஸ்லாமியர்கள் கொலை செ ய்யப்பட்டிருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் மிக கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் கண்டிக்கும்போது,

பார்ப்பன அறிவுஜீவிகள், ‘அவர் ஆட்சி மிக சிறப்பாக இருக்கிறது. அவர் காலத்தில்தான் குஜராத், தொழில் வளர்ச்சியல் முன்னணியில் இருக்கிறது.` என்று தேசபகதர்களைப் போல் விவாதிப்பார்கள்.

அதுபோல்பாரதி தீவிர பார்ப்பன இந்து மனோபவம் கொண்டவர்` என்பதை நாம் நிரூபித்த பிறகும், இந்தஅறிவுஜீவிகள்` அதை குறித்து கள்ள மவுனம் சாதித்து விட்டு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அவர் கவிதை குறித்து சிலா கிக்கிறர்கள்.

சிறுமிகளை, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் என்று ஒருவனை தண்டித்தால், இவர்கள் என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` என்று அவனை பாராட்டுவார்கள் போலும்.

சிலரது எழுத்துக்களை படித்துவிட்டு, ‘என்ன விளக்கம் கொடுத்தாலும் சொன்னதையே திரும்ப திருப்ப சொல்லிக்கிட்டே இருக்காங்களே? உண்மையிலேயே இவர்கள் முட்டாளா? இல்ல முட்டாள் மாதிரி நடிக்கிறாங்களா என்கிற கடுப்பில், யாரவது முரடர்கள் அவர்களை தவறுதாகலாக தாக்கி விட்டால், அந்த மோசமான வன்முறையை இவர்கள் கண்டிப்பார்களா? இல்லை அந்த வன்முறைக்குள் உள்ள அழகியலை அதாவது வீரத்தை ரசிப்பார்களா?

***

உண்மையில்இந்து மதம், பார்ப்பனியம் குறித்து பாரதிக்கு என்ன கண்ணோட்டம் இருந்ததோ, அதே கண்ணோட்டம்தான் இவர்களிடம் இருக்கிறது.

அதனால்தான் பெரியார் குறித்து வந்த அவதூறுகள், இந்த முற்போக்கு அறவுஜீவிகளை எந்த அளவிலும் பாதிக்கவில்லை. அதை ரசித்த காரணத்தால்தான், அது குறித்து இவர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அதே காரணத்தால்தான் இவர்களுக்கு பாரதி பற்றிய உண்மைகள் சுடுகிறது.

இவர்களுக்கு பாரதியிடம் பிடித்தது, கவிதை மட்டுமல்ல. அவருடைய ஜாதியும் கூடதான்.

குறிப்பு:

அழகியல் உணர்வுஇந்த அறிவாளிகள் எழுத்துகளில் துளிகூட இல்ல. ஒரு வாக்கியத்தை தெளிவா ஒழுங்காக்ககூட எழுத தெரியல. இவர்களோட எழுத்து எந்த உணர்வும் அற்று, பிணம்போல் இருக்கிறது.

குறைந்த பட்சம் ஒரு விஷயத்தை எப்படி உணர்வோடு எழுதுவது என்பதை பாரதியிடம் இருந்துகூட இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இவுங்கதான் அழகியல் பத்தி அதிகம் பேசுறாங்க. இந்த மாதிரியான அறிவாளிகளின் மோசடி, தமிழில் தொடர்ச்சியாக, கவுரவத்தோடு, மிடுக்காக நடந்து கொண்டுதான் இருக்கிறது.


தொடர்புடைய பதிவு:

நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்

Exit mobile version