பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்

http://www.employees.org/~desikan/images/d_periyar.gif

மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி என்று பெரியார் சொன்னார்.

பெரியாரின் இந்த அறிவியல் பார்வையை தமிழர்களுக்கு எதிராக, தமிழனுக்கு எதிரான கண்ணோட்டமாக மாற்றினார்கள், பெரியாருக்கு எதிரான, தமிழர்களின் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து பேசாத, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் எதிரிகளான, தனித்தமிழ் பேர்வழிகளும், தமிழ்த்தேசிய பேர்வழிகளும்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பெரியாரின் மொழிப்பார்வை எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று விளக்கி எழுதியிருக்கிறார் தோழர் கவி. இதை இவர் எழுதியது என்பதைவிட, பெரியாரே எழுதினார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு பெரியாரின் எழுத்துக்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி, தன் எழுத்தை சுருக்கியிருக்கிறார்.

இவர் சொந்த ஊர் திருவாரூர். இப்போது சிங்ப்பூரில் பணிபுரிகிறார். பெரியாருக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளை கண்டித்து,  நான் எழுதியதை தொடர்ந்து படித்து வந்த தோழர் கவி, அவர் எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பி வைத்தார்.

இதில், பெரியார் மொழிக்குறித்தும், தமிழ் குறித்தும் சொல்லியிருக்கிற செய்திகள் நிரம்ப அறிவு செறிவுள்ளதாக இருக்கிறது. (பெரியாரின் தமிழ் பற்றிய இந்த சிறப்பான கருத்துக்களும், டாக்டர் அம்பேத்கர் தமிழ் பற்றி சொன்ன கருத்துக்களும் ஓரே தன்மையுடையவை. இதுபற்றி நான் வேறு ஒரு சமயத்தில் எழுதுகிறேன்.)

தமிழ் மொழியை தாய்மொழி என்பதும்,  அதைப் புனிதமாக பார்க்கும் போக்கும், பழைய தமிழ் புலவர்களை பெரிய மேதைகளாக நினைக்கும் எண்ணமும், சில பெரியாரிஸ்டுகளிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், பெரியார் கருத்துக்களைவிட தமிழ்தேசிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முறையாக அவரை வாசிக்காததும் அல்லது சில இடங்களில் அவர் கொள்கைகளை கைவிட்டுவிடுவது, வசதியாக இருப்பதுமே காரணம்.

தோழர் கவி எழுதியிருக்கிற இந்தக் கட்டுரை, தமிழ்த் தேசிய வாதிகளுக்கு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு ஆர்வத்தில் பெரியாரை ஆதரிக்கிற சில பெரியாரிஸ்டுகளுக்கும், பெரியாரின் மொழி கொள்கையை தெளிவாக காட்டும். அதனால இதைத் தொடராக வெளியிடுகிறேன்.

இப்படி வெளியில் இருந்து ஒருவர் எழுதிய கட்டுரையை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு என் பதிவுகளில் இடம்பெற்ற கட்டுரைகளை ஒட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்த தோழர் ஏகலைவன், தோழர் விஜய் கோபால்சாமி இவர்களின் கட்டுரைகள் மட்டும்தான் இடம் பெற்றிருக்கிறது.

தோழர் கவியின் இந்தக் கட்டுரை, பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு ஒர் அறிவு சுரங்கம்.

-வே. மதிமாறன்

***

சுப.வீ எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம்’ நூல் குறித்து ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆகஸ்ட் 2005 இதழில், திரு. பெ.மணியரசன் எழுதியிருந்தார். சுப.வீ யின் நூலை ஆய்வு செய்கிறவர் அதை ஆய்வு செய்வதில் முனைந்திருக்கலாம். அதை விடுத்து பெரியாரின் பக்கம் போய் பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

‘பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்புக் கொண்டது’ என்கிறார் பெ.மணியரசன். இக்கருத்தை அவரே வரையறுத்துக்கொண்டு சுப.வீ யி ன் கருத்தை மறுக்கத் தொடங்குகிறார். பெரியாரின் கருத்தியல் என்பது சமூக நீதி. சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும். இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இதுதான் பெரியாரியல்.

‘பெரியாரின் சமூகவியல் கொள்கை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு.’ இதுவும் பெ.மணியரசன் அவர்களின் பிழையான பெரியார் கொள்கை பற்றிய பார்வை. ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாகவும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார்.

பெரியார் சொன்ன ‘திராவிடம்’ என்பது ‘பழைய சென்னை மகாணம்’ தான். அதில் உள்ள தெலுங்கு பேசுபவர்களையும் கன்னடம் பேசுவர்களையும் மலையாளம் பேசுபவர்களையும் மட்டும் உள்ளடக்கியது தான். இப்போது பெ.மணியரசன் போன்றவர்கள் தாங்களாக கொண்டுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளடக்கிய திராவிடம் அல்ல.

‘மொழிக் கொள்கையில் பெரியார் பிழை செய்திருக்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் சம்பள உயர்வுக்குப் பெரியார் ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் மொழிக் கொள்கை ஆகாது. தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்க வில்லை. மூட நம்பிக்கை மொழியென்றும் பகுத்தறிவு மொழி என்றும் எதுவுமில்லை. தமிழிறிஞர்கள் குறித்த பெரியாரின் பார்வை சமனற்றது. தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள். உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற பெரியாரின் இக்கணிப்பு தவறு.’ என்று பெ. மணியரசன் எழுதியவற்றிற்கு எல்லாம்,  பெரியாரைக் கொண்டே விடை கூறியிருக்கிறேன்.

பெ. மணியரசனின் பெரியார் மீதான் அவதூறுகளை மறுத்து, 2005 ல் நான் எழுதிய நூலினை உங்களுக்கு தொடராக தருகிறேன்.இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இதுவே பெ.மணியரசன் அவர்களுக்கு போதுமானது என்று கருதுகிறேன்.

கவி, சிங்ப்பூர்.

-தொடரும்

குடியரசு இதழில் வெளியான பெரியாரின் எழுத்துக்களை, பேச்சுகளை புத்தகமாக வெளியிடலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரியார் திராவிடர் கழகத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.

பெரியாரின் நூல்கள்தான் தமிழர்களின் அழியா சொத்து. இந்தச் சொத்து வழக்கில் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்பாகியிருக்கிறது.
மகிழ்ச்சி.
-வே. மதிமாறன்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

37 thoughts on “பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்

 1. //பெரியாரின் நூல்கள்தான் தமிழர்களின் அழியா சொத்து. இந்தச் சொத்து வழக்கில் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்பாகியிருக்கிறது.//

  தோழர் மதிமாறனின் கேள்வி-பதில் நூலில் சொல்லியிருப்பார் “பெரியாரை அறிந்து கொள்ள பெரியாரைப் பற்றிப் படிப்பதை விட பெரியாரையே படிப்பதுதான் சிறந்தது” என்று. தோழர் கவியின் தொடருக்கு மதிமாறன் அவர்கள் எழுதிய அறிமுக உரையே கட்டியம் கூறுகிறது, இது பெரியாரைப் பற்றிய எழுத்தல்ல பெரியாரின் எழுத்து என்று. அடுத்தடுத்த கட்டுரைகளையும் வாசிக்க அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன். முயற்சிக்கு வாழ்த்துக்கள்…

 2. முன்னுரையே பட்டையை கிளப்புகிறது. தோழர் கவியின் கட்டுரையை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

 3. மிக்க மகிழ்ச்சி தோழரே….

  தந்தை பெரியாரிடம் உங்களுடைய வாரிசு எதுன்னு கேட்டா அவர் என்னுடைய போராட்டங்களும், கொள்கைகளும்தான் என்று சொல்வாராம். ஆனால் அவரையே தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று முடக்க போராடிக்கொண்டிருந்த கூட்டங்களுக்கு இன்று நல்ல சவுக்கடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
  தொடர்ந்து போராடிய பெரியார் திராவிட கழகத் தோழர்களுக்கு எனது நன்றியை சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

  தொடரட்டும் மக்கள் பணி

  //பெரியாரின் நூல்கள்தான் தமிழர்களின் அழியா சொத்து//

  எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் இருக்க வேண்டிய பொக்கிசங்கள்..

  தோழமையுடன்

  முகமது பாருக்

 4. அதே பெரியாரிஸ்டுகள் தமிழுக்கு எதற்கு செம்மொழி என அவரது பேரன் கன்னடக்காரன் இளங்கோவன் போட்ட வழக்குக்கு எதிர்நடவடிக்கிக்கை என்ன? பெரியார் கொள்கைகளை ஏற்றுகொள்ளும் தமிழ் தேசியவாதிகளுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன? ஒரு கண்டண அறிக்கை வெளியிட்டார்களா? அல்லது இஞ்சி மரபா விற்று கொண்டு இருந்தார்களா? உடனே கிளப்பிடுவார் சாதி பிரச்சனையை திரு.மதிமாறன் அவர்கள்….. தமிழை எதிர்க்கும் அனைவரும் எமது எதிரிகளே! அது பெரியார் பேரனாக இருந்தால் என்ன வேறு எவனாக இருந்தால் என்ன?
  தமிழராக ஒன்றுபடுவோம் !! தமிழ்தேசியத்தை அமைப்போம் !!! பிரச்சனைகளை பிறகு பேசலாம்

  நன்றி புரட்சிகர தமிழ் தேசியன் – தமிழ் தேசிய பொதுவுடமைகட்சி

 5. தமிழ் ஒரு மொழி. அதை மொழியாக அதாவது தொடர்புக்கு மீடியமாக மட்டுமே கொள்ள வேண்டும். இப்படி அணுகுமுறை இருப்பது தான் சரி.
  பெரியார் அந்த அளவுக்கு விஞானபூரவமாகவே சிந்தித்து இருக்கிறார்

 6. //குடியரசு இதழில் வெளியான பெரியாரின் எழுத்துக்களை, பேச்சுகளை புத்தகமாக வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரியார் திராவிடர் கழகத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது.//

  மிகவும் மகிழ்ச்சிதான். பெரியாரின் எழுத்துக்களை மட்டுமல்ல..அவரின் சொத்துக்களையும் கைப்பற்றி மக்கள் சொத்தாக மாற்றுவதுதான் இன்னமும் சரி.

 7. //தமிழராக ஒன்றுபடுவோம் !! தமிழ்தேசியத்தை அமைப்போம் !!! பிரச்சனைகளை பிறகு பேசலாம்//

  பிறகு பேசலாம் என்றால், காந்தி அம்பேத்கரிடம் சொன்னாரே அவ்வாறா?

  புரட்சியை பற்றி பேசும் புரட்சிகர தமிழ் தேசியன் அவர்களே,
  தேசம், தேசிய கோரிக்கை என்பதை பற்றி புரட்சியாளர்கள் வரையறுத்ததை படித்ததில்லையா?

  அல்லது நீங்கள் கூறுவது போல் ”தமிழை எதிர்க்கும் அனைவரும் எமது எதிரிகளே!” என்பதனால் அவர்களையும் எதிரிகள் என்று ஒதுக்குகிறீர்களா?

  அவர்களையும் அப்படி ஒதுக்கினால் தமிழ்தேச ”பொதுவுடைமை” கட்சி எனும் உங்கள் கட்சியில் யார் வழிகாட்டிய ”பொதுவுடைமை கொள்கையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்?

 8. பெரியாரின் நூல்கள்தான் தமிழர்களின் அழியா சொத்து. இந்தச் சொத்து வழக்கில் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்பாகியிருக்கிறது.
  மகிழ்ச்சி.///

  Mika Makilchi…!
  Veeramani kku inthu oru Pinaidaivu dhan..!

  Thozr Kavi kku en nandrigal….

  தமிழை எதிர்க்கும் அனைவரும் எமது எதிரிகளே!///

  Enakku avanga elam Yediri dhan.. seri

  inga irukum nam yen saathi meghu ivolo Pasam???

  saathigal mulam namaku enna Nanmai kurippa Tamilukku enna Nanmai…??

 9. மணியரசன் அவர்களை பெரியார் மீது அவதூறு செய்கிறார் என்று சொல்வதே ஒரு அபத்தக் குற்றச்சாட்டு. விமர்சனத்தை அவதூறு எனலாமா? எந்த ஒரு மனிதனின் அனைத்துக் கருத்துக்களுமே சரியாக இருந்ததாக வரலாறு உண்டா? மற்றவரின் கருத்தை மறுதலிப்பதால் அவர் அவதூறு செய்பவராவாரா? ஏன் இந்தப் பெரியார் பக்தி? மணியரசனைப்பற்றி ஓரளவுக்குத் தெரிந்தவன் என்ற வகையில், உங்களின் இந்தப் பழி அவரைச்சேராது.

  பெரியாரின் பகுத்தறிவுத் தொடக்கமே பாரப்பனீய எதிர்ப்புதான். அவர் இளம்பிராயத்தில் தொடங்கி தனது 93 வது வயதில் இறக்கும் வரை, அவருடைய அறிவும் வளர்ந்துதானே வந்துள்ளது. அது தானே அனைவருக்குமான இயல்பு. ஆக, பெரியார் சொன்னதெல்லாம் சரியே என்பது பக்தியின் வௌிப்பாடாகத்தன் இருக்க முடியும். அங்கே எங்கு பகுத்தறிவு உள்ளது?

  நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், பெரியாருக்கப்புறமும் கடவுள் பக்தி வளர்ந்துள்ளதா, சரிந்துள்ளதா? ஆக, நாம சாடுவது கடவுளை வைத்து ஏய்ப்பவனைத்தானே ஒழிய, கடவுளை அல்ல என்பது ஒரு அனுபவ உண்மை! உலக மாந்தர்கள் எல்லோருமே ஹீரோக்கள் அல்லர். சாமானிய மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது ஒரு உளவியல் தேவை. எனவே ஏய்ப்பவர்களைத் தூற்றுவோம். கடவுள் இல்லை என்பதை கீழ்த்தரமாகச் சொல்லாமல் அறிவு பூர்வமாக பரப்புவோம். இந்து மதத்தில் கடவுளைக் கீழத்தரமாக, திட்டமிட்டு திரிபு செய்த பார்ப்பனீய சதிகளை அம்பலப் படுத்துவோம். தமிழின் ஐந்து திணைகளின் கடவுள்களை எடுத்து, அவற்றை ஒழுக்கங்கெட்ட கடவுளாக சித்தரித்து (அசிங்க கதைகள், நிறைய பெண்டாட்டிகள்) பார்ப்பனீயத்தால் இந்து மதம் உருவாக்கப்பட்டது. ஒழுக்கங்கெட்ட கடவுளை வணங்குகிறவன் ஒழுக்கங்கெட்டவனாக இருப்பான். ஒழுக்கங்கெட்டவன் வாழக்கையில் முன்னேர மாட்டான். ஆக, அப்படி நலிந்த சமுதாயத்தை ஏய்த்துப் பிழைப்பது, சிறுபாண்மை பார்ப்பனீயத்திற்கு எளிதானது. புரிகிறதா? எனவே, நாம் எதிர்க்க வேண்டியது பாரப்பனீயத்தைத் தானே தவிர, கடவுள் என்ற கோட்பாட்டை அல்ல. அது ஓரளவுக்கு இருந்தால் குடிமுழுகிப் போய்விடாது. தமிழரின் ஐந்து திணைக்கடவுள்கள் அசிங்கமானவை அல்ல!

  மொழி பற்றிய பெரியாரின் பார்வை மலிவானது என்பது அப்பட்டமான உண்மை. அயோக்கியர்கள் மொழியை தீய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தியதால், அந்த மொழி காட்டுமிராண்டி மொழியாகிவிடுமா? தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது அவரது குருகிய பார்வை. பொருத்துக் கொள்ள முடியாத ஒரு கூற்று. தமிழ் மொழி மற்ற மொழிகளைப் போலல்லாமல் ஒரு இயற்கை மொழி. நான் பாவாணரின் நூல்களைப் படித்துள்ளேன். நானும் தமிழ் பற்றிய, இயற்பியல் நோக்கில், ஆய்வுகள் செய்துள்ளேன். தமிழ், அறிவின் கொள்கலன். அதையொற்றிய அறிவார்ந்த மொழி உலகில் இல்லை என்பது தான் உண்மை. இயற்கையான மொழி என்பதோடல்லாமல் அறிவியல் ரீதியாக தொல்பழங்காலத்திலேயே செழுமைப் படுத்தப்பட்ட மொழி. எழுத்துகளுக்கும் உச்சரிக்கும் மாத்திரைகள் (நேர அளவைகள்) கொண்ட மொழி தமிழ். இசைக்கும், அதனாலேயே இயல்பான மொழியும் அது. தொல்காப்பியம் கிடைத்தது 1927ல் தான். அதில் உள்ள அறிவு நுணுக்கங்கள் எத்தகையன?

  பெரியார் பக்தர்கள் தமிழின் பரிமாணங்களைப் படித்ததில்லை. பெரியாரே தமிழைப்பற்றி அதிகம் தெரியாதவராகவே இருந்தார். தமிழுணர்வாளர்களும் பெரியாரைப் படிக்கவேண்டும், முழுவதுமாக.

  கவியின் கட்டுரையை எதிர்பார்ப்போம்!

 10. வணக்கம் முனைவர் பாண்டியன்.

  நீங்கள் ஆய்வு(?) செய்து பட்டம் பெற்றதால் உங்களை முனைவர் என்றுதான் அழைக்கவேண்டும். ஆனால், நீங்கள் கூசாமல் Dr. V. Pandian என்று ஆங்கிலத்தில் தொடர்ந்து உங்கள் பெயரை போடடுக்கொண்டே, பெரியாரின் தமிழ் உணர்வை கேள்வி கேட்கிறீர்கள்.

  ஆனால், உங்களுக்கு பதில் சொல்லுகிறர்கள், பெரியார் தொண்டர்கள், மார்க்கிசியவாதிகள் தமிழில் தங்களை பெயரை குறிப்பிடுகிறார்கள்.

  இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது தமிழுணவார்களின் தமிழ் உணர்வு.

  உங்களை அம்பலப்படுத்தி நீங்களே தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். வாழ்க. இதைத்தான் மதிமாறன் போனமாதம் தமிழ்த் தேசியம்-ஒழிக பெரியார்- வாழ்க பார்ப்பனியம் என்று பழைய பதிவிலேயே சொல்லயிருந்தார், தமிழ்த்தேசியவாதிகள் பெரியாருக்கு எதிரானவர்கள் என்று.

 11. ///எனவே, நாம் எதிர்க்க வேண்டியது பாரப்பனீயத்தைத் தானே தவிர, கடவுள் என்ற கோட்பாட்டை அல்ல. அது ஓரளவுக்கு இருந்தால் குடிமுழுகிப் போய்விடாது. தமிழரின் ஐந்து திணைக்கடவுள்கள் அசிங்கமானவை அல்ல! ///

  poonai kutti alla, yaanai kuttiyae konik kullirundhu veliyae vandhu vilugiradhu.

 12. சிறிய இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் முனைவர் V.Pandian அவர்களுக்கு,

  பெரியாருக்கு தமிழ்மொழி பற்றி பார்வை மலிவு என்று குறை கூறும் முனைவரே, ”கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” என்று பெருமை பேசியவர்களை, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தில் எப்படிடா மனிதன் தோன்றியிருப்பான் என்று கேட்கும் பெரியாரின் தமிழ் பற்றிய பார்வை மலிவானது தான்.

  உஙகளை போன்ற தமிழ் ஆர்வலர்கள், தமிழ் பித்தர்கள், தமிழ் புரவலர்கள், தமிழ் வெறியர்கள் மூச்சுக்கு முப்பது தடவை முத்தமிழ் சிறப்பை பேசும் ஜீவிகள் எத்தனை பேர் சமூக அக்கறையுடன் மக்களின் உரிமைகளுக்காக, அவர்கள் ஒடுக்கபடும்போதும், சுரண்டபடும்போதும் சமூகத்தின் களத்தில் நின்று போராடியிருக்கின்றீர்கள்.

  அப்படியே யாராவது இருந்தால் அவர்கள் பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவர்களாக இருப்பர்.

  ஏனெனில் தமிழனுக்கு தான் தமிழன் எனும் சுரணையை வரவைத்ததே பெரியார் தான்.

  பெரியார் பித்தனாக யாரும் இங்கு இல்லை. நீங்கள் தான் தமிழ் பித்தனாக இருக்கிறீர்கள்.(இதற்கு நீங்கள் பெருமையடையலாம்)என்ன செய்பது?உங்களை போன்றோருக்கு இதில் ஒரு பெருமை .

  ஒருவனுக்கு சாதிபற்று, மதபற்று, இன பற்று, மொழிபற்று இருக்ககூடாது. அனைவரும் சமம் என்று எண்ண வேண்டும் என்று, பாசிசத்தை நோக்கி மனிதனை இட்டு செல்லும் காரணிகளை சுட்டிகாட்டி அதை வேண்டாம் என்று தடுத்த பெரியாரின் மொழி பார்வை, மலிவாக இருக்கலாம் ஆனால் மனித நேயமும், சுயமரியாதையும் கூடிய அவரின் சமூக பார்வை உயர்வானது.
  ஆனால் மொழி பார்வை பலமாக உள்ள உங்களை போன்றோரிடம் சமூக பார்வை மிக மிக மலிவாகவே உள்ளது.

  மொழி பற்றாளாராயிருந்தாலும் மக்கள் பற்றிலாத சமூக பார்வை இல்லாத உங்களை போன்றவர்களால் சமூகத்திற்கு ஏதும் பயனில்லை. இவர்கள் மொழி பற்றி பீற்றுவதிலும் பயனில்லை.

  மொழி என்பது என்ன?

  இலக்கியங்கள் தான் ஒரு மொழியை சிறப்பானதாக மாற்றுகிறதா?

  அப்படியெனில் இலக்கியங்கள் இல்லாத மொழியில் பிறந்த ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழி சிறப்பில்லையா?

  அவ்வாறே இலக்கியங்கள்,இதிகாசங்கள்,கசமாலங்கள் எது இருந்தாலும் அதனால் மக்களுக்கு பயன்படுவது என்ன?

  மாறாக மக்கள் சுரண்டப்பட்டார்கள். தமிழக அரசியல்வாதிகள் அடுக்கு மொழியிலும், முத்தமிழிலும் பேசி பேசி தமிழை ”போதை ஊசியாக” பயன்படுத்தி மக்களை சுரண்டினார்கள் இன்றும் சுரண்டுகிறார்கள். சிலர் ஏமாற்றுகிறார்கள்.

  மறுபடியும் கேட்கிறேன் நம் மொழியின் சிறப்பால் மக்களுக்கு பயனென்ன?????

 13. முருகன்!

  பார்ப்பனீயத்துக்கெதிராக எழுதும் நான், என்னை அடையாளங்காட்ட விரும்பினேன். அடையளங்காட்டியதால் சிக்கல்களையும் சந்திப்பவன் நான். ஒரு உண்மையான போராளி! பலர் புனைபெயரில் புகுந்துகொண்டு எழுதுகின்றனர். முனைவர் வே. பாரண்டியன் என்பதும் Dr. V. Pandian என்பதும் பலருக்கு ஒன்றல்ல. நான் கீற்றில் கட்டுரைகள் எழுதியுள்ளேன் முனைவர். வே. பாண்டியன் என்று தமிழில். கீற்றில் பின்னூட்டம் எழுதும்போது ஆங்கிலத்தில் பதிவு செய்ததால், இந்த இரண்டு பெயரும் ஒருவரைத்தான் குறிக்கிறது என்பதை பலர் உணராமல் இருந்தனர்.

  அது சரி….. porkkaiponds@yahoo.co.in என்பதும் ஆங்கிலம் தானே! அதற்கு எங்கு சென்று முட்டிக்கொள்வது?

  அதோடு முனைவர் என்ற கலைச்சொல் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து தான் கையாளப்படுகிறது. ஆனால், அந்த சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. அதைவிட காந்திரமான ஒரு கலைச்சொல் தேவை என்பதும் எனது கருத்து.

  அது சரி…. நீங்கள் ஒரு நாத்திகவாதிதானே! உங்களின் ஆத்திகப் பெயரைத்தானே பயன்படுத்துகிறீர். தவறல்லவா தோழரே! ஏன் இன்னும் பெயர் மாற்றம் செய்யவில்லை?

  தோழரே! என்னிடம் வரட்டுத்தனங்களோ, பாசாங்குகளோ இல்லை. நாம் இதுபோன்ற சிறிய விடயங்களைத் தவிர்த்து, முகாமையைன விடயங்களை “அறிவு ஞாணயத்தோடு” விவாதம் செய்வோம். விவாதத்தின் குறிக்கோள் குழப்பமற்ற, தீர்க்கமான கொள்கை முடிவுகளே! நமது விதண்டாவாதங்கள் அல்ல!

 14. விஜயகோபால்சாமி!

  நான் தொடுத்த ஆழமான கேள்விகளை எதிர்கொள்ளாமல் பூனை வந்துவிட்டது, நண்டு வந்துவிட்டது, யானை வந்துவிட்டது, எலி வந்துவிட்டது என்ற அல்பவாதங்கள் தான் உங்களின் பகுத்தறிவின் ஆழமா?

  நான் எனது இளம்பிராயத்திலிருந்தே ஒரு நாத்திகவாதிதான். எனது வீட்டில் தென்மொழி நாட்காட்டி உண்டு. தி. க. நாட்காட்டி உண்டு. பஞ்சாங்கம் இல்லை. நேர, காலம் பார்ப்பதில்லை. பூஜை செய்வதில்லை.

  ஆனால்,

  எனது நன்பர் கிட்டத்தட்ட 5 கோடி பெருமானமுள்ள ஜப்பானிய, அதி தொழில்நுட்ப எந்திரம் வாங்க (நடுவனரசு ஆய்வகம) ஜப்பான் சென்றார். இவர் முன்னாலேயே அந்த எந்திரத்தை அவர்கள், அவர்களின் முறையில் சில சடங்குகள் செய்து, சில ஜப்பானிய சுலோகங்கள் சொல்லித்தான் அந்த எந்திரத்தை ஏற்றுமதி செய்தனர். ஜப்பானியன் சாதிக்காததையா நீர் சாதித்தீர்? ஆன்மீக சிந்தனை உலகளாவியது. எனக்கு அது தேவையில்லா விட்டாலும் சாமானிய மனிதர்களுக்கு அது தேவை. அது வளர்ந்து வருவதும் நாம கண்கூடாகப் பார்க்கிறோம்.

  நிலையற்ற பொருளாதார சமூகம் உள்ளவரை அன்மீகமும் செழிக்கும். நிகரமை சமூகத்தில், சமூக பாதுகாப்பு உள்ளதால், அங்கு அதன் தாக்கம் குறையும். அப்போதும் அழியாது!

  தலித்தைப் பார்த்தாலே தீட்டு என்று சொன்ன பாரப்பானின் காலில் படித்த தலித்துகள் இன்று விழுந்து ஆசி வாங்குமளவுக்கு சென்றது உங்களின் வரட்டுத்தனமான ஆன்மீகம் சார்ந்த நிலைப்பாடு தான். இன்று RSSல் இருக்கும் உருப்பினர்களில் மிகையானவர்கள் தலித்துகளே! உங்களின் வரட்டு நிலைப்பாடுகளால், யாரை எதிர்க்க கடவுளைப் பெரியார் எதிர்த்தரோ, அவர்களின் பின்னால் இன்று தலித்துகளும் அணிசேர்கின்றனர் என்பது உங்களின் வரட்டு, மர மண்டைகளுக்கு என்றும் எட்டாது.

  ஒரு ஆன்மீக சிந்தனை என்பது அடிப்படையில் தவறானதல்ல. சாதி, இன, நிற பேதமற்ற, சுத்த சன்மார்க்கத்தை வலியுறுத்திய வள்ளலார் அவர்கள் ஒரு ஆன்மீக வாதியே! அவர் ஜோதியை வழிபடச் சொன்னார். ஜோதி புனிதமானது. உலகை வாழ்விப்பது. அக்னி (தீ) புனிதமானதல்ல. அது பார்ப்பான் சொன்னது. (“ஆரியமும் அக்னியும்” என்று ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். கீற்றில் வௌிவரும்). வள்ளலார் ஒரு உண்மையான பகுத்தறிவுவாதி. சைவ நம்பிக்கையில் தொடங்கி, படிப்படியாக, ஒரு நாத்திகவாதியாக மலர்ந்தவர். இறுதியாகச் சொன்னதுதான் ஜோதி வழிபாடு. ஆக, அவர் ஒரு நேர்மையான மனிதர். பகுத்தறிவுவாதி. சாஸ்திரத்திற்கெதிராகவும், சைவத்திற்கெதிராகவும் மாறியதால்தான் சுரண்டல் கும்பல் அவரைக் கொன்றது.

  பெரியாரிசம் தோற்றுவிட்டது என்று சொன்ன நான், வே. மதிமாறனின், அறிவு நாணயமில்லாத நிலைப்பாடுகளால் தான். பெரியாரோடு குன்றக்குடி அடிகளார், திரு. வி. க. போன்ற ஆன்மீகவாதிகள் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருந்ததாக எனக்கு நன்பர்கள் சொன்னார்கள். ஆனால், பெரியாரை வரட்டு சிந்தாந்தவாதியாக வாழவைத்துக் கொண்டுள்ளவர்கள் உங்களைப் போன்ற அரைவேக்காடுகள் தான்.

  பெரியார் சாதித்தது எவ்வளவோ! தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்னடிமைத்தனம், ஜாதி, இட ஒதுக்கீடு என்று பெரியார் சாதித்தது ஏராளம். ஆனால், அவரையும் மீறி அன்மீகம் இன்று வளர்ந்து வந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதை மீளாய்வு செய்து புதிய முடிவுகளை மேற்கொள்வதும், தேவையான மாற்றங்களை ஏற்பதும் தான் பகுத்தறிவின் வழி.

  ஆனால், உங்களைப்போன்ற பெரியார் கண்மூடி “பக்திமான்”களுக்கும், பெரியாரிய திரிபுவாதிகளுக்கும், “அடிவருடிகளுக்கும்” அது எட்டாது.

  கடவுளை ஒரு ஏய்க்கும் கருவியாகப் பயன்படுத்தும் அயோக்கியர்களின் மீது தான் நமது குறி இருக்க வேண்டும். இன்று தொலைக்காட்சி விளம்பர நிகழ்வுகள் மூலமாக, எவ்வளவு ஏமாற்றகிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டு தானே உள்ளீர்கள். அதை எதிர்கொள்ளுங்கள் முதலில். பால் தினகரன் வகையறாக்களுக்கும், சாய்பாபா வகையறாக்களுக்கும் கூடும் கூட்டத்தைப் பார்த்து, உத்திகளை மாற்றவேண்டிய தேவையை உணருங்கள்.

  பசித்தால் புலி புல் திண்ணாது. பாம்பு, பழம் திண்ணாது. இவைகள் வாழ, மற்ற உயிரினங்கள் சாகவேண்டும் என்பது தான் இயற்கையின் நியதி. ஆக, இப்படிப்பட்ட ஒரு உலகையா இறைவன் படைத்திருக்க முடியும்? எனவே இறைவன் என்பது இல்லை, இல்லவே இல்லை என்பது தான் உண்மை. ஆனாலும், இந்த மக்களுக்கு இறைமை என்ற ஒன்று தேவைப்படுகிறது. இந்த உண்மையை நீங்கள் முறையாக எதிர்கொள்ள மறுப்பதால், பாரப்பானின் காலில் இன்றும் நமது மக்கள் கிடக்கின்றனர். இந்த அப்பட்டமான வரலாற்று உண்மையை எதிர்கொள்ளத் தெரியாத மூடர்களாகத்தான் இன்றய பெரியாரியவாதிகள் உள்ளனர். உங்களின் வரட்டு நிலைப்பாடுகளால் பார்ப்பான் வாழ்கிறான். அவனின் இந்து மதம் வாழ்கிறது. அது தான் நீங்கள் சாதித்தது!

  கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தால் சுரண்டல்காரர்களை ஒழிக்கமுடியும் என்ற கருத்து, ஒரு தோற்றப்போன கருத்தாக்கம். எனவேதான் உத்தியை மாற்றவேண்டி கடப்பாடு உள்ளது.

  நாங்கள் சொல்வது தமிழனின் சிறுதெய்வ வழிபாடு, சிவன், முருகன், மாயோன், காளி போன்ற தமிழரின் தொல்பழங்கடவுளர்களை அனுமதித்து, பார்ப்பனீய திரிபுகளை அம்பலப்படுத்தி, சுரண்டலை ஒழிப்பது தான். பார்ப்பனீய திரிபு என்பது, இக்கடவுள்களுக்கு பல பெண்டாட்டிகளைக் கட்டுவித்து, இக்கடவுள்களுக்கு பாலியல் ஒழுக்கக்கேடுகளைக் கற்பித்து, அதன் மூலம் அதை வழிபடும் மக்களையும் ஒழுக்கங்கெட்டவர்களாக மாற்றி, அதன்மூலம் நம்மக்களின் முன்னளேற்றத்தைக் கெடுத்து, என்றென்றும் அடிமைப்பட்ட, வளம்குன்றிய, மூடநம்பிக்கையில் சிக்குண்ட மக்களாக நம்மை மாற்றி, வஞ்சனையில்லாமல் சுரண்டுவதுதான் பார்ப்பன இந்து மதம் என்பது. இந்தக்குட்டை உடையுங்கள்!

  எளிய மக்களின் எளிய ஆன்மீகத்தை கொச்சைப் படுத்தாமல், அவர்கள் அதைவைத்து எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை மட்டும் தௌிவுபடுத்தி போராடுவோம்!

  இப்போதைக்கு இது போதும்!

 15. Dear Vendhan,
  My broadband connection is presently off.
  Anyway, my feeds for Vijay shall clear some of your problems.
  You are a baby! Before periyar we had Vallalar, who preached Suddha Sanmarkkam. So, periyar alone can not represent such works which had been there from time immemorial, in Tamil community.
  Siththarhal had done great deeds too.
  One periyar alone can not shadow all the glorious Tamil past.
  You only expose how little you know about our past.
  I would respond to you, if my connection comes alive, before I start for outstation work.

 16. வேந்தன்!
  மொழிபற்றிய பெரியார் பார்வைமட்டுமல்ல, உங்களின் பார்வையும் மலிவானதே! எனது மன்னில் எனது மொழிபற்றிப் பேசுவதே பாசிஸமாகுமா? உங்களைப்போன்ற சில வந்தேறி சிறுபாண்மையினர் பொறாமைப் படுகிறார்கள் என்பதால் நாங்கள் தமிழைத் தொலைத்துவிட்டு, ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்ன ஞாயமய்யா இது?

  ஆனால், நான் முன்போ இந்தப் பக்கங்களிலேயே பதிவு செய்துள்ளேன். தெலுங்கு என்பது பார்ப்பானின் மொழி. அது “திராவிடத்” தெலுங்கனின் மொழி அல்ல. தென்னிந்தியர்கள் எல்லோருமே அடிப்படையில் தமிழர்களே! தமிழிலக்கியங்களின் பெருமை அவர்களையும் சேரும் என்று. இது உங்களைச் சாந்தப்படுத்த எழுதவில்லை. உண்மையும் அதுவே! அதை உணராத நீங்கள் தமிழ் போன்ற இயற்கை மொழியைக் கொச்சைப் படுத்திக்கொண்டே உள்ளீர்கள். ஞாயமா?

  பெரியார் ஏன் மொழியைப்பற்றிப் பேசினார்? அதற்கு காந்திரமான தேவையேதுமில்லையே! சதிகாரர்கள் தமிழைத் தவறாகப் பயன்படுத்தியதால், மொழி இழிவானதாக கருதப்பட்டால், அதில் பகுத்தறிவு உள்ளதா? ஆங்கிலத்தையும், பைபிளையும் வைத்துக்கொண்டுதான் அமெரிக்க செவ்விந்தியர்களையும், ஆஸ்திரேலிய அபாரிஜின்களயும், தென்னாப்பிரிக்க கருப்பர்களையும், கோடிகளில் வேட்டையாடினார்கள் ஆங்கிலேயர்கள். அந்த மொழி பெரியாருக்கு சிறப்பாகத் தெரிகிறதா? அதே பைபிளையும், ஆங்கிலத்தையும் வைத்துக்கொண்டுதான் ஈராக், ஆப்கானிஸ்தான் என்று வேட்டையாடினான் புஷ் என்ற ஆங்கிலேயன்!

  அடுத்து, ஏதோ பெரியார் ஒருவர் தான் பகுத்தறிவு பேசியவர் என்று முழுப்பூசனிக்காய்யை சோற்றில் மறைக்கிறீர்கள். ஆசீவகம் என்ற ஒரு பகுத்தறிவு மதம் ஒன்று இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. அது “விதி” என்ற பார்ப்பனக் கருத்தியலுக்கு எதிராக “தற்செயலியம்” (Accidental) என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தியது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய நிலவரம். மேலும், ஔவையார்கள, சித்தர்கள், வள்ளுவர், வள்ளலார் என்று ஏளாளம். நக்கீரர் கூட ஒரு ஆசீவகத் துறவியே! நக்கீரர் ஒரு சுத்தமான பகுத்தறிவு வாதி என்று திருவிளையாடல் நூலின் வழியாகக்கூட நாம் அறிகிறோம். (உண்மையில் அந்தக்கதை திரித்துக்கூறப்பட்டக் கதை. ஆசீவகத்தை சைவம் வீழ்த்தியதன் வரலாற்றைத்தான் சற்று வித்தியாசமாக அதில் பதிவு செய்துள்ளார்கள்) பெரியார் தமிழுக்கு அபூர்வ சிகாமணியல்ல. அதே நேரம், கடந்த நூற்றாண்டில் பெரியாரின் வீரமிகு செயல்பாட்டுக்கு மெய்யான நன்றியுள்ளவன் தான் தமிழன். அதிலும் குறைவேதுமில்லை. அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

 17. //உங்களைப்போன்ற சில வந்தேறி சிறுபாண்மையினர் …//

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உதாரணம் மட்டும் பெரிதாகச் சொல்லுவீர்கள். நேரடியாகவே தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறீர்களே, இதற்கென்ன சொல்லப் போகிறீர்கள்? தமிழன் மலேசியாவிலும் அமெரிக்காவிலும் பொருளீட்டப் போனால் அது திரைகடலோடித் திரவியம் தேடுவது. வேறு மாநிலத்தவன் தமிழ்நாட்டுக்குப் பிழைக்க வந்தால் அவன் வந்தேறி. உடனே தமிழன் நியாயமாகப் பொருளீட்டியமைக்கு ஆதாரம் இருக்கிறது என்று உங்கள் புராணத்தை ஆரம்பிக்காதீர்கள். நியாயமாகச் சம்பாதித்தர்களோ, அநியாயமாகச் சம்பாதித்தார்களோ, வேறு மொழியினர் வசிக்குமிடத்தில் எவன் பிழைக்கப் போனாலும் அவன் வந்தேறிதான்.

  உலகத்தில் தமிழன் இல்லாத இடமே இல்லை என்று பெருமைப்படுவீர்களே, உண்மையைச் சொல்வதானால் தமிழகம் தவிர்த்து அத்தனை நாட்டிலும் தமிழன் வந்தேறியே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் குடியேறி இருந்தாலும். உங்கள் பார்வைக்கு வேந்தன் வந்தேறி என்றால் ஏழுகோடியே நாற்பது லட்சம் தெலுங்கர்களின் பார்வைக்கு நானும் வந்தேறிதான். (நாளை எனக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறேன்.)

 18. <<<<>>>>

  யோவ் சோமாறி யாரப்பார்த்து வந்தேறி என்று கூறுகிறீர்.

  இது போன்ற தனி நபர் வசவு மொழிகளால் பேசி உங்க முகத்த சுத்தி ”ஆரத்தி” எடுக்க எனக்கும் தெரியும். இருந்தாலும் தனிநபர் தாக்குதலை விடுத்து விவாதிப்பதே ”இணையதள” மரியாதை என்பதால் வேண்டாம் என்று நினைக்கிறேன். முதலில் நான் வந்தேறி என்று எந்த நாதாரி உங்களுக்கு சொல்லியதோ, அல்லது நான் தமிழை பெருமையாக பீற்றாமல் இருப்பதால், நான் வந்தேறியாக தான் இருப்பேன் என்று நீங்களே யூகி சேது போல் யூகித்து கொண்டீரோ தெரியவில்லை.

  <<<<>>>>

  குழந்தை என்று விளையாட்டில்,விவாதத்தில் சொல்வதும் ஒதுக்குவதும் உங்களை போன்ற மெத்த மெத்த படித்த மேதாவிகளுக்கு அழகல்ல!

  திருஞான சம்பந்தர் குழந்தையிலே அறிவு பாலை,ஆவின் பாலை குடித்துவிட்டார் என்று தமிழ் இலக்கியங்களில் பீற்றுகிறீர். அவர் உங்களுக்கு குழந்தையாக தெரியவில்லையா?
  பெரியாரியல் செத்து விட்டது என்று சப்ப கட்டு கட்டுகிறீர்.
  நாங்கள் குழந்தையாக உங்களுக்கு தோன்றினாலும் உங்களை போன்ற பிற்போக்குவாதிகளை கேள்வி கேட்டு, பதிலில்லாமல் பல்லிளிக்கும் உங்களை அம்பலபடுத்தும் அறிவை பெரியாரியல் சொல்லிகொடுத்தது.
  இன்று பல இளைஞர்கள் பெரியாரியலை படிப்பதால்தான் இன்றும் வட மாநிலங்களில் நடக்கும் அளவிற்கு மதபிரச்சனை இங்கே இல்லை.
  தமிழர்களை மதவெறி பிரச்சனையிலிருந்து அரணாக காப்பது பெரியாரே! இதை மறுக்க முடியுமா?
  இன்னும் பெரியாரியல் அதிகமாகவே சமூகத்தில் தேவைபடுகிறது.உங்களை போன்ற பாசிச சக்திகளிடமிருந்து மக்களை மீட்க.

  <<<<>>>>

  புலி புல்லை திண்ணாது, புண்ணாக்கு திண்ணாதுன்னு வக்கனையா கடவுள் இல்லைனு பேசுறீங்க. நீங்கள் நாத்திகன், உங்க வீட்ல பஞ்சாங்கம் பார்க்கும் காலண்டர் இல்லைன்னுசொல்ரீங்க. ஆனா சிறு தெய்வ வழிபாடு வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
  நாங்க கடவுளே இல்லைனு சொல்றோம், ஆனா சிறு தெய்வ வழிபாட்டுக்கு மட்டும் நீங்கள் சிபாரிசு கேட்கிறீர்கள்.
  உங்கள் குல தெய்வத்த காப்பாற்றவா?
  சாதி அடையாலத்தை காப்பாற்றவா?
  பெரும்பாலும் குலதெய்வத்தை வைத்தே சாதியை தெரிந்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது. அதை தக்கவைத்து கொள்ளவா?

  இன்னும் சொல்ல போனால் தலித்கள் பெரும்பாலும் ஒடுக்கபடுவதே சிறுதெய்வ வழிப்பாடு பிரச்சனையில் தான்.

  <<<<>>>>

  மதிமாறன் அவர்களின் ”சிறுதெய்வ வழிபாடு” பற்றிய கட்டுரை உங்களை போன்ற எளிய மக்களின் ஆன்மீகத்தை பேசும் பார்பனிய படித்த மேதாவிகளை அம்மனமாக நிற்க வைக்கிறது. இன்னும் எத்தனை முறை உங்களை அம்பலபடுத்துவதோ தெரியவில்லை. பாஞ்சாலி போன்றே இருக்கின்றனர் உங்களை போன்ற தமிழின வாதிகள்.

  <<<<>>>>

  நாசரின் ”நான் முஸ்லீம் தான்.ஆனா ஊமைங்க” எனும் வசனம் போல் உள்ளது.

  <<<<>>>>

  அறிவுஜீவியே, மதம் என்று இருந்தால் அது எப்படி பகுத்தறிவாகும். இதற்கு புது பெயர் வேறு பகுத்தறிவு மதம்.
  தமிழ் இலக்கியத்தில் ”பகுத்தறிவு மதம்” என்று தேடி சொல்லுங்களேன் உங்களுக்கு கோடி புண்ணியாமாப் போகும். நீங்களா ஒரு பெயர வச்சுகிறது. இல்ல.யாரு கேட்க போகிறாங்க?
  கேக்கிறவன் கேணபயலா இருந்தா
  “பாண்டியன் பாராசூட்டுக்கு பறக்கும் போதே பஞ்சர் போடுவாராம்”.

  ஆசிவகத்தில் பகுத்தறிவு என்று இருந்தால் முருகன்,காளி போன்ற சிறுதெய்வ வழிபாடு மட்டும் விதிவிலக்கா? விதிவிலக்கிருந்தால் அது பகுத்தறிவா?

  மொழி பற்றிய விவாதத்திற்கு வருவோம்.
  நம் மொழியின் சிறப்பால் மக்களுக்கு பயனென்ன?????

 19. //உங்களைப்போன்ற சில வந்தேறி சிறுபாண்மையினர் பொறாமைப் படுகிறார்கள் என்பதால் நாங்கள் தமிழைத் தொலைத்துவிட்டு, ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்ன ஞாயமய்யா இது?//

  யோவ் சோமாறி யாரப்பார்த்து வந்தேறி என்று கூறுகிறீர்.

  இது போன்ற தனி நபர் வசவு மொழிகளால் பேசி உங்க முகத்த சுத்தி ”ஆரத்தி” எடுக்க எனக்கும் தெரியும். இருந்தாலும் தனிநபர் தாக்குதலை விடுத்து விவாதிப்பதே ”இணையதள” மரியாதை என்பதால் வேண்டாம் என்று நினைக்கிறேன். முதலில் நான் வந்தேறி என்று எந்த நாதாரி உங்களுக்கு சொல்லியதோ, அல்லது நான் தமிழை பெருமையாக பீற்றாமல் இருப்பதால், நான் வந்தேறியாக தான் இருப்பேன் என்று நீங்களே யூகி சேது போல் யூகித்து கொண்டீரோ தெரியவில்லை.

  //You are a baby! Before periyar we had Vallalar, who preached Suddha Sanmarkkam. So, periyar alone can not represent such works which had been there from time immemorial, in Tamil community.
  Siththarhal had done great deeds too.//

  குழந்தை என்று விளையாட்டில்,விவாதத்தில் சொல்வதும் ஒதுக்குவதும் உங்களை போன்ற மெத்த மெத்த படித்த மேதாவிகளுக்கு அழகல்ல!

  திருஞான சம்பந்தர் குழந்தையிலே அறிவு பாலை,ஆவின் பாலை குடித்துவிட்டார் என்று தமிழ் இலக்கியங்களில் பீற்றுகிறீர். அவர் உங்களுக்கு குழந்தையாக தெரியவில்லையா?
  பெரியாரியல் செத்து விட்டது என்று சப்ப கட்டு கட்டுகிறீர்.
  நாங்கள் குழந்தையாக உங்களுக்கு தோன்றினாலும் உங்களை போன்ற பிற்போக்குவாதிகளை கேள்வி கேட்டு, பதிலில்லாமல் பல்லிளிக்கும் உங்களை அம்பலபடுத்தும் அறிவை பெரியாரியல் சொல்லிகொடுத்தது.
  இன்று பல இளைஞர்கள் பெரியாரியலை படிப்பதால்தான் இன்றும் வட மாநிலங்களில் நடக்கும் அளவிற்கு மதபிரச்சனை இங்கே இல்லை.
  தமிழர்களை மதவெறி பிரச்சனையிலிருந்து அரணாக காப்பது பெரியாரே! இதை மறுக்க முடியுமா?
  இன்னும் பெரியாரியல் அதிகமாகவே சமூகத்தில் தேவைபடுகிறது.உங்களை போன்ற பாசிச சக்திகளிடமிருந்து மக்களை மீட்க.

  //நாங்கள் சொல்வது தமிழனின் சிறுதெய்வ வழிபாடு, சிவன், முருகன், மாயோன், காளி போன்ற தமிழரின் தொல்பழங்கடவுளர்களை அனுமதித்து, பார்ப்பனீய திரிபுகளை அம்பலப்படுத்தி, சுரண்டலை ஒழிப்பது தான்.//

  புலி புல்லை திண்ணாது, புண்ணாக்கு திண்ணாதுன்னு வக்கனையா கடவுள் இல்லைனு பேசுறீங்க. நீங்கள் நாத்திகன், உங்க வீட்ல பஞ்சாங்கம் பார்க்கும் காலண்டர் இல்லைன்னுசொல்ரீங்க. ஆனா சிறு தெய்வ வழிபாடு வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
  நாங்க கடவுளே இல்லைனு சொல்றோம், ஆனா சிறு தெய்வ வழிபாட்டுக்கு மட்டும் நீங்கள் சிபாரிசு கேட்கிறீர்கள்.
  உங்கள் குல தெய்வத்த காப்பாற்றவா?
  சாதி அடையாலத்தை காப்பாற்றவா?
  பெரும்பாலும் குலதெய்வத்தை வைத்தே சாதியை தெரிந்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது. அதை தக்கவைத்து கொள்ளவா?

  இன்னும் சொல்ல போனால் தலித்கள் பெரும்பாலும் ஒடுக்கபடுவதே சிறுதெய்வ வழிப்பாடு பிரச்சனையில் தான்.

  //எளிய மக்களின் எளிய ஆன்மீகத்தை கொச்சைப் படுத்தாமல், அவர்கள் அதைவைத்து எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை மட்டும் தௌிவுபடுத்தி போராடுவோம்!//

  மதிமாறன் அவர்களின் ”சிறுதெய்வ வழிபாடு” பற்றிய கட்டுரை உங்களை போன்ற எளிய மக்களின் ஆன்மீகத்தை பேசும் பார்பனிய படித்த மேதாவிகளை அம்மனமாக நிற்க வைக்கிறது. இன்னும் எத்தனை முறை உங்களை அம்பலபடுத்துவதோ தெரியவில்லை. பாஞ்சாலி போன்றே இருக்கின்றனர் உங்களை போன்ற தமிழின வாதிகள்.

  //தெலுங்கு என்பது பார்ப்பானின் மொழி. அது “திராவிடத்” தெலுங்கனின் மொழி அல்ல.//

  நாசரின் ”நான் முஸ்லீம் தான்.ஆனா ஊமைங்க” எனும் வசனம் போல் உள்ளது.

  //ஆசீவகம் என்ற ஒரு பகுத்தறிவு மதம் ஒன்று இருந்தது என்பது பலருக்குத் தெரியாது//

  அறிவுஜீவியே, மதம் என்று இருந்தால் அது எப்படி பகுத்தறிவாகும். இதற்கு புது பெயர் வேறு பகுத்தறிவு மதம்.
  தமிழ் இலக்கியத்தில் ”பகுத்தறிவு மதம்” என்று தேடி சொல்லுங்களேன் உங்களுக்கு கோடி புண்ணியாமாப் போகும். நீங்களா ஒரு பெயர வச்சுகிறது. இல்ல.யாரு கேட்க போகிறாங்க?
  கேக்கிறவன் கேணபயலா இருந்தா
  “பாண்டியன் பாராசூட்டுக்கு பறக்கும் போதே பஞ்சர் போடுவாராம்”.

  ஆசிவகத்தில் பகுத்தறிவு என்று இருந்தால் முருகன்,காளி போன்ற சிறுதெய்வ வழிபாடு மட்டும் விதிவிலக்கா? விதிவிலக்கிருந்தால் அது பகுத்தறிவா?

  மொழி பற்றிய விவாதத்திற்கு வருவோம்.
  நம் மொழியின் சிறப்பால் மக்களுக்கு பயனென்ன?????

 20. //நான் தொடுத்த ஆழமான கேள்விகளை எதிர்கொள்ளாமல் பூனை வந்துவிட்டது, நண்டு வந்துவிட்டது, யானை வந்துவிட்டது, எலி வந்துவிட்டது என்ற அல்பவாதங்கள் தான் உங்களின் பகுத்தறிவின் ஆழமா? நான் எனது இளம்பிராயத்திலிருந்தே ஒரு நாத்திகவாதிதான். எனது வீட்டில் தென்மொழி நாட்காட்டி உண்டு. தி. க. நாட்காட்டி உண்டு. பஞ்சாங்கம் இல்லை. நேர, காலம் பார்ப்பதில்லை. பூஜை செய்வதில்லை.//

  இளம்பிராயம் முதல் நாத்திகவாதியாக இருக்கிற நீங்கள் ”கடவுள் என்கிற கோட்பாடு ஓரளவுக்கு இருப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது” என்று சொல்லுவதுதான் நீங்கள் இளம்பிராயம் முதல் பின்பற்றிவருகிற நாத்திகவாதத்தின் ஆழமா?

  //எனது நன்பர் கிட்டத்தட்ட 5 கோடி பெருமானமுள்ள ஜப்பானிய, அதி தொழில்நுட்ப எந்திரம் வாங்க (நடுவனரசு ஆய்வகம) ஜப்பான் சென்றார். இவர் முன்னாலேயே அந்த எந்திரத்தை அவர்கள், அவர்களின் முறையில் சில சடங்குகள் செய்து, சில ஜப்பானிய சுலோகங்கள் சொல்லித்தான் அந்த எந்திரத்தை ஏற்றுமதி செய்தனர். ஜப்பானியன் சாதிக்காததையா நீர் சாதித்தீர்? ஆன்மீக சிந்தனை உலகளாவியது. எனக்கு அது தேவையில்லா விட்டாலும் சாமானிய மனிதர்களுக்கு அது தேவை. அது வளர்ந்து வருவதும் நாம கண்கூடாகப் பார்க்கிறோம்.//

  மந்திரம் சொல்லுவது மூடநம்பிக்கைதான். இல்லை என்று சொல்லவில்லை. எங்கேயோ லத்தீன் அமெரிக்காவில் மையம் கொண்ட எச்1 என்1 காய்ச்சலால் இந்தியாவிலும் 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளது போல இங்கிருக்கிற அதே மூடநம்பிக்கை ஜப்பானிலும் இருக்கிறது. இதில் நோக வேண்டியது மந்திரம் சொல்லி சடங்கு செய்த ஜப்பானியரையே அன்றி என்னை அல்ல. ஏனெனில் எவருடைய பதிவிலும் தமிழ்த்தேசியத்தைக் கொண்டு அதைச் சாதிக்கலாம் இதைச் சாதிக்கலாம், ஆதித் தமிழில் அங்குலத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கு பெயர் இருந்தது என்றெல்லாம் நான் பின்னூட்டம் எழுதியவனில்லை. ஜப்பானியன் சாதிக்காததையா நீர் சாதித்தீர் என்று கேட்கிற அதே வேளையில் தமிழ்த் தேசியத்தைக் கொண்டு நீங்கள் சாதித்தது என்ன என்று சுயவிமர்சன நோக்கில் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமே?

  //தலித்தைப் பார்த்தாலே தீட்டு என்று சொன்ன பாரப்பானின் காலில் படித்த தலித்துகள் இன்று விழுந்து ஆசி வாங்குமளவுக்கு சென்றது உங்களின் வரட்டுத்தனமான ஆன்மீகம் சார்ந்த நிலைப்பாடு தான். இன்று RSSல் இருக்கும் உருப்பினர்களில் மிகையானவர்கள் தலித்துகளே! உங்களின் வரட்டு நிலைப்பாடுகளால், யாரை எதிர்க்க கடவுளைப் பெரியார் எதிர்த்தரோ, அவர்களின் பின்னால் இன்று தலித்துகளும் அணிசேர்கின்றனர் என்பது உங்களின் வரட்டு, மர மண்டைகளுக்கு என்றும் எட்டாது.//

  பார்ப்பான் கிடா வெட்டுகிற கோயிலிலும் மணியாட்ட வந்ததால்தான் படித்த தலித் மக்கள் (தலித் என்ற சொல்லுடன் மக்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். வெறுமே தலித்துகள் என்று சொல்லுவது ஆடுகள் மாடுகள் என்று சொல்லுவது போன்ற தொனியில் தலித் மக்களையும் குறிப்பிடுவதாக படிக்கிறவர்களுக்குத் தோன்றும்) பார்ப்பனன் காலில் விழுந்து ஆசிவாங்குகிற நிலைமை. அதற்காகத்தான் சர்க்கரைப் பொங்கல் படைக்கிற கோயிலுக்குள்ளும் தலித் மக்கள் பூசாரிகளாக நுழைய வேண்டும் என்று சொல்லுகிறோம். தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சொல்வது கூட கலகத்தின் குறியீடாகத்தான். கோயில்கள் தலித் மக்களின் அத்தியாவசிய தேவை என்று சொல்லவில்லை. நிற்க.

  //ஒரு ஆன்மீக சிந்தனை என்பது அடிப்படையில் தவறானதல்ல. சாதி, இன, நிற பேதமற்ற, சுத்த சன்மார்க்கத்தை வலியுறுத்திய வள்ளலார் அவர்கள் ஒரு ஆன்மீக வாதியே! அவர் ஜோதியை வழிபடச் சொன்னார். ஜோதி புனிதமானது. உலகை வாழ்விப்பது. அக்னி (தீ) புனிதமானதல்ல. அது பார்ப்பான் சொன்னது. (”ஆரியமும் அக்னியும்” என்று ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். கீற்றில் வௌிவரும்). வள்ளலார் ஒரு உண்மையான பகுத்தறிவுவாதி. சைவ நம்பிக்கையில் தொடங்கி, படிப்படியாக, ஒரு நாத்திகவாதியாக மலர்ந்தவர். இறுதியாகச் சொன்னதுதான் ஜோதி வழிபாடு. ஆக, அவர் ஒரு நேர்மையான மனிதர். பகுத்தறிவுவாதி. சாஸ்திரத்திற்கெதிராகவும், சைவத்திற்கெதிராகவும் மாறியதால்தான் சுரண்டல் கும்பல் அவரைக் கொன்றது.//

  வள்ளலாரை விடுங்கள், அவர் ஒரு கலகக்காரர் என்பதில் எனக்கு எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. இங்கே எனக்கு ஒரு ஐயம் தகதக என்று கொழுந்து விட்டு எரிகிற அக்கினியை வழிபடுவது மூட நம்பிக்கை என்றால் கைக்கடக்கமாக சின்னதாக எரியும் ஜோதியை வழிபடுவதும் மூடநம்பிக்கையா இல்லையா? ஏனென்றால் மனிதன் மனிதனை வழிபடுவதையே மூட நம்பிக்கை என்று எண்ணுகிற எனக்கு, மனிதன் தீக்குச்சியைக் கிழித்து ஏற்றுகிற சுடர் மனிதர்களின் வழிபாட்டுக்குரியது என்று சொல்லுவதை நம்ப முடியவில்லை. எப்படி மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனமோ, அதே போலதான் வெளிச்சத்திற்காக, உணவு சமைப்பதற்காக பயன்படுத்துகிற நெருப்பும். இதற்காக எல்லாம் அதை வழிபடத் தேவையில்லை. கீற்றில் உங்கள் கட்டுரை வெளிவந்த பிறகு அதைக் குறித்தும் விவாதிப்போம்.

  //பெரியாரிசம் தோற்றுவிட்டது என்று சொன்ன நான், வே. மதிமாறனின், அறிவு நாணயமில்லாத நிலைப்பாடுகளால் தான். பெரியாரோடு குன்றக்குடி அடிகளார், திரு. வி. க. போன்ற ஆன்மீகவாதிகள் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருந்ததாக எனக்கு நன்பர்கள் சொன்னார்கள். ஆனால், பெரியாரை வரட்டு சிந்தாந்தவாதியாக வாழவைத்துக் கொண்டுள்ளவர்கள் உங்களைப் போன்ற அரைவேக்காடுகள் தான்.//

  மதிமாறனின் அறிவுநாணயமின்மையைப் பேசுவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், “Dr. V. Pandian” என்ற பெயரில் மதிமாறனின் தளத்தில் வந்திருக்கக் கூடிய பின்னூட்டங்களைத் தொடர்ச்சியாகப் படித்துப் பார்க்கிறவர்களிடம் உங்கள் அறிவு நாணயம் இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களில் பல்லை இளிக்கிறதே!!! இதுக்கு என்ன பண்ணலாம்? ஒரு பேச்சுக்கு மதிமாறன் அறிவு நாணயமே இல்லாமல் நடந்துகொண்டதாக வைத்துக் கொள்வோம். மதிமாறனின் “அறிவு நாணயமின்மைக்காக”, மதிமாறனை யாரென்றே அறியாத பெரியாரை, அவருடைய சித்தாந்தத்தை தோற்றுவிட்டது என்று நீங்கள் சொல்வதிலிருந்து உங்களிடம் நாணயம் இருக்கிறதா என்ற ஐயம் எழும்பவில்லை, மாறாக நாணயத்தோடு நீங்கள் சேர்த்து சொல்லுகிற இன்னொன்று இருக்கிறதா என்றுதான் ஐயுற வேண்டியுள்ளது.

  நான் அரைவேக்காடு என்பதில் எனக்கே எவ்வித ஐயமும் இல்லாத போது உங்களுக்கும் எந்த ஐயப்பாடும் தேவையில்லை. வேகாதவையும் அரைவேக்காடுகளுமே வெந்து உணவாகிப் பயன் தரத் தக்கவை. ஆனால் மறந்துவிட வேண்டாம், வெற்றுத் தமிழ்த் தேசியம் என்பது குழைந்து வீணாகிப் போன பண்டம்.

  //பெரியார் சாதித்தது எவ்வளவோ! தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்னடிமைத்தனம், ஜாதி, இட ஒதுக்கீடு என்று பெரியார் சாதித்தது ஏராளம். ஆனால், அவரையும் மீறி அன்மீகம் இன்று வளர்ந்து வந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதை மீளாய்வு செய்து புதிய முடிவுகளை மேற்கொள்வதும், தேவையான மாற்றங்களை ஏற்பதும் தான் பகுத்தறிவின் வழி.//

  ஆம், பெரியார் காலத்தில் வாந்தி பேதி, அம்மை, ஷயரோகம் போன்றவையே ஆகப் பெரிய வியாதிகளாக இருந்தது. இன்று எச்.ஐ.வி., எப்படைட்டிஸ் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. அது போன்ற வளர்ச்சிதான் நீங்கள் குறிப்பிடுகிற ஆன்மீகத்தின் வளர்ச்சியும்.

  //ஆனால், உங்களைப்போன்ற பெரியார் கண்மூடி “பக்திமான்”களுக்கும், பெரியாரிய திரிபுவாதிகளுக்கும், “அடிவருடிகளுக்கும்” அது எட்டாது.//

  எட்டாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அந்தக் கனியைப் பறிக்க முயன்று தோற்றுப் போய் நாங்கள் புளிக்கிறது என்று சொல்லவில்லை. பறித்துத் தின்றுவிட்டோமே என்பதற்காக நன்றாக இருக்கிறது என்று சொல்லிவருகிற உங்களை அம்பலப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.

  //கடவுளை ஒரு ஏய்க்கும் கருவியாகப் பயன்படுத்தும் அயோக்கியர்களின் மீது தான் நமது குறி இருக்க வேண்டும். இன்று தொலைக்காட்சி விளம்பர நிகழ்வுகள் மூலமாக, எவ்வளவு ஏமாற்றகிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டு தானே உள்ளீர்கள். அதை எதிர்கொள்ளுங்கள் முதலில். பால் தினகரன் வகையறாக்களுக்கும், சாய்பாபா வகையறாக்களுக்கும் கூடும் கூட்டத்தைப் பார்த்து, உத்திகளை மாற்றவேண்டிய தேவையை உணருங்கள்.//

  //கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தால் சுரண்டல்காரர்களை ஒழிக்கமுடியும் என்ற கருத்து, ஒரு தோற்றப்போன கருத்தாக்கம். எனவேதான் உத்தியை மாற்றவேண்டி கடப்பாடு உள்ளது.//

  ஏய்ப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் கடவுள். எனக்கும் மதிமாறனுக்கும் திருப்பதியில் வரிசையில் நிற்பவர்களும் ஒன்றுதான், பால் தினகரன் கூட்டத்தில் கூடுகிறவர்களும் ஒன்றுதான், நாகூர் தர்காவில் உருட்டுகிற எலுமிச்சம்பழத்தைப் பொறுக்க ஓடுகிறவர்களும் ஒன்றுதான். ”அவனை நிறுத்த சொல், நான் நிறுத்துகிறேன்” என்ற சினிமா வசனத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து எங்கள் உத்தி ஒன்றுதான். சாதி ஒழியவேண்டும், சாதிக்கு வேராக இருக்கும் மதம் ஒழிய வேண்டும், மதத்துக்கு வேராக இருக்கும் கடவுள் ஒழிய வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. ”சாதியும் மதமும் ஒழிய வேண்டும், ஆனால் கடவுள் ஒழியக் கூடாது” என்று சொல்லுவதற்கும், நேற்று நான் உண்ட சோற்றில் கொஞ்சம் செரிக்கவில்லை, மலம் கழித்ததும் அதில் முழுசாக இருக்கிற சோற்றுப் பருக்கைகளை எடுத்து இன்று சாப்பிட்டுக் கொள்கிறேன் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  //பசித்தால் புலி புல் திண்ணாது. பாம்பு, பழம் திண்ணாது. இவைகள் வாழ, மற்ற உயிரினங்கள் சாகவேண்டும் என்பது தான் இயற்கையின் நியதி. ஆக, இப்படிப்பட்ட ஒரு உலகையா இறைவன் படைத்திருக்க முடியும்? எனவே இறைவன் என்பது இல்லை, இல்லவே இல்லை என்பது தான் உண்மை. ஆனாலும், இந்த மக்களுக்கு இறைமை என்ற ஒன்று தேவைப்படுகிறது. இந்த உண்மையை நீங்கள் முறையாக எதிர்கொள்ள மறுப்பதால், பாரப்பானின் காலில் இன்றும் நமது மக்கள் கிடக்கின்றனர். இந்த அப்பட்டமான வரலாற்று உண்மையை எதிர்கொள்ளத் தெரியாத மூடர்களாகத்தான் இன்றய பெரியாரியவாதிகள் உள்ளனர். உங்களின் வரட்டு நிலைப்பாடுகளால் பார்ப்பான் வாழ்கிறான். அவனின் இந்து மதம் வாழ்கிறது. அது தான் நீங்கள் சாதித்தது!

  நாங்கள் சொல்வது தமிழனின் சிறுதெய்வ வழிபாடு, சிவன், முருகன், மாயோன், காளி போன்ற தமிழரின் தொல்பழங்கடவுளர்களை அனுமதித்து, பார்ப்பனீய திரிபுகளை அம்பலப்படுத்தி, சுரண்டலை ஒழிப்பது தான். பார்ப்பனீய திரிபு என்பது, இக்கடவுள்களுக்கு பல பெண்டாட்டிகளைக் கட்டுவித்து, இக்கடவுள்களுக்கு பாலியல் ஒழுக்கக்கேடுகளைக் கற்பித்து, அதன் மூலம் அதை வழிபடும் மக்களையும் ஒழுக்கங்கெட்டவர்களாக மாற்றி, அதன்மூலம் நம்மக்களின் முன்னளேற்றத்தைக் கெடுத்து, என்றென்றும் அடிமைப்பட்ட, வளம்குன்றிய, மூடநம்பிக்கையில் சிக்குண்ட மக்களாக நம்மை மாற்றி, வஞ்சனையில்லாமல் சுரண்டுவதுதான் பார்ப்பன இந்து மதம் என்பது. இந்தக்குட்டை உடையுங்கள்!//

  எங்களின் மூடத்தனம் பார்ப்பானை வாழவைக்கிறது என்று சொல்லுகிறீர்கள், நிஜத்தில் உங்களின் மடத்தனத்தால் (ஆன்மீகம் மற்றும் சிறுதெய்வ வழிபாடு) பார்ப்பான் அமோகமாக வாழ்கிறான். பார்ப்பனரல்லாத தமிழரின் சிறுதெய்வங்களின் ஒழுக்கத்தைச் சிதைத்துவிட்டார்கள் என்று கூப்பாடு போடுகிறீர்களே, பிரம்மன் தன் மகளுடனேயே பாலுறவு கொண்டவன் என்று கூடத்தான் சொன்னார்கள், எனின் பிரம்மன் என்ன தமிழர்கள் வழிபட்ட சிறுதெய்வமா? ஆர்.எஸ்.எஸ். சில் தலித் மக்கள்தான் மிகுதியாக இருக்கிறார்கள் என்கிறீர்களே, ஏன் அப்படி ஆனது என்று என்றைக்காவது யோசித்ததுண்டா? சிறு தெய்வ வழிபாடு என்ற கூரையின் கீழ் தாழ்த்தப்பட்டவர்கள் திரண்டனர், பார்ப்பான் நாலு பக்கமும் சுவரெடுத்து அவர்களை சிறைபிடித்துவிட்டான். ”தாழ்ந்த ஜாதி, அரசியலை அறியாதவன்” என்றெல்லாம் சொல்லப்பட்ட மராட்டியன் சிவாஜி தொட்டு பெரியார் சிலையை உடைத்த அர்ஜுன் சம்பத் வரை இப்படிப் போய் விழுந்தவர்கள்தான்.

  //எளிய மக்களின் எளிய ஆன்மீகத்தை கொச்சைப் படுத்தாமல், அவர்கள் அதைவைத்து எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை மட்டும் தௌிவுபடுத்தி போராடுவோம்!//

  எளிய மக்களின் எளிய ஆன்மீகம் எந்த வகையில் அவர்கள் எளியவர்களாகவே இருப்பதை மாற்றும் என்பதையும்தான் சொல்லுங்களேன், தெரிந்துகொள்ளுகிறோம்.

  ——————————————-
  இந்தப் பின்னூட்டத்தை எழுதாமலிருந்திருந்தால் கூட நீங்கள் இப்படி அம்பலப்பட்டு நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. சங்கராச்சாரி கூட ஜாதியக் கொடுமை கூடாது என்று தான் சொல்லுவான். இழுத்து நிறுத்திப் பாத்தாத்தான் அவன் பசுமாட்டுக் காலிடுக்கில் தாழ்த்தப்பட்டவனைப் பார்த்ததெல்லாம் வெளியே வரும். இந்த வகையில்தான் பூனைக்குட்டி அல்ல யானையே கோணிக்குள்ளிருந்து வெளியே குதித்திருக்கிறது என்று எழுதினேன். தொடர்ந்தும் என் வாயாலேயே நான் அம்பலப்படுவேன் என்று சொல்வீர்களே ஆனால் இன்னும் இன்னும் எழுதுங்கள். தோழர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  நானுந்தான் சொல்றேன் இப்போதைக்கு இது போதும்!

 21. நன்றி தோழர்களே! நமது வாதங்களையும் எதிர் வாதங்களையும் வைத்துவிட்டோம். இந்த தளத்திற்கு வருபவர்கள் சீர் தூக்கிப் பார்க்கட்டும்.

  எனது கருத்து மாற்றம் ஏற்பட்டது சில மாதங்களுக்கு முன்புதான். சொல்கிறேன்.

  சென்னையின் புறநகர் ஒன்றின் தி. க. தலைவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது திருமணம் தி. க. பாங்கில் தான் நடைபெற்றது, முன்பு.

  அவரும் அவரது தம்பிகளும், தாயாரும் சேர்ந்து சொந்த வீடு கட்டினர். அதற்கு அழைக்க வந்த அவர் சொன்னார். நான் தி. க. தோழர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஏனெனில் கணபதி ஹோமம் செய்யப் போகிறவர் ஒரு பிராமணர் தான். எவ்வளவு சொல்லியும் எனது தாயாரும், பெண்களும் கேட்க மறுக்கின்றனர். எனது தாயின் பணமும் உள்ளதால் என்னால் மீற முடியவில்லை என்று அலுத்துக்கொண்டார்.

  (இதற்கு முன் இவரின் தம்பியின் திருமணம் கோயிலில் ஹிந்து முறையில் தான் நடக்கப்போகிறது என்று, எங்களை வரவேற்புக்கு மட்டும் அழைத்தார். பெண் வீட்டாரின் நெருக்கடியாம்)

  நாங்கள் குடிபுகும் நாளன்று செல்லாமல், வேறொறு நாளில் சென்றோம். அங்கு அவர் வேறொறு அதிரச்சியும் கொடுத்தார். அந்த பிராமணர் காலில் எல்லோரும் விழுந்து ஆசி வாங்கினார்கள். என்னையும் விழச் சொல்லிக் கட்டாயப் படுத்தினார்கள். நான் மட்டும் மறுத்துவிட்டேன் என்றார்.

  சென்னை போன்ற நகர, தி. க. தலைவர் வீட்டிலேயே இந்தக் கதி!

  இந்த நபரைச் சந்திக்க விழைந்தால் சொல்லுங்கள் தோழர்களே! உங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.

  சித்தாந்தப் பிசாசுகளுக்கு இதெல்லாம் புரியாது.

  விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை! கெட்டுப்போகிறவர் விட்டுக் கொடுப்பதில்லை!

 22. டாக்டர் பாண்டியன்,
  நீங்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகறீர்கள். உங்கள் விளக்கங்கள், உங்களை மேலும் குழப்பமானவராக, விசயங்களை மேலோட்டமாக புரிந்து கொள்பவராக அடையளாப்படுத்துகிறது.

  நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீ்ர்கள் என்று கேட்டால், நீ ஏன் முருகன் என்று கடவுள் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள், இரண்டும் ஒன்றா?

  சரி ஒரு கடவுள் நம்பிக்கையாளர் உங்களை கேட்கிறார் தமிழ்உணர்வாளராக இருக்கிற நீங்கள் ஏன் உங்கள் பெயரை Dr. V. Pandian என்று ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

  ///அடையளங்காட்டியதால் சிக்கல்களையும் சந்திப்பவன் நான். ஒரு உண்மையான போராளி! // என்று தற்புகழ்ச்சியில் மிதக்கிறீர்கள்.

  ஆனால் ஒரு முறை தோழர் வேந்தன், சாதிய உணர்வாளராக, தலித் மக்களின் எதரியாக, தேசியத்தை வலியுறு்த்திய முத்துராமலிங்கத் தேவரை பற்றி ஏன் விமர்ச்சிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு…. பதில் சொல்லமால் நழுவிய ஓடிய நீங்கள்தான்
  /// ஒரு உண்மையான போராளி! // என்று உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
  ஆனால் பெரியாரை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இதுதான் பெரியார். அவரிடம் ஜனநாயகத் தன்மையும் அறிவு நாணயமும் இருந்ததால் அவரை உங்களால் விமரிச்சிக முடிகிறது.

  உங்களிடம் அறிவு நாணயம் இல்லாததாலும், சாதிய கண்ணோட்டம் இருப்பதாலும்தான் உங்களால் முத்துராமலிங்கத்தேவர் போன்ற சாதி வெறியர்களை, இந்திய தேசிய வெறியர்கைள கண்டிக்க முடியவில்லை.
  பெரியார் ஒன்றும் தவறாக சொல்லிவில்லை. உணர்ச்சவசப்படாமல் எதையும் அறிவு கொண்டு பார் என்றார். உங்களிடம் நாங்களும் அதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 23. முருகன்!
  காலில் முள்படும்போது நம்மையும் அறியாமல், முற்றும் உணர்வால் மட்டுமே சடாரென்று காலைத்தூக்கி செயல்படுகிறோம். Reflex Action. ஆபத்தில் உணர்வுகள் அவசியம். சற்று உணர்ச்சி வயப்படுதலில் தவறில்லை என்பதும் எனது கருத்து. ஆனால், முற்றும் நான் உணரச்சிகளுக்கே விட்டுவிடுவதில்லை.

  தேவர் சமூகம் பற்றிய உங்களின் கேள்வி புதியதல்ல. நான் நல்ல விளக்கத்தைக் கொடுத்துவிட்டேன். ஆனால், அதை மறைத்துப் பேசுவது அறிவு நாணயமா? சட்டக்கல்லூரி அடிதடியில் தாழத்தப்பட்ட சமூகத்தினர் அடித்ததை ஆதரித்து எழுதினேன், கீற்றில். அடுத்தவனுக்கு நம்மீதுள்ள அச்சம் தான் நமது பாதுபாப்பென்று. எப்போதும் அடிவாங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் திருப்பியடித்தது தவறல்ல என்று எழுதினேன். இதை இந்த பக்கங்களிலும் பதிவு செய்துள்ளேன். தேடிப்பாரும்.

  ஆனால், அவர்களைத் திட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அதனால், திருந்துகிற தேவர்களும் திருந்த மாட்டார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய? நாமெல்லாம் ஒன்றாய், அன்பாய் வாழத்தான் இந்தப்பாடு. வெறுப்பைத் தக்கவைத்துக்கொள்ள அல்ல. சாதியைச் சொல்லாமல் குற்றங்களைக் கண்டிக்கிறோம். குற்றங்களைக் கண்டிக்காமல் இருப்பதில்லை.

 24. தமிழா பாண்டியா, முருகா.. இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தார் மதிமாறன்.. அது சரியாக நடக்கிறது பார்த்தீர்களா?.. மதிமாறன் சூழ்ச்சி உங்களுக்கு தெரியாது… எங்களுக்கு தெரியும்.. தயவு செய்து உங்கள் விவாதத்தை நிறுத்திவிட்டு மதிமாறன் என்ன சொல்ல வருகிறார்.. ஏன் இதை சொல்கிறார்.. அவருக்கு பின்னால் யார் இருக்கிறார்.. என்பதை கவனியுங்கள்…

 25. வேந்தன்!
  உங்களின் தமிழ் எதிர்ப்பால் எனது ஊகம்தான் தோழரே! எனது நெருங்கிய பழைய தோழர்களில் ஒரு தெலுங்கு நாயுடு, ஒரு கன்னட தேவாங்கு செட்டி உள்ளனர். இவர்கள் தமிழ் என்று நீ சொல்லவே கூடாது என்று என்னை மிரட்டுகின்றனர் என்றே சொல்லவேண்டும். அது எனக்கு ஒரு பேரதிர்ச்சி. அவர்கள் தமிழர்கள் என்றே நான் எண்ணினேன். நான் அவர்களை வித்தியாசமாகப் பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் வித்தியாசப்பட்டு நிற்பதோடல்லாமல் என்னை மிரட்டுகின்ற அளவுக்கு தமிழின் மீது காழ்ப்பு கொண்டுள்ளனர். அதில் அந்த தெலுங்கு நபர் ஒரு R.D.O. அந்த மமதை அவரின் பழக்கத்தில் தெரிகிறது. யார் ஊரில் வந்து யாரை மிரட்டுவது? அனைவரும் அப்படியல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட கனிசமான சதவீதத்தினர் அப்படித்தான்.

  நிற்க.

  மொழியின் பயன் என்ன என்று கேட்கும் உங்களைப்போன்ற அதிமேதாவிகளிடம் பேசிப்பயன் என்ன தோழரே! இப்படி ஒரு அபத்தக் கேள்வியா?

  நீங்கள் யார்?

  நான் மலையமான் (உடையார்) வகுப்பில் பிறந்த தமிழன். எனக்கு சாதியில்லை. என்னை நான் அடையாளங் காட்டியுள்ளேன். பெரும்பாலோரது கருத்துக்கள் அவர்களின் பின்புலம் சார்ந்தது தான். என்னிடம் அப்படி இல்லை. வேண்டுமானால் 99% என்று சொல்கிறேன்.

  நீங்கள் யார்?

 26. விஜய்!
  “மறந்துவிட வேண்டாம், வெற்றுத் தமிழ்த்தேசியம் என்பது குழைந்து வீணாகிப் போனப் பண்டம்” என்று பதிவு செய்துள்ளீர்கள்.

  ஈழத்திலே எம்மக்களை இந்த தேசம் இப்படிக் கொடூரமாக அழித்த பின்னும் இப்படி ஒருவர் எழுதுகிறார் என்றால் இவருக்கு இருக்கும் திணாவெட்டு எவ்வளவு என்று கேட்கத்தோன்றுகிறது.

  உண்மையாகவே கேட்கிறேன் நீங்கள் யார்? இவ்வளவு குரூரமா?

  நாசகாரர்களே! உங்களைக் கெஞ்சி தமிழ்த்தேசியம் அமையப்போவதில்லை!

  அது அமைந்தே தீரும்! காலம் கணியும்! களமிறங்கி விட்டோம்! எங்களை முழுமையாக அதற்கு அற்பணிக்கிறோம்!

 27. திரு. பாண்டியன், நீங்கள் திட்டமிட்டு விவாதத்தை திரும்புகீறீர்கள். ஈழ மக்களின் துயரங்களை உங்களைப் போன்ற அற்பவாதிகளின் முட்டாள்தனத்திற்கு துணை சேர்த்துக்கொள்ளாதீர்கள்.

  உண்மையில் நீங்கள் யார்? உங்களுககு ஏன் இவ்வளவு குரூரம்?

  உங்களைப் போன்றவர்ர்களாலும், வெறும் வாய் சவடால் பேர்வழிகளால்தான் துரோகிகளாலும்தான் ஈழ மக்களும், விடுதலைப் புலிகளும் பாதிக்கப்பட்டார்கள்.

  இந்த விவாதத்தில் உங்களுககு துணை சேர்ப்பதற்கு, ஈழ மக்களின் துயரங்களை பயன்படுத்தாதீர்கள். இது அநாகரீகமானது. அதை வைத்து ஓட்டு கேட்டவர்களை விட கேவலமாக இருக்கிறது உங்கள் செய்கை.
  பெரியாருக்கு எதிரான உங்களின் சாதி உணர்வுககு தமிழ் தேசியம் என்று சொல்வது போல் அறுவறுப்பாக இருக்கிறது.
  உங்களின் இந்த செய்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

 28. திரு. பாண்டியன், ஈழ மக்களின் துயரங்களை பற்றி பேசவோ, விடுதலைப் புலிகளைப் பற்றியும் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி பேசவோ உங்களுக்கு அறுகதை இல்லை. உங்களைப் போல் அவர்கள் தமழர்களுக்குள் இருக்கிற பிற மொழி பேசுகிறவர்களை இழிவு படுத்துகிறவர்கள் அல்ல. அவர்கள் தமிழகத்தில் பெருமளவில் நமபுவது வைகோவைதான். அவர் உங்கள் மொழியில் சொன்னால், தெலுங்கன்.

  உங்களைப் போன்வர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி ஆதரவாக பேசி அவரை கொச்சை படுத்தாதீர்கள்.

 29. பாக்கியராசன் அவர்களே!
  இவர்களைத் தமிழர்களாக வென்றெடுக்கவே முயற்சி! ஆனால், தீர்மானமாக இருப்பவர்களை வென்றெடுக்க இயலாது, என்பது புரிகிறது.

  மதிமாறனுக்குப் பின்னால் யாருள்ளார் என்று கேட்டுள்ளீர். இதோ, ஒரு சுந்தரத் தெலுங்கர் சேர்ந்துள்ளார் பாருங்கள்!

  சில காலம் கழித்துப் பார்ப்போம் தோழரே!

  முற்றும்!

 30. அய்யா மதிமாறன் அவர்களே!
  ஒரு பெரியாரியவாதி
  என்னும் முறையில் தோழர் என்று தங்களை அழைக்க
  உடன்பாடு குறைந்துகொண்டே வருகிறது.
  தந்தை பெரியாரின் மொழி பற்றிய பார்வை
  குறித்து தோழர் கவியின் ஆய்வுரை
  (முதலில் நீங்கள் பரிந்துரைத்ததால்
  சிறிது பயமாக இருந்தாலும்) தோழரின் முகவுரை
  மிக சிறப்பாக இருப்பதால் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  நிற்க!

  ஏற்கனவே நாம் கூறியிருந்தது போல சமீப பதிவுகளில்
  தொடர்ச்சியாக நீங்கள் அள்ளி வீசும் அபத்தங்கள்
  போல இந்தப் பதிவிலும்,
  //”தமிழ் மொழியை தாய்மொழி என்பதும்,
  அதைப் புனிதமாக நினைக்கும்…..,
  ——
  ——
  சில பெரியாரிஸ்டுகளிடமும் இருக்கிறது”//.
  என்று அள்ளி வீசியிருக்கிறீர்கள்.
  ஆமாம்!! என்ன தமிழை தாய் மொழி என்று
  கூட பெரியாரியவாதிகள்
  அழைக்கக் கூடாதா என்ன?

  தாய் மொழி என்பதற்கான அறிவியல்
  காரணங்களைக் கூட விட்டு விடுவோம்!
  வேறெப்படி அழைக்கலாம்?

  பார்ப்பான் சொன்னது போல “நீச பாசை” என்று கூறலாமா!
  அல்லது,

  கட்டிய மனைவியை பார்ப்பானுக்குக் கூட்டிக் கொடுத்து,
  பூட்டிய வீட்டிற்கு காவல்
  காத்து, தட்டிக் கேட்டவர்களை எட்டி உதைத்து
  தள்ளிய இயற்பகை நாயனார் என்கிற களவாணி
  பேசிய மொழி என்பதால் களவாணி மொழி
  என்று கூறலாமா? அல்லது,

  அறுபது ஆண்டுகளாக தமிழ், தமிழன்,
  அண்ணா நாமம் வாழ்க!
  அய்யாவுக்கு நாமம் போடுக!
  என்று அரசியல் அடுக்கு மொழி பேசி, அடுத்துக் கெடுத்து,
  ஆட்சிக்கு வந்தவுடன் பணத்துக்காக, பதவிக்காக,
  பரம்பரைக்காக தன் இனம், குஞ்சு, குழந்தைகளுடன்
  பார்ப்பனியத்தால் கொத்துக் கொத்தாக பக்கத்து நாட்டில்
  கொல்லப்பட்டதை கண்டும் காணாமல் காட்டிக்
  கொடுத்த கயவர் பேசும் மொழி என்பதால்
  கயவர் மொழி என்று அழைக்கலாமா! அல்லது,

  முப்பது ஆண்டுகளில் எழுபதாயிரம்
  மாவீரர்கள் தங்கள் ஊனை,
  உயிரை கொடுத்து, வெடித்து, தான் கொண்ட கொள்கைக்காக
  அசையா உறுதியுடன், பக்கத்து வீட்டு இந்தியப்
  பார்ப்பானையும், கோடி வீட்டு அமெரிக்கப் பார்ப்பனையும்,
  சீன, பாகிஸ்தானப் பயங்கரவாதிகளையும்
  எதிர் கொண்டு இறுதி வரை போராடிய மாவீரர்கள்
  மொழி என்று அழைக்கலாமா!

  அல்லது தன்னெழுச்சியாக, இன்று தமிழ் நாட்டில்
  இந்தியப் பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு
  எதிராக மக்கள் கிளர்ந்து எழும் போது,
  இளைஞர் தங்கள் இன்னுயிரை எரித்துக் கொண்ட போது,
  சாவு வீட்டில் ஆள் பிடிப்பதும், ஒரு புறம் ‘புலிப் பாசிசம்’
  என்று ‘வினவு’வதும் மறு புறம் ‘வீர வணக்கம்’
  செலுத்துவதாக பல்லிளிப்பதுமான பார்ப்பனியத்துக்கு
  மதிமாறன் போன்றோர் பினாமியாக செயல் பட்டு
  பதிவுகளிட்டு வருவதால்,
  பினாமிகள் மொழி என்று கூறலாமா?

  ஆக மொழி என்பது அதைப் பேசும் மக்களால்
  தான் அறியப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால்
  மக்கள் தான் மொழி, மொழிதான் மக்கள்!
  ஆங்கிலேயன் (English people),
  ரசியன், அராபியன், சீனன், தமிழன், கன்னடன்,
  மலையாளி என மக்களை குறிப்பது மொழியே!

  அமெரிக்கனும் ஆசுத்திரேலியனும்
  குடியேறிகள் என்பதால் அவர்கள் மொழியால்
  அடையாளம் காணப்படவில்லை.
  ஆக, மொழி வெறும் ஊடகம் என்பதும் மனிதர்கள்
  ஒரு வகையில் வெறும் குரங்குகள் என்பதும் ஒன்றுதான்!

  மொழி வெறும் ஊடகம் என்றால் பார்ப்பனியம்
  காலம் காலமாக தமிழை திட்டமிட்டு
  அழித்து, சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு,
  சிங்களம், மலையாளம்,
  முதல் மணிப்பிரவாள நடை, இன்றைய தமிங்கிலீசு
  வரை என குட்டி குட்டியாக ஏன் பெற்றுப் போட்டிருக்கிறது.
  வெறும் ஊடகம் என்றால் தில்லை
  நடராசனுக்கு தமிழில் கத்தினாலும்
  தேவ பாடையில் கத்தினாலும் எல்லாம் ஒன்றுதானே!
  ஏன் தீட்சதர் பார்ப்பான் அய்யா ஆறுமுகசாமி
  அவர்களை அடித்துத் துவைக்கிறான்?

  ஆக காட்டுமிராண்டி மொழி என்று
  “பெரிய எழுத்துகளில்”
  பார்ப்பான் சொன்னாலும் அல்லது
  மதிமாறன் சொன்னாலும்,
  பெரியார் சாடியது என்னவென்றால்
  “தமிழை பேசுகிறவன்
  காட்டுமிராண்டியாக இருக்கிறானே
  என்னும் முறையில் தான்”.

  தோழர்களே! இதோ! பெரியாருடைய வார்த்தைகளிலேயே
  அவருடைய காரைக்குடி உரையை கீழே கொடுத்திருக்கிறேன்.

  ” தமிழை முட்டாப் பயலுக பாச,
  காட்டுமிராண்டி மொழி என்று நான் சொன்ன போது
  எல்லாப் பயல்களும் குதிச்சானுங்க !
  ஒரு பயலாவது எனக்கு நேராக வந்து
  பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!
  ———-
  ———-
  ———-
  என்ன இருக்கிறது நம்ம மொழியிலேன்னா,
  பண்ணிக்கலாம்கிறான்!
  நம்ம கிட்ட என்ன இருக்கிறது நாம கொண்டாட,
  திருக்குறள், நாலடியார்
  ராமாயணம், மகாபாரதம்,
  அது இது…. சங்க இலக்கியங்கள்….. வெங்காயம்!

  ————
  ———–
  தொல்காப்பியத்தை எடுத்துக்கோ, நன்னூல எடுத்துக்கோ!
  நெடுங்கணக்கு, வெங்காயக் கணக்க எடுத்துக்கோ!
  அக நானூறு புறநானூறு……
  எத நீ ஒஸ்தின்னு எடுத்துக்கரயோ
  அதுல எல்லாம் பாப்பான் ஒக்காந்திருக்கிறானே!
  ———–
  ———–
  அவன நீக்கி அவன் சம்பத்தத்தை விலக்கி
  ஒரு காரியத்தை செய்யலாம்கிற
  எண்ணம் இன்றைய வரைக்கும் எவனுக்கும் தோணலியே!
  ————
  ————
  ஆகவே தோழர்களே! நாம் எடுத்துக்கொண்டிருக்கிற முயற்சி
  கடவுளப் பத்தியோ, மதத்தைப் பத்தியோ,
  சாஸ்திரங்களப் பத்தியோ
  (மட்டும்)அல்லவே அல்ல!

  நம்ம இனம் அடைய வேண்டிய நிலைமயை அடையவில்லை!
  நம்ம நாடு அடைய வேண்டிய தன்மையை அடையவில்லை!
  நம்ம அறிவு அதனால் பெற வேண்டிய
  பலனை நாம பெறவில்லை!

  (அடைப்புக் குறிக்குள் உள்ளது, பேச்சின் உள்ளடக்கம் கருதி நான் இட்டது.)

  இது தந்தை பெரியாரின் வார்த்தைகள்! தோழர்களே!
  (இந்த உரை என்னிடம் இப்போதும்
  உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீற்று
  இணைய தளத்தில் இதை
  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்)

  ஆகவே தோழர்களே! காட்டுமிராண்டி மொழி என்று
  பெரியார் சாடியது அந்த மொழி பார்ப்பானுக்கு அடிமையாக இருக்கிறது.
  (அந்த மொழி பேசுகிறவன் பார்ப்பனியத்துக்கு அடிமையாக
  இருக்கிறான், இளையராசாவைப் போல் நேரடியாகவும்,
  மதிமாறன் போன்று மறைமுகமாகவும்). அவர்களை
  மீட்க வேண்டும் என்றால் பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும்.

  பார்ப்பனியம் சாதிகளாய் மக்களைப் பிரிக்கிறது.
  சாதிகளை ஒழிக்க வேண்டும்! அதற்கு மதம் தடை! அதை ஒழி!
  மதத்துக்கு கடவுள் காரணம்! கடவுளை ஒழி!
  கடவுள் பார்ப்பானின் மந்திரத்துக்கு அடங்கியவன்! பார்ப்பானை ஒழி!
  பார்ப்பான் இந்தியாவுக்குள் அடங்கியவன்.

  ஆக இந்தியாவை ஒழிக்க தமிழ் நாடு தமிழருக்கே!
  இதுதான் பெரியாரிய
  கோட்பாடுகளின் உட்கரு.

  அப்படியென்றால் நமது எதிரிகளான பார்ப்பனியத்தின்
  உட்கரு என்ன! சாதிகளா!
  இல்லை என்பான்!
  பூணூலை கழற்றி எறிந்து விட்டேன் என்பான்
  (நாடி நரம்புகளே பூணூலாக இருப்பதால்)!
  சாதி ரீதியான இட ஒதுக்கீட்டைக் கூட
  ஏற்றுக் கொள்வான் (சிறிது முக்கிக் கொண்டு).
  அம்பானிகளும் அமெரிக்காவும் அவனுக்கு இருக்கின்றன
  என்பது அவனுக்குத் தெரியும்.
  இந்தியாவை ஒழிக்கவேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்!
  உங்களை கூறு போட்டுவிடுவான்.
  ஈழத்தில் கூறு போட்டும் இருக்கிறான்.

  ஆக தமிழ் தேசியம் என்பது ஏதோ மணியரசன்,
  நெடுமாறன் போன்றோரால் இப்போது அதுவும்
  ஈழப் போராட்டத்துக்குப் பின்
  உருபெற்ற ஒரு கருத்தியல் அல்ல.
  தமிழ் தேசியம் என்ற கருத்தியலுக்கு மூலவர் தந்தை பெரியார்
  என்பது முற்றிலும் அசைக்க முடியாத
  உண்மையாகும். 1947 ஆகஸ்ட் 15 தேதியை
  நாடே கொண்டாடியபோது, துணிந்து ‘இது துக்கநாள்’ என்று
  அறிவித்தார். இந்தியா-சீனா யுத்தத்தின் போது, சீனாவை
  ஆதரித்தார் பெரியார்.

  இன்றைக்கு மிதவாதம் பேசும்
  பார்ப்பனிய மார்க்சிஸ்ட் கட்சி முதல்
  தீவிர கம்யூனிசம் பேசும் மா லெ குழுக்கள் வரை,
  தோழர் இலெனின் அவர்களின் தேசிய இனங்களின்
  பிரச்சனை பற்றிய, பிரிந்து போகும்
  உரிமையுடன் கூடிய பொதுவான அரசியல் நெறிமுறை
  பற்றிய கோட்பாடுகளை எத்தனை பேர் விவாதித்திருக்கிறார்கள்.

  தோழர் மாவோ அவர்களால்
  முன்னெடுக்கப்பட்டு உலகையே உலுக்கிய, செஞ்சீனத்தை
  புரட்டிப்போட்ட மாபெரும் கலாச்சாரப் புரட்சிபற்றி
  இங்கு என்ன வகை விவாதங்கள்
  நடந்துள்ளன?

  செஞ்சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும்
  கலகக் காரர் தந்தை பெரியார் தமிழகத்தில் நடத்திய
  கலாச்சாரப் புரட்சியின் அடிப்படையில் உள்ள
  ஒற்றுமைகள் என்ன? மேற்கத்திய கோட்பாடுகளில்
  சிக்கியிருந்த சீனர்களின் தொன்மையியனை
  மீட்டெடுக்க அவர்களின் தன்னம்பிக்கையை
  ஓங்கச்செய்த அம்மாபெரும் நிகழ்வினை இங்கிருக்கும்
  பார்ப்பனிய மாரக்சியவியாதிகள் திட்டமிட்டு
  மறைத்து எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்திய சதி,
  பன்னாட்டு நிறுவனங்களை மிதி என்று மக்களை
  திசை திருப்பிக் கொண்டுதான் உள்ளனர்.

  பழமையை நினைவு கூர்தல் (Contemplation of the past)
  என்பது ஒன்றும் பார்ப்பான் கூறும்
  மந்திரங்கள் போன்று யாருக்கும்
  புரியாததல்ல. அதன் மூலம் தாம் செய்த மேன்மைகளை,
  தவறுகளை திரும்பிப் பார்த்து முன்னோக்கி சமூகத்தை
  தள்ள முயற்சிக்கும் ஒரு முயற்சியே

  ஏன் மார்க்சியம் என்பதே ஒரு வரலாற்று ரீதியான
  இயங்கியல் அரசியல் பொருள் முதல் வாதம்
  என்பதை மார்க்சிய அரிச்சுவடி
  அறிந்தவர்கள் அறிவார்கள்.
  என்ன செய்வது?

  இந்தியாவைப் பொறுத்தவரை மார்க்சின் தாடி
  என்றைக்கோ பார்ப்பானின் பூணூலாகத் திரிக்கப் பட்டு
  அவனின் அழுக்கு முதுகை சொரிந்து கொள்ளப்
  பயன்படுத்தப் பட்டுவிட்டது.

  இறுதியாக மதிமாறன்!

  தமிழ் தேசியம் என்ற கருத்தியலையே
  கேலிக் குள்ளாக்குவதும், பழம் பெருமை,
  சாதிப் பெருமை
  பேசுபவர்கள்தான் இதுபற்றி
  பேசுகிறார்கள் என்பதும்,
  பெரியாரியவாதிகள் தங்களை
  அறியாமலே இதற்கெல்லாம்
  துணை போகிறார்கள் என்று பகடி செய்வதும்,
  மாபெரும் அழிவினை சந்தித்து
  இன்றைக்கு உயிருக்கும் உடமைக்கும்
  உத்தரவாதம் இன்றி, தான் பிறந்த மண்ணிலேயே
  (இப்படி சொன்னால் கூட அது பழம் பெருமை பேசிவிடுவதாக ஆகிவிடும் என்ன?)
  அகதிகளாக ஆக்கப்பட்டு கிடக்கும் எம் சொந்தங்களுக்காக
  ஆதரவு அளிக்கும் சிறு சிறு குரல்களையே
  கேலிக்குள்ளாக்கும் ஒரு நிகழ்வு என நான்
  திருப்பி திருப்பி சொல்வது
  எதற்காக என்றால் அது பார்ப்பானுக்கு மறைமுகமாக
  ஆதரவு செய்வதைவிட இன்னும் சொல்லப் போனால்
  பினாமியாக இருப்பதை விட கேவலமானது என்று
  உணர்த்துவதற்காகவே!

  நன்றி!

 31. நீங்கள் யார்?

  நான் மலையமான் (உடையார்) வகுப்பில் பிறந்த தமிழன். எனக்கு சாதியில்லை. என்னை நான் அடையாளங் காட்டியுள்ளேன். பெரும்பாலோரது கருத்துக்கள் அவர்களின் பின்புலம் சார்ந்தது தான். என்னிடம் அப்படி இல்லை. வேண்டுமானால் 99% என்று சொல்கிறேன்.//

  நீங்கள் யார்?//

  இவ்வளவு வக்கிரமான கேள்வி எதற்கு??
  இது தான் வரலாறு நெடுகிலும் உள்ளதே!

  தமிழ் வெறிகொண்டு பேசினால் தான் ”தமிழன்” என்று கூறும் உங்களை போன்றோரை என்னவென்று சொல்வது?

  ஒவ்வொரு சொல்லிற்கும் செயலிற்கும் பின்னே ஒரு வர்க்கமும் வர்க்க நலனும் ஒலிந்துள்ளது – காரல் மார்ஸ்.

  உங்கள் பின்னூட்டம் அனைத்திலும் அதை காணலாம். என் பின்னூட்டம் முழுதும் அதை காணலாம்.

  நான்:

  நீங்கள் கூறும் தமிழ்மொழி, தமிழ் பண்பாடு எனும் இத்தகைய பெருமைகளுக்கு பின்னால் ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும், அடையாளம் பறிக்கப்பட்டும் ”ஆதி திராவிட இனம்” இன்று சாதியாய் அடையாளபடுத்த பட்டு வாழும் ஆதி தமிழன்…

 32. தோழர் இலெனின் அவர்களின் தேசிய இனங்களின்
  பிரச்சனை பற்றிய, பிரிந்து போகும்
  உரிமையுடன் கூடிய பொதுவான அரசியல் நெறிமுறை
  பற்றிய கோட்பாடுகளை எத்தனை பேர் விவாதித்திருக்கிறார்கள். //

  வாருங்கள் விவாதிப்போம்.

  இன்னமும் ஈழத்தை(ஈழ விடுதலையை) எதிர்ப்பவர்கள் மக்களின் எதிரிகளே. இதில் மாற்றுகருத்து இல்லை.
  ஈழத்தை பற்றி, இங்கு விவாதிக்கும் தமிழ் தேசியத்துடன் குழப்ப வேண்டாம். இங்கு தமிழ் தேசியம்(தமிழ் நாடு) பற்றியே விவாதிக்க அழைக்கிறேன்.

  தேசிய பிரச்சனை பற்றிய பாட்டாளிவர்க்க நிலைபாடு பற்றி
  லெனின் கூறுகிறார்:

  ”பல தேசிய இனங்களை கொண்ட அரசு ஒன்றில் உள்ள தேசங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை உண்டு என்பதையும் ஏற்கிறது.

  எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரை பொருத்தவரை மிகச்சிறு அளவு கூட ஒடுக்குமுறையோ, அநீதியோ இருக்ககூடாது. இவை தாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும்”
  (லெ.தொ.நூ 19. 91)

  பிரிந்து செல்லவும்,ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிபடுத்தியபோது, எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையை பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்க கட்சி கடமைப் பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக பிரிவினை என்பதை தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்று கொண்டார்.

  ”பிரிவினை பிரச்சனை ஒவ்வொன்றையும், சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள் ஆகியவற்றுடன் பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே வைத்து கொண்டு சமூக ஜனநாயக கட்சி தீர்மானிக்க வேண்டும்”
  (லெ.தொ.நூ.19. 429)

  ஏனெனில் புறநிலையானது பிரிவினையை சாத்தியமற்றதாக்கி விடலாம். சுதந்திரமான அரசுகளை உருவாக்கி கொள்ள இயலாத வகையில் சில தேசிய இனங்கள் மிகவும் சிறியவையாகவோ, சிதறுண்டு கிடப்பவையாகவோ இருக்கலாம். நீங்கள் தமிழ் தேசியம் அடைய முன் வைக்கும் கோரிக்கை தமிழகத்தை இன்னொரு காஷ்மீரை தான் உருவாக்கும். ஒரு வேளை தமிழ் தேசியம் தான் தீர்வு என்றால் பல தேசியங்களை ஒடுக்கி வைத்துள்ள இந்திய தேசியத்தை தனியாக எதிர்க்க முடியாது.ஒடுக்கபட்ட பல தேசங்களின் கூட்டிணைவே சாத்தியம். ஆனால் இக்கூட்டிணை மறுத்து தமிழ் தேசியம் மற்ற மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி தேசிய கோரிக்கையை சாத்தியமற்றதாக்கிவிடுகிறது.

  ”தேசியவாதத்தை புனிதமாக்க முயலும் எந்த முயற்சியையும் பாட்டாளி வர்க்கத்தால் ஆதரிக்க முடியாது;இதற்கு மாறாக தேசிய வேறுபாடுகளை துடைத்தெறிய உதவும் ஒவ்வொன்றையும், தேசிய தடைகளை நீக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கிறது”.

  ”தேசிய ஒடுக்குமுறையும் தேசிய பகைமையும் தேசிய தன்மையும் கொண்ட பழைய உலகுக்கு மாற்றாக புதியதோர் உலத்தை, எல்லா தேசங்களிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை கொண்ட ஓர் உலகத்தை, தனிச் சலுகைக்கு இடமே இல்லாத, மனிதனை மனிதன் எந்த வகையிலும் ஒடுக்காத ஓர் உலகத்தை தொழிலாளிகள் முன் வைக்கிறார்கள்.”
  (லெ.தொ.நூ. 19. 92)

  தேசிய இனங்களின் பிரச்சனைகளை பற்றி பேசும் தோழர் லெனின், மொழி, இன, சாதி, மத வேற்றுமைகளற்ற உழைக்கும் மக்கள் ஐக்கியம் கொண்ட புதிய ஓர் உலகத்தை படைப்பதே
  லட்சியமாக கூறுகிறார்.

  தமிழ் தேசியம் பேசும் தமிழினவாதிகள் ”ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக சமூக விடுதலையை பற்றி பேசாமல், தமிழ் தேசியம் எனும் அரசியல் விடுதலையை பற்றி பேசுவதில் பயனில்லை.

  இதை தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சமூக பிரச்சனைகளை ஒதுக்கி இந்திய தேசிய பிரச்சனையை முன்னெடுத்தி சென்ற காங்கிரசை விமர்சித்தார்.
  இதே விமர்சனம் இன்று தமிழ் தேசியம் பேசும் தமிழினவாதிகளுக்கும் பொருந்தும்.

 33. “ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும் போது ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோர முடியும். அவ்வாறான பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள் வலிமையாய்த் திரண்டிராத வேளையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்”. – என்று தேசிய இனப் பிரச்னையில் யதார்த்தமான, ஸ்தூலாமான நிலைமைகளை முன்வைத்த லெனினது கருத்தின் சாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

  இரு இனங்கள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பல் தேசிய இனங்கள் ஒன்றாய்க் கலப்பது, தேசிய இன ஒடுக்குமுறையை நடத்தும் வல்லாதிக்கங்களால் அல்ல, மாறாக தேசிய இனங்கள் அனைத்தும் தத்தமது தேசிய விடுதலை என்ற இடை நிலையைக் கடந்த பின்பே ஒன்றிணைவு சாத்தியப்படும்.

  “எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் கட்டத்தை கடந்த பின்னரே வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ, வர்க்கங்கள் இல்லாமல் ஆகுமோ, அது போல் ஒடுக்கப்படும் எல்லா தேசங்களுக்கும் முழு விடுதலை என்ற அதாவது பிரிந்து போவது என்றால் அதற்குத் தடையேதுமில்லை, சுதந்திரம் உண்டு என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் தேசங்கள் ஒன்று படுவது இரண்டறக் கலப்பது என்ற நிலையை அடைய முடியும”. (தேசியக்கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வதேசிய வாதமும் – சில பிரச்னைகள் – லெனின்)

  இனங்களுக்கிடையே வேற்றுமை நீங்கி, ஒரு மக்களாய், ஒரு தேசமாய் மேலாண்மை சக்திகளை எதிர்த்துப் போரிடும் குணம் பாட்டாளிவர்க்கத்துக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களை விட, ஒடுக்கும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களுக்குத் தான் அந்தக் கடமை உண்டு என்று மார்க்சிய-லெனினியம் காட்டுகிறது. நாமும் அவவாறே கருதுகிறோம்.

  தேசம், தேசியஇனம் என்ற எல்லைகள் அனைத்தும் இற்றுவிடும் காலகட்டம் பிறப்பதை நாம் விரும்புகிறோம். அவை நிலைத்து நிற்பவை என்றோ, நிலைத்து நிற்கவேண்டுமென்றோ நாம் எண்ணவில்லை. ஆனால் ஒன்றின் வினைப்பாடு வரலாற்றிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னால், அதன் வரலாற்றுப் பாத்திரத்தை அது நிறைவு செய்ய வேண்டும். அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரித்து அவற்றுக்கு முழுச் சுதந்திரமும் சனநாயகமும் வழங்கப்பட வேண்டும். நிறைவு செய்தபின், அவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே அவை ஒன்றோடொன்று இணைவாகி கலந்து இனங்கள் இல்லாமல் போகும்.

  தேசிய இனங்களை ஒடுக்குகிற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கை என்றும், மக்களின் மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்கின்ற கொள்கை என்றும் லெனின் விளக்கப்படுத்துவார் (பாட்டாளிவர்க்க சர்வதேசியம், லெனின் கட்டுரைகள் – தொகுப்பு நூல்)

  தேசிய விடுதலையை வென்றெடுப்பதன் மூலம், வர்க்கப் போராட்ட முன்னெடுப்புக்கான தடை நீக்கம் பெறுகிறது. இந்த முதல் கட்டத்தை கடந்து செல்வதின் வழியே பிற அக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகிடைத்துவிடுகிறது. உள் முரண்களே வலிமையான, பிரதான எதிரியாகி விடுமெனின் அப்போது அதைத் தீர்த்து முடிப்பது பிரதான கடமையாகிவிடுகிறது

  தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன், அது பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிப்பதே, பாட்டாளி வர்க்க சர்வதேசியமாகும் என லெனின் தெளிவாக வரையறுத்தார். “தேசிய ஒடுக்குமுறை இருக்கும் நிலையில் தேசியவிடுதலையைப் புற்க்கணிப்பது சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தில் தவறானது” என்று எச்சரித்த லெனின், “பொதுவான வரலாற்று ரீதியான நிலைமைகளையும், அரசு நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத் திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

  “சுயநிர்ணய உரிமையை அல்லது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது மேலோங்கி ஆட்சி புரியும் தேசத்தின் விசேட உரிமைகளை நடைமுறையில் ஆதரிப்பதாகவே முடியும்” என்றார் லெனின். ஆக எப்படிப் பார்த்தாலும் இனி தமிழீழவிடுதலை சாத்தியமே இல்லையென்று ஷோபா சக்திகள் சொல்கையில், மேலோங்கி ஆட்சிபுரியும் இலங்கை இனவாத அரசின் கூட்டாளியாய் கைகொடுக்கிற காரியமாக வெளிப்படுகிறது. இனவாத அரசியலிலிருந்து ஒடுக்கப்படும் இனம் மீண்டு வரவேண்டுமென்கிற போதனை அல்லது வேண்டுகோள், ஒடுக்கும் பேரினத்தை நோக்கி வைக்கப்படவில்லை என்பதையும் இதற்குள் ஒளிந்திருக்கும் ஓரவஞ்சகத்தையும் கண்டு கொள்ளமுடியும்.

  பாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பேணுவதில், சர்வ தேசியத்தைப் பாதுகாப்பதில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளையே லெனின் முக்கியமானதாக முதலாவதாக கருதினார். “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை சர்வதேசிய உணர்வில் பயிற்றுவிக்கும் போதே, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குப் பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை ஆதரித்து அதற்காகப் போராட வேண்டும்” என்கிறார்.

  ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்துக்கு பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிற சிங்கள மக்களும் இல்லை. அவ்வாறு பயிற்றுவிக்கிற இயக்கங்களும் இல்லை. ஒடுக்கும் எம்மை நீங்கள் நயந்து வாழவேண்டுமென கட்டளையிடும் இனவாத இயக்கங்களே உள்ளன.

  தொடர்ச்சியாய் லெனின் இன்னொன்றையும் முன்னுரைத்தார். “ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக சனநாயகவாதிகள் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால், அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்.” (தேசியக் கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வ தேசியவாதமும் – சில பிரச்னைகள்)

  நன்றி- சூரியதீபன் அவர்களின் கீற்று இணைய தள கட்டுரை- http://www.keetru.com/literature/essays/suriyadeepan.php

 34. திரு அவர்களே, முதலில் இங்கு நான் விவாதிக்க அழைத்திருக்கும் பொருளை கவனிக்க.

  இக்கட்டுரை முழுதும் மார்க்ஸிய லெனினிய பார்வையில் ஈழ தேசிய கோரிக்கையை ஒடுக்கும் சிங்கள தேசிய இனவாதத்தை எதிர்த்து எழுதப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகிறது. தமிழ் தேசியதிற்கானதன்று என்பதை உணர்ச்சிவசப்படாமல், உடனே பதிலளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவசரமாய் ஆராயாமல் படிக்கவும்.

  இக்கூற்றே தமிழ் தேசியத்துக்கும் பொருந்தும் என்று நீங்கள் கருதுவதாயின்,

  //“ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும் போது ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோர முடியும். அவ்வாறான பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள் வலிமையாய்த் திரண்டிராத வேளையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்”. //

  ஒடுக்கபடும் தேசிய இனம் என்று ஒற்றையாக அங்கே ஈழம் இருக்கிறது. அதற்கு ஆதரவாய் இருப்பது சரியே.
  ஆனால் இந்தியாவில் தமிழகம் மட்டுமே ஒடுக்கபடும் தேசியம் இனம் அன்று. இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுமே ஒடுக்கபடும் தேசிய இனங்களே என்பதை நினைவில் நிறுத்துக.
  ”ஒடுக்கபடும் தேசியங்களின் சிறை கூடாரமே இந்தியா” என்று வரையறுக்கலாம். மேற்கூறிய கூற்றில் ”ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்” எனும் லெனினின் கூற்றுகிணங்க நாம் ஒடுக்கபடும் தேசிய இனத்தின் பக்கம் நிற்கவேண்டுமெனில் முதலில் 60 ஆண்டுகாலங்களாய் போராடி வரும் காஷ்மீர் ஆதரவாகவும், அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற கிழக்கிந்திய மாநில்ங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அங்கே தினம் தினம் மாங்கொட்டைகளையும், எலிகறியையும் தின்னும் மக்களை பார்த்தால் தெரியும். தமிழகமும் ஒடுக்கபடும் தேசிய இனமே என்று கருதினால், தேசிய விடுதலைக்கு மற்ற ஒடுக்கபடும் தேசியங்களின் ஆதரவை பெறவேண்டும். மார்ஸிய லெனினிய வாக்கியங்களை பயன்படுத்தும் தமிழினவாதிகளாகிய நீங்கள் உண்மையிலேயே மற்ற மாநிலத்தவனை அவ்வாறு அரவணைக்கும் சக்தியாக, பாட்டாளிவர்க்க சக்தியாக அவர்களை வர்க்க கண்ணோட்ட்த்தோடு தான் பார்க்கின்றீர்களா?

  பல தேசியங்களின் வலிமையுடன் தான் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியும். தமிழ்நாடு மட்டும் எதிர்ப்பது சாத்தியமற்றது. சரியான தேசிய விடுதலை போராட்டமும் அன்று.
  கர்நாடகா, ஆந்திரா,கேரளம் மநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை எனவே ”தமிழா இன உணர்வு கொள்” எனும் முழக்கம் இன உணர்வை தூண்டுலாம். ஆனால் அவ்வுணர்வு, அண்டை மாநிலங்களிலிருந்து இங்கு குடியேறி தின கூலியாக வேலை செய்யும் தெலுங்கனையும் கூட, சிறு தொழில் புரியும் மலையாளியை கூட அவர்களையும் பாட்டாளி வர்க்க சக்தியாக பாராமல் இன உணர்வுடன்(வெறி) அவர்களை பார்க்கும் வழக்கம் தான் இங்கு நிலவுகிறது.

  தமிழ் தேசியம் பேசும் தமிழினவாதிகளே,
  இது தான் நீங்கள் கூறும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமா?
  இதற்கு மார்க்ஸையும் லெனினையும் வேறு ஆதரவாக பயன்படுத்துகிறீர்கள்.

  இவையெல்லாம் தமிழகத்திற்கு தேசியத்துக்குறிய தகுதிகள் இருந்தால் மட்டுமே சரியானது.

  எனவே திரு அவர்களே,
  முதலில் தேசியத்தின் வரையறை என்ன?
  தேசியம் என்பது யாருக்கான அவசியம்?
  அவ்வாறே தமிழ் தேசியம் என்பது அவசியம் என்றால் தமிழ் தேசியத்தின் பொருளாதார கொள்கை என்ன?
  என்பதை தெரிந்து கொண்டு, விளக்கமளித்து பிறகு தமிழ் தேசியத்தை ஆதரிப்பதற்காக மார்ஸையும், லெனினையும் பயன்படுங்கள்.
  சூழலுக்கேற்ப, சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை ஆராய்ந்து மார்க்ஸியத்தை கொண்டு தீர்ப்பதே மார்ஸியத்தை உண்மையாக புரிந்து கொண்டு பயன்படுத்துவதாகும்.
  ஏனெனில் மார்க்ஸியம் என்பது வரட்டு சித்தாந்தம் அல்ல!

  [பின் குறிப்பு: காபி பேஸ்டு வேண் டாம் என்று கூறவில்லை. ஆனால் படித்துவிட்டு காபி பேஸ்டு செய்யவும்]

 35. ///ஒடுக்கபடும் தேசிய இனம் என்று ஒற்றையாக அங்கே ஈழம் இருக்கிறது. அதற்கு ஆதரவாய் இருப்பது சரியே///.

  யார் சொன்னது? அங்கே முஸ்லிம், வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர் என பிரிவுகள் இருக்கிறதே! ஒற்றையா ரெட்டையா போட்டுத்தான் மார்க்சிய லெனினியம் பேசமுடியுமா என்ன?

  ///”ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்” எனும் லெனினின் கூற்றுகிணங்க நாம் ஒடுக்கபடும் தேசிய இனத்தின் பக்கம் நிற்கவேண்டுமெனில் முதலில் 60 ஆண்டுகாலங்களாய் போராடி வரும் காஷ்மீர் ஆதரவாகவும், அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற கிழக்கிந்திய மாநில்ங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அங்கே தினம் தினம் மாங்கொட்டைகளையும், எலிகறியையும் தின்னும் மக்களை பார்த்தால் தெரியும். தமிழகமும் ஒடுக்கபடும் தேசிய இனமே என்று கருதினால், தேசிய விடுதலைக்கு மற்ற ஒடுக்கபடும் தேசியங்களின் ஆதரவை பெறவேண்டும்.///

  கிழிஞ்சது! ஈழம் கிடக்கிறது! இதுவரை கிட்டத்தட்ட 650 க்கும் மேற்ப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள இராணுவத்தால்
  கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். மற்ற மானிலத்திலிருந்து ஒரு நாய் கூட எதிர்த்து ஊளையிடவில்லை! அவனவன் செத்துக்கிட்டிருக்கிறான். கேட்க நாதியில்லை!

  இதில் நான் போய் கிழ்க்கிந்திய மானிலமக்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமாம்! பெரியார் மொழியில் சொன்னால் “கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வையினானாம்” கிற மாதிரியில்ல இருக்கிறது பேச்சு.

  ///மார்ஸிய லெனினிய வாக்கியங்களை பயன்படுத்தும் தமிழினவாதிகளாகிய நீங்கள் உண்மையிலேயே மற்ற மாநிலத்தவனை அவ்வாறு அரவணைக்கும் சக்தியாக///

  மற்ற மானில மக்களையும் அரவணைக்க வேண்டும் என சொல்ல பார்ப்பானின் மார்க்சிய லெனினிய வாக்கியங்களுக்கும் பாரதிய சனதா கட்சியின், ஆர் எஸ் எஸ் சின் வாக்கியங்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை.கன்னடன், தெலுங்கன் தவிச்ச வாய்க்குத் தண்ணி தர மாட்டான். மலையாளி தண்ணி தராட்டியும் எல்லா துறையிலும் உட்கார்ந்து கொண்டு தமிழன் மென்னிய திருகிறான். வட நாட்டுக்காரன் இந்தி தெரியாதுன்னா இந்தியனே இல்லைங்கிறான்! நான் போய் உச்சி மோந்து அணைச்சுக்கிறேன்!

  ///பல தேசியங்களின் வலிமையுடன் தான் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியும். தமிழ்நாடு மட்டும் எதிர்ப்பது சாத்தியமற்றது.///

  எதுவுமே சாத்தியமில்லைதான்! மார்க்சியம், லெனினியம், பெரியாரியம் இன்ன பிற எல்லா இயங்களும் சாத்தியமான்னு யோசிச்சுப் பார்த்தா பார்ப்பான் இருக்கும் வரை எதுவுமே சாத்தியமில்லைதான்!

  பார்ப்பான் தேசத்த எதிர்க்க நான் இங்கிறுக்கும் கோணவாய்க்கால் பாளையத்திலிருந்து இந்தியா பூராம் பயணம் சென்று ஆதரவு திரட்டி (அங்க போய் நான் இந்தி பேசிலன்னாலேயே குமட்டில குத்துவான், போய் முதல்ல இந்திய கத்துட்டு வாம்பான்!) அப்புறம் இந்தியாவை எதிர்க்கிறதுக்குள்ள எனக்கு வயசாயிரும். அதுக்குள்ள என் பையன் முதல் பேரன் வரைக்கும்
  பாரத நாடு பார்பான் பழம் தின்னு கொட்டை போட்ட நாடுன்னு உரு ஏத்திருவீங்க!

  ஏதோ எங்க அய்யா பெரியார் போட்ட பிச்சையிலே நாங்க கொஞ்சம் படித்து கொட்டை போட்டு பார்ப்பான எதிர்கிற அளவுக்கு இருக்கோம். எதிர் காலத்தில் அதுவும் சாத்தியமில்லை! எல்லாம் பார்ப்பான் பள்ளியில் ஆங்கிலம், இந்தி படித்து இருக்கும் கொஞ்ச நஞ்சம் அறிவும் பார்ப்பனிய மா லெ குழுக்களாலும், அதுக்கு அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் சதிமாறன் களாலும் அவிந்து போய்விடும்!

  ///சரியான தேசிய விடுதலை போராட்டமும் அன்று///.

  இந்தியா சரியான தேசமாக இருந்தால் தான் சரியான தேசிய விடுதலை போராட்டமும் இருக்கும். இந்தியா என்பதே பார்ப்பான் கட்டி, ஆங்கிலேயன் கூட்டி கொடுத்த தேசம்! இதுல செரியென்ன! செரிக்காட்டி என்ன!

  ///எனவே திரு அவர்களே,
  முதலில் தேசியத்தின் வரையறை என்ன?
  தேசியம் என்பது யாருக்கான அவசியம்?
  அவ்வாறே தமிழ் தேசியம் என்பது அவசியம் என்றால் தமிழ் தேசியத்தின் பொருளாதார கொள்கை என்ன?
  என்பதை தெரிந்து கொண்டு, விளக்கமளித்து பிறகு தமிழ் தேசியத்தை ஆதரிப்பதற்காக மார்ஸையும், லெனினையும் பயன்படுங்கள்.///

  ஆமாம்! 1857 முதல் 1947 வரைக்கும் முதலில் இதெல்லாம் கத்துக்கிட்டுத்தான் இந்திய தேசியத்தின் அவசியம் என்ன! அவ்வாறே இந்திய தேசியம் என்பது அவசியம் என்றால் இந்திய தேசியத்தின் பொருளாதார கொள்கை என்ன? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து தெளிந்துதான் பார்ப்பான்களும், மகாத்துமாவும்,மாமாவும் சேர்ந்து இந்திய விடுதலையை முன்னெடுத்தார்களா?

  ///[பின் குறிப்பு: காபி பேஸ்டு வேண் டாம் என்று கூறவில்லை. ஆனால் படித்துவிட்டு காபி பேஸ்டு செய்யவும்]///

  அது சரி! உகாண்டா இடி அமீன் முதல் , அமெரிக்காவின் ஆடை அவிழ்ப்பு, காங்கோ பூதம், காண்டகார் தீவிரவாதம், பாரிசில் புரட்சி, பாக்தாத்தில் எழுச்சி, பெரிஸ்த்ரோய்ஸ்கா, கும்பகோணத்து மாமா வரை எல்லாப் புகழும் எம்பெருமானுக்கே! என்பது போல உலகத்தில் உள்ள எல்லாப் பிரச்சனைக்கும் அந்தந்த இடம், நாட்டின் இயல்பு, கலாச்சார சார்பு, மக்களின் நாகரிக, பண்பாடு, அரசியல், பொருளாதார சார்புகள், சம கால அரசியலில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், புதிதாக உருவாகிவரும் வல்லரசுகளின் அரசியல் வளர்ச்சி என்ற எதையும் கவனத்தில் கொள்ளாமல் எல்லா பிரச்சனைக்கும் எல்லா காலங்களிலும், சூழல்களிலும் தீர்வாக பார்ப்பனிய மார்க்சிய லெனினியத்தை காபி பேஸ்டு செய்யாமல் இருந்தால் சரிதான்!

  தோழரே! வீணாக சிரமப்பட வேண்டாம். பார்ப்பனியம் (அது எந்த இயத்தின் மீதும் ஏறி வந்து எந்தெந்த வடிவங்களில் வந்தாலும்) பெரியாரியம் அதை இனம் கண்டு கொள்ளும். வெறுத்தொதுக்கும். என் பின்னூட்டமே மதிமாறன் வர வர் சதிமாறன் ஆவதை கண்டித்துத்தான்! அதுவும் தமிழ் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் தவறாக வழி நடத்தப் படக்கூடாதே என்கிற நப்பாசையில் தான். தங்களுக்கு என் வணக்கமும் நன்றிகளும் உரித்தாகுக!

 36. // யார் சொன்னது? அங்கே முஸ்லிம், வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர் என பிரிவுகள் இருக்கிறதே! ஒற்றையா ரெட்டையா போட்டுத்தான் மார்க்சிய லெனினியம் பேசமுடியுமா என்ன?//

  பல பிரிவுகள் உண்டுதான். நான் சொன்ன கூற்றை மறுபடியும் படிக்கவும். நான் குறிப்பிட்டுள்ளது ’ஒடுக்கப்படும் தேசியஇனமாக’.
  நீங்கள் ஒற்றையா ரெட்டையா போட்டு மார்க்ஸிய லெனினியம் பேச வேண்டாம். சூழலை பகுத்தறிவின் துணைகொண்டு ஆராய்ந்து சரியான மூலகாரணத்தை அறிந்து அதற்கான அரசியல் தீர்வை பேசினால் போதும்.

  //கிழிஞ்சது! ஈழம் கிடக்கிறது! இதுவரை கிட்டத்தட்ட 650 க்கும் மேற்ப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள இராணுவத்தால்
  கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். மற்ற மானிலத்திலிருந்து ஒரு நாய் கூட எதிர்த்து ஊளையிடவில்லை! அவனவன் செத்துக்கிட்டிருக்கிறான். கேட்க நாதியில்லை!//

  இதுவரை ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களை இந்திய ராணுவமே காஷ்மீரில் கொன்றொழித்திருக்கிறது.காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இன்ன பிற மாநிலங்களிலும் பெண்கள் மீது ராணுவம் பாலியல் வக்கிரத்தை,ஒரிஸ்ஸாவில் தலித் கிறித்தவர்கள், குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்து இங்கே இருக்கும் தமிழினவாதிகள் யார் யாரெல்லாம் ஊளையிட்டார்கள்? அவையெல்லாம் மற்ற மாநிலங்கள். ஊளையிட்டால் அவ்வளவு தூரம் கேட்காது சரி. ஆனால் இங்கே வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான் வன் கொடுமைகளை எதிர்த்து எத்தனை தமிழ் தேசியவாதிகள், தமிழ் தேசியம் பேசும் இயக்கங்கள் ஊளையிட்டிருகின்றன? இங்கே எத்தனையோ மக்கள் சாதிரீதியாக காலம் காலமாக ஒடுக்கப்படுகிறார்கள்.எத்தனையோ பெண்கள் கற்பழிக்கபட்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் என்பதற்காகவே மட்டும் கற்பழிக்கபடுவதில்லை. தாழ்த்தபட்ட பிரிவை சார்ந்த பெண்கள் என்பதாலேயே கற்பழிக்கபடுகிறார்கள். தன் சொந்த மண்ணில் நடக்கும் இத்தகைய கொடுமைகளை எதிர்த்து எத்தனை தமிழ் இன சிங்கங்கள் சீறி பாய்ந்திருக்கின்றன?
  இவர்களை கேட்க நாதியில்லை. ஆனால் தமிழ் தேசியம் வேண்டுமாம்? மீசையை முறுக்கி விட்டு எல்லா ஒடுக்குமுறைகளையும் செய்ய லைசன்ஸ் வழங்கவா?

  //இந்தியா சரியான தேசமாக இருந்தால் தான் சரியான தேசிய விடுதலை போராட்டமும் இருக்கும். இந்தியா என்பதே பார்ப்பான் கட்டி, ஆங்கிலேயன் கூட்டி கொடுத்த தேசம்! இதுல செரியென்ன! செரிக்காட்டி என்ன!//

  நீங்கள் சொல்வது சரிதான். இந்தியாவை ஆள இவர்களுக்கு தெரியவில்லை. சரியில்லை. ஆனால் தமிழ் தேசியத்தை ஆளப்போகும் ஆண்ட பறம்பரையினர் சரியாக ஆள்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு தானே ஆண்ட அனுபவம் இருக்கிறது. இந்துத்துவா இந்திய தேசிய கோரிக்கையை முன்னெடுத்து எப்படி இந்தியா இந்துத்துவ தேசியமாக மாறியதோ, அவ்வாறே தமிழ் தேசியம், ஆண்ட பறம்பரையினரின் தேசியமாக, மறுபடியும் ஆள்வதற்கு வழிகோலுன்றீர்கள். ஏற்கனவே முக்குலத்தோரில் ஒரு சிலர் “நாங்கள் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்” எனவும், நாடார் சமுதாயத்தில் ஒரு சிலர் ”நாங்கள் தான் பாண்டிய நாட்டில் பாண்டியர்களாக இருந்தோம். திருநெல்வேலியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தோம்” என்றும், அதே போல் வன்னியர்கள் “நாங்கள் பல்லவர்களின் பாரம்பரியம்” என்கிறார்கள்.
  நீங்கள் கூறும் தமிழ் தேசியம் இவர்களின் ஆதிக்கத்தை களையுமா?
  அல்லது ஊளையாவது விடுமா?
  ”நாங்கள் பெரியாரிஸ்ட்கள்.எங்களுக்கு சாதியில்லை” என்று நீங்கள் சொன்னால் இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு போராட்டம் நடத்திய நீங்கள், எத்தனை பேர் அருந்ததி மக்களின் உள் இடஒதுக்கீடுக்காக போராடியிருக்கிறீர்கள்?

  பெரியாரியல் பற்றி சரியாக புரிந்துகொள்ளாமல் இருப்பதே இதற்கு காரணம்.

  ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
  “ஏதோ நம்ம ஜாதி சங்கம் அப்படிங்கறதுக்காக நன்கொடை கொடுத்தேன் அவ்வளவுதான். மத்தபடி கோயில் கும்பாபிஷேகத்துக்கெல்லாம் வரமுடியாது.
  எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
  நான் பெரியார் வழி வந்தவன்.” – எழுதியவர் யாரென்று தெரியுமா?

  இந்திய தேசியமானாலும், தமிழ் தேசியமானாலும் ஒடுக்கபடும் மக்கள் ஒடுக்கபட்டு கொண்டேதான் இருப்பர்கள். சமூக விடுதலையுடன் கூடிய தேசிய கோரிக்கையே சரியானது.
  “உயர்சாதி இந்துக்களிடம் கொடுக்கப்படும் அரசியல் அதிகாரத்தின் மூலம் தீண்டாதார் அதிகம் நன்மையை எதிர்பார்க்க முடியாது. முகமது நபியின் மதத்தை சுல்தான் மாற்ற முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார். போப், கிறித்தவின் மதத்தை கழித்துவிட முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார். அதேபோல் உயர்சாதி இந்துக்களையே கொண்ட சட்டசபை தீண்டாமையை ஒழிப்பதற்க்கோ, தீண்டாதோர் மீது சுமத்தப்பட்டுள்ள மாசுக்களை நீக்கி சுத்தப்படுத்துவதற்கோ வழி செய்யும் சட்டம் எதையும் இயற்றாது. இதற்கு காரணம் அவர்களால் செய்ய முடியாது என்பதல்ல. அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதே ஆகும்.” – அண்ணல் அம்பேத்கர்.

  //ஆமாம்! 1857 முதல் 1947 வரைக்கும் முதலில் இதெல்லாம் கத்துக்கிட்டுத்தான் இந்திய தேசியத்தின் அவசியம் என்ன! அவ்வாறே இந்திய தேசியம் என்பது அவசியம் என்றால் இந்திய தேசியத்தின் பொருளாதார கொள்கை என்ன? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து தெளிந்துதான் பார்ப்பான்களும், மகாத்துமாவும்,மாமாவும் சேர்ந்து இந்திய விடுதலையை முன்னெடுத்தார்களா? //

  அதெல்லாம் ஆராயாம பார்ப்பான்களும், மகாத்துமாவும்,மாமாவும் இந்திய விடுதலையை முன்னெடுத்ததால் தான் இன்று இந்தியாவின் டவுசர் கிழிஞ்சு தொங்குது. அதே மாதிரியான முன்னெடுப்புதான் உங்களுடையதுமா?

  //எதுவுமே சாத்தியமில்லைதான்! மார்க்சியம், லெனினியம், பெரியாரியம் இன்ன பிற எல்லா இயங்களும் சாத்தியமான்னு யோசிச்சுப் பார்த்தா பார்ப்பான் இருக்கும் வரை எதுவுமே சாத்தியமில்லைதான்! //

  உண்மைதான். அதேபோல் ஆதிக்கசாதிகள் இருக்கும் வரை தமிழ்தேசியம் சாத்தியமில்லை.

  //மற்ற மானில மக்களையும் அரவணைக்க வேண்டும் என சொல்ல பார்ப்பானின் மார்க்சிய லெனினிய வாக்கியங்களுக்கும் பாரதிய சனதா கட்சியின், ஆர் எஸ் எஸ் சின் வாக்கியங்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை.//

  ”தமிழ்தேசியம்” எனும் வார்த்தையின் பொருளுக்கும், ஆதிக்க சாதியினரின் “சேர நாடு,சோழ நாடு, பாண்டி நாடு,கொங்கு நாடு,செட்டி நாடு” போன்ற வார்த்தைகளின் பொருளுக்கும் கூட அதிக வேறுபாடு இல்லை.

  //பார்ப்பான் தேசத்த எதிர்க்க நான் இங்கிறுக்கும் கோணவாய்க்கால் பாளையத்திலிருந்து இந்தியா பூராம் பயணம் சென்று ஆதரவு திரட்டி (அங்க போய் நான் இந்தி பேசிலன்னாலேயே குமட்டில குத்துவான், போய் முதல்ல இந்திய கத்துட்டு வாம்பான்!) அப்புறம் இந்தியாவை எதிர்க்கிறதுக்குள்ள எனக்கு வயசாயிரும்.//

  இப்போது என்னவோ, உங்களிடம் இந்தியாவை எதிர்பதற்காக தமிழ் தேசியத்திற்கான விமான படை, தரைபடை, கப்பல் படை போன்ற ராணுவ படைகளேல்லாம் இருப்பது போல் கூறுகிறீர். முதலில் பல தேசியங்களை ஒடுக்கும் இந்தியாவை யாருடைய ஆதரவில்லாமல் தனி தமிழகத்தால் எதிர்த்து தனிதேசியத்தை பெறமுடியுமா எனும் அடிப்படை விடயத்தை நடைமுறையுடன் பொருத்தி யோசிக்கவும்.

  //தோழரே! வீணாக சிரமப்பட வேண்டாம். பார்ப்பனியம் (அது எந்த இயத்தின் மீதும் ஏறி வந்து எந்தெந்த வடிவங்களில் வந்தாலும்) பெரியாரியம் அதை இனம் கண்டு கொள்ளும்.//

  தோழரே, யாருடைய தயவும் இல்லாமல் அமைக்கும் தமிழ் தேசியம் எனும் கற்பனையோடு மிதக்க வேண்டாம். கம்யூனிச பார்வையும், ஆரம்பத்தில் கற்பனாவாத கம்யூனிசமாகவே இருந்த்து. ஆனால் அதை விஞ்ஞான கம்யூனிச த்த்துவமாக அறிவியலின் துணைகொண்டு மாற்றியவ்ர் காரல் மார்ஸும், எங்கேல்ஸும். எனவே அறிவியல் பூர்வமாக சமூகத்தை ஆராய்ந்து போராட்டங்களை மேற்கொள்ளவும்.

  பார்ப்பனீயம்(ஆதிக்கசாதி) பகுத்தறிவு பகலவனின் படத்தை முகமூடியாக மாட்டி கொண்டு வந்தாலும் அதை, பெரியாரியல் பற்றிய சரியான பார்வையை கொண்டுள்ள, அம்பேத்கரிய வழிவந்த ஒரு மார்க்ஸியவாதி சரியாக அடையாளம் கண்டு கொள்வான்.

  தங்களுக்கு என் நன்றியும், புரட்சிகர வாழ்த்துகளும்!

 37. ///மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து…///

  என்னா அறிவுய்யா உமக்கு ? புல்லரிக்குது…சொரியாருக்கு சப்பைக்கட்டு கட்ட மொழியை புனிதமாக கருதுவதை மூடநம்பிக்கை ஆக்கி விட்டாய்.ம்ம்ம்ம். அப்புறம் என்ன என்னவெல்லாம் மூட நம்பிக்கை ??? பட்டியல் கொடுத்துவிட்டால் நலம்…

Leave a Reply

%d bloggers like this: