“ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம்

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1
“பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-31917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் எம்.சி. ராஜா நடத்திய பொதுக்கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆற்றிய சிறப்புரை.
பகுதி-4
என் பிறந்த இடமான கேரளத்தில் நானோர் சூத்திரன்தானே (நகைப்பு! வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்) இத்தகைய இந்துமத சாதி அக்கிரமங்களை, எந்தப் பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? (வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்)
இந்த மூஞ்சிகளுக்குத்தான், தனி ஆடசி நடத்த, தன்னாட்சி அரசு வேண்டுமாம்! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
இன்னும் கேளுங்கள்! நசூத்ராயமதிம் தத்யா என்பது ஒரு சுலோகம்! அதன் பொருள் என்னவென்றால், சூத்திரன் படிக்கக் கூடாது.! என்பதாகும். அப்படியானால் நீ எப்படி படித்தாய்? என்று நீங்கள் கேட்பீர்களேயானால், சண்டாளப் பூனைக் கண்ணன்! செம்பட்ட மயிரன் ஆனே வெள்ளைக்காரனுடைய யூனியன் ஜாக் கொடி அல்லவா இப்பொழுது நாட்டில் பறக்கிறது! அதன் தயவால்தான் நான் படித்து முன்னேறினேன். (கைதட்டல்! ஆரவாரம்!)
அசல் ஆரிய இந்து தரும ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக்கொடிதான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானல் ராம ராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான்! சூத்திர சம்பூகன் கதிதான் எனக்கும், என் தலைவர் திரு.பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். (வெட்கம்! வெட்கம்! இந்து மதம் ஒழிக! என்ற ஆரவாரம்)
இவ்வளவுக்கு நீங்கள் எல்லோரும் மதிக்கும் என்னை, எங்கள் கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான் ‘ஏடா நாயரே’ எனறு சர்வ சாதாரணமாகக் கேவலமாக அழைக்கக் கூடிய, சாதிக் கர்வம் படைத்திருக்கிறான்!
உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி,
“எடா! சங்கரா! நீ உயர்நீதிமன்ற நீதிபதியாமேடா” என்று கேட்டானாம். “ஆமாம் சாமி எல்லாம் உங்கள் கடாட்சந்தான்!” எனறு கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கை கட்டி வாய் பொத்தி நின்றாராம், அவர்.
கேரளாவில் மரியாதைகளும், அவமரியாதைகளும் எப்படிப் படாத பாடுபடுகின்றன. பார்த்தீர்களா? (வெட்கம்! வெட்கம்! என்ற பெருத்த ஆரவாரம்)
இந்து மதப் புராணக் கதைகளில், பார்ப்பானுக்கும், சூத்திரச்சிக்கும் பிறந்தவர்களெல்லாம் காலாகாலத்தில், பெரிய மனிதர்களாகியிருப்பாகக் கூறப்படுகின்றதே அல்லாமல் ஒரு சூத்திரனுக்கும், பாப்பாத்திக்கும் பிறந்த பெரிய மனிதனின் கதை எதாவது மருந்துக்காவது உண்டா?
ஏன் அப்படி? சூத்திரனுக்கும், பாப்பாத்திக்கும் புராணக் காலங்களில், காதலோ அல்லது திருட்டுக் காதலோ ஏற்பட்டிருக்கிறதா? இல்லையே! (சிரிப்பு! கைதட்டல்)
இந்து தரும ஆடசிகளெல்லாம், ஒருவாறு ஒழிந்து, முகம்மதியர், டச்சுக்காரர் – போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில்தான், நம்மவர்களில் ஒருசிலர் மட்டும் படிக்க முடிந்தது, சொத்துரிமையும் பெற முடிந்தது.
இப்பொழுது பார்த்தாலும், வெள்ளையனுக்கு அடுத்தபடி பெரிய பதவிகளில் பார்ப்பனர்களே அமர்ந்துள்ளனர். நம்மவர்களோ அடிமட்டத்தில் எடுபிடிகளாக இருந்து, வில்லைச் சேவகம் செய்து வருகிறார்கள். இந்நாட்டில், ஆரியர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், காலணா கொடுத்துப், பூணூலை வாங்கி மாட்டிக் கொண்டு, இங்குள்ள திராவிடர்களையெல்லாம் ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்களாக இருந்து வருகின்றனர். (சிர்ப்பு! கைதட்டல்)
எல்லா வகுப்பு மக்களுக்கும் வாழ்க்கையில் சம வாய்ப்பும், சம வசதியும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு வற்புறுத்தப்பட்டு வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை, அரசின் அனைத்துத் துறைகளிலும், கையாள வேண்டும் என்பதைத்தான், நமது நீதிக்கட்சி, உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.
இந்தக் குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே, இங்கிலாந்திலும் கூட்டம் போட்டுப் பேசியும், எழுதியும் வருவதற்காகத்தான், நான் ஆண்டு தோறும் தவறாமல் இங்கிலாந்துக்குச் சென்று வருகிறேன்.
நான் இங்கிலாந்தில் வெள்யைர்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் பேசும்போது. போலித் தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பார்ப்பனப் பெருந்தலைவர்களின் சிந்தாந்தம், வேதாந்தம் எல்லாம் எப்படிப்பட்டன என்பதை விளக்கிக் கூறினேன்.
அப்போது ஆங்கில நாட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்த லார்டுசிடன் ஹேம் என்பவர், குறுக்கிட்டு ஒரு கேள்வி கேட்டார்.
“இந்திய வைஸ்ராய் ஆலோசனை சபையில், கல்வித்துறை உறுப்பினராக இருக்கிறாரே, சர்.பி.என். சர்மா அவர்கள் ஒரு பார்ப்பனரல்லாதார்தானே?” என்று கேட்டார்.
நான் உடனே, “பம்பாய்த் துறைமுகத்தில் நான் கப்பல் ஏறும்வரையில், சர்.பி.என். சர்மா அவர்கள் ஒரு பார்ப்பனராகத்தானே இருந்தார்” என்றேன். (சிரிப்பும் கைதட்டலும்)
நீங்கள் இப்பொழுது சிரிப்பது போன்றே, அன்றும் அந்தக் கேள்வியைக் கேட்ட பிரபுவும், பிறரும் கூட கொல்லென்று சிரித்துவிட்டனர்.
நான் மேலும் சொன்னேன். ஞாயிறு, மேற்கே தோன்றி, கிழக்கே மறைந்தாலும், மறையலாம்; ஆனால் எந்தப் பார்ப்பானும், பார்ப்பனரல்லாதவனாக மாறமாட்டான். பார்ப்பனரல்லாதவன் எவனும் பார்ப்பனனாக மாறவும் முடியாது. ஒருவன் இந்து மதத்தை விட்டுவிட்டு கிருத்துவனாகவோ அல்லது முகம்மதியானகவோ மாறலாம்; ஆனால் இந்து மதத்திற்குள்ளாகவே, ஒருவன் ஒரு சாதியை விட்டு விட்டு, வேறொர் சாதிக்குத் தாண்டவே முடியாது. இந்து தருமம், இப்படிப்பட்ட மாறுதலை ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது.
‘பரதர்மோ பயாவஹ!’-அவனவன் சாதித் தொழிலையே அவனவன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மரண தண்டனை நரகம் போன்ற தண்டனைகள் தாம் கிடைக்கும் என்கிறது கீதை!
-தொடரும்
தொடர்புடைய கட்டுரைகள், பதில்கள்:
2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை
தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு
Dear Mathimaran,
அகத்தியர் இருந்தார் என்பதே பெரியார் உட்பட தமிழ் அறிஞர்களால் பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில்,
“Wikipedia” வில் “Iyer” என்ற தலைப்பில் “”Agathiar, usually identified with the legendary Vedic sage Agastya is credited with compiling the first rules of grammar of the Tamil language.[200] . Tolkappiar who wrote Tolkappiam, the oldest extant literary work in Tamil is believed to be a Tamil Brahmin and a disciple of Agathiar. Moreover, individuals like U. V. Swaminatha Iyer and Subramanya Bharathi have made invaluable contributions to the Dravidian Movement” உள்ளது.
அகத்தியர் இருந்தார் என்பதே பெரியார் உட்பட தமிழ் அறிஞர்களால் பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் wikipedia எனும் one of the most reliable information source இல் இப்படி உள்ளது வருந்தத்தக்கது.
தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்
நல்ல அருமையான பேச்சு. பெரியார் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டவர்கள் திருச்சியை சேர்ந்த தனபால் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.
சதீஸ் நம்முடைய தளத்துக்கு வாருங்களேன்.
பெரியாரைப் பற்றிய கட்டுரைகள் அங்கே வெளியாக இருக்கின்றன. இங்கேயோ நாம் பெரியார் பற்றியோ, இந்து மதம் பற்றியோ எழுதினால் மட்டுறுத்தப் படுகிறதே. வெறுமனே சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு எதிர்க் கேள்வி கேட்காமல் இருக்க வேண்டுமா, அதுதான் பகுத்தறிவா? நம்முடைய தளத்திற்கு வந்தால் விவாதிக்கலாமே.
மேலும் தனபால் என்பவர் வேறு. நான் வேறு. நாங்கள் இதை நிரூபித்துக் காட்ட முடியும். .
///சதிஸ் (18:42:02) :
நல்ல அருமையான பேச்சு. பெரியார் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டவர்கள் திருச்சியை சேர்ந்த தனபால் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.///
நான் நேற்றே படித்து விட்டேன் சதீஷ் .ஒரு சின்ன திருத்தம்.நான் வேறு ,திருச்சிக்காரர் வேறு என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்.திருச்சிக்காரர் அவர்களின் தளத்திலேயே அவ்வப்போது பின்னூட்டமிட்டிருக்கிறேன் .அவருடைய தளத்தில் …திருச்சிக்காரருக்கு வினவு கண்டிப்பு!…என்ற முதல் பதிவில் 2 ,3 ,மற்றும் 6 ஆகிய பின்னூட்டங்களை படியுங்கள்.உங்கள் பகுத்தறிவை பயன்படுத்துங்கள்.உண்மை புரியும். கீழே அந்தத் தளத்தின் முகவரி.
திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே
திருச்சிக்காரர் அவர்களே,
உங்கள் தள முகவரியை உங்கள் அனுமதியின்றி தந்திருக்கிறேன் .நீங்களே அவரை உங்கள் தளத்திற்கு அழைத்திருப்பதால்,எனது செயலை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாடீர்கள் என்று நம்புகிறேன்.நன்றி.
சதீஷ் அவர்களே ,
கீழே அந்தத் தளத்தின் முகவரி ,
http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/02/vinavu-lamabasts-thiruchiyaar/
Dear Brother Dhanabal,
NO PROBLEM. You are welcome!
Thiruchchikkaaran
//பெரியாரைப் பற்றிய கட்டுரைகள் அங்கே வெளியாக இருக்கின்றன. இங்கேயோ நாம் பெரியார் பற்றியோ, இந்து மதம் பற்றியோ எழுதினால் மட்டுறுத்தப் படுகிறதே. வெறுமனே சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு எதிர்க் கேள்வி கேட்காமல் இருக்க வேண்டுமா, அதுதான் பகுத்தறிவா? நம்முடைய தளத்திற்கு வந்தால் விவாதிக்கலாமே.//
என்ன கொடுமை…இது. மதம் மாற்றம் செய்பவர்களின் பேச்சு என் நினைவிற்கு வருகிறது. சும்மா எப்போ பார்த்தாலும் நான் அம்பேத்கரிடம் கற்று கொண்டேன் பெரியாரிடமும் கற்று கொண்டேன் என்று வஞ்ச புகழ்ச்சி பாடுவது … ஆதி சங்கரனை ,திருவள்ளுவர், புத்தர் ,பெரியார் ,விவேகனந்தர் இவர்களோடு சேர்த்து எழுதி அந்த ஆளை ஏதோ மறுமலர்ச்சி நாயகன் போல காட்டுவது. இதே கதையை திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருந்ததால் ஒரு வேளை நீக்கி இருக்கலாம் .
நான் எழுதி மட்டுறுத்தப் பட்ட பின்னோட்டத்தில் ஆதி சங்கரர் பற்றிய குறிப்பு எதுவும் இருந்ததாக நினைவு இல்லை. நான் என்ன எழுதி இருந்தாலும், அதையே வாய்ப்பாக வைத்து நான் எழுதியதில் உள்ள தவறை சுட்டிக் காட்டி என் கருத்து தவறானது என நிரூபித்து இருக்க அதையே வாய்ப்பாக வைத்து இருக்கலாம். ஆனால் முழு பின்னூட்டத்தையும் மட்டுறுத்தி இருக்கிராகள். அதற்க்கு அவருக்கு உரிமை உண்டு.
//Matt
///தனபால் போன்ற பார்பனர்கள் அல்லது சூத்திர இந்துக்கள் ,இந்து மதத்தின் உண்மை முகம் வெளி வர வெளி வர கோபம் கொள்வது இயல்பே ,அதற்காக அவர்கள் தங்கள் மதத்தை சரி செய்து கொள்ள முன் வரமாட்டார்கள். ஏனெனில் இந்து மதத்தின் இத்தகைய இழிநிலையே அதன் அடிப்படை. அதனால் பெரியாரையும் அம்பேத்கரையும் இகழ்ந்து பேச தொடங்கி விடுவர். தங்களுக்கு பிடிக்காதவர்களை பற்றிய கட்டு கதைகள் தானே புராணங்கள். இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்லவே.////
அருமையான கருத்து. மிகச் சிறப்பாக சொன்னீர்கள் Matt. ஆனால் இதற்கு சரியாக யாரும் பதில் எழுதமாட்டார்கள்.
திருச்சிக்காரன் வழக்கம்போல் சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறார்.//
அம்பேத்கரையும் , பெரியாரையும் நான் அப்படி எழுதவில்லை என்பதைக் காட்டவே இவர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது
நீங்கள் திரு. தனபாலைக் குறிப்பிட்டு எழுதி இருந்தாலும், திரு. சதீஸ் என்னையும் சம்பந்தம் இல்லாமல் எழுதுவதாக சொல்வதால் தான் எனக்கும் அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கும் உள்ள சம்பந்தத்தை குறிப்பிட வேண்டி உள்ளது.
//நான் மேலும் சொன்னேன். ஞாயிறு, மேற்கே தோன்றி, கிழக்கே மறைந்தாலும், மறையலாம்; ஆனால் எந்தப் பார்ப்பானும், பார்ப்பனரல்லாதவனாக மாறமாட்டான். பார்ப்பனரல்லாதவன் எவனும் பார்ப்பனனாக மாறவும் முடியாது. ஒருவன் இந்து மதத்தை விட்டுவிட்டு கிருத்துவனாகவோ அல்லது முகம்மதியானகவோ மாறலாம்; ஆனால் இந்து மதத்திற்குள்ளாகவே, ஒருவன் ஒரு சாதியை விட்டு விட்டு, வேறொர் சாதிக்குத் தாண்டவே முடியாது. இந்து தருமம், இப்படிப்பட்ட மாறுதலை ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது.
‘பரதர்மோ பயாவஹ!’-அவனவன் சாதித் தொழிலையே அவனவன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மரண தண்டனை நரகம் போன்ற தண்டனைகள் தாம் கிடைக்கும் என்கிறது கீதை!//
உண்மையில் இந்த மகத்தான தலைவரை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
இன்றும் பார்ப்பன பண்டாரங்கள் திருந்தியபாடில்லை.. அதற்கு சாட்சி பல பெயரில் உலாவரும் ——க்காரன் (புறம்போக்கு என்ற பெயரிலும்) போன்றவர்களே..
இதில் நாயர் குறிப்பிட்டிருப்பது இங்கு பின்னூட்டம்போடும் சில பார்ப்பனர்களை குறிப்பதுபோல் இருக்கிறது.
100 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்களோ அதுபோல்தான் இப்பவும் இருக்கிறார்கள்.
பாரூக் அவர்களே நன்றி. அண்ணாவைப் பற்றி அவர் வீட்டுக்கு முன்பே தவறாக எழுதி வைத்தார்களாம். அவர் விலக்கை எடுத்து அதற்க்கு அருகில் வைத்தாராம்.
திரு. சிவராஜ் அவர்களே,
சாதிக் காழ்ப்புணர்ச்சியை , சாதிப் பட்டங்களை சூட்டுவதை விடுங்கள்.
சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க முயலும் வேளையில், “யோவ், நீ சாதியை வைத்துக் கொள் ஐயா, சாதிப் பட்டத்தை வைத்து திட்டாவிட்டால் நாங்கள் பாலிடிக்ஸ் பண்ணுவது எப்படி. அதனால நீ கணடிப்பாக சாதியை வைத்துக் கொள்” என சொல்வது போல உள்ளது.
சாதிக் காழ்ப்புணர்ச்சியை விடுங்கள்.
//// திருச்சிகாரன் (14:32:21) :
திரு. சிவராஜ் அவர்களே,
சாதிக் காழ்ப்புணர்ச்சியை , சாதிப் பட்டங்களை சூட்டுவதை விடுங்கள்.
சாதிக் காழ்ப்புணர்ச்சியை விடுங்கள்.///
சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
திருச்சிக்காரன் தனபால் பொய்களை கண்டித்து நான் எழுதிய பின்னூட்டங்கள் வெளியாகவில்லை.
///’பரதர்மோ பயாவஹ!’////
இதை தவறாக புரிந்து கொள்ள கூடாது. இதன் அர்த்தம், cardiac surgeon படித்த ஒருவர் தான் இதய அறுவைசிகிச்சை பண்ணலாம். dentist, ophthal ஓ இதய அறுவைசிகிச்சை பண்ணகூடாது என்பது தான். cardiac surgeon ஆக நீ இருந்தால் அந்த வேலையை மட்டும் பாரு. நீ பல்லையோ, கண்ணையோ அறுவைசிகிச்சை செய்யாதே என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
வருணாசிரமம் என்பது தொழிலால் பிரிக்கப்பட்ட ஒன்று, வேறு விதமாக அல்ல. அமெரிக்கா, இங்கிலாந்தில் இன்னும் smith, butcher இருப்பது மாதிரி தான்.
திரு. சிவராஜ்,
மக்களுக்கு இடையே இணக்கத்தை உருவாக்கி சமத்துவத்தை உருவாக்க முயல்வது சாத்தானிய செயல் அல்ல.
வெறுப்பு கருத்துக்களை மனதில் வைத்து சாதீயக் காழ்ப்புணர்ச்சி செய்வதுதான் சாத்தானியம். எனவே சாதீயக் காழ்ப்புணர்ச்சியை விட்டு விடுங்கள்.
// இதன் அர்த்தம், cardiac surgeon படித்த ஒருவர் தான் இதய அறுவைசிகிச்சை பண்ணலாம். dentist, ophthal ஓ இதய அறுவைசிகிச்சை பண்ணகூடாது என்பது தான். cardiac surgeon ஆக நீ இருந்தால் அந்த வேலையை மட்டும் பாரு. நீ பல்லையோ, கண்ணையோ அறுவைசிகிச்சை செய்யாதே என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். //
பார்ப்பனீயம் திருந்தாது தொடர்ந்து கட்டு கதைகளையே அள்ளிவிடும் என்பதற்கு உதாரணம்.
பாலா,
cardiac surgeon னோட மகன் cardiac surgeon ஆகலாம் , dentist மகன் cardiac surgeon ஆக முடியாது ,இது தான் வர்ணாசிரம தர்மம்.
//அமெரிக்கா, இங்கிலாந்தில் இன்னும் smith, butcher இருப்பது மாதிரி தான்.//
அப்படியா ! அப்போ பீ அல்லுரதுக்குனு இங்க ஒரு சாதியே இருக்கேப்பா , அதுவும் smith, butcher போலவா ? இதுதான் உலகிலேயே புனித பூமியாம் ….
நல்ல இருக்குப்பா மனு தர்மம்…
சரியான கேள்வி Matt .
பாலா, திருச்சி தனபால் உங்கள் பரம்பரையில் யாராவது பீ அல்லி இருக்கிறார்களா?
அடுத்தது யார் ஜக்கியா? ரவிஷங்கரா?
http://vijaygopalswamihyd.blogspot.com/
சிறப்பாக எழுதியிருக்கிறார். அவசியம் படிக்கவும்.
திரு சதிஸ் அவர்களே,
///திருச்சிக்காரன் தனபால் பொய்களை கண்டித்து நான் எழுதிய பின்னூட்டங்கள் வெளியாகவில்லை///
நான் ஏதும் பொய் சொல்லியிருந்தால் அது எந்த அடிப்படையில் பொய் என்று நீங்கள் (நாகரீகமாக) கருத்துக் கூறினால் அதை ஏற்றுக்கொள்கிறேன்.