‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

பாரதி` ஜனதா பார்ட்டி` என்ற உங்கள் நூலில், பாரதி கவிதையில் உள்ள வடிவம், அழகியல் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்று நாகர்ஜுனன் என்ற அறிவுஜீவி தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறாரே?

விஜய் ஜா னகி

பாரதி` ஜனதா பார்ட்டி` புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே,

தன்னைப்
படிப்பவனை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
அடிமையாக்கி
வைத்துக் கொள்ளும்
பாரதியின்
கவிதை என்னும்
‘லாகிரி வஸ்து’ விற்கு

என்று குறிபிட்டு இருந்தேன்.

எனது கட்டுரைகளிலும், பேட்டியிலும் அதைப்பற்றி சொல்லியிருக்கிறேன்.

தோழர் மருதையனும் நானும் எழுதிய பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்` புத்தகத்தில் தோழர் மருதையன் பாரதி ரசிகர்களின் ரசிக மனோபாவம் பற்றி விரிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

எனினும் பாரதி ரசிகர்களான அறிவுஜீவிகள்‘,

தலைவரை எவன் என்ன கொறை சொன்னாலும் அவர் ஸ்டைலுக்கு ஈடாகுமா?` என்கிற ரஜினி ரசிகரின் பாணியில், பாரதியின் கவிதை குறித்து குதூகளிக்கிறார்கள்.

இவர்கள் குதூகளிப்பதற்கான உள்ளடக்கம் ரஜினி ரசிகர்களை ஒத்திருந்தாலும், வடிவம் Intellectual approach ல் இருக்கிறது. அறிவாளிகள் அல்லவா?

அதனால்தான் அது பழைய பாணி, இது புதிய பாணி என்கிற சொத்தை விளக்கங்கள் எல்லாம் வருகிறது.

பழைய பாணி என்பதற்காக ஒரு விஷயத்தை முற்றிலும் நிராகரிப்பது, புதிய பாணி என்கிற ஒரே காரணத்திற்காக ஒரு விஷயத்தை முற்றிலும் ஏற்றுகொள்வது, என்பதுதான் அறிவு நாணயமா?

காலில் செருப்பு போடுவது பழயை பாணிதான். புது பாணியாய் இருக்கட்டும் என்பதற்காக செருப்பை தலையில் தூக்கி வைத்துக் கொள்ளமுடியுமா?

ஆனால், இந்த புதுமை விரும்பிகள்தான், பார்ப்பன பழைமையில் ஊறிய பாரதியின் கவிதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இன்னும் புது பாணியைப் போலவே பின்பற்றப்படுகிறது இந்த பழைய பாணி…. (இது ரொம்ப பழசு)

கேட்டால்,பாரதியின் காலகாட்டம்` என்ற புளித்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விட்டால்,மனுஸ்ருமிதியை எழுதிய மனுவின் காலகட்டத்தையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மனு, பாரதிக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அல்லவா? அன்றைய காலச்சூழல் அப்படி` என்றும் காதில் பூ சூற்றுவார்கள்.

இது போன்ற அற்பவாதத்தையே மீண்டும் மீண்டும்…..சொல்லி சுய ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

நரேந்திர மோடி ஆட்சியில் இஸ்லாமியர்கள் கொலை செ ய்யப்பட்டிருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் மிக கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் கண்டிக்கும்போது,

பார்ப்பன அறிவுஜீவிகள், ‘அவர் ஆட்சி மிக சிறப்பாக இருக்கிறது. அவர் காலத்தில்தான் குஜராத், தொழில் வளர்ச்சியல் முன்னணியில் இருக்கிறது.` என்று தேசபகதர்களைப் போல் விவாதிப்பார்கள்.

அதுபோல்பாரதி தீவிர பார்ப்பன இந்து மனோபவம் கொண்டவர்` என்பதை நாம் நிரூபித்த பிறகும், இந்தஅறிவுஜீவிகள்` அதை குறித்து கள்ள மவுனம் சாதித்து விட்டு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அவர் கவிதை குறித்து சிலா கிக்கிறர்கள்.

சிறுமிகளை, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் என்று ஒருவனை தண்டித்தால், இவர்கள் என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` என்று அவனை பாராட்டுவார்கள் போலும்.

சிலரது எழுத்துக்களை படித்துவிட்டு, ‘என்ன விளக்கம் கொடுத்தாலும் சொன்னதையே திரும்ப திருப்ப சொல்லிக்கிட்டே இருக்காங்களே? உண்மையிலேயே இவர்கள் முட்டாளா? இல்ல முட்டாள் மாதிரி நடிக்கிறாங்களா என்கிற கடுப்பில், யாரவது முரடர்கள் அவர்களை தவறுதாகலாக தாக்கி விட்டால், அந்த மோசமான வன்முறையை இவர்கள் கண்டிப்பார்களா? இல்லை அந்த வன்முறைக்குள் உள்ள அழகியலை அதாவது வீரத்தை ரசிப்பார்களா?

***

உண்மையில்இந்து மதம், பார்ப்பனியம் குறித்து பாரதிக்கு என்ன கண்ணோட்டம் இருந்ததோ, அதே கண்ணோட்டம்தான் இவர்களிடம் இருக்கிறது.

அதனால்தான் பெரியார் குறித்து வந்த அவதூறுகள், இந்த முற்போக்கு அறவுஜீவிகளை எந்த அளவிலும் பாதிக்கவில்லை. அதை ரசித்த காரணத்தால்தான், அது குறித்து இவர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அதே காரணத்தால்தான் இவர்களுக்கு பாரதி பற்றிய உண்மைகள் சுடுகிறது.

இவர்களுக்கு பாரதியிடம் பிடித்தது, கவிதை மட்டுமல்ல. அவருடைய ஜாதியும் கூடதான்.

குறிப்பு:

அழகியல் உணர்வுஇந்த அறிவாளிகள் எழுத்துகளில் துளிகூட இல்ல. ஒரு வாக்கியத்தை தெளிவா ஒழுங்காக்ககூட எழுத தெரியல. இவர்களோட எழுத்து எந்த உணர்வும் அற்று, பிணம்போல் இருக்கிறது.

குறைந்த பட்சம் ஒரு விஷயத்தை எப்படி உணர்வோடு எழுதுவது என்பதை பாரதியிடம் இருந்துகூட இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இவுங்கதான் அழகியல் பத்தி அதிகம் பேசுறாங்க. இந்த மாதிரியான அறிவாளிகளின் மோசடி, தமிழில் தொடர்ச்சியாக, கவுரவத்தோடு, மிடுக்காக நடந்து கொண்டுதான் இருக்கிறது.


தொடர்புடைய பதிவு:

நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்

11 thoughts on “‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

 1. தோழர் மதிமாறன் அவர்களுக்கு,

  சரியான நேரத்தில் பதிந்திருக்கும் நல்ல பதிவு இது தோழர். பாரதி ஒடம்புல ஏண்டா பூநூல் கெடந்துச்சின்னு இவர்களைக் கேட்டால், “இல்லையில்ல, அவன் சட்டை எவ்வளவு நன்றாக இருக்கிறது பாருங்களேன்” என்று பதில் சொல்கிறார்கள்.

  மேலே விஜய் அவர்கள் குறிப்பிட்டுள்ள நாகார்ஜூனனின் பதிவின் மீதான விவாதங்களை இங்கே நான் தொகுத்திருக்கிறேன். அவ்விவாதத்தில் நானும் பங்கெடுத்திருக்கிறேன். இதனை இங்கே உங்கள் வலைதள வாசகர்களுக்காக வைக்கிறேன்.

  ********************************************************************************
  10 கருத்துகள்:
  பொய்யன் said…
  bharathiyai kelvikkutpaduthi ve. mathimaran enbavar thodarnthu eluthi varugirar. bharathiya janata party endra oru puthakathayum ithu thodarpa eluthi irukkirar. paarthulleerkala, padithulleerkala? ithu patri thangal karuthai ariya avvalai irukkiren

  09-Apr-2008 09:02:00
  நாகார்ஜுனன் said…
  பொய்யன்,

  கருத்துக்கள் தமிழில் எழுதினால்தான் இனி வெளியிடப்படும். தமிழில் என்றால் எழுத்து வடிவமும்தான். மற்றவர்களுக்கு ஒரு நீதி, உங்களுக்கு ஒன்று என்பதில்லை.

  பாரதியிடம் மட்டுமல்ல, அந்தக்காலகட்டத்தின் எல்லாக்கலைஞர்களிடமும்
  சமுதாயத்தின் பழைமையும் புதுமையும் முட்டிமோதுவதில் ஆச்சர்யமில்லை. உதாரணம் – தமிழின் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

  வே. மதிமாறன் கட்டுரையை வாசித்திருக்கிறேன். கட்டுரையில் கறாரான அரசியல்-சமுதாயக் கண்ணோட்டம். கருத்துக்களை மாத்திரம் அணுகுகிறது. கவிதையை அணுகும்போது வடிவவியல்-நோக்கு இல்லை. இத்தனை பழைமைநோக்குள்ள பாரதி எப்படி செய்யுளை உடைத்து வசன கவிதை எழுதப்போனார் என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.

  மேலும் இன்றைய காலகட்டத்தில் எல்லாத்தரப்பு தேசியவாதம், தன்-அடையாள அரசியல் எல்லாமே
  சிந்தனை-அமைப்பில் ரொம்பப் பழையதாகிவருகின்றன என்பதையும்
  கட்டுரை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

  அன்புடன்
  நாகார்ஜுனன்

  09-Apr-2008 11:30:00
  Vijay said…
  பாரதி குறித்த வே.மதிமாறனின் ஆய்வை முழுமையாக படித்து விட்டு எழுதவும். அரைகுறை அறிவோடு எழுத வேண்டாமே நீர்.

  [b]பணக்காரர்களிடமும் பண்டிதர்களிடமும் அடைப்பட்டுக் கிடந்த தமிழ்க் கவிதையை எளிய மக்களிடம் கொண்டு சென்றவன் பாரதி என்கிறார்களோ?[/b]

  பொய். பாரதிக்கு முன்பே சித்தர்கள் மக்கள் மொழியில்தான் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். சித்தர்கள் மொழி மட்டும் எளிமையல்ல அவர்களின் வாழ்க்கையே எளிமையானதுதான். காரணம் அவர்களே எளிய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள்தான்.

  பாரதிக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்க அடிகளின் குரல் ஒரு கலகக் குரல்.

  “இராமலிங்க சுவாமிகள் “களங்கமறப் பொது நடனங் கண்டு கொண்ட தருணம்” என்ற பாட்டைத் திரித்துப் பாடியது,

  “தாயுமானவர் ஆனந்த களிப்பு மெட்டு, காவடிச் சிந்தில் ஆறுமுகவடிவேலவனே என்ற வர்ண மெட்டு”

  “பெரிய புராணத்தில் வருகிற மாடு தின்னும் புலையா என்ற பாட்டின் மெட்டில் பாடியது” என்று பாரதியே அவர்களின் பாடல்களை பயன்படுத்தி இப்படி குறிப்பிட்டுதான் பாடியிருக்கிறார்.

  அவ்வையாரின் ஆத்திச்சூடியைப் போல்தான் பாரதியும் ஆத்திச்சூடி பாடியிருக்கிறார்.

  இவர்களிடம் இருந்து வேறுபடக் காரணம், ஆங்கிலம் தெரிந்த பத்திரிகையாளராக பாரதி இருந்ததால் தொழில் காரணமாக ஆங்கில பத்திரிகைகளை படிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. கவிஞனாகவும் இருந்ததால் அந்தச் செய்திகளை கவிதையாகவும் பாட முடிந்தது.

  இதன் காரணமாகதான் அவர் ரஷ்யா பற்றி, பிஜித் தீவைப் பற்றி இன்னும் பல நாடுகளை பற்றியும், அந்த நாட்டின் போராட்டங்களைப் பற்றியும், ஆங்கில இலக்கியங்களையும் குறிப்பிட்டு எழுத முடிந்தது. ஆங்கில கவிதைகளின் தாக்கத்தினால்தான் அவர் கவிதைகளில் ஒரு நவீன தன்மை இருந்ததது.

  கவிதைகளையும், கட்டுரைகளையும் ‘அப்டேட்’ செய்வதற்கு அவருடைய பத்திரிகையாளர் பணி அவருக்கு பெரிதும் உதவியது. இதைதான் மதவாதிகள் ‘பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ என்று திரித்து சொல்கிறார்கள்.

  இது போக சமஸ்கிருதம் கலந்து எழுதியதாலும், சமஸ்கிருத ஆதரவாளர்கள் அவரை பெரிதும் “புதுமையானவர், இதுவரை தமிழை இவ்வளவு எளிமையாக யாரும் எழுதியதில்லை” என்று திட்ட மிட்டு பாராட்டினார்கள்.

  அந்தக் காலததில் இருந்து இந்த காலம் வரை அவர்களிடம்தானே முக்கியமான பத்திரிகைகள் இருக்கிறது, அல்லது பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.

  ஆக பாரதிதான் எளிய மக்களிடம் கொண்டுசென்றான் என்பது உண்மையல்ல. நீதிகட்சியின் ஆட்சிக்கு பிறகுதான் எளிய மக்கள் எழுத படிக்கவே ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பாரதி கவிதைகளையும் படித்தார்கள், என்பதுதான் உண்மை.

  http://mathimaran.wordpress.com

  16-Jun-2008 07:46:00
  நாகார்ஜுனன் said…
  பொதுவான தமிழ்க்கவிதை – வள்ளலார், தாயுமானவர், சித்தர் மரபில் – என பாரதி தொடர்வது பலர் ஏற்கனவே சுட்டிச்சென்றதுதான்.

  பாரதி வசன கவிதை எழுதப்போனது ஏன் என்பதைக் கருத்தளவில், செய்தியளவில் வைத்துப்பார்ப்பது போதாது. பாரதியின் வசன கவிதை பற்றி வடிவ-ஆய்வு, அமைப்பியல்-ஆய்வு செய்துபார்க்க வேண்டும்.
  ஆங்கிலக்கவிதைகளின் “தாக்கம்” போன்ற பொதுப்புத்தி வரிகள் போதா.

  தவிர கவிதை என்பது எளிமைப்படுத்துவதும் அல்ல. எளிய, சாமானிய மக்களும் கவிதையை எளிமைப்படுத்துவோர் அல்லர்.

  நாகார்ஜுனன்

  16-Jun-2008 10:54:00
  ஏகலைவன் said…
  ///இதற்காக சலபதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!////

  நீங்கள் மட்டுமா, நாங்கள் கூட உங்கள் ‘சலபதி’யை பாராட்டியே தீரவேண்டும். காரணம், மதிமாறனுடைய பாரதி குறித்த ஆய்வுகளுக்கும்கூட உங்கள் ‘சலபதி’யின் நூல்களும் உதவியிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

  முக்கியமாக, பாரதி பார்ப்பன சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய செய்திகள் பற்றிய தரவுகள் ‘சலபதி’ அவர்களின் ஆய்வில்தான் இருக்கின்றன.

  இதனாலேயே எஸ்.வி.ராஜதுரை போன்ற அறிவுஜீவி!!!! மேதாவிகள், உங்கள் ‘சலபதி’யை இழிவாக விமர்சித்திருக்கிறார்கள்.

  அடுத்து வேதநாயகம்பிள்ளை குறித்து,

  வேதநாயகம் பிள்ளை, அவருடைய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தமிழின் முதல் நாவல் எனும் பெருமையைத் தங்கியிருந்ததே அதில், தன்னுடைய சாதிக்காகவோ அல்லது தான்சார்ந்த கிறித்தவ மதத்திற்காகவென்றோ தனிப்பட்டு எழுதியிருக்கிறாரா, நாகார்ஜூனன்??

  அப்படி கிறித்துவம் சார்ந்து அவர் எழுதியிருந்தாலும் தவறேயில்லை. ஏனெனில் இந்துத்துவ கோரப் பற்களில் அனைத்து சாதியினரும் சிக்குண்டிருந்த காலம் அது. இந்து என்கிற ஒரு பாசிச மதத்தைத் தவிர வேறெந்த மதமும் சாதாரண உழைக்கும் மக்களை சாதியைச் சொல்லி ஒடுக்கியது கிடையாது.

  எனவே, அத்தகைய பாசிச இந்து மதத்தை உயர்த்தி எழுதுவதைவிட வேற்று மதங்களைப் பற்றி உயர்வாக எழுதுபவர்கள் எவரேனும் நம்முடைய சமூகத்தில் இருந்திருப்பார்களேயானால் அவர்களை பாரதி அளவுக்குக் கீழானவர்களாக கருதமுடியாது.

  பிரெஞ்சுப் புரட்சியையும் செர்பிய விடுதலையையும் சிலாகித்து எழுதிய பாரதிக்கு தோழர்கள் வைக்கும் கேள்வி மிகமிகச் சாதாரணமானது.

  இப்படி எல்லாவற்றையும் பாடிய பாரதி, அவனுடைய சொந்த மண்ணைச் சார்ந்த வீரன் கட்டபொம்மனைப் பற்றி ஏன் பாடவில்லை என்பதுதான் அக்கேள்வி. அப்படி கட்டபொம்மனைப் புறக்கனித்த பாரதி, துரோகி எட்டப்பனின் வரலாற்றை எழுதித்தருவதாக சீட்டுக்கவி எழுதியனுப்பி, அந்த அரன்மணை வாயிலில் காத்துக் கிடந்தாரே, அதன் அர்த்தம் என்ன, நாகார்ஜூனன்??? அதுதான் பாரதி சொன்ன தேசபக்தியோ???????

  பெண்ணியம் குறித்து ஆவேசமாக எழுதிய பாரதி, தன்னுடைய சமகாலத்தில் சாதித்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வரியில்கூட வேண்டாம், ஒரு வார்த்தையில்கூட, ஒரு எழுத்தில்கூட குறிப்பிடவில்லையே அது ஏன்?

  நீங்கள் மதிமாறனுடைய ஒட்டுமொத்த விவாதங்களுக்குக் கூட பதில் சொல்ல வேண்டாம், அவர் தன்னுடைய கட்டுரைகளில் சிலவற்றை இப்போதும் அவருடைய வலைதளத்தில் சிறு சிறு பதிவுகளாக பதிப்பித்து வருகிறார். அவற்றில் கூட நீங்கள் சென்று விவாதிக்கலாம் நாகார்ஜுனன்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

  16-Jun-2008 15:32:00
  நாகார்ஜுனன் said…
  ஏகலைவன்,

  நீங்கள்-நாங்கள் என வேறுபடுத்தும் சொற்கள் ஒரு திரட்டல்-உத்தி பழைய உத்தி. அதை விட்டுவிட்டுப் பேசலாம். தவிர, என் பெயரை மூன்றுமுறை எழுதி நிறைய கேள்விக்குறி போட்டிருக்கிறீர்கள். இவையெல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன்.

  பாரதி அன்றைய காலகட்டத்தில் அரசுப்பதவிகளில் பார்ப்பன ஆதிக்கத்தைச் சமன்செய்ய முற்பட்ட
  இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைககு எதிராக உரையாற்றியதை சலபதி வெளிக்கொணர்ந்த ஆய்வுமூலம் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதேபோல “என் பிறப்புக்கேறற வகையில் கடலூர் சிறையில் தொடர்ந்து இருக்கமுடியாது” என பாரதி சென்னை ஆங்கிலேய அரசுக்கு எழுதிய மன்னிப்புக்கடிதத்தையும்.
  இவற்றுக்காக சலபதியை எத்தனை பாராட்டினாலும் தகும்தான். பாரதியின் தந்தை எட்டயபுர சமஸ்தான உதவிபெற்றவர், சீட்டுக்கவி விஷயம் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு சிதறி, அவரை வரலாற்று மனிதராகப் பார்க்க
  இந்தப் புதிய விபரங்கள் உதவுவது உண்மையே.

  இதேபோல மதிமாறன் கேட்கும் வரலாற்றுக் கேள்விகளுக்கும் பதில் ஒருநாள் கிட்டலாம். ஆனால் கிடைத்ததை வைத்து பாரதி முற்றிலும் சரி அல்லது தவறு என வாதாடுபவனல்லன் நான். மதிமாறன் அந்தப்பாணி. அந்தக்காலகட்டத்தில் இந்த முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். முரண்பட்ட கருத்துக்கள், வடிவங்கள் முட்டிமோதியவர் என்பதான ஒருவித tension-உடன் பாரதியை, ஏன் எவரையும், வாசிக்க நான் விரும்புவேன்.

  வேதநாயகம் பிள்ளை, அக்காலப் பெண்விடுதலையை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்ற குழப்பம் அவர் நாவலில் கடைசிவரை சுவாரசியமாக ஒடும். இதைத்தான் குறிப்பிட்டேனே தவிர கிறித்துவத்தை அல்ல.

  என் பதிவு பாரதியின் இலக்கியம், கவிதையாக்கம், குறிப்பாக வசன கவிதையாக்கம் அதற்கான ப்ரெஞ்சு மொழிப்புலமை பற்றி நோக்கும் ஒன்றுய உங்களைப் போன்ற விஜய் என்பவரின் கேள்விக்கான என் பதிலும் அது பற்றியதே.

  நாகார்ஜுனன்

  16-Jun-2008 16:19:00
  ஏகலைவன் said…
  அய்யா நாகார்ஜூனன் அவர்களே!

  எதிர்கருத்துக்களை எவ்விதத் தயக்கமுமின்றி பதிப்பிப்பதும், முறையாக பதில் சொல்வதுவும் இதுவரை பாரதி பக்தர்கள் யாருக்கும் இல்லாத ஒரு பழக்கம். எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களே இதுவரை எந்தப் பதிலும் சொன்னது கிடையாது. உங்களுடைய பதில்களில் எனக்கு மாற்றுக்கருத்து இருப்பினும், பதில் சொல்லவேண்டும் என்கிற உமது நேர்மையை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அந்த வகையில் உங்களைப் பாராட்ட வேண்டும்.

  ///பாரதி அன்றைய காலகட்டத்தில் அரசுப்பதவிகளில் பார்ப்பன ஆதிக்கத்தைச் சமன்செய்ய முற்பட்ட
  இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைககு எதிராக உரையாற்றியதை சலபதி வெளிக்கொணர்ந்த ஆய்வுமூலம் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதேபோல “என் பிறப்புக்கேறற வகையில் கடலூர் சிறையில் தொடர்ந்து இருக்கமுடியாது” என பாரதி சென்னை ஆங்கிலேய அரசுக்கு எழுதிய மன்னிப்புக்கடிதத்தையும்.///

  ‘சலபதி’ அவர்கள் வெளிக்கொண்டுவந்த இக்கருத்துக்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். இருப்பினும் பாரதி சாதி சார்பற்றவன்’ என்றும்
  ‘தான் சார்ந்த பார்ப்பன சாதிக்கு எதிராகவே வாழ்ந்தவன்’ என்றும் தொடர்ந்து பேசுவீர்கள் சரிதானே?!
  சரி போகட்டும்….

  ///பாரதியின் தந்தை எட்டயபுர சமஸ்தான உதவிபெற்றவர், சீட்டுக்கவி விஷயம் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு சிதறி, அவரை வரலாற்று மனிதராகப் பார்க்க
  இந்தப் புதிய விபரங்கள் உதவுவது உண்மையே. ///

  உதவி செய்தவன் எவ்வளவு இழிவான துரோகியாக இருந்தாலும் அவனை உயர்த்திப் பேச முனைந்த பிழைப்புவாத அற்பத்தனத்தைத்தான் நீங்கள், ‘பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு’ என்று குறிப்பிடுகிறீர்களா? அப்பேர்ப்பட்ட ‘ஆசிரிய மிகைப்புனைவு’ சிதறுண்டுதான் அவரை உங்களுக்கு வரலாற்று மனிதராகக் காட்டுவதாகச் சொல்லுகிறீர்கள். அது சிதறுண்ட ரகசியத்தை மட்டும் எனக்குச் சொல்லுங்களேன்.

  ///இதேபோல மதிமாறன் கேட்கும் வரலாற்றுக் கேள்விகளுக்கும் பதில் ஒருநாள் கிட்டலாம்.///

  இது ஆதிசங்கரனின் அத்வைதத்தோடு ஒத்துப் போகிறது நண்பர் நாகார்ஜூனன் அவர்களே!

  காலம் விரைவில் கனியலாம் என்ற ஆருடமோ ஜோசியமோ எனக்குத் தேவையில்லை. ஜோசியம் பார்த்துச் சொல்லத்தான் நம்ம ‘ஞாநி’ இருக்கிறாரே போதாதா!

  ///ஆனால் கிடைத்ததை வைத்து பாரதி முற்றிலும் சரி அல்லது தவறு என வாதாடுபவனல்லன் நான். மதிமாறன் அந்தப்பாணி.///

  அது எப்படி உங்களை என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று எதிரிக்கு நீங்களே அடியெடுத்துக் கொடுக்கிறீர்கள்?

  பாரதியை விமர்சித்து எழுதிய மதிமாறன் கிடைத்ததை வைத்துக் கொண்டு எழுதுகிறார் என்றால், பாரதியைப் வானுயரப் புகழ்ந்து பூரிப்பவரெல்லாம் ஆழ்ந்து ஆய்ந்து எழுதுகிறார்களோ?

  பாரதியைப்பற்றிய அவ்வளவு ஆழமான படிப்பினை உங்களுக்கு இருக்குமானால் மதிமாறனுடைய எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டாமென்று உங்களைப் பிடித்து தடுப்பவர் யார்?

  ///என் பதிவு பாரதியின் இலக்கியம், கவிதையாக்கம், குறிப்பாக வசன கவிதையாக்கம் அதற்கான ப்ரெஞ்சு மொழிப்புலமை பற்றி நோக்கும் ஒன்றுய உங்களைப் போன்ற விஜய் என்பவரின் கேள்விக்கான என் பதிலும் அது பற்றியதே./////

  அய்யா, நான் கேட்பது என்னவென்றால், மேலே நீங்கள் பட்டியலிட்டுள்ள, இலக்கியம், கவிதையாக்கம், பிரெஞ்சு மொழிப்புலமை இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு தான் வாழும் சமூகத்துக்கு எதிராக இயங்குபவனை எப்படி பாராட்ட முடியும்?

  தங்கக் கத்தியைக் கொண்டு கண்ணைத் துளைத்துக் கொள்ள முடியுமா நண்பரே?

  இந்த தொல்லைக்காகத்தான் எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அறிவு ஜீவிகள் எந்த பதிலும் சொல்லாமல் கமுக்கமாக இருந்து விடுகிறார்கள் போலும். உங்களுடைய இத்தகைய பதிலைவிட ராஜதுரையின் பானியே பரவாயில்லையோ என்றே தோன்றுகிறது.

  மன்னிக்கவும்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

  17-Jun-2008 09:02:00
  நாகார்ஜுனன் said…
  ஏகலைவன்

  உங்கள் பதிலில் அய்யா-வைத் தவிர்க்கலாம். என் நேர்மையைப் பாராட்டுவதாகக் கூறி, எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், ஞாநி ஆகியோர் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். அவை பற்றிய முழுவிபரங்கள் எனக்குத்தெரியாது. தெரிந்துகொள்ள இயலவில்லை.

  மீண்டும் – என் பதிவைக் கவனமாக நீங்கள் வாசிக்காமல் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறீர்கள்
  எனத்தெரிகிறது. பாரதியின் “சார்புநிலைகள்” குறித்த பிரச்னை என் பதிவின் நோக்கமல்ல. அதைப் பதிவில் தொட்டு மாத்திரம் சென்றிருக்கிறேன்.

  “அக்கால பிராமணக்குடும்பத்தில் பிறந்த பாரதியைப் பொறுத்தவரை, ஜாதி-அமைப்பைக் கடந்து வாழ முற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு என்றாலும் எந்த அளவு இதைத் தொடர்ந்து செய்தார் என்பதைக் கறாராகக் கேள்விகேட்கும் காலம் இது! இந்தப் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களை மேலும் அலச, பாரதியின் ஹிந்து கடிதங்கள், கட்டுரைகள் உதவினால் நல்லது.”

  இன்றைய பார்வையில் பின்நோக்கிக் காணும்போது, அந்த நாளைய அரசியல்-தொன்மங்கள், சொல்லாடல்களில் இயங்கியோர் பலர். அவர்களில் பாரதியும் ஒருவர் என்ற பொருளில் காண்கிறேன். இங்குதான், அக்காலப் பிரதிகளிலும் இத்தகைய முரண்பாடுகளை வாசிக்கலாம். வரலாற்று மனிதர் என்ற அளவில் பலங்கள், பலவீனங்களுடன் வாழ்ந்தவர் அவர். இதற்கு இனனும் பல விபரங்கள் தேடினால் கிடைக்கலாம்.

  அதேவேளை பாரதி சரி அல்லது தவறு என்று ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்து, அதாவது “தாம் வாழ்கிற சமுதாயத்துக்கு முற்றிலும் எதிராக இயங்குபவர்” என்று உங்களைப் போல வாதாடுவது, அவர் பற்றிய முடிவுக்குத் தேவையான தரவுகளை மாத்திரம் எடுத்துக்கொள்வதில் போய் முடியும். ஒருவிதப் பிரச்சாரத்துக்கு உதவும்.

  தவிர, நவீன வசன கவிதை என்பது தமிழில் புதிய ஒரு மொழிக்களம். அதைத் திறந்துவிட்டவர் பாரதி, ஒரு நூற்றாண்டுக்காலக் கவிதை-மொழியைத் தீர்மானித்தது அவர் கவிதைகளே. இதற்குச சான்றும் உண்டு. இது எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்று புதிதாக அனுமானிப்பதே என் பதிவின் நோக்கம். உங்களுக்கு எழுதிய பதிலின் நோக்கமும் அதுவே.

  இதையெல்லாம் கவனிக்காதவரை மேலே என்ன என்ன பேச முடியும்!

  நாகார்ஜுனன்

  17-Jun-2008 11:33:00
  ஏகலைவன் said…
  நாகார்ஜூனன் என்பவர் ஒரு ‘so-called intelectual’ என்று அறியப்பட்டவர். அவரா இப்படி எழுதியிருக்கிறார் என்று ஆச்சர்யத்தோடு ஒரு முதிய தோழர் இப்போதுதான் கேட்டுச் சென்றார்.

  முன்னாள் கவர்ச்சி நடிகை ஜெ. ஜெயலலிதா அவர்களின் நடிப்பியல் அழகினைக் கொண்டு அவரை வரலாற்றுப்பெண்மணியாகச் சித்தரிக்கத் துவங்கினார்கள், அவருடைய அரசியலின் துவக்க காலத்தில்.

  ஜெயலலிதா வேறெவரையும் விட வானளாவ உயரமுடிந்தது இப்படியான பிரச்சாரங்களால்தான். இப்போது நாம் என்ன செய்யவேண்டுமென்றால் அவருடைய சினிமாவை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதுமானது. அதையும் மீறி அவருடைய அரசியல் நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கக்கூடாது. அப்படியே விமர்சித்தாலும் அவற்றில் புகழ்ந்து இட்டுக்கட்டிக் கூறுமளவுக்கு ஏதேனும் கிடைத்தால் புகழலாம். இல்லாவிட்டால் அல்லது அவருக்கு எதிர்வினையான எதையும் நாம் வெளியே பேசுவது தவறு.

  அவருடைய அரசியல் களியாட்டத்தில் நானோ என் மக்களோ பாதிக்கப்பட்டிருந்தால் கூட அவருடைய அழகியலை மட்டும் கருத்தில் கொண்டு விட்டுவிடவேண்டும்.

  அவ்வாறு மீறி ஏதேனும் பேச எண்ணினால் அவரைப் பற்றிய அனைத்துத்தரவுகளையும் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்நாளையும் செலவழித்து தேடியலைந்து குப்பைமேடுகளைக் களைந்துதேடி எடுத்துவைத்துக் கொண்டுதான் பேச வேண்டும். அதுதான் நீங்கள் பாரதி விசயத்தில் சொல்ல வரும் நியாயம் போலும்!

  என்னை நேரடியாக பாதிக்கும் விசயத்தை நோக்கி நான் கேள்வி கேட்டால், அட என்னுடைய சாதிக்காரனை ‘ஈனப்பறையன்’ என்று எழுதிவைத்துச் சென்றவனை நான் கேள்விகேட்டு அம்பலப்படுத்துவதற்கு, எனக்கு வேறு எந்தத் தரவுகள் வேண்டும்?

  உங்கள் பதிவுக்கு சம்பந்தமுள்ள விசயத்தைப் பற்றி மட்டும்தான் அனைவரும் விசாரிக்க வேண்டுமா? அப்படியானால், உமது பதிவு முழுதும் நிறைந்துள்ள பாரதியைப் பற்றி நான் பேசுவது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை.

  பாரதி என்கிற ‘அபினை, கஞ்சாவை, அல்லது மதிமாறன் பாணியில் சொல்வதானால் லாகிரிவஸ்து’வை வரலாற்று மனிதர் என்று சோடனை செய்து கூவிக்கூவி விற்பவர்களிடம், அதனை அம்பலப்படுத்தி கேள்வி கேட்காமல் “எனக்கும் ஒரு பாக்கெட் கொடுங்க” என்று கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

  17-Jun-2008 16:36:00
  நாகார்ஜுனன் said…
  கிடைப்பதை வைத்து தாராளமாகச் செய்யலாம். யாருடைய அனுமதியும் தேவையில்லை. அடுத்தது கிடைக்கும்போது உங்கள் கேள்வியை சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளலாம் நீங்களே.

  இங்கே பதிவின் பிரச்னை அரசியலல்ல, புதுக்கவிதையின் தோற்றம் பற்றியது. அவ்வளவே.
  இதற்குமேல் என்னிடம் பதிலில்லை.

  நன்றி.

  நாகார்ஜுனன்

  ********************************************************************************

  இந்த ‘அறிவுஜீவி’ நாகார்ஜூனன் தன்னால் இயன்றவரை அனைத்து கேள்விகளையும் பதிப்பித்து விவாதிக்கத்தான் முயன்றார் என்ன செய்வது, மேலும் விவாதத்தைத் தொடர அவருக்குத் தரவுகள் போதவில்லை என்று கருதுகிறேன். தரவுகளுடன் வரட்டும் தொடர்ந்து விவாதிப்போம்.

  நான் இறுதியாக அனுப்பிய ஒரு சிறிய பின்னூட்டத்தையும் அவர் பதிப்பிப்பார் என்றுதான் கருதினேன். பதிப்பிக்கவில்லை. அதனையும் இங்கே பதிகிறேன்.

  ********************************************************************************
  ஏகலைவன் said…
  ////ஏகலைவன்

  உங்கள் பதிலில் அய்யா-வைத் தவிர்க்கலாம். என் நேர்மையைப் பாராட்டுவதாகக் கூறி, எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், ஞாநி ஆகியோர் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். அவை பற்றிய முழுவிபரங்கள் எனக்குத்தெரியாது. தெரிந்துகொள்ள இயலவில்லை.///

  நண்பரே, வயதில் பெரியவர் என்பதனால் மரியாதையின் நிமித்தமாகத்தான் நான் அவ்வாறு அழைத்தேன். நான், நாகார்ஜூனன் அய்யர் என்று குறிப்பிட்டிருந்தால் தான் தவறு. நாகார்ஜூனன் அய்யா என்றுதானே குறிப்பிட்டிருந்தேன்!!!

  இதுக்கெல்லாமா விவாதிக்க முடியும்? என்னங்க நீங்க.

  ஏகலைவன்.

  June 17, 2008 8:58 PM
  *******************************************************************************

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 2. பாரதியினை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்.நாகார்ஜுனன் நிராகரிக்கவில்லை.முரண்பாடுகளை புரிந்து கொள்ள
  முயல்கிறார்.அவர் கோயில் கட்டி கும்பிடச் சொல்லவில்லை.
  நீங்கள் பெரியாரைக் கும்பிடுகிறீர்கள்.பெரியார் மீதும் விமர்சனம்
  உண்டு. அவர் சிறுபான்மையினருக்கு எதிராக அறிக்கை விட்டவர்.
  கீழ்வெண்மணி படுகொலைக்குப் பின் விட்ட அறிக்கையில் கம்யுனீஸ்ட் கட்சிகளை தடை செய்யவேண்டுமென்றவர்.
  1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவர்
  விட்ட அறிக்கைகளை விவாதிக்கலாமா. பெரியாருக்கும்
  முன்பு பாரதி முற்போக்கான சிந்தனைகளை வைத்தவன்,
  அதே சமயம் அவன் எழுத்துக்களில் பிற்போக்கு சிந்தனைகள்,
  மதவாதம் இருந்திருக்குமெனில் அதற்காக விமர்சிக்கலாம்.
  பெரியாரை முற்றிலுமாக விமர்சனமின்றி ஏற்போம், பாரதியை
  முற்றிலுமாக நிராகரிப்போம் என்பது உங்கள் நிலைபாடு. இதை ஏற்க இயலாது.

 3. ஏகலைவன் அவர்களின் கவனத்திற்கு:

  http://mrcritic.wordpress.com/2008/06/16/%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9f/

  இவரை தக்க முறையில் கவனித்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவைக்கவும்.

 4. ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

  “கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
  போராளியின் வெற்றிப்பேரிகை”

  http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

  அன்புடன்,
  விஜய்
  கோவை

 5. மதிமாறன் போன்றோர் பல முறை விளக்கிய பிறகும் இவர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்களோ தெரியவில்லை. பாரதி என்ற கவிஞனின் மீது இவர்களுக்கு எந்த காழ்ப்பும் கிடையாது. ஆனால் பாரதியை முற்போக்கின் முகமாக சித்தரிக்கிற மோசடியைத்தான் இவர்கள் தோலுரிக்கிறார்கள்.

  பாரதிய ஜனதா பார்ட்டி நூலுக்கு திரு. பெரியார்தாசன் அவர்கள் எழுதிய ஏற்புரையில், அந்நூலைப் படித்த பிறகு பாரதியை பாரதியாகப் பார்க்கிற தெளிவைப் பெற்றிருப்பதாக எழுதியிருப்பார். அதுதான் மதிமாறன் போன்றோரின் நோக்கமாக இருக்க முடியும்.

  பெரியார் யாருடைய நிலைமையை உயர்த்தப் பாடுபட்டாரோ அவர்கள்தான் இன்று அவரைக் கொண்டாடி வருகின்றனர். அதே போல பாரதி யாரை உயர்வாக நினைத்து எழுதினாரோ அவர்கள் மட்டும் பாரதியைக் கொண்டாடுவதில் யாருக்கும் எந்த வருத்தமும் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பாரதி வழிபாட்டை வெற்றிகரமாக மற்றவர்கள் மீது திணிக்கவும் செய்தாகிவிட்டது. அந்த பாரதி வழிபாட்டை அனைவருக்கும் பொதுவானதாக திணித்ததைத்தான் இவரைப் போன்றோர் கண்டிக்கின்றனர்.

  மதிமாறனைப் பார்த்து ஒருவர், பாரதியைப் போல எதுகை, மோனை, சீர், தளை, ஆகியவை தட்டாமல் எழுத முடியவில்லையே என்ற பொறாமையா என்று கேட்கிறார். வடிவேலுவின் நகைச்சுவையை விட இது பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. பாரதியை மற்றவர்கள் எழுத்து, அசை, சீர், தளை இவற்றுக்காக மட்டும் படிப்பதோடு நிறுத்திக்கொண்டிருந்தால் பாரதிய ஜனதா பார்ட்டி என்ற நூலை உருவாகிற அவசியம் வந்திருக்குமா?

  பெரியார்தாசன் அவர்கள் சொன்னதைப் போல பாரதியை பாரதியாக மட்டுமே பாருங்கள். பாரதியின் பிம்பத்தில் மார்க்ஸையோ, பெரியாரையோ தேடாதீர்கள். நன்றி.

 6. கீழ்கண்ட இந்த பின்னூட்டம், மிஸ்டர்!!! கிருட்டிக் மாமா அவர்களின் தளத்தில் நான் வெளியிட்ட பின்னூட்டம். மாமா தனது பூநூல இத்தளம் வரை விரித்து வலைக்க முயல்வதால், அதனை இங்கேயும் பதிவிடுகிறேன்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

  ***********************************************************************************

  கிருட்டிக் மாமா!

  நன்னா ஒரைக்கிரா மாதிரி சொன்னேள்! போங்கோ. யாருக்கு?! ஒங்க பதிவ வாசிக்க வருகிற அக்கம் பக்கத்து அம்பிகளுக்குத்தான், எங்களுக்கில்லை.

  இதப் படிக்கிறவன் நிச்சயமா பாரதியப் பத்தியும், ஒங்க பார்ப்பனீயத்தைப் பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துடுவான். மதிமாறன் எழுத்துக்களுக்குக் கூட மசியாதவர்கள், ஒன்னோட இந்த வசைபாட்டைப் படிக்க நேர்ந்தால், பார்ப்பனியத்த காறித்துப்பாம விடமாட்டாங்கடா அம்பிகளா!

  நாங்கூட “என்னாடா இந்த மதிமாறன் பாரதிய விட்டுட்டு வேறு பல உருப்படியான சமூக விசயங்களப் பத்தி எழுதுனா நல்லாயிருக்குமே”ன்னெல்லாம் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப உன்னோட இந்த வசைமொழிகளைக் கேட்டபிறகுதான் தெரியுது,அவரு எழுதிவருவது மிகவும் அவசியமானது என்று. ஏனெனில், மதிமாறனால் அறுபடுவது பாரதியின் பூநூல் மட்டுமல்ல, அவன் சார்ந்த ஒட்டுமொத்த பார்ப்பன பூநூல்களும்தான். உண்மையிலேயே இதுதான் பெரியாரின் பாணி.

  மதிமாறனுக்கு வசைபாடி இவ்வளவு பெரிய பதிவ எழுத முடிந்த உன்னால, பாரதியின் புகழ் பாடி அல்லது பாரதி களங்கமற்றவன் என்பதனை நிரூபிக்கும் வகையில் எதையும் எழுத முடியாமல் போனது ஏண்டா அம்பி?

  அதவிட்டுப்புட்டு, இங்கவந்து இப்படி ‘அது’ அறுந்த பன்றி மாதிரி கத்துறத விட்டுப் புட்டு எதையாவது உருப்படியா எழுதி விவாதிக்க வாங்கடா அம்பிகளா?

  ஏகலைவன்.

 7. நண்பர் விஜய் கோபாலசாமி அவர்களுக்கு,

  எனது தளத்தைப் பார்வையிட்டமைக்கும் பின்னூட்டத் தகவலுக்கும் மிக்க நன்றி!

  இவர்கள் இவ்வாறு அவதூறு பேசுவதுதான் மதிமாறன் உழைப்புக்கு கிடைத்த விருதுகள் போன்றது. சற்றே நினைத்துப் பாருங்களேன், பாரதியின் பார்ப்பன சார்புத்தன்மை இன்றுவரை தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறதல்லவா?! இதுபோன்ற அம்பிகளின் வாயால்.

  இவர்கள் வாய்திறந்து பேசப் பேச அம்பலமாகி சந்திசிரிப்பது பாரதிதான்.

  தொடர்ந்து பேசுவோம், விவாதிப்போம்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 8. ////பெரியாருக்கும்
  முன்பு பாரதி முற்போக்கான சிந்தனைகளை வைத்தவன்,////

  பெரியார் வலியுறுத்திய முற்போக்கு சிந்தனைகளைத்தான் பாரதியும் முன்வைத்தான் என்பது உண்மையானால், பெரியார் உங்களால் இகழப்படுவதும் அதே விசயத்திற்காக இயங்கிய பாரதி உங்களால் வானளாவப் புகழப்படுவதும் ஏன்?

  பாரதி வைத்த முற்போக்கு என்பது பார்ப்பன கபட நாடகம் என்பதற்கு, உங்களைப் போன்ற அம்பிகளின் அங்கலாய்ப்பே சாட்சியாக அமைகிறது.

  ////பெரியாரை முற்றிலுமாக விமர்சனமின்றி ஏற்போம், பாரதியை
  முற்றிலுமாக நிராகரிப்போம் என்பது உங்கள் நிலைபாடு. இதை ஏற்க இயலாது.////

  பெரியாருடைய வெற்றியே அவர் விமர்சனங்களை வெளிப்படையாக எதிர்கொண்டு பகிரங்கமாக பதிலளித்ததில்தான் இருக்கிறது.

  பாரதியப் பத்தி கேள்வி கேட்டா, அதனை தக்க முறையில் மறுக்காமல் பெரியாரைக் காட்டுவதுதான் பார்ப்பனீய பாணி.

  வெண்மணி சம்பவத்தில், பெரியார் வலியுறுத்திய சாதியக் கண்ணோட்டத்தை மறுதலித்து, வர்க்கப் போராட்டமாக சித்தரித்த போலி கம்யூனிஸ்டுகள், அப்போராட்டங்களில் பலியிட்டது 44 தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் உயிரைத்தான். அங்கு குடிசையில் வைத்து கொளுத்தப்பட்ட 44 பேரில் தாழ்த்தப்படவரல்லாத வேற்று சாதியைச் சேர்ந்தவர் ஒருவர்கூட இல்லாமல் போனது எதனால்?

  அது வர்க்கப் போராட்டமாக சொல்லப்ப்பட்டாலும் நடந்தது என்னவோ ஒரு சாதியை மையப்படுத்தித்ய கொடுமைகள்தான். அந்த சம்பவம் நடந்து முடிந்த அன்று கோபக் கொந்தளிப்பில் இருந்த இலட்சக் கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள், ஆதிக்கசாதி வெறியனுக்கு எதிராக ஆயுதமேந்தத் திட்டமிட்டபோது, அவர்களை மட்டுப்படுத்தி, அவர்களது போராட்டத்தை மழுங்கடித்தது யார் தெரியுமா? அப்போராட்டத்தை வர்க்கப் போராட்டமாகச் சித்தரித்து தலைமைதாங்கிய போலி கம்யூனிஸ்டு கட்சியான சிபிஎம். (ஆதாரம்: ‘கீழைத்தீ’ பின்வெண்மணி நாவல் – எழுதியவர் பாட்டாளி)

  போலிகளின் இத்தகைய முடிவு ஆதிக்க வெறிபிடித்த 44பேர்களைக் கொண்ற கொடூர கொலைகாரன் கோபாலகிருஷ்ணநாயுடுவுக்குச் சாதகமான முடிவு. அதனைக் கண்டிக்கும் வகையில்தான் பெரியார் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஏகலைவன்.

 9. பின்வரும் இரண்டு பின்னூட்டங்களும் நாகார்ஜூனன் தளத்தில் பிறகு வெளியானவை அவை மீண்டும் வாசகர்களின் பார்வைக்கு.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

  ********************************************************************************
  17-Jun-2008 16:42:00
  நாகார்ஜுனன் said…
  கீழ்க்கண்ட பதிவில் மதிமாறன் இந்தப்பதிவை விமர்சித்து எழுதியிருக்கிறார். அங்கே போய்ப்பார்க்கலாம். அனுப்பிய ஏகலைவனுக்கு நன்றி.

  http://mathimaran.wordpress.com/2008/06/18/article87/#comments

  “அழகியல் என்பது போதை” போன்ற
  அதே வாதங்கள்தாம். வசன, புதுக்கவிதை வடிவத்தின் தோற்றம் குறித்து இனி எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.

  இந்த விவாதத்தில் புதிய கருத்துகள் வந்தால் வெளியிடலாம். அதனால் ஏகலைவனின் ஒரு பின்னூட்டத்தை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.

  நாகார்ஜுனன்

  18-Jun-2008 11:25:00
  ஏகலைவன் said…
  ///இந்த விவாதத்தில் புதிய கருத்துகள் வந்தால் வெளியிடலாம். அதனால் ஏகலைவனின் ஒரு பின்னூட்டத்தை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.

  நாகார்ஜுனன்///

  அய்யா, ‘மன்னிக்கவும்’ என்கிற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம். இனி திருத்திக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பெரியவர்களிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைப் பெறும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே, தயவு செய்து பரிசீலிக்கவும்.

  விரைவில் பாரதி குறித்த விரிவான விவாதத்தை முன்னெடுக்கும் வகையில் ஒரு பதிவை நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன், காத்திருகிறேன்.

  ஆனால், இந்த முறை நடைபெற்ற மேற்கண்ட விவாதங்களில் நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் முழுமையானவை அல்ல. பாரதி என்ற ஒட்டுமொத்த பிம்பம் குறித்த உமது பதில்கள் வெறும் அழகியலுக்குள் பதுங்கிக் கொண்டது.

  இதற்கான சரியான மறுப்புரையை தங்களிடமிருந்து நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ஆனந்தவிகடனுக்கு எதிராக நீங்கள் ஆதரவளித்த எழுத்தாளர் ஜெயமோகன் போன்றவர்கள் முதல் வளர்மதி இன்னபிற, உங்கள் தளத்தோடு / படைப்புலகத்தோடு தொடர்புடைய எழுத்தாளர்கள் இவ்விவாதத்தில் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் வரவில்லை. இதுவும் எனக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

  தொடர்ந்து பேசுவோம், கட்டில்லாமல் விவாதிப்போம். நன்றி!

  தோழமையுடன்,
  ஏகலைவன்.
  yekalaivan@gmail.com

 10. பெரியாரைப்பற்றி விமர்சிக்க அவருடைய பொதுதொண்டில் ஏதேனும் இடம் உண்டா விமர்சிக்க முடியுமா

 11. முரசு தோழமையுடன்,
  பாரதி யார்? எந்த ஒரு மனிதனையும் அவன் வாழ்ந்த சமூகம், காலம் இவற்றின் பின்னணியில் விமர்சிப்பதே மார்க்சியம். இதனை மதிமாறன்(னும்) மறுக்கமுடியாது.

  பாரதி ஒரு பழமையான பார்ப்பன சடங்குகள் நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர். இந்தியாவின் இருண்ட சமூகம் ஆங்கிலேய அறிவியல் உலகத்தால் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிர்ந்தது. இந்து சநாதன மதவெறி பிடித்த திலகரின் இந்து ராஜிய கும்பலோடு ‘சிதம்பரனார்’ இணைந்திருந்ததைப் போலவே இணைந்திருந்தவர். சிதம்பரனார் சிறை சென்று பின் வெளிவந்த பின் காங்கிரசின் துரோகத்தால் பெரியாரின் பாசறைக்குச் சென்றவர். ஆனால் பாரதிக்கு அவ்வளவு நீண்ட கால அவகாசம் கிடைக்கவில்லை. இந்து சநாதன தர்ம உணர்வை விட்டும் முழுவதும் பிரியமுடியாமல், தானும் அதனை விமர்சித்துக்கொண்டு அதிலிருந்த பார்ப்பனர்களின் அவமதிப்பைப் பெற்று அநாதை போல் 13 பேர் மட்டுமே சாவுக்கு வந்த ஒரு கலாச்சார அநாதை. பாரதி ஒரு கலாச்சார அநாதை. ஏன்? தனது பழமைவாதத்தை விட்டு முழுவதும் பிரியமுடியாமல் அதை உள்ளூர நேசித்துக்கொண்டும், காலமாறுபாட்டால் பகுத்தறிவு அறிவியல் போன்ற அவசியத்தின் எதார்த்தத்தையும் மறுக்கமுடியாமல் அதனை விமர்சித்தும், கொச்சைப்ப்டுத்தியும் வாழ்ந்து அற்பமாய் மறைந்த ஒரு ‘காலச்சுழலில் சிக்கிய காகிதக்கப்பல்’ ஆனால் அவரை கழிசடை என்று குப்பைத்தொட்டியில் தூக்கி எறியமுடியாது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்; தனியொரு மனிதருக்கு உணவில்லையேல் ஜகத்தினை எறித்திடுவோம்; அறிவொன்றே தெய்வம்; பார்ப்பானை ஐயனென்ற காலம் போச்சே; பார்ப்பான் ஏதுசெய்தும் காசு பெற பார்ப்பான்; போன்ற கருத்து வெளியீடுகள் அவரை முற்போக்காய் முகம் காடுகின்றன. இந்தியாவை ஆரியநாடு என்று பேசும் போது அவரது இந்து பார்ப்பன இன உணர்வு வெளிப்படுகின்றது. மோடி, அத்வானி, வாஜ்பாய், சோ, இந்துராம், சங்கராச்சாரி, ஜெயலலிதா, சு.சாமி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு இணையாக வைத்து ‘நொங்கவேண்டிய ஆள் அல்லர்’. அந்தப் பாவத்தை விடுங்கப்பா. உங்க ஆராய்ச்சியைன் ஆழத்தை இதில் காட்டுவது இருக்கட்டும்.
  மருதையன் நக்சல் பாரி என்கிறார்கள் ஆனால் ஒரு பார்ப்பனப்பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறார் (தனது சொந்த சாதியில்).
  இதைக்கொஞ்சம் ஆராய்ச்சி செய்வாரா மதிமாறன்?
  எதுக்கெடுத்தாலும் ‘வெற்றிவிழா’ கொண்டாடும் ம.க.இ.கவை விமர்சிப்பார மதிமாறன்?
  நன்றி.

Leave a Reply

%d bloggers like this: