“வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்”

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2010/02/tm-nair.jpg?w=1170

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1

‘நம்பிக்கைத் துரோகிகள்’-2

“பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-3

“ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம் -4

1917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் எம்.சி. ராஜா நடத்திய பொதுக்கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆற்றிய சிறப்புரை.

பகுதி-5

நான் மேலும் சொன்னேன். ஞாயிறு, மேற்கே தோன்றி, கிழக்கே மறைந்தாலும், மறையலாம்; ஆனால் எந்தப் பார்ப்பானும், பார்ப்பனரல்லாதவனாக மாறமாட்டான். பார்ப்பனரல்லாதவன் எவனும் பார்ப்பனனாக மாறவும் முடியாது. ஒருவன் இந்து மதத்தை விட்டுவிட்டு கிருத்துவனாகவோ அல்லது முகம்மதியானகவோ மாறலாம்; ஆனால் இந்து மதத்திற்குள்ளாகவே, ஒருவன் ஒரு சாதியை விட்டு விட்டு, வேறொர் சாதிக்குத் தாண்டவே முடியாது. இந்து தருமம், இப்படிப்பட்ட மாறுதலை ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது.

‘பரதர்மோ பயாவஹ!’-அவனவன் சாதித் தொழிலையே அவனவன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மரண தண்டனை நரகம் போன்ற தண்டனைகள் தாம் கிடைக்கும் என்கிறது கீதை!

இதுதான் இந்தியாவின் அவலநிலை. இங்கேதான் பிரம்ம-சத்திரிய-வைசிய-சூத்திரர் என்ற ஆரிய முதலாளித்துவ வித்து, அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக வேரூன்றிச் சென்றிருக்கிறது. இதனை வெட்டி வீழ்த்தி அதில் கொதிக்கக் கொதிக்கச், சுடச்சுட வெந்நீர் ஊற்றி, இந்த நச்சு மரம என்னும் வருணாச்சிரம தருமத்தை அக்குவேறு, ஆணிவேறாகப் பிய்த்து எறிந்து, அழித்து ஒழிக்க வேண்டும்.

வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டிய வேலையில், நம்மவர்கள் ஈடுபட வேண்டும் இதற்குப் பாமர மக்களின் கல்வி அறிவு எல்லா வகையிலும் பெருக வேண்டும். அறியாமைப் பேய்தானாக ஒடி விடும். நமது கட்சியின் சார்ப்பாகப் பிரச்சாரங்கள், செய்தித்தாள்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவை ஆங்காங்கு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கவேண்டும். நமது மக்கள் மேலும் மேலும் அரசியல் அறிவும், தெளிவும் பெற வேண்டும்.

நமது மக்களில் பெரும்பாலோர் ஏழைக் கூலி வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கப் போதுமான வசதியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அரசினர் விதிக்கும்வரியை உயர்த்தி, அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு, ஏழை எளியவர்களின் கல்வி நலத்தைப் பெருக்கலாம் என்றாலோ, இந்நாட்டின் போலி தேச பக்தர்கள் அய்யயோ என்று ஒப்பாரி வைத்துக் கூக்குரலிடுகிறார்கள். (வெட்கம்! வெட்கம்!)

நம்மவர்களிலும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரும் வைதீகர்கள், பார்ப்பனர்களின் தாசானுதாசர்கள் (வெட்கம்! வெட்கம்!)

இந்த உலகத்தில் ஏழைகளாகிய உங்களையெல்லாம், ஏமாற்றி வயிறு எரிய வைத்தாலும், அடுத்த மோட்ச உலகத்தில் அல்ல அல்ல மோச உலகத்தில் (சிரிப்பு! கைதட்டல்!) இடஒதுக்கீடு செய்வதற்காக முயலுகின்றனர். அப்படிப்பட்டவர்கள், கடவுளின் கங்காணிகளாக புரோக்கர்களான பூதேவர்களான அக்கிரகாரப் புலிகளான பார்ப்பனரின் தயவைச் சம்பாதிப்பதற்காக அன்னதானம், கோதானம், பூதானம், கன்னிகாதானம், வஸ்திர தானம், வித்யாதானம் முதலிய சர்வசகல தானங்களையும், கிரேதா யுகம், முதல் இன்றுவரை பசியோ, பட்டினியோ இன்னது என்று அறியாத பார்ப்பன திருமேனிகளுக்கே மேலும், மேலும் அசீரணம் ஆகும்வரையில் கூட இரண்டு கைகளாலும் வாரி வாரிக் கொடுத்து வருகிறார்கள்.

அப்படியெல்லாம் செய்வார்களே தவிர, கிழிந்த வேட்டியும், சேலையுங் கட்டிக் கொண்டு பரட்டைத் தலையோடு, உடைந்து போன ஒழுகும் குடிசைகளிலும், அப்படிக்கூட இல்லாமல், ஒண்டும் இடங்களிலும், நடை பாதை ஓரங்களிலும், பசிப்பிணியோடு கூட, அதனால் அடையும் பலப்பல பிணிகளோடும், நடைப் பிணங்களோடு பன்றியாய்க். கழுதையோடு கழுதையாய் எச்சில் இலைப் பொறிக்கிகளாய்த் தலைமுறை தலைமுறையாய்க் காலந்தள்ளி வரும், நம்மின கோடானகோடி மக்களிருக்கும பக்கம் கூட பார்க்க அருவருக்கும் மனிதகுலப் பேய்களாகக், கடவுள்களையும், கடவுளச்சிகளையும் காப்பாற்றும் காவலர்களாகவே, கயவர்களாகவே, நம் பணக்காரர்களும், மிட்டாமிராசுகளும், வியாபார மன்னர்களும் வெட்கமில்லலாமல் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். (வெட்கம்! வெட்கம்!)

அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங்காலிகளும், கங்காணிகளும் விபீஷணர்களாக ஆகிப் பேராதரவு தநது வருகின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி. வரதராசுலுநாயுடு, ஈரோடு ராமசாமி நாயக்கர், தூத்துக்குடி வழக்கறிஞர்..சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் போன்றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர்.

மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர்கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித்தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர்களே!  அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமையையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித்திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன. (வெட்கம்! வெட்கம்! என ஆரவாரம்)

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வராமல் நாங்கள் ஓய மாட்டோம்! உட்கார மாட்டோம்! என்ற முழக்கத்தை எல்லோரும் எழுப்ப வேண்டும்.

நமககு 3 செய்திதாள்கள் போதா 300 செய்தித் தாள்கள் வேண்டும்! புற்றீசல் போல் அவை கிளம்ப வேண்டும்.

***

திராவிடர் கழகம் வெளியிட்டு இருக்கிற ‘டாக்டர் டி.எம். நாயரின் முத்துக்கள்-1917 ஸ்பர்டாங் சாலை உரை’ என்ற சிறு வெளியிட்டிலிருந்து, சுருக்கி வெளியிட்டிருக்கிறேன்.

புத்தகம் கிடைக்குமிடம்:

திராவிடன் புத்தக நிலையம்

பெரியார் திடல், சென்னை – 600 007.

தொடரும்

தொடர்புடைய கட்டுரைகள்,  பதில்கள்:

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

6 thoughts on ““வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்”

  1. //‘பரதர்மோ பயாவஹ!’-அவனவன் சாதித் தொழிலையே அவனவன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மரண தண்டனை நரகம் போன்ற தண்டனைகள் தாம் கிடைக்கும் என்கிறது கீதை!

    இதுதான் இந்தியாவின் அவலநிலை. இங்கேதான் பிரம்ம-சத்திரிய-வைசிய-சூத்திரர் என்ற ஆரிய முதலாளித்துவ வித்து, அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக வேரூன்றிச் சென்றிருக்கிறது. இதனை வெட்டி வீழ்த்தி அதில் கொதிக்கக் கொதிக்கச், சுடச்சுட வெந்நீர் ஊற்றி, இந்த நச்சு மரம என்னும் வருணாச்சிரம தருமத்தை அக்குவேறு, ஆணிவேறாகப் பிய்த்து எறிந்து, அழித்து ஒழிக்க வேண்டும்// நியாயமான கோபம்..

  2. //மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர்கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித்தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர்களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமையையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித்திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன.//

    இந்த சாக்கடைச் செய்திதாள்களை அன்று நடத்திய பார்ப்பன பண்டார கூட்டம் இன்றும் விட்ட பாடில்லை.. இன்று பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு அதே வேலையை முன்பைவிட முனைப்பாக செய்கிறது இந்த தினமலம், தினமணி, ஹிந்து, விகடன், துக்ளக் போன்ற பார்ப்பன சாக்கடைகளும், தினதந்தி, தினகரன், குமுதம் போன்ற கழிசடை பார்ப்பன அடிவருடிகளும்..

    பார்ப்பன கூட்டத்தின் கொடூர புத்தியை அம்பலபடுத்தியும், அதை ஒடிக்க பாடுபட்ட டி. எம். நாயர் போன்ற மகத்தான தலைவரை (மனிதரை) மீண்டும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் திராவிட கழகத்திற்கும், இந்த தொடரை வெளியிட்ட உங்களுக்கும் நன்றி..

  3. நமககு 3 செய்திதாள்கள் போதா 300 செய்தித் தாள்கள் வேண்டும்! புற்றீசல் போல் அவை கிளம்ப வேண்டும்.//

    Enna oru mun yosanai avaruku 1917 li..

    Inum Namakku 3000 news papar vendum Makalai tirutha….

  4. மாங்குடி மருதனார் , “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை ” என்கிறார் (புறநானூறு.335.7-8).

    அன்று கருணாநிதி, “பிறப்பொக்கும் என்பது பிராமண, சத்தி-ரிய, வைசிய, சூத்திர என்-றெல்லாம் நால்வகை வர்ணங்கள் பிரிக்கப்பட்டு பறையர் என்றும், பள்ளர் என்றும், புலையர் என்-றும், நாவிதர் என்றும், அருந்-ததியர் என்றும் முடி திருத்துவோர் என்றும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்-படுத்தி அவர்களுக்கு எல்லாம் இருந்த உயர்வை-சமநிலையை அகற்றி படுபாதாளத்திலே தள்-ளிய பயங்கர சூழ்ச்சியிலே இருந்து தமிழர்களை மீட்க தமிழ் சமுதாயத்தை மீட்க எழுந்ததுதான் யுகப்புரட்சி போல தமிழ்-நாட்டிலே பெரியார் நடத்-திய புரட்சி, ஜாதி, சமயத்தை ஒழித்த புரட்சி-அந்த புரட்சியை அடிப்-படை-யாக வைத்துதான் இந்த நடன நிகழ்ச்சி, பாடல்-நிகழ்ச்சி, கற்பனை நிகழ்ச்சி, நாட்டுப்புற நிகழ்ச்சி ஏற்பாடு செய்-யப்பட்டு………………….”, குறிப்பிட்டுள்ளார்.

    அப்படியென்றால், சங்ககாலத்திலேயே இவ்வாறு நான்காக இவ்வாறுப் பிரித்து வைத்தது யார்?

    “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை ” – அவ்வாறு குறிப்பிட்டது எதனால்?

    அந்த நான்கும் தொழில் ரீதியாக வைத்துப் பிரிக்கப் பட்ட வர்க்கங்களா?

    “தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்-படுத்தி அவர்களுக்கு எல்லாம் இருந்த உயர்வை-சமநிலையை அகற்றி படுபாதாளத்திலே தள்-ளிய பயங்கர சூழ்ச்சி“, எனும்போது –

    அப்பொழுது யார் அடிமைப் படுத்தினர்?

    யார் சூழ்ச்சி செய்தனர்?
    http://socialsubstratum.wordpress.com/2010/01/12/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE/

  5. vedaprakash//

    அவர்கள் சொன்னது இருக்கட்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? வேதம்தான் எல்லாவற்றிற்கும் முன்பே உள்ளது என்கிறார்களே …அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  6. விவேக்கிற்கு பிரட்சனையின்னா சாதி சங்கத்தை தேடி ஓடுரார்.

    அஜித்திற்கு பிரட்சனையின்னா சாதி சங்கத்தை தேடி ஓடுரார்.

    நாளைக்கு சாதி சங்கத்திலிருந்து பிரட்சனைகள் வரப் போவதில்லை என்பது என் எண்ணம்.

Leave a Reply

%d bloggers like this: