‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

https://i0.wp.com/3.bp.blogspot.com/_0XidROab6yk/R2-rHn8LJLI/AAAAAAAADIE/DJrvnXEMQZI/s400/periyar_340.jpg?w=1170

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

கவி, சிங்ப்பூர்.

மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை பிழையானது என்று பெ.மணியரசன் அவர்கள் பிழையாகக் கூறி வருகிறார்கள். மொழிப் பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது:

மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறா விட்டாலும் ஒலிக் குறிப்பு என்று கூறலாம்.

இப்படி மொழிப் பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், ஒருவரை பார்த்து, உங்கள் மொழி என்ன? என்று கேட்பதற்கு, நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது.

இப்படி பெரியார் விளக்கிய பிறகு மீண்டும் அவரைப் பார்த்து குதர்க்கமாக கேள்வி கேட்க விரும்புபவர்களுக்கு மீண்டும்  விளக்கம் கூறுகிறார்,

மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால் அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்ல வென்றும் உங்களுக்கு விளக்கிக் காட்ட விரும்புகிறேன்

என்றால்லாம் கூறிய பெரியார் சில உதாரணங்களையும் கூறுகிறார், “யாழ்ப்பாணத்தான், அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள் என்று கூறுவதை, திருநெல்வேலியான், அவா அப்பமே வந்தா என்பான். கிராமத்தான், அவியயா அப்படியே வந்தாங்கோ என்பான். இப்படி ஒரு மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைகள்தான் காரணம் என்று பகுத்தறிவு கொண்டு விளக்கிக் காட்டியுள்ளார்.

இதோடு விட்டுவிட வில்லை  பெரியார். அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார்,

மற்றும் மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத் திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்க காண்கிறோம். உதாரணமாக வடமொழியிலுள்ள போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆழ் து³Èத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது.

உதாரணமாக ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு ‘ஹா’ என்கிற பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம் மொழியும் ஏன் அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் , ‘ள இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பது தான் காரணம்.

‘ழ’, ‘ள’ என்ற எழுத்துக்களின் ஒலி அமைப்பையும் உச்சரிப்பு முறையையும் விளக்கிய பெரியாருக்கு மொழிப் பற்றிய பார்வை இல்லை என்று தமிழ் நன்கு கற்றறிந்த  பெ. மணியரசன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒரு மொழிக்குச் சிறப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பற்றியும் கூறுகிறார் பெரியார்,

இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து அந்தக்  கருத்து இருந்ததில்லை என்பது தான்.

இத்தோடு பெரியார் விட்டுவிட வில்லை. மேலும் ஒரு அழுத்தம் கொடுக்கிறார். அதாவது, “அந்தக் கருத்து அவர்களிடம் ஏற்பட வேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் காரணம்” என்று வலியுறுத்துகிறார்.

இந்த இடத்தில் ஜாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்கங்ளேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் ஜாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் ஜாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்களேன். இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள், வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால்  நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப பாருங்கள் என்று கூறியுள்ளதையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்.

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம் மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டு பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட அறிவைக் கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை வாங்கிப் படித்தால் அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியை ஏற்பதும் தள்ளுவதும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின் பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாக கற்றுக் கொள்ளப் படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசிய மாகும்.

ஒரு மொழி சிறப்புத் தன்மையடைவதற்கு அடிப்படையான விசயங்களை பெரியார் இவ்வாறு தெளிபடுத்தியுள்ளதை பெ. மணியரசன் ஊன்றிப் படிக்க வேண்டும்.

தொடரும்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

10 thoughts on “‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

 1. ”மொழிபற்றி பெரியாரின் பார்வை பிழையானது” என்று பிதற்றிய மணியரசனின் கழுத்தில் மணிக்கட்டும் கட்டுரை.

 2. எதிர்க் கருத்துக்களை அறிவுப் பூர்வமாக சந்திக்கிற பக்குவம் உங்களுக்கு இருக்கிறது. பாராட்டுக்கள் மதி!

  http://kgjawarlal.wordpress.com

 3. Periyar’s views about languages have scientific basis.Neanderthal men became extinct because they could not develop a communicative language whereas Homo sapiens developed a viable language,able to communicate and memorize it.That is why Homo sapiens are able to survive and outstrip his ancestors viz.,Home erectus and neanderthal men.Language is localised and it took few millennium to develop a language.From sound to speech,letters to words,sentences to poetry,literature to grammar.In the modern era can we develop a new language in a short period, say a year,or a decade or a century or a millennium.?We cannot do.Only the spoken ones with good grammar and adaptive one with modern scientific input will survive. A language should coin new words from its roots and also absorb new ones from other languages for developing science. There is a proposal to reduce the number of letters in Tamil from 216 letters to 39 to make it easy to learn as well as to make it computer savy.We can develop Tamil as a modern language. Periyar initiated the move with a change in writing mode/alphabets.Let us contribute to its growth.

 4. படிப்பு,பட்டம் வேறு அறிவு வேறு !
  இதைப் பெரியார் அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டி விளக்கியுள்ளார்.
  பட்டம் பெறுவதற்காகப் படித்த மேல் தாவிகள்பலர். ஆனால் ,அறிவை வளர்த்துக் கொள்ளப் படித்து,புரிந்து கொண்டு அதைப் படிக்காத பாமர மக்களுக்குப் புரியும் படிச் சொன்ன மேதை பெரியார்.
  ஒவ்வொரு விளக்கமும்,எடுத்துக்காட்டும் இந்தப் பட்டம் வாங்கிய புடுங்கிகளின் முனைவர் பட்ட ஆராய்ச்சியை விட அழகானவை,ஆழ்மானவை,கருத்துடையவை. சிந்தனைக் கருவூலங்கள்.
  இவ்வளவையும் செய்து விட்டுக் கடைசியில் சொல்வாரே,எனக்குத் தெரிந்ததைச் சொல்லி விட்டேன்,அதில் உங்களுக்குச் சரி என்று படுவதை எடுத்துக் கொள்ளுங்கள்,இல்லாததைத் தள்ளி விடுங்கள் என்று, அது இந்தப் பட்டதாரி அரை வேக்காடுகளுக்கு அவர் கொடுக்கும்
  ஆம்! மன்னிக்கவும், செருப்படி!

 5. கவி அவர்களுக்கு நன்றி…
  கட்டுரை மிகவும் நன்றாக இருக்கு..
  கொஞ்சம் ஆழமாக படித்தல் நன்கு puriyum இந்த கட்டுரை…

  சாதி என்ற சொல் தமிழ் மொழியல் இல்லை.. இது ஏன் தமிழ் தேசம் பேசும் நண்பர்களுக்கு புரியவில்லை….

  உங்களுக்கு ஆரியன் வேண்டாம் ஆனால் அவங்க தந்த சாதி மட்டும் வேண்டுமா…?

  இது சாதிக்கு எதிரான கட்டுரை என்று புரிந்துகொளுங்க…

  பெரியார் சாதிக்கு எதிரான பல போராட்டங்களை மேற் கொண்டர் என்று பெரியார் இஸட் நண்பர்களுக்கு புரிய வேண்டும்..

 6. முதலில் “தமிழன்” என்ற இந்த நபரைப்பற்றிப் பார்ப்போம். இவர் என்னைச் “செருப்பால்” அடிக்கிறாறாம்! உலகில் எல்லாம் மட்டும் இல்லாமல், சொந்த மன்னில் கூட தமிழர்கள் வந்தேறிகளிடம் செருப்படிதான் வாங்கிக்கொண்டுள்ளனர் என்பது இதன் மூலம் கண்கூடு!

  இவர் தமிழன் என்ற “புனைபெயரில்” எழுதுகிறார்!

  நான் தமிழுக்காக வக்காளத்து வாங்கித்தான் எழுதுகிறேன்.

  நான் ஒடுக்கப்பட்டவர்களுக்காகத்தான் எழுதுகிறேன்.

  நான் பார்ப்பனீயத்திற்கெதிராக எழுதுகிறேன்.

  இவர் உண்மையில் தமிழராக இருந்தால் என்னை வாழ்த்தத்தானே வேண்டும். அப்படியென்றால் இவர் யார்?

  தமிழன் என்ற புனைவில் தமிழனுக்கு எதிராக செயல்படும் “நான்காம் படை”.

  ஐயா தமிழனே! உங்களுக்கெதிராக, இந்த ஆயுதம் மட்டுமல்ல. அனைத்துவகை ஆயுதங்களும் தாங்கத் தயாராகிவிட்டார்கள் தமிழர்கள். ஈழம் பல யதார்த்தங்களை தமழனுக்கு உணர்த்தியுள்ளது.

  எனவே, செருப்படி யாருக்கு என்று வருங்காலம் சொல்லும்!

 7. நடராஜன் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள். ஆனால், ஒரு பிழை உள்ளது. தமிழின் 216 உயிர்மெய் “எழுத்துக்களைக்” குறைக்க யாரும் முயலவில்லை. “குறியீடுகளைத்” தான் குறைக்க முயற்சி நடக்கிறது. இது அறிஞர் குழந்தைசாமி அவர்களின் ஆய்வு முடிவுகள். இந்தக் குறியீடுகளையும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தான் எடுத்துள்ளார். தௌிவாகச் சொன்னால் க என்ற குறிலுக்கு கா என்பது நெடில். க வுக்கு பக்கத்தில் ஒரு கால் போடவேண்டும். அந்தக்காலும் ஒரு குறியீடுதான். அதேபோலத்தான் அனைத்து ஆ வரிசை உயிர்மெய்களுக்கும் எழுதுவோம்.

  ஆனால், கு, மு, து போன்ற உ வரிசை எழுத்துகளுக்கு தனித்தனிக் குறியூடுகள் உள்ளன. இவற்றையும் ஒரே ஒரு புதிய குறியீட்டை வைத்துக்கொண்டு அனைத்து உ வரிசையிலுள்ள அனைத்து உயிர்மெய்களையும் ஒரே மாதிரி எழுதுவதுதான் அவரின் முயற்சி. இதுபோன்று மற்ற சில வரிசைகளிலும் செய்தால் எளிமைப்படுத்தலாம். அப்படிப் பார்த்தால் தமிழில் மொத்தக் குறியீடுகளே (12+18+9) = 39 தான் என்று ஆகிவிடும்.

  ஆனால், மொத்த எழுத்துகள் 247 தான். அது குறையாது.

  உண்மையில் எழுத்துக்கள் மிகையாய் இருந்தால்தான் மொழி எளிதாக இருக்கும். இந்த அடிப்படை உண்மை பெரியாருக்கேகூட தெரியவில்லை. பெரியார் ஒரு மொழி வல்லுனரல்லர். அவருக்குத் தெரிந்த அளவுக்கு அவர் சொல்லியுள்ளார்.

  எழுத்துகள் அதிகமாக இருக்கவேண்டிய அவசியமும், அதே நேரத்தில் அதைக் கற்பதையும், நினைவில் இருத்துவதையும் எளிதாக்க உயிர், மெய், உயிர்மெய் என்று பிரித்தது எழுத்துகளை உருவாக்கியது, தொல் தமிழனின் அபார சிந்தனை. எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு!

  கீற்று இணையதளத்தில் “தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்” என்ற ஆய்வுக்கட்டுரையை தற்போது அனுப்புகிறேன். விரைவில் வௌியாகும். நீங்கள் அதை அவசியம் படிக்க வேண்டுகிறேன். தமிழ் பற்றிய பல புதிய உண்மைகளை வௌிக் கொணர்ந்துள்ளேன்.

 8. கவி அவர்களே!
  கடைசி பத்தி தவிர்த்து, மற்ற அனைத்துக் கருத்துகளும் நல்ல கருத்துகள் தாம். இல்லை என்று சொல்லவில்லை. சத்தியமாக மணியரசனும் சொல்லமாட்டார். இது ஓரளவுக்கு விடயம் தெரிந்த எல்லோருமே சொல்லக்கூடிய கருத்துகள் தாம்.

  பெரியார் மொழி ஆய்வு என்ற அடிப்படையில் ஏதாவதொரு நூல் எழுதியுள்ளாரா? அவர் மொழி வல்லுனரா? ஆனால், மொழி வல்லுனர்கள் என்று அறிஞர்கள் உள்ளனர். உலகிலேயே முதன்மையான மொழி வல்லுனரே ‘ தேவநேயப் பாவாணர்’ தான். இது மிகையானதல்ல.

  மொழி பற்றிச் சில விடயங்கள் புரிந்துள்ளதால் ஒரு மனிதர் அதன் Authority ஆகிவிடமாட்டார். எல்லா துறைகளிலும் பெரியார் கருத்துகள் சொல்ல முற்பட்டார் என்பதை நாம் பெருமையாகவே நினைக்கிறோம். ஆனால், எதற்கும் எல்லை உண்டு. பல துறைகளில் கருத்து சொன்னதாலேயே அவர் பல் துறை விற்பன்னர் ஆகிவிடமாட்டார். ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் அதை உருவாக்கியவர்களின் Limitations வைத்துத்தான் அளவிடவேண்டுமே அல்லாது அது தான் எல்லை என்பது அறிவிலித்தனம்.

  நீங்கள் எழுதிய கடைசி பத்தியில் பெரியார் சொன்னது ஒரு அபத்தக்களஞ்சியம்! அது புரியவேண்டுமானால், நான் கீற்று இணையதளத்திற்கு “தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்” என்ற கட்டுரை தற்போது அனுப்புகிறேன். அது சமீபத்தில் வௌியாகும். அதைப் படித்தால் உங்களுக்கே விளங்கும்.

  நானும் ஒரு மொழி வல்லுனரல்ல. எனது இயற்பியல் அறிவு மூலமாக அதை அனுகும்போது, சில புதிய உண்மைகளை வௌிக்கொணர்ந்துள்ளேன். அவ்வளவே!

  ஆங்கிலத்தைப் பற்றிய ஒரு போதை பெரியாருக்கு இருந்துள்ளது. அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராது என்று எனது நன்பர்கள் சொல்கின்றனர். அவர் அப்போதே The Revolt மற்றும் The Modern Rationalist என்ற ஆங்கிலப் பத்திரிகைகளும் நடத்தி இருந்தாலும், அவரது ஆங்கில அறிவு என்பது குறைவானது என்பதே நான் கேள்விப்பட்ட ஒன்று. ஆங்கிலேயன் அறிவியலில் ஓங்கி இருந்ததால் பெரியாருக்கு ஒரு ஆங்கில மோகம் இருந்திருக்கும். இதே மோகம் எனக்கும் எனது எனது பள்ளி, கல்லூரிக் காலத்த்தில் இருந்தது.

  நான் சொந்த முயற்சியில் பள்ளிக்காலத்திலேயே ஓரளவுக்கு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதக் கற்றுக்கொண்டேன். அப்போது புரிந்தது அது கற்பதற்கு ஒரு “மிகவும்” கடினமான மொழி என்று. ஆசான் இல்லாமல் ஒருவன் கற்க முற்பட்டால் தெரியும் பாடு. ஆனால், தமிழ் ஒரு எளிய மொழி. எளிதில் கற்கும் மொழி. இது அறிவியல் அடிப்படையில் அமைந்த மொழி. ஆசான் இல்லாமலேயே கற்கக்கூடிய மொழி. எனது கட்டுரையைப் படித்துப் பாருங்கள், விளங்கும்.

  ஆங்கிலம் உலகெலாம் பரவியது, அது ஒரு எளிய மொழி என்பதால் அல்ல. அவன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு உலகையே வளைத்துப்போட்டான். சூரிய அஸ்தமனமில்லாத சாம்ராஜ்யத்தைக் கட்டினான். அதனால் தான் அவன் மொழி உலக மொழியானது. அவன் ஈவு, இறக்கம் இல்லாத ரௌடி!

  உண்மையிலேயே விஞ்ஞானம் வளர்ந்தது ஜெர்மன் மொழியில் தான் அதிகம். மற்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் பங்கு உண்டு. ஆனால், அவை உலக மொழியாகவில்லை.

  மேலும் பாரப்போம் தோழரே!

 9. டாக்டர் பாண்டியன்,
  நீங்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகறீர்கள். உங்கள் விளக்கங்கள், உங்களை மேலும் குழப்பமானவராக, விசயங்களை மேலோட்டமாக புரிந்து கொள்பவராக அடையளாப்படுத்துகிறது.

  நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீ்ர்கள் என்று கேட்டால், நீ ஏன் முருகன் என்று கடவுள் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள், இரண்டும் ஒன்றா?

  சரி ஒரு கடவுள் நம்பிக்கையாளர் உங்களை கேட்கிறார் தமிழ்உணர்வாளராக இருக்கிற நீங்கள் ஏன் உங்கள் பெயரை Dr. V. Pandian என்று ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

  ///அடையளங்காட்டியதால் சிக்கல்களையும் சந்திப்பவன் நான். ஒரு உண்மையான போராளி! // என்று தற்புகழ்ச்சியில் மிதக்கிறீர்கள்.

  ஆனால் ஒரு முறை தோழர் வேந்தன், சாதிய உணர்வாளராக, தலித் மக்களின் எதரியாக, தேசியத்தை வலியுறு்த்திய முத்துராமலிங்கத் தேவரை பற்றி ஏன் விமர்ச்சிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு…. பதில் சொல்லமால் நழுவிய ஓடிய நீங்கள்தான்
  /// ஒரு உண்மையான போராளி! // என்று உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
  ஆனால் பெரியாரை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இதுதான் பெரியார். அவரிடம் ஜனநாயகத் தன்மையும் அறிவு நாணயமும் இருந்ததால் அவரை உங்களால் விமரிச்சிக முடிகிறது.

  உங்களிடம் அறிவு நாணயம் இல்லாததாலும், சாதிய கண்ணோட்டம் இருப்பதாலும்தான் உங்களால் முத்துராமலிங்கத்தேவர் போன்ற சாதி வெறியர்களை, இந்திய தேசிய வெறியர்கைள கண்டிக்க முடியவில்லை.
  பெரியார் ஒன்றும் தவறாக சொல்லிவில்லை. உணர்ச்சவசப்படாமல் எதையும் அறிவு கொண்டு பார் என்றார். உங்களிடம் நாங்களும் அதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

%d bloggers like this: