பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!

al198

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

தொடர் – 2

பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், `உயர்`ஜாதிகள் அல்லது தலித் அல்லாத ஜாதிகளுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. அவர்களுக்குள் எந்த வகையான கொடுக்கல் வாங்கல் கிடையாது. வழிபாட்டு முறையில் கூட ஜாதிக்கொரு தெய்வம். ஜாதிக்கொரு பழக்கம்தான் இருக்கிறது.

பார்ப்பனரல்லாத `உயர்`ஜாதிகள்  மத்தியில் ‘வன்னியர், கள்ளர்’ ஜாதி மக்களை இழிவானவர்களாக, தங்களை விட மட்டமானவர்களாக நினைக்கிற மனோபாவம் இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ‘பறையன்’ என்ற சொல்லை தங்கள் ஜாதிக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசிக் கொள்ளும்போதுது ஜாதி இந்துக்கள் “போடா பறையா” “பறைச்சி மாதிரி” என்று பேசிக் கொள்வதுதைப்போல், இந்த `உயர்`ஜாதிக்காரர்கள், ‘கள்ளர்-வன்னியர்’ ஜாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ‘தொடுகிற பறையர்’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது வழக்கம்.

தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற, ஜாதிரீதியாக மட்டமாக நினைக்கிற `உயர்`ஜாதிகளை எதிர்த்து நிற்காத இவ்விரு சமூகத்தாரும், தங்கள் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கீடு செய்யாத, தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காத தாழ்த்தப்பட்ட மக்களின் மீதுதான் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள், என்று கடந்த கால கணக்கு சொல்கிறது.

தமிழகத்து வட மாவட்டங்களில், பெரும்பாலும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தென்மாவட்டங்களில் பெரும்பாலும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பெருமளவில் வன்முறையை நிகழ்த்துகிறார்கள். இதற்காக மற்ற ஜாதிகள் தலித் ஆதரவு நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. இந்த ஒரு விசயத்தில் மட்டும் இவர்களுக்கு பல வகையிலும் `உயர்`ஜாதிக்காரர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

தலித் அல்லாத ஜாதிகளுக்குள்ளான ஒரே ஒற்றுமை, தலித் விரோதத்தில் மட்டும்தான் இருக்கிறது. இதில் எந்த ஒரு தலித் அல்லாத ஜாதியும் விதிவிலக்கல்ல.

இதுபோலவே தலித் உட்பிரிவு ஜாதிகளுக்குள் தலித் மக்களாலேயும், ஜாதி இந்துக்களாலும் ஒருசேர அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்கள் அருந்ததிய மக்களே. இந்து அல்லது இந்திய சமூக அமைப்பில் அடித்தாலும் கேட்பதற்கு ஆளில்லாத அளவிற்கு (எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், இவர்களை ஒரு வாக்கு வங்கியாகக்கூட அரசியல் கட்சிகள் நினைப்பதில்லை) மிக பரிதாபகரமான நிலையில் இருப்பது அருந்ததிய மக்களே.

பார்ப்பானுக்கு மேல் ஜாதி இல்லை. அருந்ததியர்களுக்குக் கீழ் வேறு ஜாதியில்லை. இதுதான் இந்து ஜாதிய அடுக்குமுறை.

ஜாதிரீதியாக எல்லோரையும்விட தன்னை உயர்வானவர்களாகவும், மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் நினைக்கிற பார்ப்பனர் போன்ற உயர்ஜாதிக்கார்களுக்கு எப்போதும் பிறஜாதிக்கார்களால் எந்தப் பிரச்சினையும் நேர்ந்ததில்லை. சமூக மரியாதையும் குறைந்ததில்லை. பார்ப்பன எதிர்ப்பை தீவிரமாக கடைப்பிடித்த பெரியார் இயக்கத்தவர்கள் கூட தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களிடம் மிகுந்த கண்ணியமாகத்தான் நடந்திருக்கிறார்கள்.

(ஜெயேந்திரன், சந்திரசேகரன் போன்ற சங்கராச்சாரியார்கள்தான் பார்ப்பன பெண்களிடமே கண்ணியக் குறைவாக நடந்திருக்கிறார்கள்.)

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜாதிரீதியாக சமூக இழிவு மட்டும் அல்லாது, பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்களால் மிகக் கொடுமையான ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

‘உலகில் எந்த நாட்டிலும் இல்லாத, பாராம்பரியமிக்க புனிதமான கலாச்சாரம் நம் நாட்டுக்கு மட்டுமே உரியது’ என்று பீற்றிக் கொள்கிறார்களே, அந்த பாரம்பரியமிக்க புனிதம் மேற்சொன்ன இந்த மானக்கெட்டத்தனம்தான்.

மேற்கண்ட இந்த மானக்கெட்டத்தனத்தை இந்திய வரலாற்றில் அவ்வப்போது, பலர் விமர்சித்திருக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் ‘பார்ப்பன எதிர்ப்பு இந்து மதஆதரவு அல்லது இந்து மத எதிர்ப்பு பார்ப்பன ஆதரவு’ என்று தெளிவற்ற நிலையில் ஏதோ ஓரு வகையில் இந்து அல்லது பார்ப்பன அமைப்புகளோடு சமரசமாகி சுழன்று கொண்டிருந்தது.

ஆனால் இதை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று யாரும் முயற்சித்ததில்லை. இதை முற்றிலுமாக மாற்றுவதற்கு முயற்சித்து அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றவர்கள் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மட்டும்தான்.

அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக பரிந்து 1946ஆம் ஆண்டு ”சூத்திரர்கள் -யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ -ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தினராக ஆயினர்?” என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஓதுக்கீட்டை, அரசியல் சட்டத்தில் உறுதியாக்கி சட்டம் இயற்றினார்.

அவர் இயற்றிய சடத்தின் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்கள், அம்பேத்கர் பெயரை கூட குறிப்பிடாமல் ‘பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கம்’ என்று போஸ்டர் அடிக்கிறார்கள். அவர் சிலை ஊருக்குள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டக் கல்லூரிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

சரியாகவோ-தவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்கார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?

ஆக, சென்னை சட்டக் கல்லூரி மட்டுமல்ல இந்தியாவில் இருக்கிற அனைத்து சட்டக் கல்லூரிகளும் டாக்டர் அம்பேத்கர் பெயரில் இருப்பதுதான் முறையானது. சரியானது.

b15

‘இந்தியா முழுக்க உள்ள கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை விட பிறப்பால் நான் உயர்ந்தவன்’ என்று ஒவ்வொரு ஜாதி இந்துவும் நினைக்கிறான்.

அரசியல் சட்டத்தை எழுதியதன் மூலம், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஜாதி இந்துக்களைவிட, இன்னும் நெருக்கி சொன்னால் ‘அனைத்து ஜாதி இந்துக்களைவிட ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர்ந்தவர்’ என்று டாக்டர் அம்பேத்கர் நிரூபித்திருக்கிறார்.

‘ஒரு ஜாதி இந்து பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ந்தவன் என்பது’ மூடத்தனம் நிறைந்த இந்துமதத்தின் சதி. இது ஜாதி இந்துவிற்கு சிறுமை, அவமானம்.

‘ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒட்டு மொத்த ஜாதி இந்துவைவிட உயர்ந்தவன்’ என்று டாக்டர் அம்பேத்கர் நிரூபித்திருப்பது பெருமை, அறிவாயுதம்.

****

ருதார மணம், விவாகரத்து உரிமை, ஜீவனாம்சம், மறுமணம், விதவை மறுமணம், சொத்தில் உரிமை, வன்கொடுமைகளுக்கு எதிரான, பால்ய விவாகத்திற்கு எதிரான, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிரான தண்டனை போன்றவைகள் டாக்டர் அம்பேத்கரால் சட்டம் ஆக்கப் பட்டிருக்கிறது. இவைகளை சட்டமாக்குவதற்கு டாக்டர் அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அதிகம்.

பார்ப்பனர்களும், பண்ணையாளர்களும், அதிகார வர்க்கதில் உள்ளவர்களின் எதிர்ப்பும், இந்து மசோதா பொறுக்குக் குழுவில் இடம் பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எல். அனந்தசயனம் அய்யங்கார் போன்ற உறுப்பினர்களின் துரோகமும், டாக்டர் அம்பேத்கரை குத்திக் கிழித்தன. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்குக் கூட அவர் இவ்வளவு சிரமமப் படவில்லை.

இதைக் குறித்து டாக்டர் அம்பேத்ரே சொல்கிறார்:

“இந்து சட்டத் தொகுப்பு ஈடுஇணையற்றது; கடந்த காலத்தில் இந்திய சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட எந்த சட்டமும் அல்லது இனி நிறைவேற்றப்படவிருக்கும் எந்த சட்டமும் முக்கியத்துவத்தில் இதற்கு (இந்து சட்டத் தொகுப்பு) இணையாக முடியாது.

இந்து சமூதாயத்தைப் பீடித்துள்ள வர்க்கத்துக்கும் வர்க்கத்துக்கும் இடையேயும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் நிலவிவரும் ஏற்றத்தாழவைப் பற்றிக் கவலைப்படாமல் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மேலும் மேலும் சட்டங்களை இயற்றிக் கொண்டு செல்லுவது நமது அரசியில் சாசனத்தையே கேலிக்கூத்தாக்குவதாகும்; சாணக் குவியல் மீது மாடமாளிகையைக் கட்டியெழுப்புவது போன்றதாகும்”

இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மட்டும் என்று இதை சட்டமாக்கவில்லை. ஒட்டு மொத்த இந்து பெண்களுக்காவும் சட்டமாக்கியிருக்கிறார். இன்னும் சரியாக சொன்னால், இன்று இந்த சட்டத்தின் மூலம் பெரும் பயன்அடைபவர்களும், பாதுக்காப்பாக இருப்பவர்களும் பார்ப்பனப் பெண்கள்தான். பார்ப்பன ஆண்களிடம் இருந்தும், பார்ப்பனரல்லாத ஆண்களிடம் இருந்தும் (திருமண வன்முறைகள்) பார்ப்பனப் பெண்களை பாதுகாப்பது டாக்டர் அம்பேத்கரே.

al116

ஆனால், இதை எத்தனை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெண் உரிமை பேசுகிற பார்ப்பனப் பெண்கள் கூட சங்கராச்சாரியர்களின் இன்டலக்சுவல் வடிவமான சுப்பிரமணிய பாரதியைத்தான் சிலாகிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் பெயரை வாய் தவறிகூட குறிப்பிடுவதில்லை. ஆணாதிக்கத்தை எதிர்க்க தெரிந்திருக்கிற பார்ப்பனப் பெண்கள், பெண்களை கேவலப்படுத்துகிற பார்ப்பன ஆதிக்கத்தை, இந்து மதத்தை எதிர்ப்பதில்லை. அப்படி ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

இந்திய சூழலில் பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மத சகதியையும் புரிந்து கொண்டால்தான் அவர்கள் ஆணாதிக்கத்தையும் புரிந்து கொள்ளமுடியும். இந்தமூன்றுமுடிச்சு`க்குள்தான் இருக்கிறது இந்து பெண்களின் அடிமைத்தனம். இந்த புரிதல் வந்தால்தான், அவர்கள் பெண்களுக்காக சட்டம் இயற்றிய டாக்டர் அம்பேக்கரையும், பெண் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த தந்தை பெரியாரையும் புரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இன்றைய நடைமுறையில் பார்ப்பனப் பெண்கள், பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட, பெண்களை கேவலமாக கருதுகிற ஜாதிவெறியன் சந்திரசேகரன், காமுகன் ஜெயேந்திரன் படங்களைதான் தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜிக்கிறார்கள்.

அம்பேத்கரையும் பெரியாரையும் அறிவாளிகளாக அல்ல, மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.

அதனால் பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டி வைக்க வேண்டிய படம் அண்ணல் அம்பேத்கர் படமும், தந்தை பெரியார் படமும்தான். இவர்கள் இருவரால்தான் அவர்கள் இன்று சமூகத்தில் மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்?

குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்…..

34 thoughts on “பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!

 1. have you ever read அம்பேத்கர் life history, you forgot that the one teacher who helped அம்பேத்கர் to come up was a பார்ப்பனப். come out of these things MR mathimaran, we are living in a world where these things are vanishing, who is interested in past ? history is always Bad, Do something good for society, instead of critizing others, what have you done to society ? expect writing something that provokes people.

 2. //அவர் இயற்றிய சடத்தின் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்கள், அம்பேத்கர் பெயரை கூட குறிப்பிடாமல் ‘பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கம்’ என்று போஸ்டர் அடிக்கிறார்கள். அவர் சிலை ஊருக்குள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டக் கல்லூரிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.//

  மிகவும் சரி….சம்பந்தப்பட்டவர்கள் வெட்கப்படவேண்டும்

 3. (ஜெயேந்திரன், சந்திரசேகரன் போன்ற சங்கராச்சாரியார்கள்தான் பார்ப்பன பெண்களிடமே கண்ணியக் குறைவாக நடந்திருக்கிறார்கள்.)///

  அவங்க புத்தி ரொம்ப புனிதம்
  பெண் விடுதலைக்கு பட்டுப்பட்ட இரு தலைவர்கள் அண்ணல் அம்பேத்கரும்,, பெரியாரும் தான்…. ஆனால் இங்க பாரதி வருகிறார் பெண்கள் விடுதலை என்று அவர் தான் சில பேரு சொல்லுராங்க…. இதை படித்த பின் அவர்கள் மாறுவார்கள் என நம்புவோம் ….
  மிக அழகான கட்டுரை….

  வாழ்த்துக்கள்

 4. When I was a school student, I read that in some southern village, poisson was poured into the drinking water well used by daliths. I still remember the shock, I felt on reading it.

  This essay has rightly brought out a ponderable matter – that we harm the lower caste people and not the upper caste ones, despite being ill-treated.

  What are the real, fundamental reasones? Is it their political power? wealth?
  The answer could be of help in protecting the daliths.

 5. Mr. Indian(?),

  My 5th standard English teacher was Mr. David to whom I thankful always.

  But it is not necessary me to follow Christian’s faith because my teacher was a Christian.

  If Dr. Ambedkar’s teacher’s teacher was a Cristian, then who should won the credit of Dr. Ambedkar’s wisdom?

  Think and reply.

 6. மிக நல்ல பதிவு,

  முதலில் பின்னூட்டமிட்டுள்ள இந்தியன் அவர்களுக்கு எனது பதில்,

  //come out of these things MR mathimaran, we are living in a world where these things are vanishing, who is interested in past ? history is always Bad, Do something good for society, instead of critizing others, what have you done to society ? expect writing something that provokes people.//

  அய்யா தாங்கள் கூறுவதைப் பார்த்தல் பார்பனர்கள் எல்லோரும் சாதிப் பாகுபாடு பார்ப்பதை விட்டு விட்டதைப் போலவும் எதோ மற்றவர்கள் தான் அதைக் கடைப்பிடிப்பது போலவும் எழுதி இருக்கிறீர்கள் “பார்பனர்கள் அணியும் பூனூலின் அடிப்படையே சாதி பாகுபாடு தான் என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் தாங்கள் பூசி மெழுக வேண்டாம்”, எதோ சாதிப் பாகுபாடு எல்லாம் ஒழிந்து விட்டது போல் பேசுகிறீர்கள் இதோ நான் இந்து என்று எனது பள்ளிச் சான்றிதழ் (மட்டுமே) கூறுகிறது கோயிலின் உள்ளே கல்லைக் காட்டி பிச்சை எடுப்பவனும் இந்து தான் ஏன் அவன் என்னை கருவறைக்குள்ளே விட மறுக்கிறான், ஆறுமுக சாமி அவர்கள் தேவாரம் பாடச் சென்றால் எதற்கு தூக்கி வெளியில் வீசுகிறான், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தால் எதற்கு நீதி மன்றம் ஓடுகிறான் காரணம் எங்கே அவன் பிழிப்பில் மண் விழுந்து விடுமோ என்கிற கவலை, இப்போது சில பார்பனர்கள் சிலர் ஏதோ அவர்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கு எங்களை ஏன் குற்றம் கூறுகிறீர்கள் என கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்களே அர்வர்களிடத்தில் சிறிது எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

  கோகுலகிருட்டிணன்
  மும்பை

 7. திரும்ப திரும்ப பார்ப்பன எதிர்ப்பு என்கின்ற செத்த பாம்பை அடிப்பதை விட்டு விட்டு ஒரு மாறுதலுக்கு அம்பேத்கார் இயற்றிய சட்டங்களை பேணுவதற்கு ஒரு முயற்சி செய்யுங்களேன்.

  எத்தனை முறை லஞ்சம் வாங்கும் காவலரை கண்டும் காணாதது போல் சென்றுள்ளீர்கள்?

 8. அம்பேத்கர் எழுதிய சட்ட சாசனத்தை கரைத்து குடித்து, அம்பேத்கர் அவர்களின் உறவு மக்களை அடித்து உதைக்க கால் காலுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்?

 9. Mathimaran,

  Ambedkar is indeed an admirable person. I do agree with many of the statements you make here.

  However, some statements stick out. “Every upper caste hindu thinks that (s)he is better than the crores of dalits?” Do you really believe that “every”?

  Your central tenet is that upper caste women, especially brahmin women, have gotten more benefits from the constitutional law that Ambedkar architected. It would be more accurate to say that upper middle class women have gotten more benefits.

  There seems to be anti-brahmin bias in several of your posts. I do believe that brahmins have ceased being significant – at least in Tamil Nadu. Isn’t this “reverse” casteism? You are angry against a section of society because they were born in a certain caste? What control does anyone have over their birth?

  Oh, I forgot. I am born as an Iyer. I have to make that explicit because there is a tendency in the Tamil bloggers world – the reply depends on the poster’s caste. (The one time I forgot to mention my caste in Dr. Rudhran’s blog, he promptly came back speculating on my genotype.) So if any of you want to just start ranting on ambi, kudumi, poonool, whatever, go ahead! You don’t have to waste your time by actually reading my opinions…

 10. அதனால் பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டி வைக்க வேண்டிய படம் அண்ணல் அம்பேத்கர் படமும், தந்தை பெரியார் படமும்தான். இவர்கள் இருவரால்தான் அவர்கள் இன்று சமூகத்தில் மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

  மதிமாறன் உங்க காமெடி ரொம்பவே ஒவர்.

 11. Dear RV,

  Thozhar Mathimaran has not wriiten with intention of oppose Brahmins.He will never do such a thing cos our leaders Amberdkar,periyar didnt teach and beaheve like that.The motto of the Anti Caste is against the Brahmism which is differ the people and its not against the every Brahmins who dont ranting on low caste.But many brahmins have mind set that they became from exceptional caste and they following the fucking Hindu law and following the untouchabilty and deceive.So ultimately we would be in position to oppose that particular Brahmins. So unfortunately it seems that we against every brahmis.Ambethkar and Periyar taught us the Humanity and even clash the caste n people who block our growth by the name of caste.So they make us to decide to follow by treating people, in what Ambethkar and periyar said above.

  தோழமையுடன்,
  உங்களின் தோழன்..

 12. //திரும்ப திரும்ப பார்ப்பன எதிர்ப்பு என்கின்ற செத்த பாம்பை அடிப்பதை விட்டு விட்டு ஒரு மாறுதலுக்கு அம்பேத்கார் இயற்றிய சட்டங்களை பேணுவதற்கு ஒரு முயற்சி செய்யுங்களேன்.//

  நீங்கள் சொல்வது போல் அது செத்த பாம்புதான். ஆனால் அதன் விஷக்கடியின் தாக்கம் இன்றும், கிருமிபோல், ஹீரோஷிமா, நாகசாகியில் நோய்கள் பரம்பரையாக பிறப்பிலேயே வருவதுபோல இன்றும் நம் சமூகத்தில் Godzilla மாதிரி இருந்து வருகிறது..

  //எத்தனை முறை லஞ்சம் வாங்கும் காவலரை கண்டும் காணாதது போல் சென்றுள்ளீர்கள்?//

  நீங்கள் பிடி படும்போது,விட்டால் போதும் என்று அவனுக்கு 50 அல்லது நூறை கொடுத்து செல்லாமல், நான் எதுவும் கொடுக்க மாட்டேன்,நீதி மன்றத்தில் சந்திக்கிறேன் என்று பேசுங்கள் பார்ப்போம்.
  அதற்காக லஞ்சம் வாங்குவதை சரி என்று கூற வில்லை.நீங்கள் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று கூறுகிறேன்.நம் மீதும் தவறு உள்ளது.நம் சுய வேலையின் காரணமாகவும், அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பதற்காகவும், அலைய வேண்டாம் என்ற எண்ணத்தினாலும் நாமே அதை வளர்த்துவிடுகிறோம்..

  தோழமையுடன்,
  உங்களின் தோழன்..

 13. தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன், பார்பனன்களுக்கு இந்த அடிகாணாது, மேலும் கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும், தமிழர்களே தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று கோயில்களில் கேட்டு வாங்குங்கள், அதுபோல் இந்திய அரசிடம் இருந்துவரும் இந்தியையும் வேர்அறுக்க வேண்டும், நம் தமிழ் மண்ணில் காணும் இடம் எங்கிலும் தமிழ்தான் இருக்க வேண்டும் என்று முழக்கயிடுவோம்

 14. Venkat,

  On the one hand, you say that you and Mathimaran are not against individual brahmins. On the other hand there is this sentence in Mathimaran’s post – EVERY upper caste hindu thinks that (s)he is better than the crores of dalits. Do you think Mathimaran was right in making such a statement about EVERY “upper caste” Hindu? You say Mathimaran will never do such a thing – he has clearly made a statement that contradicts your belief. Did Ambedkar & Periyar teach him/you that? Please clarify.

  If you call a group of people brahmins and a concept as brahminism, then the implication is this group of people practice that concept. Why is it called brahminism? Why is not called casteism? Would you start calling terrorism as Islamism as there are lot of terrorist attacks – all over the world – that are being conducted by muslims?

  You explicitly say that “many brahmins” practice casteism, hence you are against them, and it looks like you are anti-brahmin. Clearly, many more thevars exist in Tamil Nadu than brahmins. Numerically, there should be many more thevars who harbor casteist sentiments. Practically every castiest attack on Dalits seems to be at the hands of people belonging to the thevar caste. How come it doesn’t look like anybody in the Tamil blogosphere – including you and Mathimaran – are against all thevars, but only against all brahmins? Am I missing something here? Or are you missing something here? Or are you coming with a lame duck excuse?

  Extending your argument, many more muslims – all over the world – seem to be indulging in terrorist attacks. So are you against all muslims? Do you plan to give the apperance of being against all muslims? Or do you feel happy about the terrorist attacks?

  Thamiraparani,

  “Parppanarkalukku intha adi kanathu” – nice idea. How is this different from a Osama bin Laden saying that “Amerikkavukku indha adi kanathu” and launching terrorist attacks? Or Bush saying that “Saddamukku indha adi kanathu” and killing Iraqis? Or thevars saying that “paraiyankalukku indha adi kanathu” and feeding them shit? Or Kasab saying “indiankalukku indha adi kanathu” and gunning down passengers? Or Hitler saying that “Jewskku indha adi kanathu” and exterminating them?

  The minute you give a group identity instead of individual identity to a “crime”, you are planning to attack people for factors not in their control. Let us say you are 6 feet tall. If I use your logic, I can say “6 feet tall people are brahmin-haters” and then continue saying that “6 feet tall peoplekku indha adi kanathu”.

  I am all for Tamil archanai in temples; I am born in the Iyer caste. I know many people who feel that way – several of them were born as brahmins. I know many people who feel against it – several of them were not born in the brahmin caste. My problem is with those individual people – not with their group affiliations.

  I am against this concept of only Tamil in Tamil Nadu. I know many people who are against it, many people who are for it. Again, my argument is with those individuals, not against their groups!

 15. பாரதியார் படத்தையும் நாங்கள் பூஜை அறையில் வைப்பதில்லை. ஜயெந்திரர் ஒரு மதபோதகர். அம்பேத்கர் ஏற்படுத்திய சட்டங்கள் நமக்கு நன்மை தர வல்லவை என்பதை நாங்கள் மறுக்க வில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற எந்த மனிதர் அல்லது தலைவரையும் வெறுக்கவும் இல்லை, வதைக்கவும் இல்லை. நல்லதை ஏற்கிறோம். அல்லாததை விலக்குகிறோம்.
  ஆகம முறைகள் தமிழை விட சமஸ்கிருதத்தில் அதிகம். மேலும் தமிழை நாங்கள் விரும்புவது யாருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கு அல்ல. அது எங்கள் தாய் மொழி.
  அன்புடன்
  கமலா

  கமலா

 16. வினவு, கலகம் ஆகிய தளங்களில்
  அம்பலபட்டு அடி வாங்கிய
  குழப்பவாதி பார்ப்பன கோட்சில்லா
  இங்கேயும் குழப்ப வந்துவிட்டான்

  —————-பார்க்க வினவு——————-

  http://vinavu.wordpress.com/2008/12/10/mumbai5/

  “டெல்லியிலிருந்து கொண்டு இந்துமதவெறியர்களின் இணையத் தளபதியாக கோட்சில்லா,
  பெரியார் கிரிட்டிக் என்ற பெயர்களில் பின்னூட்டமிடும் ரவி ஸ்ரீனிவாசுக்கோ”

 17. நான் ஒரு தலித் கிராமத்திற்கு சென்றிருந்தேன்.அங்கே அம்பேத்கர் சிலை மிகவும் சிதைந்து,வர்ணம் உதிர்ந்து,பரிதாபமான நிலையில் இருந்தது.ஏன் சிலையை பராமரிக்கவில்லை?என்று காரணம் கேட்டதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறியது.–அவர் எங்கள் ஜாதியை சேர்ந்தவரல்ல.வேறு உட்பிரிவை சேர்ந்தவர்.அவர் சாதிக்கும் எங்கள் சாதிக்கும் சுமூக உறவு இல்லை.அதனால் அவரை கண்டுகொள்வதில்லை.
  இது தென் மாவட்டங்கள் சிலவற்றில் சில கிராமங்களில் உள்ள நிதர்சனம்.
  முதலில் தலித்துக்களை ஒருங்கிணைத்து அம்பேத்கரை ஏற்க செய்வோம்.

 18. //தாமிரபரணி (08:10:43) :
  தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன், பார்பனன்களுக்கு இந்த அடிகாணாது, மேலும் கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும், தமிழர்களே தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று கோயில்களில் கேட்டு வாங்குங்கள், அதுபோல் இந்திய அரசிடம் இருந்துவரும் இந்தியையும் வேர்அறுக்க வேண்டும், நம் தமிழ் மண்ணில் காணும் இடம் எங்கிலும் தமிழ்தான் இருக்க வேண்டும் என்று முழக்கயிடுவோம்//
  thamirabharani sir,
  உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஹிந்தி கற்க செய்யுங்கள்.ஏனென்றால் அவர்களுக்கு மும்பையிலோ,கல்கத்தாவிலோ,டெல்லியிலோ நல்ல வேலை கிடைக்கலாம்
  இப்பொழுது உலகம் முழுதும் உலக வெப்பமடைதல் பற்றி கவலைபடுகின்றனர்.ஒரு வேலை இன்னும் 100 வருடங்களில் தென் இந்தியாவின் தாழ்வான பல பகுதிகள் கடலால் மூழ்கடிக்கப் படலாம்.அப்போது ஒருவேளை நம் சந்ததியினர் வட இந்தியாவில் குடியேறலாம்.அப்பொழுது ஹிந்தி தேவைப்படும் நண்பரே.
  நண்பரே தமிழ் நாட்டில் ஆங்கிலம் கோலாட்சிகிறதே?

 19. Good joke Mr Dhanabal.. I mean good reason for asking to learn Hindi. I think we should also learn chinese, russian, urudu etc.. because, if *that* global warming you talked about hits so bad and even north india went into sea, we will need chinese or russian to survive….

  God, pl kill me. i don’t want to live in the world where these kind of creatures live.

 20. தந்தை பெரியாருக்கும்,அவருக்கு முன்னேயும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு ,மற்ற முன்னேற்றங்கள் முன்னேறிய ஜாதிகளைச் செர்ந்தவர்களால் பெரிய பார்ப்பன எதிப்புக்களை எதிர்த்துக் கொண்டுவரப்பட்டவை.அவர்கள் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் குறைந்தாலும் பரவாயில்லை என்று செய்ததை முதலில் பாராட்ட வேண்டும்.இப்போது இளைய தலைமுறைகளை ஒன்று சேர்க்கும் இசை,கலை,விளையாட்டு,ஆட்ட பாட்டங்கள் மூலம் அனைத்துச் சமுதாய இளைய ஆண்,பெண் சேர்ந்து நிகழ்ச்சிகள் அனைத்துக் கல்லூரிகளிலும்,பள்ளிகளிலும் மற்றும் பொது நிகழ்ச்சிகளாகவும் பெரியார்,அம்பேத்கர்,அண்ணா,காமராசர் விழாக்களாகவும் கொண்டாடப்பட்டால் விளைவுகள் நல்ல முறையில் அமையும்.ஆக்க பூர்வச் செயல்பாடுகள்தான் இன்றையத் தேவை.

 21. அம்பேத்கரின் பெயரை சொல்லகூட உங்களுக்கு தகுதி இல்லை.
  எத்தனை முறை தோற்றாலும் ஒரு முறை எழுவோம் என்று வீர வசனம் பேசிய சகோதரர்களும் ,இப்போது நாங்கள் ஆடுகள் இல்லை சிறுத்தைகள் என்று பேசிக்கொண்டிருக்கும் என் சகோதரர்களுக்கும் இந்த விசயத்தில் தெளிவு பெறாமல் போனது ஏன் என்று எனக்கு புரியவில்லை …வாழ்க்கை முழுமையும் வாழ்ந்து முடித்துவிட்டு ,அனுபவித்து அனுபவித்து எடுத்த ஒரு முடிவை அவரது பெயரை சொல்லி சாத்தியம் பேசும் சகோதரர்கள் அவர் சொன்ன எல்லாவற்றையும் சொன்ன சகோதரர்கள் ,அவர் சொன்ன மதம் மாற்ற கொள்கையை மட்டும் விட்ட நோக்கம் என்ன? பார்பன கூட்டத்தின் தலைமைக்கும் ,இவர்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கிறது?
  தலித்துகளாய் இவர்கள் இருக்கும் வரையில் மட்டுமே நம்மால் வயிறு வளர்க்க முடியும் என்ற கொள்கையோ என்று தெரியவில்லை..
  சாதியம் பேசும் நீங்கள் சத்தியத்தின் பக்கம் வர மறுப்பதன் காரணம் என்ன? அம்பேத்கர் செய்த புரட்சியை விட புதிதாய் செய்து விட திட்டமா?இல்லை புதியதாய் சாதியத்தை ஒலித்து கட்டும் முயற்சியா?
  நீங்கள் சாதியத்தை ஒழிக்க விரும்பினால் ,முதலில் பார்பனர்களை ஒலித்து காட்டுங்கள்..அவரிடம் (அம்பேத்கர்) இருந்த தெளிவை விட உங்களிடம் இருக்கறது என்று ஒத்து கொள்கிறோம்.. அதை விட்டு அவரது பெயரை சொல்ல எந்த தலைவனுக்கும் தகுதி இல்லை..
  ஆம் ,அம்பேத்கரின் பெயரை சொல்லகூட உங்களுக்கு தகுதி இல்லை..
  அவர் இறுதியாய் சொன்னார் ,அனுபவித்து சொன்னார்,தன்னுடைய இறுதி தீர்வை சொன்னார் ..மதத்தினை மாற்றி கொள்ளுங்கள் என்று..
  அவர் போராடி பெற்று தந்த இட ஒதுக்கீடும் ,சலுகையும் மட்டும் போதுமா..தயவு செய்து ,எங்களது தலைவரை உங்கள் சமுதாயத்தோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்..

  “If you want to gain self-respect, change your religion.
  If you want to create a cooperating society, change your religion.
  If you want power, change your religion.
  If you want equality, change your religion.
  If you want independence, change your religion.
  If you want to make the world in which you live happy, change your religion.

  -Dr.Ambethkar(1935)

 22. Dear RV and indian, these crooks never change their attitude. they are still 50 years back . i havent seen a youth with caste bias in my 8 years of college education though i have been in different places in TN. even now i can marry a paarpan girl in my neighbourhood (i am nt a paarpan) with their parents consent. this is reality but these periyarists magnify little things and pose it as truth.

 23. இதனை மாற்றவேண்டும் என்றால் … அவர்கள் கையாண்ட விதத்தையே நாமும் கையல்ல வேண்டும் !

  ஆம் !

  அனைத்து ஜாதியையும் விட பறைய ஜாதி தான் உசத்தி என்று நாம் சொல்ல பழகிக்கொள்ள வேண்டும் !!

 24. பார்ப்பனன் என்ற செத்த பாம்பின் விஷத் தாக்கம் இன்னும் இருக்கிறது என்று சொன்னது மிகச் சரி…

 25. வணக்கம்.

  சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஒன்று குறிப்பிட வேண்டி இருக்கின்றது, ” நான் பார்பன தந்தைக்கு பிறந்தேன்” என்று. பார்பன பெண்களின் பதிவு என்பதால் உடனே இங்கு குதித்து பின்னூட்டும் இட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றாலும். பார்பன பெண்ணியவாதிகளோ, அல்லது நியாயமான பெண் விடுதலையில் ஆர்வம்க் கொண்ட எந்த பார்பன பெண்ணும் அம்பேத்கரையும் பெரியாரையும் மதிப்பது கூட இல்லை என்பது மிக வருத்தமானது,

  வர்ண தர்மங்களில் பார்பன பெண்களும் சூத்திரர்களுக்கு நிகராகவே கருதப் படுகிறார்கள் என்பது பல பார்பன பெண்களுக்கே தெரிவதில்லை, எடுத்து சொன்னாலும் அதை அவர்கள் எடுத்துக் கொள்வதாக இல்லை. சமிபத்தில் பல்வேறு தடைகளை தாண்டி பார்பன பெண்களைக் குறித்து தர்ம சூத்ரங்கள் கூறுகின்ற அப்பட்ட உண்மைகளை சில பார்பன பெண்களிடம் கூறும் பொது அம்பேத்கரின் பணியைக் குறிப்பிட்டேன், அவர்கள் கூறிய ஒரு பதில், இதெல்லாம் எங்களுக்கு தேவை இல்லை, நாங்கள் எப்படி வளர்க்கப் பட்டமோ அப்படியே வளர்கிறோம், அம்பேத்கர் நமது பிராமண கலாச்சாரத்தை கேவலப் படுத்தியவர், நாங்கள் அவரை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம், இவரால் தான் நாங்கள் இட ஒதுக்கீட்டை இழந்தோம் என்றார்கள், அவர்கள் இன்று சொத்துரிமைக்கு சண்டை போடும் பொது வேடிக்கையாகவே இருக்கின்றது.

 26. இன்றைய பார்பனர்கள் பெயரளவிற்கு பார்பனர்கள். இன்னும் எதனை நாட்களுக்கு பார்பனீயம் இருக்கும்? இன்றைய அசுர வேக தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பார்த்தால் ஒரு 100 வருடம் கழித்து இந்த ஜாதி, பார்பனீயம் எல்லாம் எவ்வாறு இருக்கும் ? அது மட்டுமல்லாது, இன்று பார்பனர்கள் எந்த நிலையில் உள்ளனர் ? 50% வெளிநாட்டில் செட்டில் ஆகியோ அல்லது செட்டில் ஆவதற்கோ முயன்று கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை 40-50 வருடம் கழித்து பார்பனர்கள் , பார்பனர்களை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நினைக்க முடிகிறதா ? இன்றே பார்பனர்கள் கலப்பு திருமணன் செய்து கொள்கின்றனர். (எங்கே என்று கேட்பார்களுக்கே, 1000 எடுத்து காடுகள் தெரியும். அது எனக்கும் தெரியும். அதனால் இதற்க்கு எடுத்துகாட்டு கேட்க வேண்டாம்.). முடிவாக சொன்னால், பார்பன ஜாதி இன்றோ, நாளையோ என்று இழுத்துக் கொண்டிருக்கின்ற ஜாதி…இந்த ‘பார்ப்பனீய எதிர்ப்பு’ என்பதை வெவ்வேறு ரகத்தில் ருசியோடும் , ரசனையோடும் , தூண்டி விடும் மனப்பான்மையுடனும் சொல்லும் பொழுது சிறப்பாக, சொல்ல சொல்ல திகட்டாமல் தான் இருக்கும். ஆனால் இந்த தலைமுறை வரை தான்… அடுத்த தலைமுறை வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும் (வேண்டுமானால் , அவன் ஒரு காலத்தில் பார்பானாய் இருந்தவன்…அவன் மூதாதையர்கள் பார்பனர்கள்…அதனால் ‘பார்ப்பன வழித்தோன்றல் எதிர்ப்பு’ ட்ரை பண்ணலாம் ) பார்ப்பனீய எதிர்ப்பை வைத்தே தலைமுறை தலைமுறையாக ஓட்டுவோம் என்றால் அது முடியாது….போகட்டும்…உண்மை ஒரு நாள் புரியாமலா போகும்…படைத்த அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் காரணம் இருக்கும்…அவன் இதனையும் செய்விக்கிறான்…செய்யட்டும்….

 27. வாழ்நாள் முழுதும் போராடினாலும், தந்தை பெரியார் அம்பேத்கரால் ஏதாவது ஒரு இந்து ஜாதியை ஒழிக்க முடிந்ததா?.

  மேலிருந்து கீழ் வரை ஒவ்வொரு ஹிந்துவின் நெற்றியிலும் ஜாதி எழுதப்பட்டுள்ளது. இனியொரு ஐயாயிரம் வருடங்கள் போனாலும், ஜாதி சாக்கடையை விட்டு ஒரு ஹிந்து கூட வெளியேற முடியாது.

  ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், ஹிந்து மதத்தை ஒழிக்க வேண்டும். அந்த வேலையை இஸ்லாம் செய்யும். ஆகையால்தான் தந்தை பெரியார் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.

 28. தலித் துரோகி அம்பேத்கர்:

  “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என தந்தை பெரியார் போதித்தார். அதாவது, பார்பனீயத்தை வேரறுத்தால், சூத்திரனுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.

  1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலம். பாக்கிஸ்தானை உருவாக்குவதில் முஸ்லிம்கள் மும்முரமாக இருந்தனர். அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். பார்ப்பனரல்லாத தேவர், முதலியார், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியெல்லாம் தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் பூணூலை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.

  இந்த சமயத்தில், “ஹிந்துவாக பிறந்து விட்டேன், ஹிந்துவாக சாகமாட்டேன்” என பீலா விட்டுக்கொண்டிருந்த அம்பேத்கர், 1932ல் காந்தியோடு பூனா ஒப்பந்தம் செய்து தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிசாக்கடையில் அடைத்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.
  ——————–

  ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:

  ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

  பிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி ஹிந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.

  ஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

  பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
  ———————-

  மேல்ஜாதி ஹிந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார்.

  அதாவது, மேல்ஜாதி ஹிந்து உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

  இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.

Leave a Reply

%d bloggers like this: