தசாவதாரம்

வராக அவதாரத்தில் பெருமாள்

பெருமாள் எடுத்த பத்து (தச) அவதாரங்களில் ஒன்று இது.

நேரம் கிடைத்தால் கமல்ஹாசனின்  பத்து அவதாரங்களைப் பார்த்து விட்டு, அது குறித்து  எழுதுவோம்.

9 thoughts on “தசாவதாரம்”

 1. தோழர் மதிமாறன்,

  ஏதோ ஒரு பள்ளி விழாவில் மாறுவேட போட்டியை பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தசாவதாரம் திரைப்படத்தில் கமல் தன் பத்து அவதாரங்களில் ஒன்றில் மணற்கொள்ளைக்கு எதிராக போராடும் தலித் இளைஞராக‌ நடித்திருக்கிறார், கிட்டத்திட்ட தொல். திருமாவளவனை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் வின்சென்ட் ‘பூவராகன்’… பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பெயரை தலித் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டிருப்பது தற்செயலான ஒன்றல்ல, பார்ப்பன திமிரின் உச்சம் இது. அதோடு இப்படத்தின் பல இடங்களில் சாதி பற்றிய கதையாடல்கள் எந்த ஒரு நெருடலுமின்றி வந்து செல்கிறது, தந்தை பெரியாரை சாதியோடு அடையாளப்படுத்தி பேசும் காட்சியும் இருக்கிறது, பார்ப்பனீய கொழுப்பு பொங்கி வழியும் இப்படத்தின் அரசியலை தோழர்கள் இணையத்தில் திரைகிழிக்க வேண்டும்.

  தோழமையுடன்
  ஸ்டாலின்

 2. நான் இன்.னும் அத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபிறகு கிழிக்கப்பட வேண்டிய அனைத்தும் கட்டாயம் உரிய முறையில் கிழிக்கப்படும்.
  தங்கள் தகவலுக்கு நன்றி

 3. தசாவதாரம் படத்தை ஆகா ஓகோ எனப் புகழந்து தட்ஸ் தமிழ் இணையதளத்தில் ஒரு திறனாய்வு வெளிவந்தது. அதை நம்பிப் படத்தைப் பார்த்தால் கமலகாசன் இதுவரை காலமும் நடித்த படங்களில் மிக மோசமான படம் இது என்பதில் அய்யமில்லை. கமலகாசனே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அவருக்கு நடிக்கத் தெரியும். ஆனால் கதை வசனம் எழுத ஏன் முற்பட்டார் என்பது விளங்கவில்லை. கமலகாசனுக்கு வயதாகிவிட்டது. இனி அவர் திரைப்படத் துறையில் இருந்து ஓய்வுபெறுவது அவருக்கும் நல்லது திரையுலகிற்கும் நல்லது.

 4. “அந்த கதாபாத்திரத்தின் பெயர் வின்சென்ட் ‘பூவராகன்’… பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பெயரை தலித் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டிருப்பது தற்செயலான ஒன்றல்ல, பார்ப்பன திமிரின் உச்சம் இது. ”

  பூவராகன் என்ற பெயரில் எந்த இழிவும் இல்லை.அந்தப் பெயரில்
  ஒரு அமைச்சர் இருந்திருக்கிறார். பூவராக நாயுடு போன்ற பெயர்கள் ஆந்திராவில் மிகவும் சாதாரணம். படத்திலும்
  அதே பெயரில் ஒரு பாத்திரம் வருகிறது, அந்தப் பாத்திரமாக
  நடிப்பவர் கமல்ஹாசன்.பூவராகன் என்ற பெயரை ஐயங்கார்களும் வைத்துக் கொள்வதுண்டு.எங்கும் எதிலும் பார்பனியம் இருப்பதாக உளறிக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகள் இதையெல்லாம் எப்போதாவது யோசிப்பார்களா?

 5. ”. படத்திலும்
  அதே பெயரில் ஒரு பாத்திரம் வருகிறது, அந்தப் பாத்திரமாக
  நடிப்பவர் கமல்ஹாசன்”
  அந்தப் பாத்திரத்தின் பெயர் பலராம் நாயுடு, பூவராக நாயுடு அல்ல.
  பிழை என்னுடையதுதான்.

 6. கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.

  காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.

  காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள்.

  அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.

  ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

  அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.

  எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

Leave a Reply