மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’

pasamalar‘மலர்ந்தும் மலராத… பாதிமலர் போல..’ கேட்பவர்களுக்கு சிறகு முளைக்க வைக்கும் அதிசியப் பாடல். நூற்றாண்டின் உன்னதங்களில் ஒன்று.

விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இந்தப் பாடலை தன்னால் முடிந்தவரை  இசை கெடாமல், கண்ணிரும் – குழந்தையின் சிரிப்புமாக படமாக்கியிருப்பார் பீம்சிங். சிவாஜிக்கு பின்னால் இருக்கும் புத்தர் சிலை இந்தப் பாடல் தரும் மன நிறைவையும் சோகமான சூழலிலும் நம்மை ஆறுதல்படுத்துகிற  உணர்வை கூடுதலாக்கும். சாவித்திரி – சிவாஜி இருவருக்கும் இடையில் மாறுகிற காட்சிகளில் இசையின் உன்னதம் கெடாத ‘டிசால்வ்’ அழகு.

இந்தப் பாடலில் சிவாஜி கை, கால்களை நீட்டி நடிக்காமல், மிதமான முகபாவங்களை மட்டும் காட்டி நடிக்க வேண்டிய நிலையை விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையே செய்திருக்கிறது.

குழந்தையுடன் சாவித்திரி பிரம்மாண்டமான  சிவாஜி படத்தின் முன் இருக்கும் காட்சியும், குழந்தையுடன் சிவாஜி படுத்திருக்க,  மேலிருந்து வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ‘ஷாட்’டுகளும் அழகு.

*

சிவாஜி நடித்த பாசமலர் தமிழில் ஒரு குறிபிடத்தக்கப் படம்தானே?
-டி.சிவராமன், நன்னிலம்.

பாசமலர் படத்தை தமிழ் தெரியாத ஒரு நபர் பார்த்தால், ‘அந்தக் காதலனும் காதலியும் கடைசி வரைக்கும் ஒன்னு சேராம போயிட்டாங்களேன்னு’ ரொம்ப வருத்தப்படுவார்னு, எப்பவோ என் நண்பருக்கு நண்பர் ஒருவர் சொன்னதா ஞாபகம்.

தமிழ் சினிமாவில் ரொம்ப அருவருக்கதக்க முறையில் ஒரு உறவு கொச்சைபடுத்தப்பட்டது என்றால், அது அண்ணன்-தங்கை உறவுதான். எம்.ஜி.ஆர். தன் படங்களில் கதாநாயகியை விட தங்கச்சியைத்தான் அதிக அளவுக்கு கட்டிப் பிடித்து ‘பாசத்தை’ வெளிகாட்டுவார்.

இப்படி தமிழ் சினிமா நாயகர்கள் தங்கச்சிகளை கட்டிபிடிச்சி நடிக்கிறதை பார்க்கிற பார்வையாளர்கள் தப்பா நினைக்க போறங்க அப்படிங்கறதுக்காகத்தான், ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று வசனம் பேச வைச்சாங்க போலிருக்கு.

நடைமுறையில் எந்த அண்ணனும் தன் தங்கைகளை, தம்பிகளை ‘தங்கச்சி’ ‘தம்பி’ என்று அழைக்க மாட்டார்கள். பெயர் சொல்லிதான் அழைப்பார்கள். முன் பின் தெரியாத வயது குறைந்த நபர்களைதான் ‘தம்பி’ என்று அழைப்பார்கள். ‘தங்கச்சி’ என்கிற வார்த்தை அதற்குக் கூட பயன்படுவதில்லை. ‘இது என் தங்கச்சி’ என்று சுட்டிக் காட்டுவதற்குதான் பயன்படுகிறதே ஒழிய, விளித்தலுக்கு அல்ல.

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான் இன்றுவரைக்கும் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். படம் எடுத்தவங்க, நடிச்சவங்க எல்லாம் நிஜ வாழ்க்கையில் அக்கா-அண்ணன்-தங்கை-தம்பியா இருக்கிறவங்கதானே. அப்புறம் சினிமா அப்படின்னா மட்டும் எங்கிருந்துதான் இப்படி பொத்துக்கிட்டு வருதோ பாசம்?

*

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘விழிப்புணர்வு’2007 ஆகஸ்ட்   மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

சென்னையில் மீண்டும் ‘பாசமலர்’

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து… என்னுடைய பிற புத்தகங்களுக்கும்..

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

பக்தி படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

ஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

2 thoughts on “மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’

  1. எப்படி சார் உங்கள் கண்களுக்கமட்டும் இதெல்லாம் தெரியுது. உண்மையிலேயே பாராட்டுகிறேன்.அப்படியே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் அந்த பாட்டு எழுதினவரபத்தி ஒரு வரி எழுதியிருக்கக்கூடாதா?

Leave a Reply

%d bloggers like this: