டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது
‘அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்’ என்ற கட்டுரையில் தோழர் மதியவன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மறுத்து, தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாருக் எழுதிய பதில்களின் மேல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தோழர் மதியவன்.
*
வணக்கம், தோழர் அ.உமர் பாருக்.
எனது கட்டுரை “தேனி மாவட்டத்தில் த.மு.எ.ச அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது பற்றியது “ என்பது சத்தியமா நீங்க சொல்லித்தான் தெரியும் தோழர்! ஆரம்பமே அமக்களப் படுத்தியிருக்கீங்களே….
`தேனி மாவட்டத்தில் த.மு.எ.ச அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது’ என்ற இந்தப் பொய்யான பரப்புரை யாருக்காக தோழர். படம் பார்க்கக் கிடைக்காத மக்களுக்காகவா?
டிசம்பரில், “அரையாண்டுத் தேர்வு நடந்துகொண்டிருப்பதால் அம்பேத்கர் திரைப்படத்தை த.மு.எ.ச தான் நிறுத்திவைத்துள்ளது” என்று தேனி மாவட்ட த.மு.எ.ச தலைவர் காமுத்துரை சொல்லியது, த.மு.எ.ச விற்கே தெரியாது என்றால், தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டீர்களா என்ன..? அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். வேண்டுமானால் வழக்கம் போல் தீர்மானம் மட்டும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவது என்று தீர்மானம் போட்டீர்கள் அல்லவா? அது மாதிரி.
எனது கட்டுரையில், தேனி மாவட்ட த.மு.எ.சவின் பெரு முயற்சிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறீர்கள்.
உண்மையில் தேனி மாவட்ட த.மு.எ.ச வின் மாபெரும் முயற்சிகளை மிகச் சிறப்பாகக் கூறியிருப்பதாகவே உணருகிறேன். என்ன முயற்சி என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் தோழர்!
“தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் தமிழில் ஒரே ஒரு படப் பெட்டியைத்தான் தயார் செய்து வைத்திருந்ததாம்!” எனக்குத் தெரியுமா என்று வேறு கேட்டிருக்கிறீர்கள்?
அம்பேத்கர் திரைப்படத்தைப் பற்றி தேனி த.மு.எ.ச விற்கு எதுவுமே தெரியாது என்பது மட்டும், எனக்கு நல்லாவே தெரியும் தோழர்.
அம்பேத்கர் திரைப்படம் டிஜிட்டல் முறையில் வந்தது என்பதும், டிஜிட்டல் முறையில் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பதும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் 100 பிரதிகள் வரை தயார் செய்து வைத்திருந்ததும் எனக்குத் தெரியும் தோழர். கூடுதல் செய்தியாக, மிகவும் வசதி குறைந்த திரையரங்குகளான கொட்டகைகளில் திரையிடக்கூடிய படச்சுருள் பிரதிகள்கூட 3 தயாராக இருந்தது என்பதும் தெரியும் தோழர். உங்களுக்குப் உதவாத இன்னொரு தகவல், தேனியில் பாத்திமா திரையரங்கைத் தவிர அனைத்துத் திரையரங்கிலும் (சிறப்புக்காட்சி நடைபெற்ற வசந்த் திரையரங்கு உட்பட) இந்த 100 பிரதிகளையும் திரையிட முடியும். பாத்திமாவிலும்கூட அந்த 3 படச்சுருள்களை திரையிடமுடியும்!
தலித் அமைப்புகள் தோல்வியைத் தழுவிய சூழலில், த.மு.எ.ச வெளியிட்டுவிட்டதாம்! (அந்த சிறப்புக் காட்சியைத்தான்!)
தலித் தோழர்கள் திரையிட்டது ஒரு சில இடங்களாகவே இருந்தாலும், அவைகள் அனைத்தும் மக்களுக்கான காட்சியாகவே இருந்தது என்பதை தோழருக்குத் தெளிவாக தெரியப்படுத்த விரும்புகிறேன்.
கோவையில் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்களும், கோவை சோமனூரில் படத்தை திரையிட்டார்கள்…
சிறப்புகாட்சியாக, அதாவது ஒரே ஒரு காட்சியாக இல்லாமல் வழக்கமான காட்சியாகவே திரையிட்டதால் தமுஎசவின் சிறப்பு விருந்தினர்களான, மாவட்ட ஆட்சியருக்கோ, வருவாய்த்துறை அதிகாரிக்கோ அங்கு வேலையில்லாமல் போனது. தோழர்கள் எதிர்பார்த்ததும் மக்களை மட்டும்தான். இந்த சாதாரண காட்சியிலேயே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவயமாகத் திரையிட்டார்கள் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்கள்.
தேனி த.மு.எ.ச திரையிட்டது , சிறப்புக்காட்சி என்பதால் 20 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டது. இன்றைய பொருளாதார நிலையில் மாவட்ட ஆட்சியரையும் வருவாய்த்துறை அதிகாரியையும் மக்கள் 20 ரூபாய் கொடுத்தால், நேரில் பார்க்கலாம் என்பது எவ்வளவு பெரிய சாதனை.
அடுத்து அரசு அதிகாரியை வழிமறித்தது நியாயமானதாம், ஆனால் அது நடைபெற்றிருக்க வேண்டிய இடம் அரசு அலுவலகமாம்!
மக்கள் பணத்தில் எடுக்கப்பட்ட தங்கள் தலைவரின் திரைப்படத்தை, அனைத்து மக்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில், தொடர்ந்து திரையிட வலியுறுத்தி, அதே திரைப்படத்தின் ஒருகாட்சியை மட்டும் துவக்கிவைக்க வந்த அரசு அதிகாரியை முற்றுகையிட்ட, மக்களின் நியாமான போராட்டத்தைக்கூட கொச்சைப்படுத்தியுள்ளது உங்கள் எழுத்துகள். நான் முந்தைய கட்டுரையில் எழுதியிருந்த ‘த.மு.எ.ச வின் கள்ளத்தனம்” என்ற வார்த்தைகளுக்கு வலுச்சேர்த்த தேனி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்திற்கு நன்றிகள்.
திரையரங்கு பேனர்கள் கிழித்தெரியப்பட்டதாம்! (எந்த படத்திற்கான பேனர் என்பதை சொல்லாமல் விட்டதில் உள்ளது த.மு.எ.ச வின் கள்ளத்தனம்).
தோழருக்கு, ஒரு தகவலை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்;
Oxford university “The makers of the Universe” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் கடந்த பத்தாயிரம் வருடங்களில், உலகில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த 100 மாமனிதர்களைப் பட்டியலிடுகிறது Oxford university. அதில் 4வது இடத்தில் இருக்கும் பெயர் என்ன தெரியுமா…? “டாக்டர் பாபாசாகேப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்” (முதலிடம் அம்பேத்கர் தன் குருவாக ஏற்றுக்கொண்ட புத்தருக்கு).
இவ்வளவு சிறப்பிற்குரிய உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மாமனிதனின் வரலாற்றுத் திரைப்படம் , தேனியில் எதோ ஒருமூலையில் உள்ள திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கையில் (அதுவும் சிறப்புக்காட்சியாக), வெளியில் “நடுநிசி நாய்கள்” என்று 8 க்கு 10 ல் வைக்கப்பட்ட பேனரை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கிழித்தது, த.மு.எ.ச விற்குத் தவறாகிவிட்டது?
பேனரை கிழித்ததாலும், தலித் அமைப்புகளின் கொடிகள் கட்டப்பட்டதாலும் திரையரங்கு உரிமையாளர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனராம்! ஒடுக்கப்பட்ட மக்களை திட்டமிட்டே இழிவுபடுத்துகிறது தங்களின் எழுத்துக்கள்.
கேனப்பய, கிறுக்குப்பய… படத்துகெல்லாம் முதல் காட்சியிலேயே திரையரங்கு வாசல் கதவுகள் பிய்த்து எறியப்பட்டது உங்களுக்குத் தெரியாதா? பறிகொடுத்த உரிமையாளர்கள்கூட கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியாகவே பேட்டியளித்துள்ளனர். அம்பேத்கர் பட பேனர் இருக்க வேண்டிய இடத்தில் “நடுநிசி நாய்கள்” என்று இருந்த பேனர், அதுவும் படம் முடிந்ததும், குப்பைக்குப் போகும் பேனரைக் கிழித்ததில் திரையரங்கு உரிமையாளர்கள் அப்டியே Shock ஆயிட்டாங்கலாம்.
போடியிலும் கம்பத்திலும் தலித் தோழர்கள், அடையாளத்திற்காக போராட்டத்தை நடத்திவிட்டு (அந்த சிறப்புக் காட்சியை) வெளியிட துணை நின்றார்களாம்!
அதான் அடையாளத்திற்காக என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே. தலித் என்பதற்காக அனைவரையும் கண்மூடித்தனமாக நம்பிவிட முடியாது தோழர். த.மு.எ.ச. விலும்கூடத்தான் தலித்கள் இருக்கிறார்கள்!
சரி, த.மு.எ.ச ஏன் திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படத்திற்கான பேனர் வைக்கவில்லை?
கொல்லைப்புறத்துக் காட்சிக்குப்போய் யாராவது பேனர் வைப்பார்களா? படத்தை துவைக்கி வைப்பவருக்குப் பின்னாலேயே, படப் பெட்டியும் சென்றுவிடப்போகிறது. பிறகு எதற்கு பேனர் கீனர் எல்லாம் என்று விட்டு விட்டீர்களோ?
பல ஆண்டுகளாக, பல அமைப்புகள் போராடி கிடைக்காத அம்பேத்கர் திரைப்படத்தின் பொட்டி த.மு.எ.ச விற்கு கிடைத்ததன் காரணமும் இதுதான். த.மு.எ.ச.வும் நம்பிக்கைக்கு விசுவாசமாகவே நடந்துகொண்டுள்ளது.கூடுதலாக தம்பட்டம் மட்டும் போட்டுக்கொண்டது….
அம்பேத்கர் படத்தை அடர்ந்தகாடாக வெளிக்கொண்டுவரும் முயற்சியில் திரைப்பட கழகத்தோடு பேசிவருவதாக கூறியிருக்கிறீர்கள்.
ஒரு மலராகக் கொண்டுவந்தால் கூட போதும், மக்களுக்காக கொண்டுவாருங்கள் அந்த மலரை, மலர்வனமாக அவர்கள் மாற்றிக்கொள்வார்கள்.
நன்றி தோழர்.
தோழமையுடன்
மதியவன்
“டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திரைப்படம்
பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு”
முன்னர் நான் எழுதிய கட்டுரையில் அம்பேத்கர் திரைப்படம், கோவை சென்டிரல் திரையரங்கில் திரையிடப்பட்டதில், ஆதிதமிழர் பேரவையின் பங்களிப்பு விடுபட்டுவிட்டது. ஆதிதமிழர் பேரவை தோழர்களுக்கும் , சோமனூரில் சாதாரண காட்சிகளையே சிறப்பாகத் திரையிட்ட “ஆதி தமிழர் விடுதலை முன்னணி” தோழர்களுக்கும் இங்கே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-மதியவன்
தொடர்புடையவை:
டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும்
அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி * ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா? * 60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ… * டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி *டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்? * ‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும் என்ற கட்டுரையில் தோழர் ஓவியா பின்னூட்டமாக
// கண்டதே காட்சி,,, கொண்டதே கோலம்,,, என்ற நிலையில் தோழர் மதியவனின் கட்டுரை படு காமெடியாக இருக்கிறது. திடீரென்று உள்ளே வந்து வெல்லட்டும் வெல்லட்டும் போட்டுவிட்டு படம் பார்க்கச் சென்றுவிடுவது போன்று அவ்வளவு சுலபமாக அமைந்துவிடவில்லை அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட தமுஎகச எடுத்துகொண்ட முயற்சிகள்.,,
ஓவியா
தமுஎகச
மாவட்ட செயற்குழு
தேனி//
என்று எழுதியிருந்தார்….
மேலும் தனது http://veethiithal.blogspot.com/2011/03/blog-post_28.html லும்கூட இதையே
“கண்டதே காட்சி,,, கொண்டதே கோலம்,,,,” என்ற தலைப்பில் கட்டுரையாகவே வெளியிட்டிருந்தார்.
தோழர் ஓவியாவிற்கு போராட்டக்குழுவின் விளக்கம் இதோ …
“கண்டதே காட்சி… கொண்டதே கோலம்…” புகழ்-தோழர் ஓவியாவிற்கு…
த.மு.எ.ச வின் முயற்சியைப் பற்றியோ அல்லது போராட்டக்குழுவின் போராட்டத்தைப் பற்றிய விமர்சனமாகவோ, எந்தவித விசயமும் இல்லாத தோழர் ஓவியாவின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றாலும், இந்தப் பின்னூட்டத்திற்கே அவரின் பொறுப்பெல்லாம் போட்டு அசத்தியிருப்பதால். தோழர் ஓவியா எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கு மதிப்புக் கொடுத்து, அவரின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கிறேன்.
நமது கட்டுரை படு காமெடியாக இருப்பதாக கூறியிருக்கிறார். அது உண்மைதான்! நமது கட்டுரையின் காமெடி டிராக்கே த.மு.எ.ச தானே.
அம்பேத்கர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல , போராட்டக்குழுவின் போராட்டத்தை” சுலபமானது!” என்று வர்ணித்துள்ள தோழர் ஓவியாவிற்கு, போராட்டத்தின் போது நாங்கெல்லாம் “govt employees ” என்று மண்டையைச் சொறிந்துவிட்டு ,ஓடிப்போன த.மு.எ.ச தோழர்களைத் தெரியவில்லை!
அந்த சிறப்புக் காட்சியின் போது கூட 100 டிக்கெட்டுகளுக்கு மேல் விலைக்கு வாங்கி, அதை இலவசமாக கொடுத்து மக்களைத் திரட்டியதில் போராட்டக் குழுவின் பங்கு என்ன என்பதும் தோழர் ஒவியாவிற்குத் தெரியவில்லை! (மதிப்பிற்குரிய தோழர் தேனி சீருடையானையும் , தோழர் சாமூண்டீஸ்வரியையும் கேட்டால் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.)
குடும்பமாக வந்த மக்களைத் திரையரங்கிற்குள் அனுப்பிவிட்டு, இளைஞர்களைத் திரட்டி வருவாய்த்துறை அதிகாரியை போராட்டக் குழு முற்றுகையிட்டபோது கூட தோழர் ஓவியா திரையரங்கைவிட்டு எட்டிப் பார்க்கவில்லை என்றால், வருவாய்த்துறை அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டதும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
இப்படி எதுவுமே தெரியாமல், பேப்பர் பேனாவுடன் திரையரங்கிற்கு உள்ளேயே குடிகொண்டிருந்த தோழர் ஓவியாவிற்கு, போராட்டக் குழு திடீரென வந்ததாகத்தான் தெரிந்திருக்கும். அப்பொழுது, “தோழர் ஓவியா கண்டதே காட்சி… போராட்டக் குழு கொண்டதே கோலம்..”. என அறியாமையில் சிலவரிகளை வடித்திருக்கலாம் தவறில்லை (எழுத்தாளர்கள் இல்லையா…?). அதற்காகப் போராட்டக் குழுவின் போராட்டங்களை கட்டுரையில் விளக்கிய பிறகும், சுலபமாக , “வெல்லட்டும் வெல்லட்டும் போட்டுவிட்டு படம்பார்க்கச் சென்றுவிட்டதாக” தோழர் ஓவியா கூறியிருப்பது, த.மு.எ.ச நுணலும் என்பதைத்தான் காட்டுகிறது.
இருந்தாலும் தோழர் ஓவியா ஒருவர்தான், படத்தை வெளியிட்டதாகக் கூறாமல், “திரையிட்டதாக” எழுதியிருக்கிறார். அந்தமட்டில் தோழர் ஓவியாயாவின் தெளிவான இந்த ஒருவார்த்தை ஒட்டுமொத்த த.மு.எ.ச வே பயன்படுத்தாத திரு வார்த்தை! நன்றி தோழர்.
-தோழமையுடன் மதியவன்
முதலில் தோழர் மதியவனின் குற்றச்சாட்டை வாசித்த வாசகர்களுக்கு சற்று குழப்பம் எழுந்திருக்கலாம்……
ஆனால், தோழர் அ.உமர் பாரூக், தோழர் ஓவியா ஆகியோரின் விளக்கம் மற்றும் மறுமொழிகளும், அவற்றிற்கு தோழர் மதியவன் கொடுத்த பதிலடியும் தா.மு.எ.ச வின் நிலைப்பாட்டையும், அவர்களின் முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் அவர்களின் கூற்றில் உண்மையில்லை என்பதும் தெளிவாகிறது…..
தோழர் அ.உமர் பாரூக், தோழர் ஓவியா ஆகியோரின் விளக்கங்களும், மறுமொழிகளும் தோழர் மதியவனின் குற்றச்சாட்டிற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது……
//எனது கட்டுரையில், தேனி மாவட்ட த.மு.எ.சவின் பெரு முயற்சிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறீர்கள்.உண்மையில் தேனி மாவட்ட த.மு.எ.ச வின் மாபெரும் முயற்சிகளை மிகச் சிறப்பாகக் கூறியிருப்பதாகவே உணருகிறேன். என்ன முயற்சி என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் தோழர்!//
//தோழர் ஓவியா ஒருவர்தான், படத்தை வெளியிட்டதாகக் கூறாமல், “திரையிட்டதாக” எழுதியிருக்கிறார். அந்தமட்டில் தோழர் ஓவியாயாவின் தெளிவான இந்த ஒருவார்த்தை ஒட்டுமொத்த த.மு.எ.ச வே பயன்படுத்தாத திரு வார்த்தை! நன்றி தோழர்.//
http://mathimaran.wordpress.com/2011/03/30/article-384/
அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட்டது குறித்து மறுபடியும் வெளிவந்த கட்டுரை படித்தேன். தேனி மாவட்ட தமுஎச பற்றிய உங்கள் கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய மறுமொழியில் “கள்ளத்தனம்”, “முகத்திரை கிழிந்தது” “பொய்யான பரப்புரை” போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் நாகரிகமான வார்த்தைகளால் எங்கள் முயற்சிகளை விவரித்திருந்தேன். நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றையும் மறுக்கிற வேகத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
அம்பேத்கர் திரைப்படத்தை திரையிடும் முயற்சியில் தமிழகம் முழுவதும் தமுஎச தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அதன் முயற்சிகளில் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக தமுஎச வின் ஒட்டுமொத்த முயற்சிகளையே கொச்சைப்படுத்தும் விதமான உங்கள் பார்வையை மறுக்கிறேன். அம்பேத்கர் என்ற ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய திரைப்படம் மக்கள் மத்தியில் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தமுஎச தன்னாலான முயற்சிகள் மூலமாக தமிழகத்தில் 25 ஊர்களில் 135 காட்சிகளை நடத்தியது. அதில் முழுமையான இலவச காட்சிகள், மாணவர்களுக்கான இலவச காட்சிகள், தொடர்ந்து மூன்று நாட்களும் 12 காட்சிகள், ஒரே ஒரு சிறப்புக்காட்சி என்ற பலவகைகளில் அந்தந்த பகுதிகளில் வாய்ப்புள்ளவாறு திரையிட்டது. உலகம் போற்றும் ஒரு மாமனிதனைப் பற்றிய திரைப்படம் இப்படியான முயற்சிகள் மூலமாக சிறு அளவுக்கேனும் மக்களிடம் போய்ச்சேர்வது நல்லதா? அல்லது படச்சுருளாக பெட்டியிலேயே அடைபட்டுக் கிடப்பது நல்லதா? நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? இத்தனை ஆண்டுகளாக யார் யாரோ முயற்சித்து திரையரங்குகளுக்கு வராத அத்திரைப்படத்தை தமுஎச மக்களிடம் திரையிட முயன்றது “கள்ளத்தனமா?”
திரையிடுதல் என்ற பொருளில் தான் வெளியிடுதல் என்ற சொல்லை நான் பயன்படுத்தியிருந்தேன். இந்த சொல் மாறுபாடு கூட உங்கள் பார்வையில் “பொய்யான பரப்புரை”யாகப் படுகிறது.
தேனி திரையிடலில் (இப்போது சரிதானா?) திரைப்படக்கழகத்தின் முன்பின் தொடர்பற்ற போக்கால் திரைப்படம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் தானே தவிர வேறு காரணங்கள் இல்லை.
திரைப்படக்கழகம் அம்பேத்கர் படச்சுருள்கள் மூன்றை தயார் செய்திருந்தாலும் தேனி மாவட்டம் கேட்ட போது ஒரு படச்சுருள்தான் தயார் நிலையில் இருந்தது. திரையிடல் பற்றிய பேச்சு துவங்கிய போது 5 படச்சுருள்கள் இருப்பதாகக் கூறிய திரைப்படக்கழகம் முன்னுக்குப்பின் மாற்றி மாற்றி தகவல்களைத் தந்தது. அது தவிர நீங்கள் கூறியவாறு டிஜிட்டல் முறையில் திரையிட 100 வரை அல்ல. இன்னும் அதிகமாக திரையிடவும் வசதி இருந்தது. ”க்யூப்” முறையில் செயற்கைக்கோள் வழி திரையிடலில் எத்தனை திரையரங்குகளில் வேண்டுமானாலும் திரையிட வாய்ப்பிருந்தது. ஆனால் படச்சுருள் திரையிடலுக்கும், செயற்கைக்கோள் வழி திரையிடலுக்கும் மிகப்பெரிய அளவில் பொருளாதார வேறுபாடு இருந்தது. அவ்வாறு செயற்கைக்கோள் வழியிலும் தமுஎச பல இடங்களில் திரையிட்டுள்ளது. தேனியைப் பொறுத்த அளவில் படச்சுருள் பெற்று திரையிடுவது போடி, கம்பம் போன்ற பகுதிகளுக்கும் பொருத்தமாக இருந்தது என்பதால் தான் அவ்வாறு திரையிட்டோம்.
அம்பேத்கர் திரைப்படத்தை முழுநாள் காட்சிகளாக, இலவசமாக திரையிட வேண்டும் என்ற கோரிக்கையை யாரிடம் வைப்பது பொறுத்தமாக இருக்கும்? அரசிடம் கோரலாம் என்றால் அரசு அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்துவதுதானே முறை? தேனி மாவட்டத்தில் திரையரங்குகள் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட முன்வராத நிலையில் மாவட்ட அரசு அதிகாரிகளின் துணையோடுதான் குறைந்தபட்சம் மூன்று திரையரங்குகள் சிறப்புக்காட்சிகளுக்கு சம்மதித்தன. திரைப்படத்தை திரையிட உதவிய அந்த அதிகாரிகளை வழிமறித்து அதுவும் திரையரங்க வாயிலில் போராட்டம் நடத்துவது சரிதானா? ( ஒரு தோழர் போராட்டத்தின் போது “இல்வசமாக அனுமதிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன்” என்றார். ரூ.20 நுழைவுக்கட்டணத்தை தராமல் ஏராளமான நபர்களை உள்ளே அனுமதித்த நிலையில் அந்த நபருக்கு இரு இலவச நுழைவுச்சீட்டை தோழர்.இதயகீதன் வழங்கினார். தீக்குளிக்கத் தயாரான அந்த தோழர் உடனடியாக திரையரங்கிற்குள் ஓடினார். இது போன்ற தனிநபர் சார்ந்த விஷயங்களை என் பதிலுரையில் நான் குறிப்பிடவில்லை.)
ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிக்கும் நிலையில் ஒரே ஒரு சிறப்புக்காட்சிக்கு அனுமதி வாங்கியிருந்த நாம் அங்கிருந்த சினிமா பேனரை எடுக்கச்சொல்ல முடியாது. காலைக்காட்சியில் அம்பேத்கர் திரையிடல் முடிந்த பிறகு மறுபடியும் அவர்கள் தங்கள் தொடர்காட்சியை ஒளிபரப்பும் விதமாக பேனரை எடுக்கவில்லை. (அது எந்த பேனராக இருந்தாலும் அது திரையரங்கத்தின் உரிமைதானே?). அம்பேத்கர் திரையிடல் தொடர்பாக தேனியில் நேரு சிலை அருகில் 120 சதுர அடிகளில் டிஜிட்டல் பேனரும், 100 பலவண்ணங்களில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளும் தேனி முழுக்க ஒட்டப்பட்டிருந்தன. ( இத்தகவலைக்கூட நீங்கள் தேனி சீருடையான் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.) திரையிட அனுமதி தந்த திரையரங்கத்தின் பேனரை கிழித்தெறிந்ததும், அவர்களுடைய அனுமதியின்றி திரையரங்கச் சுவர்களில் மேலேறி கொடிகளைக் கட்டியதும் அத்துமீறல்தான். (தேனி மாவட்டத்தில் திரையிடப்பட்ட மூன்று திரையரங்கங்களிலும் நான் முழுமையாகப் பங்கேற்ற அடிப்படையில் இச்செய்தியைக் குறிப்பிட்டேன். ஒடுக்கப்பட்ட மக்களை எவ்விதத்திலும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இதனை நான் குறிப்பிடவில்லை). கேணப்பய, கிறுக்குப்பய படங்களுக்கு வரும் ரசிகர்கள் பேனரை கிழிப்பார்கள்; அவர்கள் வேட்டியைக்கூட கிழிப்பார்கள். அவர்களும், அம்பேத்கர் திரையிடலுக்கான நெடிய போராட்டத்தை நிகழ்த்திய நாமும் ஒன்றா தோழர்? போடியில் 120 சதுர அடியில் அம்பேத்கர் திரையிலலுக்கான பேனரும், 100 பலவண்ண சுவரொட்டிகளும், கம்பத்தில் 80 சதுர அடியிலான பேனரும், 100 பலவண்ண சுவரொட்டிகளும், 5000 நோட்டீசுகளும் என தமுஎச தன்னால் இயன்ற அளவிற்கு வெளிப்படுத்தியிருந்தது.
தேனியில் திரையரங்கத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தால் கம்பம், போடி திரையரங்க உரிமையாளர்கள் பின்வாங்கியது உண்மை. (இது உங்களுக்கு “ஷாக்”காக இருந்தால் நான் என்ன செய்யமுடியும்?) தமுஎச வின் தொடர்முயற்சியில் தான் இரு திரையரங்குகளிலும் திரையிடல் தொடர்ந்தது.
எந்த அமைப்புகள் தேனியிலும், போடியிலும் போராட்டம் நடத்தினார்களோ அதே அமைப்பினர்தான் கம்பத்தில் பாராட்டவும் செய்தனர். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மூன்று திரையிடல்களுமே தலித் தோழர்களின் துணையோடும், பங்கேற்போடும்தான் நடைபெற்றன. அம்பேத்கர் படத்தை தமுஎச திரையிட்டுவிட்டது என்பதில் என்ன லாபநோக்கம் இருந்துவிட முடியும்?
தமுஎச செய்யும் ஒவ்வொரு செயலுமே மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலான செயல்தான். அவற்றில் விமர்சனம் இருந்தால் தோழமையோடு பகிர்ந்துகொள்ளுங்கள். செழுமைப் படுத்துவோம். எதிர்நிலையில் இருந்து கொச்சைப்படுத்த வேண்டாம். உங்கள் கேலியான , கோபமான வார்த்தைகளைச் சேமியுங்கள். அவற்றை யார் மீது பயன்படுத்துவது என்பதை உங்களுக்கு காலம் அறிவிக்கும் போது பயன்படுத்தலாம்.
இறுதியாக ஒன்று.
அம்பேத்கர் படத்தை தமுஎச திரையிட்டது யாரிடமும் , எந்த அமைப்பிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக அல்ல.
நல்லது தோழர்.
அம்பேத்கர் திரைப்படத்தை இலவயமாகத் திரையிடுங்கள் என்று நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை தோழர். அம்பேத்கர் திரைப்படத்தை திரையிடுவதில் இருந்த சிக்கல் பணம் தொர்பானது அல்ல என்பதையும், அரசு அதிகாரிய முற்றுகையிட்டதற்கான காரணத்தையும், நியாயத்தையும், அந்த சிறப்புக்காட்சிக்கு கூட போராட்டக்குழுவே மக்களை திரட்டியது என்பதையும், மற்றும் தேனி த.மு.எ.ச வின் மீதான எனது விமர்சனம் அல்லது குற்றச்சாட்டு தொடர்பாக பல இடங்களில் எனது கட்டுரையில் விளக்கிய பிறகும் , தங்களின் எழுத்துக்களின் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் என்னதான் சொல்வது.
//விமர்சனம் இருந்தால் தோழமையோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.// என்று கூறியிருக்கிறீர்கள். இதோ…
மனுதாசன் – பாரதியாருக்கு நூற்றாண்டு விழா, கலை இலக்கிய விழா என்று சிறப்பு விழாக்கள் எடுக்கும் த.மு.எ.ச , அம்பேத்கரை உலகம் போற்றும் மாமனிதன் என்று கூறுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், இந்த மாமனிதன் அம்பேத்கரை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல த.மு.எ.ச முயற்சிக்கிறது என்றால் வாழ்த்துக்கள். நீங்களும் (த.மு.எ.ச) அம்பேத்கர் தொடர்பான கூட்டமோ ,கருத்தரங்கமோ , ஒருவேளை விழாவோ எடுத்தால், கலந்துகொள்ளும் த.மு.எ.ச தோழர்களை சாதிய எதிர்ப்பின் அடையாளமான அம்பேத்கரின் T.Shirt அணியச்செய்யுங்கள். அம்பேத்கர் T.shirt அணிவதை விழாவில் கலந்துகொள்ள முதல் தகுதியாக்குங்கள். பிறகு அதை மறுப்போரின் முற்போக்கு முகத்திரையோ அல்லது நான் பயன்படுத்தியிருந்த “முகத்திரை” “கள்ளத்தனம்” போன்ற வார்த்தைகளோ அர்த்தமில்லாமல், காணாமல் போய்விடும்.
“தீண்டாமையை ஒழிக்க காங்கிரசு பாடுபடுகிறது என்றால் , தீண்டாமையை கடைபிடிக்கக் கூடாது என்பதை காங்கிரசில் சேருவதற்கான அடிப்படை தகுதியாக்குங்கள்” என்று காந்தியிடம் அம்பேத்கர் கேட்டது எவ்வளவு நியாயமானதோ, அவ்வளவு நியாயமானதுதான், அம்பேத்கரை மக்களிடம் கொண்டுசெல்வோம் எனும் த.மு.எ.ச தோழர்களை முதலில் அம்பேத்கர் T.Shirt அணியச்சொல்லுவதும். காந்தியினால் முடியவில்லை, த.மு.எ.ச வினால் முடிந்தால் நல்லதுதான்.
நன்றி தோழர் உமர் பாரூக்.
தோழமையுடன் – மதியவன்
அம்பேத்கர் T.Shirt
“NOBODY IS MY MASTER,
NOBODY IS MY SLAVE.
I AM NOBODY”
தேவைப்பட்டால், தோழர் வேந்தன்- 91766 00021
தோழர். மதியவன் அவர்களுக்கு,
வணக்கம்.
அம்பேத்கர் பட திரையிடலில் தமுஎச விற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதை விளக்கத்தான் அதே விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியிருந்தது.
அண்ணல் அம்பேத்கர் தொடர்பான ஆழமான விவாதங்களுடன் கூடிய மூன்று நாள் கருத்தரங்கம் ஒன்றை தமுஎச நெல்லையில் புனித சேவியர் கல்லூரியோடு இணைந்து சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது. முற்போக்காளில் சிலருக்கும் – இன்னும் பல சமூக நோக்கமுள்ள பலருக்கும் அம்பேத்கர் பற்றிய மிகச்சரியான புரிதல் இல்லை என்பதை நானும் அறிவேன். தொடரும் விமர்சனப்பூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் அனைத்து தரப்பினருக்கும் அம்பேத்கர் சிந்தனைகளை கொண்டுசெல்வோம்.
எனக்கு டி ஷர்ட் அணிவதில் ஆர்வமில்லை என்றாலும் கூட அம்பேத்கர் டி.ஷர்ட்டை அணிந்து கொள்வதில் தடையேதும் இல்லை. என்னைப் போலவே முற்போக்காளர்கள் பலருக்கும் அம்பேத்கர் டி ஷர்ட்டை அணிந்து கொள்வதில் மாற்று கருத்து இருக்காது என்றும் நம்புகிறேன். தோழர். வேந்தன் தொடர்பு எண்ணிற்கு நன்றி.
அம்பேத்கர் டி ஷர்ட் அணிவதால் மட்டும் அவர் அம்பேத்காரிய சிந்தனையாளர் என்ற வரையறையில் எனக்கு முழு உடன்பாடில்லை. இது ஒரு இயக்கம் என்ற அளவில் டி ஷர்ட் அணிவதை நான் ஏற்கிறேன்.
அப்புறம் ஒரு தகவல். .
“பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கர்” இந்தி மொழி திரைப்படத்தை இப்போதுதான் இணயதளங்களில் இருந்து பதிவிறக்கி (களவாடி) முடித்தேன். அதனை அடர்தகட்டின் மூலம் கொண்டுசெல்லலாம்..தமிழில் கிடைக்கும் வரை. தேவையான தோழர்கள் தொடர்பு கொள்ளலாம். .
மருத்துவர்.அ.உமர பாரூக்
94880 11505
மருத்துவர்.அ.உமர பாரூக்
///எனக்கு டி ஷர்ட் அணிவதில் ஆர்வமில்லை என்றாலும் கூட அம்பேத்கர் டி.ஷர்ட்டை அணிந்து கொள்வதில் தடையேதும் இல்லை. என்னைப் போலவே முற்போக்காளர்கள் பலருக்கும் அம்பேத்கர் டி ஷர்ட்டை அணிந்து கொள்வதில் மாற்று கருத்து இருக்காது என்றும் நம்புகிறேன். தோழர். வேந்தன் தொடர்பு எண்ணிற்கு நன்றி.///
மருத்துவர்.அ.உமர பாரூக் அவர்களே அம்பேத்கர் டி ஷர்ட்டை நீங்கள் அணிவது மட்டுமல்ல, அதை உங்கள் தமுஎச சார்பில் கொண்டுவந்து, உங்கள் அமைப்பின் தோழர்கள் அனைவரும் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தவேண்டும். அதுதான் சரியான அரசியல் நடவடிக்கையாக இருக்கும். இல்லை என்றால் அது வெறும் தனிமனித விருப்பமாக சுருங்கிவிடும்.
சேகுவேரா, பிரபாகரன், பெரியார் டி ஷரட் அணிபவர்கள் ஏன் அம்பேத்கர் டி ஷர்டை அணிய மறுக்கிறார்கள் ? அவர்களிடம் அம்பேத்கர் டி ஷர்டை அணியசொல்லி கேளுங்கள்.
///அம்பேத்கர் டி ஷர்ட் அணிவதால் மட்டும் அவர் அம்பேத்காரிய சிந்தனையாளர் என்ற வரையறையில் எனக்கு முழு உடன்பாடில்லை.///
சரியா சொல்லியிருக்கிறீர்கள். அதேப்போல் சேகுவேரா, பிரபாகரன், பெரியார் டி ஷரட் அணிபவர்களுக்கும் அதுபொருந்தும்.
சும்மா பெயரளவில் இவர்கள் டி ஷர்ட்டைஅணிபவர்கள்கூட அம்பேத்கர் டி ஷர்டை அணிய மறுக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இதுதான் ஜாதி வெறி.
அம்பேத்கர் டி ஷர்ட் அணிவதால் மட்டும் அவர் அம்பேத்காரிய சிந்தனையாளர் இல்லை என்பதுபோல், அம்பேத்கர் டி ஷரட் அணிய மறுப்பவர்கள், அவர்கள் முற்போக்காளர்கள் இல்லை. ஜாதி வெறியர்கள் என்பதையும் புரிந்து கொண்டிர்களானால், மகிழ்ச்சி.
தோழர் உமர் பாருக். மதியவனின் கட்டுரையில் உள்ள //பொய்யான பரப்புரை// என்ற வார்த்தையை நாகரிகமில்லாத வார்த்தை என்று சொல்லிவிட்டு,த.மு.எ.க.ச வின் வலைப்பூவான
http://veethiithal.blogspot.com/2011/03/blog-post_28.html ல்
//தவறான தகவல்களால் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரைக்கு என் பதில் வெளியிடப்பட்ட பின்பு கட்டுரையாளரோ, கட்டுரைக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நபர்களோ பதில் தராமல் மெளனம் சாதிப்பது கட்டுரையின் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தும் விதமாக உள்ளது.//என்று எழுதியுள்ளார்.
அம்பேத்கர் படத்தை வெளியிட்டோம் என்றோம் சொல்லியவர்கள். இப்பொழுது தோழர் மதியவனின் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் தாங்களாகவே
//திரைப்படக்கழகம் முன்னுக்குப்பின் மாற்றி மாற்றி தகவல்களைத் தந்தது.// என்றும்
//ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிக்கும் நிலையில் ஒரே ஒரு சிறப்புக்காட்சிக்கு அனுமதி வாங்கியிருந்த நாம் அங்கிருந்த சினிமா பேனரை எடுக்கச்சொல்ல முடியாது.//
ஒரே ஒரு… ஒரே ஒரு…பலமுறை சொல்லுகிறார்கள்.
தோழர் மதியவன் கட்டுரையை முடிந்த அளவிற்கு திசை திருப்பிப் பார்த்தவர்கள் முடியாமல் முடிவுக்குவந்துவிட்டனர். அம்பேத்கர் டி ஷர்ட் பற்றி த.மு.எ.க.ச வின் நிலை மறுபடியும் அவர்களின் முகத்திரையை கிழித்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். தோழர் விவேக்கின் மறுமொழியும், தோழர் மதியவனின் கட்டுரையும் த.மு.எ.க.ச வை கேள்வி கேட்கிறன. பதில் சொல்ல முடியுமா அவர்களால். கட்டுரையில் உள்ள படம். சிறந்த முறையில் இதை விளக்குகிறது.
நல்ல விவாதம் அம்பேத்கர் T Shirt வந்தவுடன் முடிவு வருமா எதிபார்புடம் பல தோழர்கள் ……………..
பதில் சொல்ல வேண்டும் என்ற மருத்துவர்.அ.உமர் பாரூக்கின் அக்கறைக்கு மரியாதை தரவேண்டும்.
இணையத்தில் தமுஎச எழுத்தளார்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. இங்கு வந்தும் கருத்து சொல்லவில்லை. அவர்கள் பக்கங்களிலும் இதுபற்றி எழுதவில்லை.
எல்லா செய்திகளை பற்றியும் கருத்து சொல்கிற மாதவராஜ் போன்ற மகா மேதைகள் கூட மவுனமாக இருக்கிறார்கள். இதுதான் கள்ளத்தனம்.
இந்த கள்ளத்தனத்தை மருத்துவர்.அ.உமர் பாரூக் புரிந்துகொண்டு அவர்களிடம் அதை உடைக்க வேண்டும்.
அம்பேத்கர் திரைப்பட விவாதத்தில் கருத்து சொல்லவிட்டாலும்கூட பரவாயில்லை. அம்பேத்கர் டி ஷர்ட் அணிவது பற்றி சொல்லலாமே? ஏன் அந்த விசயத்தில் தமுஎசவினரும் அதன் தலைவர்களும் மௌனம் காக்கிறார்கள்.
இதுதான் கள்ளத்தனம்.
“கள்ளத்தனம்”,
தோழர் என். சந்திரன் அவரின் கருத்து அர்த்தமானது, முக்கியமானதும்கூட தமுஎசவின் பதிலுக்காக காத்திரிக்கிறோம்………….
வணக்கம் ,தோழர் அ. உமர் பாரூக்
//அம்பேத்கர் டி ஷர்ட் அணிவதால் மட்டும் அவர் அம்பேத்காரிய சிந்தனையாளர் என்ற வரையறையில் எனக்கு முழு உடன்பாடில்லை//
எங்களுக்கு பாதி உடன்பாடுகூட கிடையாது தோழர்.. ஆனால் அணியாமல் இதுபோன்று சாக்குச் சொல்வோர், சாதிய உணர்வாளர் என்பதில் சந்தேகம் துளியும் இல்லை.
மேலும், உங்கள் சந்தேகங்களையும், அம்பேத்கர் T shirt அணிவதற்கான காரணத்தையும், இது தொடர்பான உங்கள் தயக்கத்தையும்கூட தோழர் வேந்தன் மிகச் சிறப்பாகவே விளக்கியுள்ளார்.
//எனக்கு டி ஷர்ட் அணிவதில் ஆர்வமில்லை என்றாலும் கூட அம்பேத்கர் டி.ஷர்ட்டை அணிந்து கொள்வதில் தடையேதும் இல்லை//
இந்த வரிகளை நீங்கள் மிகவும் கவனமாக எழுதியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.
// என்னைப் போலவே முற்போக்காளர்கள் பலருக்கும் அம்பேத்கர் டி ஷர்ட்டை அணிந்து கொள்வதில் மாற்று கருத்து இருக்காது என்றும் நம்புகிறேன்//
உண்மையாகவே த.மு.எ.ச வில் இருப்பவர்கள் முற்போக்காளர்கள்தான் என்றால், இந்த வரிகள் இன்னும் வெளிப்படையானதாக இருந்திருக்கும்.
இப்படி ஒவ்வொன்றிலும் மிக நாசூக்காக நழுவும் உங்களை (த.மு.எ.ச.வை) விமர்சிக்காமல் இருக்க முடியாது தோழர்.
நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொன்றையும், நான் மறுக்கிற வேகத்தில் எழுதியிருப்பதாக கூறுகிறீர்கள் .
உண்மையில் இன்னும் நிறைய இருக்கிறது, நான் தேர்ந்தெடுத்து குறைத்தே எழுதுகிறேன். உதாரணமாக,
தேனியில் நேரு சிலை அருகில் அம்பேத்கர் திரையிடல் தொடர்பாக 120 சதுர அடிகளில் டிஜிட்டல் பேனர் வைத்ததாகவும் ,
தேனி சீருடையான் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். என்றுவேறு கூறியிருக்கிறீர்கள்
அம்பேத்கர் திரைப்படம் தொடர்பான த.மு.எ.ச வின் நடவடிக்கைள் உங்களைவிட எனக்கு நன்றாகவே தெரியும் தோழர்.
நீங்கள் கம்பத்தில் இருக்கிறீர்கள் . நான் தேனியில்தான் இருக்கின்றேன். அந்த தட்டி அதிகபட்சம் 3 க்கு 8 அடிகள் தான் இருக்கும். அதாவது 24 சதுர அடிகள்.
நீங்கள் கூறும் 120 சதுர அடிகள் என்பது “த.மு.எ.ச விற்கு நன்றி” என்று 10 க்கு 12 ல் நாங்கள் வைத்தோம் அல்லவா அதுதான்.
இந்த சிறுபிள்ளைத்தனமான பொய்யை என் மறுமொழியில் குறிப்பிடக்கூட இல்லை.(தோழர்களின் கட்டாயத்தின் பேரில்தான் இதை இங்கு குறிப்பிடுகிறேன்).
காரணம்,இந்த விஷயம் உங்களுக்கு செவிவழி தகவல்தான் என்பதை நான் புரிந்துகொண்டேன். தோழர் என்.சந்திரன் கூறியது போல, த.மு.எ.ச வில் இருந்து யாரும் பதில் எழுதாமல் நீங்கள் மட்டும்தான் பதில் எழுதுகிறீர்கள் என்ற காரணமும் ஒன்று.
அம்பேத்கர் T.shirt தொடர்பாக
//இந்த கள்ளத்தனத்தை மருத்துவர்.அ.உமர் பாரூக் புரிந்துகொண்டு அவர்களிடம் அதை உடைக்க வேண்டும்.// என்ற தோழர் என்.சந்திரனின் எதிர்பார்ப்பே எனது எதிர்பார்ப்பும்.
தோழர்கள் அம்பேத்கர் T.shirt ஐ கொண்டுவந்ததும் யாரிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக அல்ல தோழர். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
1. சாதிய எதிர்ப்பின் அடையாளமான அம்பேத்கரை அனைத்து மக்களிடமும் கொண்டுசெல்வது. (த.மு.எ.ச சொல்லியது போல)
2 . முற்போக்காளர்களின் முகத்திரையை கிழித்து அவர்களின் சாதிய மானோபாவத்தை அம்பலப்படுத்துவது.
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் த.மு.எ.ச தானாகவோ அல்லது தோழர்களின் கட்டாயத்தாலோ இணைத்துக்கொள்ளும். அது எந்த ஒன்று என்பது த.மு.எ.ச. வின் கையில்தான் உள்ளது.
– நன்றி
தோழமையுடன் மதியவன்
‘
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் த.மு.எ.ச தானாகவோ அல்லது தோழர்களின் கட்டாயத்தாலோ தன்னை இணைத்துக்கொள்ளும். அது எந்த ஒன்று என்பது த.மு.எ.ச. வின் கையில்தான் உள்ளது.
//அண்ணல் அம்பேத்கர் தொடர்பான ஆழமான விவாதங்களுடன் கூடிய மூன்று நாள் கருத்தரங்கம் ஒன்றை தமுஎச நெல்லையில் புனித சேவியர் கல்லூரியோடு இணைந்து சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.//
இருந்தும் ஏன் இவ்வளவு தயக்கம்.. ?
மாமேதை மாதவராஜ் ஏன் மௌனமாக இருக்கிறார்?
எழுத்தாளர்கள் சங்கத்தி்ல் இருந்து ஒருஎழுத்தாளர்கூட வந்து கருத்து சொல்ல தயங்குறாங்களே ஏன்?
வாங்கப்பா…வந்து அம்பேத்கர் டி சர்ட் போடறதுல எங்களுக்கு உடன்பாடு இல்லன்னாவது வந்து சொல்லுங்களேன்.
‘போராட்டக்குழு‘ புகழ் மதியவனுக்கு வணக்கம்,,,
//மாமேதை மாதவராஜ் ஏன் மௌனமாக இருக்கிறார்?
எழுத்தாளர்கள் சங்கத்தி்ல் இருந்து ஒருஎழுத்தாளர்கூட வந்து கருத்து சொல்ல தயங்குறாங்களே ஏன்?//
என்று என்.சந்திரன் ரொம்பவே வருத்தப்பட்டிருந்தார்,,, என்ன செய்வது தோழர் எங்களுக்கும் ஆசைதான் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க,,, ஆனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் ,, முற்போக்குப் படைப்பாளிகளையும்,, கலைஞர்களையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் தமுஎகச என்னும் மக்கள் இயக்கத்துக்கான களப்பணிகளை நிகழ்காலம் நிறையவே தந்திருக்கிறது. உங்களைப் போல் இணையத்தில் ‘கள்ளத்தனம்‘ ‘முகமூடி கிழிந்தது‘ என்று சக தோழமை அமைப்புகளைப் பற்றி உயர்வான நடையில் விமாச்னம் செய்ய,, பதில் கூற,,, அவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம்,,, போனால் போகட்டும் பெரிய மனதுபன்னி மன்னித்துவிடுங்கள் தோழர்.
தமிழகத்தில் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிடுவதில் தமுஎகச தனக்கான பலத்துடன் செயல்பட்டது. 25 ஊர்களில் 135 காட்சிகள் என அம்பேத்கர் திரைப்படத்தைக் மக்களிடம் கொண்டுசென்றிருக்கிறது. உங்கள் குரலைக்காட்டிலும் தமுஎகசவின் செயல்கள் அதிகமாக ஒலிப்பதை நீங்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் தோழர்.
///
ஓவியா (பொறுப்பு போடல ,,, இப்ப ok வா தோழர்,,,)
தயவுசெய்து தங்களின் பின்னூட்டத்தை நீங்களே இன்னொரு முறை படிங்க தோழர்…..
அம்பேத்கர் திரைப்படம் அல்லது T.Shirt தொடர்பான கேள்விக்கு தங்களின் எந்த பதிலும் இல்லாத, த.மு.எ.ச தோழர் உமர் பாரூக் இன்னும் பதில் சொல்லாத நிலையில் அவர் சார்பாகக்கூட எந்த ஒரு பதிலும் சொல்லாத தங்களின் மறுமொழியை!!! மன்னிக்கவும் வெறுமனமே பின்னூட்டத்தை என்னவென்று சொல்வது,
த.மு.எ.ச
// பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் ,, முற்போக்குப் படைப்பாளிகளையும்,, கலைஞர்களையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் தமுஎகச என்னும் மக்கள் இயக்கத்துக்கான களப்பணிகளை// ஆத்திக்கொண்டு பிசியாக இருக்கும் சூழலில் ,
ஏற்கனவே இந்த தளத்தில் பத்து , பதினைந்து பின்னூட்டங்களுக்கு முன்பே தோழர் உமர் பாரூக் குறிப்பிட்ட,
//தமிழகத்தில் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிடுவதில் தமுஎகச தனக்கான பலத்துடன் செயல்பட்டது. 25 ஊர்களில் 135 காட்சிகள் என அம்பேத்கர் திரைப்படத்தைக் மக்களிடம் கொண்டுசென்றிருக்கிறது.//
என்ற தகவலை அல்லது பரப்புரையை மட்டும் தங்களின் பின்னூட்டம் இன்னொரு முறை தாங்கிவந்துள்ளது.
தங்களின் பொறுப்பு போடவில்லை என்பதற்காக இப்படி பிசியான ஷெடியுளில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளாதீர்கள் தோழர். குறைந்த பட்சம் எழுத்து நடையாவது சொந்தமாக எழுதுங்கள். (நீங்கள் இருப்பது எழுத்தாளர்கள் சங்கம்!!!)
அம்பேத்கர் திரைப்படம் மற்றும் T .Shirt தொடர்பாக நல்ல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும், இந்த தளத்தில்
என். சந்திரன் //வாங்கப்பா…வந்து அம்பேத்கர் டி சர்ட் போடறதுல எங்களுக்கு உடன்பாடு இல்லன்னாவது வந்து சொல்லுங்களேன்.// என்றுகூட கேட்டுப்பார்த்தார்…
என். சந்திரன் யாரும் பதில் எழுதவில்லை என்று வருத்தப்படுவதாக கூறிய தோழர் ஓவியா,
என். சந்திரன் க்கு பதில் சொல்லுவது போல, பிசியாக இருப்பதையே ஒருபக்கத்துக்கு அடித்துத்தள்ளிவிட்டு கடைசிவரை பதில் சொல்லாமலே ஓடிப்போனதுதான் சிறப்பு!!!
அண்ணல் அம்பேத்கர் தொடர்பான ஆழமான விவாதங்களுடன் கூடிய மூன்று நாள் கருத்தரங்கத்தில் என்னதான் செய்தீர்களோ தெரியவில்லை….
விமர்சனமாகவும், கருத்துப் பரிமாற்றமாகவும் நல்ல விவாதம் நடந்துவரும் இந்த இடத்தில், இது போன்ற தேவையில்லாத பின்னூட்டத்தை தயவுசெய்து இடாதீர்கள் தோழர். (உங்க அளவுக்கு இல்லைன்னாலும், எங்களுக்கும் கொஞ்சம் வேலை இருக்கும்ல)
-நன்றி
தோழமையுடன் மதியவன்
///விமர்சனமாகவும், கருத்துப் பரிமாற்றமாகவும் நல்ல விவாதம் நடந்துவரும் இந்த இடத்தில், இது போன்ற தேவையில்லாத பின்னூட்டத்தை தயவுசெய்து இடாதீர்கள் தோழர். (உங்க அளவுக்கு இல்லைன்னாலும், எங்களுக்கும் கொஞ்சம் வேலை இருக்கும்ல)
-நன்றி
தோழமையுடன் மதியவன்///
அசத்திட்டீங்க தோழர்,,,
///உங்கள் குரலைக்காட்டிலும் தமுஎகசவின் செயல்கள் அதிகமாக ஒலிப்பதை நீங்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் தோழர்./// (நான் சொன்னதத்தான் திரும்ப சொல்றேன் தோழர்,,, இதுலயும் எழுத்து நடை அது இதுன்னு டிராக்க மாத்திராதீங்க)
தோழர் ஓவியா,
//மாமேதை மாதவராஜ் ஏன் மௌனமாக இருக்கிறார்?
எழுத்தாளர்கள் சங்கத்தி்ல் இருந்து ஒருஎழுத்தாளர்கூட வந்து கருத்து சொல்ல தயங்குறாங்களே ஏன்?//
என்று என்.சந்திரன் ரொம்பவே வருத்தப்பட்டிருந்தார்,,, என்ன செய்வது தோழர் எங்களுக்கும் ஆசைதான் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க,,, ஆனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் ,, முற்போக்குப் படைப்பாளிகளையும்,, கலைஞர்களையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் தமுஎகச என்னும் மக்கள் இயக்கத்துக்கான களப்பணிகளை நிகழ்காலம் நிறையவே தந்திருக்கிறது.///
சரி தோழர் அப்படியே இருக்கட்டும். அம்பேத்கர் டி ஷர்ட் பற்றி என் கேள்விக்கு என்ன பதில்?
களப்பணி தோழர் மாமேதை மாதவராஜ் தினம் ஒரு கட்டுரை இணையத்தில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்? ஒரே ஒரு வரி அம்பேத்கர் டி ஷர்ட் பற்றி அவரால் ஏன் எழுத முடியாதா?
சினிமா பார்பதற்கு, அதைபற்றி பாராட்டி எழுதுவதற்கு எல்லாம் நேரம் ருக்கிறது.
அம்பேத்கர் டி ஷர்ட் பற்றி களப்பணி ஆற்றப்போய்விடுகிறார்கள்.
த.மு.எ.ச முதல் மாணவி அல்லது பெண்மணி – தோழர் ஓவியாவிற்கு!
திருப்பத் திரும்ப சொல்லுங்க…. இரவு தூங்கும் போது மூணு முறை சொல்லிட்டுக்கூட தூங்குங்க… முடிஞ்சா த.மு.எ.ச தோழர்கள் அனைவரையும் சொல்லச் சொல்லுங்க. ஆனா தயவு செய்து கேள்விகளுக்கு பதிலையும் சொல்லுங்க…
“கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பிப்பது எப்படி” என்று த.மு.எ.ச வில் பயிற்சி வகுப்புகள் நடக்குமோ?
மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளையும் விட
//குறைந்த பட்சம் எழுத்து நடையாவது சொந்தமாக எழுதுங்கள். // என்று சொன்னதுதான் உங்களுக்கு main track காக தெரிந்தால் அந்த track ஐ மாற்றுவது நீங்கள்தான் தோழர். எப்படியோ பயிற்சி வகுப்பில் நன்கு கற்றுத் தெரியுள்ளீர்கள்.
-நன்றி
தோழமையுடன் மதியவன்
அன்பு மதியவன் அவர்களுக்கு வணக்கம்.தங்களின் சமூக மாற்றம் ஆர்வ இயக்கத்திற்கு
வாழ்த்துக்கள்.அம்பேத்கர் படம் தேனியில் திரையிடப்பட்ட விபரங்களை தங்கள் கட்டுரையில் கண்டேன். தாங்கள் சார்புள்ள அமைப்புகள் எத்தனை தியேட்டர்களில்
திரையிட்டன? (தமிழகம் முழுக்க) தேனியில் நடந்த சம்பவத்தை மட்டும் பார்த்துவிட்டு
ஒரு மதிப்பீட்டிற்கு வந்து இயக்கத்தின்மீது பரபரப்பாக எழுதுவது தங்களுக்கு என்ன
லாபம்? உங்களின் ஆதங்கத்தை பக்குவமாக எடுத்துச் சொல்வதும் நட்பு வட்டத்தை
அதிகப் படுத்துவதுமல்லவா இப்போதைய தேவை.அம்பேத்கர் பட இயக்கமே பெரிய
மாற்றத்தை இந்த சாதிய சமூகத்தில் கொண்டுவரும் என்ற அதீத மயக்கம் த மு எ க ச விற்கு இல்லை. த மு எ க ச பல மாவட்டங்களில் அனைத்து சகோதர தலித் அமைப்புகளை இணைத்துக்கொண்டும் பட வெளியீடு முயற்சிகளை செய்துள்ளது.
குமரியில் ‘அம்பேத்கர் திரைப்பட திரையிடல் கூட்டமைப்பு ‘உருவாக்கி பல அமைப்புகளின் உற்சாக பங்கெடுப்போடு 4 நாட்கள் 12 காட்சிகள் 5400 பேரை
பார்க்க வைத்துள்ளோம்.டிசம்பர் 3,4 தேதிகளில் சத்தமில்லாமல் நாகர்கோவிலுக்கு
வந்துபோனபோது 8 காட்சிகளில் 25 பேர்தான் பார்த்த சோகம் நடந்தது.ஆனால்
பிப் 25-28 தேதிகளில் 600 மாணவர்கள் உள்ளடக்கி 5400 பேர் பார்த்துள்ளனர்.அதில் அனுபவித்த பிரச்னைகள் களத்தில் இறங்கியவர்களுக்குத்தான் புரியும். தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் கூட்டுமுயற்சியோடு. இதுவும் போதாது என்ற அழுத்தமான ஏக்கம் இருந்தாலும் சற்று மன ஆறுதலான பல அடையாள நிகழச்சிகள் உள்ளன தோழரே, இப்போதிருக்கும் அரசியல் இயக்கங்களில் எந்த அரசியல் இயக்கம் தீண்டாமைக்கு எதிராகவும், ஆலய நுழைவுக்கும், பஞ்சமி நிலக்கிற்கு ஆதரவாகவும் இட ஒதுக்கீடு அமுலாக்கத்திற்கு ஆதரவாகவும் இன்னும் போதுமான வீச்சோடு நடத்த முடியாவிட்டாலும் ஒரளவு இயக்கம் நடத்துவது வேறு எந்த அரசியல் இயக்கம்? ஆதரவு இயக்கங்களை அரவணைத்து மாற்றம் விரும்பும் சக்திகளை ஒன்றிணைப்பதுதான் இப்போதைய அவசரத் தேவை. ஒரு இடத்தில் அந்த இடத்தின் தன்மைக்கேற்ற விதமாக சில பிரச்னைகள் வந்தாலும் மாற்றம் விரும்பும் உங்களைப் போன்றோர்கள் அரை ஆண்டு தேர்வுக்கு சென்றுவிட்டார்கள்,இனி முழு ஆண்டு தேர்வுக்கு போவார்கள் என்றெல்லாம் மதிப்பீடு செய்வது எதிர்கால சிந்தனை,செயல் மாற்றத்திற்கு உதவாது.தவறுகளை சுட்டிக்காட்டி தடைகளை தகர்த்து ஒன்றுபடுவோம்
முன்னேறுவோம். சாதீய ஆணி வேர் ஆழமாக அடிக்கப்பட்டிருக்கும் தேசத்தில்
மிக கடுமையாக விவேகமாக 25 சதமான மக்களின் அவலங்களை 75 சதமான மக்களிடம் மட்டுமல்ல 25 சதமான மக்களிடையே பொருளாதார அளவில் மட்டும்
மதிப்பு பெற்ற கொஞ்சபேரிடமும் பதித்து உணர்த்தி ஒன்றுபடச் செய்யவேண்டியது
மிக மிக அவசரம் என்று தாங்கள் சிந்திப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி. பேரா.முனைவர்.க.கணேசன். குமரி மாவட்டம்.
ஓவியாவின் மறுமொழியை த.மு.எ.க.ச வின் பதிலாக எடுத்துக்கொண்டோம் என்றால் த.மு.எ.க.ச தகிட தத்தோம் போடா வேண்டியதுதான். தோழர் மதியவனின் பதில்கள் கோபமானதாக இருந்தாலும், த.மு.எ.க.ச வின் கேள்விகள் அனைத்திற்கும் பதில்தரும் விதத்தில் பொறுப்பானதாக இருந்தது.
எப்பொழுதும் , கேட்ட கேள்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இது போன்று ஒண்ணுக்கும் உதாவாத பின்னூட்டத்தை பகிர்வதே ஓவியாவின் வேலை . இந்த வேலைக்கு முகமூடி, கள்ளத்தனம் என்ற வார்த்தைகள் கூட பத்தாது.
மதிப்பிற்குரிய தோழர் பேரா.முனைவர்.க.கணேசன் அவர்களுக்கு,
தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி…
1925 ல் கம்யுனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து… ஆலய நுழைவு , பஞ்சமி… ஈரோடு ,தூத்துக்குடி… என்று இந்த உரையாடலுக்கு சம்பந்தமில்லாத வரலாற்றுக்குள் செல்ல விரும்பவில்லை தோழர்….
அம்பேத்கர் பட விசயத்தில் த.மு.எ.ச.வை பாராட்டி முதலில் வரவேற்றவர்கள் நாங்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் . தேனி த.மு.எ.ச வின் நடவடிக்கைகள்தான் போராட்டக்குழு உருவானதற்கு காரணமே! என்ற அடிப்படையில்தான் சில கேள்விகளை வைக்கின்றோம்…
இதை ஒரு RSS காரனிடம் கேட்கமுடியாது. இடதுசாரிகள் என்ற உரிமையிதான் கேட்கின்றோம்.
ஆனால் கேள்விகளுக்கு சற்றும் தொடர்பில்லாமல் பதிலளிப்பதும் , கூறியதையே திரும்பக் கூறுவதும்,கேட்பதுமாக தங்களின் உரையாடல் இப்பவே கன்னைக்கட்டுகிறது!
தோழர் உமர் பாரூக்குடன் நடந்த நல்ல விவாதம் ஒரு அளவிற்கு முடிவந்திருந்த நிலையில்,
தோழர் ஓவியா சற்றும் சம்பந்தமில்லாமல் உனக்கு அரை முட்டைதான் எனக்கு பாதி முட்டை என்கிற பாணியில் விவாதம் செய்வது சலிப்பாக உள்ளது. த.மு.எ.ச தோழர் என்பதால் பதிலளித்தாக வேண்டும் என்பதற்காக் அவருக்கும் பதில் சொல்லியாகிவிட்டது. அவர் மாறியபாடில்லை!
என்னுடைய எழுத்துத் தொனிதான் தாங்கள் பதில்கூற மறுப்பதற்கு காரணம் என்றால், சங்கராச்சாரியாரிடம் கேட்பது போல் வாயைப் பொத்திக்கொண்டு, பவ்வியமாகக்கூட கேட்கின்றேன்.
அம்பேத்கர் T .Shirt தொடர்பாக கேட்கப்பட்டு பல நாட்களாக அனாமத்தாகவே கிடக்கும் எங்கள் கேள்விகளுக்கு தயவுசெய்து பதில் கூறுங்கள் (இது ஒட்டு மொத்த த.மு.எ.ச வுக்குமான கேள்விதான்).
அம்பேத்கர் T .Shirt தொடர்பாக எங்களுக்கு ஏற்கனவே அனுபவம் உண்டு என்ற முறையில் கேட்கின்றோம்…. நிச்சயமாக இது ஒரு பயன்தரும் நடவடிக்கை…. த.மு.எ.ச முன்வரவேண்டும்.
-நன்றி
தோழமையுடன் மதியவன்
tha.mu.e.ka.sa keeps hesitating regarding T.shirt
தோழர் மதியவனுக்கு, தாங்கள் அளித்த பதிலுக்கு நன்றி.தங்களிடம் பல விசயங்களை
ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம். தோழரே, ‘அம்பேத்கர் ‘ என்பது பெயர்
மட்டுமோ, மாமேதை மட்டுமோ அல்ல அது சமூக ஒடுக்குமுறையின் வரலாற்று அரசியலின் அடையாளம் என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு இயக்கத்தில் ஒரு நடவடிக்கைக்கு பரிட்சை வைத்து பார்க்கவேண்டியது இல்லை.
அம்பேத்கரையும் தெரியாமல்,சமூக ஒடுக்குமுறை வரலாற்று அரசியலையும் புரியாமல்
எப்படி நேரடி இயக்கத்திற்கோ,அடையாள நிகழ்ச்சிக்கோ முன்வருவர்? ஒரு வெகுஜன
இயக்கத்தில் இருக்கின்ற அனைவரும் ஒரேமாதிரி உணர்வு அலையில் இருப்பார்கள்
என்று எதிர்பார்க்க முடியுமா? இதைநோக்கிய விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.
உணர்வு மட்டத்தை அறிவுரீதியாக வளர்த்துக்கொண்டாலே தானாக திட்டமிடுகிற
தருணங்களில் அம்பேத்கர் படமிட்ட டி சர்ட்டை போடுவார்கள். ஒடுக்குமுறைக்கு
எதிரான போராட்டங்களிலும் இணைத்துக்கொள்வார்கள். சட்டை போடுவதில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற தலித்
அல்லாதோரையும் களமிரக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது
என் எண்ணம். இதெல்லாம் ஓரிரு பயிலரங்குகளில் உருவாக்கிவிடலாம் என்பது
சாத்தியம் இல்லை. சிந்தனையும் செயல்பாடும் ஒரேமாதிரி இருக்க விவாதம் கூர்மையாக நடந்து வருகிறது. அட இப்பவெல்லாம் எவண்டா சாதி பார்க்கிறான்னு
அப்பாவியாகவே கேட்கிறான்-‘சொந்த சாதிக்குள்ளேயே கல்யாணம் பண்ணிகிட்டு
சாதியில்லைன்னு பீத்துறான்’என்ற பாடலில் ‘ஆட்டையும் மாட்டையும் ஒன்றாகச்
சேர்த்து அறுத்து தின்பவர் எத்தனை பேர்-அட அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு வைத்து அழகு பார்ப்பவர் எத்தனை பேர்’ என்று த மு எ க ச துணைச் செயலர் ஆதவன் தீட்சண்யா பாடல் எழுதியிருக்கிறார்.பிறகு அந்த பாடலை முழுமையாக பின்னர் அனுப்புகிறேன். இவையெல்லாம் சர்ச்சைகளின் தொடக்கமே. பேசலாம்.நன்றி. கணேசன் குமரி.
கணேசன்
///ஒரு வெகுஜன இயக்கத்தில் இருக்கின்ற அனைவரும் ஒரேமாதிரி உணர்வு அலையில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? ///
தங்களின் இந்த பதில் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி விளக்கம் தருவது…. நியாயமா?
அம்பேத்கரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறவர் கண்டிப்பாக சாதிவெறியராத்தான் இருப்பார். அப்படிபட்டவர்களையும் சங்கத்தில் வைத்துக் கொண்டு, நீங்கள் முற்போக்கு என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
இந்து மதவெறியும், பார்ப்பன சாதி உணர்வோடும் இருந்த பாரதியாரை எதிர்த்து எழுதுகிறவர்களை நீங்கள் உங்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்வீர்களா?
ஆனால் சாதிஒழிப்புக்கு போராடிய அம்பேத்கரை ஒத்துக் கொள்ளாதவர்களை மட்டும் எப்படி உங்கள் சங்கத்தில் வைத்திருக்கிறீர்கள்?
////த மு எ க ச துணைச் செயலர் ஆதவன் தீட்சண்யா பாடல் எழுதியிருக்கிறார்./// என்று குறிப்பிட்டு இருக்கிறிர்கள்.
ஆதவன் தீட்சண்யா ஒரு தலித். அப்படியானால் உங்கள் சங்கத்தில் தலித்துகள் மட்டும் அம்பேத்கரை ஒத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் ஒத்துக் கொள்ள மாடடார்களா?
கஷ்டம்.
அன்புத் தோழரே, நீங்கள் எதையும் வரலாற்று கண்ணோட்டத்தோடும்,நடைமுறை சாத்திய அம்சங்களோடும் பார்க்க மறுக்கிறீர்கள்.எடுத்தேன் கவிழ்த்தேன் என்று
தனியே மிக அதிகமாகவே சிந்திக்கிறீர்கள். சாதியவெறி சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க தனியே சிந்தனை செய்துகொண்டு எழுதிக்கொண்டு இருப்பது போதுமா?
அல்லது அமைப்புகளோடு பங்கெடுத்துக்கொண்டு சொல்லில் மட்டும் இல்லாமல்
செயலிலும் ஈடுபடுவது தேவையில்லையா? என்பதை மட்டும் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். இயன்றதை இயக்கம் செய்கிறது இன்னும் சிந்திக்கும் செயல்படும்.உங்கள் தீவிர சிந்தனைக்கு மிக்க நன்றி..நன்றி..நன்றி.
வணக்கம், தோழர் பேரா.முனைவர்.க.கணேசன்.
தோழர் நன்றி..நன்றி..நன்றி…. என்று முற்றும் போடுவதில் குறியாக இருப்பதுபோல் தெரிகிறது ( இல்லை என்றால் மகிழ்ச்சிதான் )
ஒரு T .shirt அணிவதற்கு முற்போக்கு எழுத்தாளர்கள் எத்தனை காரணங்கள்தான் சொல்வீர்கள் தோழர்?
பரிட்சை வைப்பதாக சொல்லுகிறீர்கள்…
கடிகாரம் கட்டியிருப்பவரிடம்தான் மணி கேட்கமுடியும், இது எதார்த்தமான நிகழ்வுதான்.ஆனால் கடிகாரம் கட்டியிருப்பவர், சொந்த கடிகாரமா, திருட்டுக் கடிகாரமா என்று தனக்கு பரிட்சை வைப்பதாக நினைத்துக்கொண்டால், பாவம் மணிகேட்டவர் என்னசெய்வார்.
//ஒரேமாதிரி உணர்வு அலை//
அம்பேத்கர் படம் போட்ட ஒரு T.Shirt அணிவதற்கு “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்” ல் இருக்கின்ற அனைவரும் ஒரேமாதிரி உணர்வு அலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரும் சாதியம் என்ற உணர்வு அலையில் மட்டும் இல்லாமல் இருந்தாலே போதும். இதில் நிறைய யோசிக்க வேண்டியதே இல்லை.
தங்களுக்கு அம்பேத்கர் T.Shirt அணிவதில் உடன்பாடு இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
தாங்களே மற்ற தோழர்களுக்கும் பரிந்துரைக்கலாமே! முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தானே! கட்டயப்படுத்தக்கூட செய்யலாமே. அம்பேத்கர் படத்திற்கு ஓடி ஓடி வேலை செய்தவர்கள் இதற்கு மட்டும் தயங்குகிறார்களா என்ன?
கட்டாயப் படுத்துங்கள் தோழர் சாதிய புத்தி யாருக்கு இருந்தாலும் அம்பலப்படுத்துவோம். அம்பேத்கர் T ,Shirt அணிந்தால் தான் ஒரு தலித் என்பது தெரிந்துவிடும் என்று நினைக்கும் தலித்துக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
எழுத்துக்களோடு மட்டும் நிற்பவர்களையும் அம்பலப்படுத்துவோம்! முதல்ல நீங்க வாங்க… ?
நம்பிக்கையுடன் மதியவன்..
தோழர் கணேசன் அவர்களுக்கு
தமுஎகச எப்போழுது சமூகத்தை தலைகீழாக புரட்டி புரட்சி நடத்தும் என்று நான் கேட்கவில்லை, அம்பேத்கர் டி ஷர்ட தமுஎகச தோழர்கள் அணிவார்களா? என்றுதான் கேட்டேன்.
அதற்கு நீங்கள் இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லலாமா?
சரி தோழர் மீண்டும் கேட்கிறேன். தமுஎச தோழர்கள் அம்பேத்கர் டி சரட் அணிவார்களா மாட்டார்களா?
Even a T.Shirt of Ambethkar Rocks…..
comrades dont let them escape…
தமுஎகச should answer or admit …
தமுஎகச இழுபறி……………………….
ஏன் தா.மு.எ.க.ச. வில் இருந்து யாரும் பதில் சொல்ல மறுக்கிறீர்கள் , அதன் பெயரிலேயே வைத்துள்ளீர்களே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாங்கள் எழுதுவதில் மட்டுமே முற்போக்கு செயலில் அல்ல t-shirt போடமுடியாது என்று சொல்லி முடிங்க…………
தமுஎகச have been to west Bengal for election duty…
அம்பேத்கர் பின்னலாடை அணிவோம்; சாதிய அறிவில் ஆப்பை இறக்குவோம்!
http://mathimaran.wordpress.com/2011/07/13/415/