திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்


தமிழர்களின் பிரச்சினை தெரியாத, மார்க்சியம் எப்படி தமிழர்களின் விடுதலைக்குப் பயன்படும்?

-தமிழ்ப்பித்தன்

தமிழின் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு இடத்தில்கூட திருவள்ளுவர், ‘தமிழ், தமிழன், தமிழர்’ என்ற சொற்களை பயன்படுத்தவில்லை. மாறாக, உலகு ‘உலகம்’ என்கிற சொற்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு’ – என்று துவங்கிய வள்ளுவர், ’உலக மக்கள் அனைவருக்குமான பொது நலன்’ என்ற அடிப்படையில்தான் தன்னுடைய 1330 குறள்களையும்  பதிவு செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட திருக்குறளை ‘தமிழர்களுக்கு மட்டும்’ என்று சுருக்கிவிட முடியாது. திருக்குறளில் சொல்லப்பட்ட செய்திகள், தமிழர்களை பற்றி மட்டுமல்ல. அது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான ‘மனிதாபிமானம், பொது ஒழுங்கு’ ஆகியவற்றை வலியுறுத்துவதால்தான் அதனை ‘உலகப் பொதுமறை’ என்று அழைக்கிறோம்.

ஆக, 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் திருவள்ளுவர், ஒரு சர்வதேசியவாதியாக உலக மக்கள் எல்லாம் நலமாக வாழவும், பிறரை துன்புறுத்தாமல், பிறர் துன்பம் கண்டு கலங்குபவராகவும் இருக்க வேண்டும் என்று மனமார விரும்பி திருக்குறளை எழுத முடிந்தபோது,

150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது?

காரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.

14 thoughts on “திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

 1. காரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.

 2. தோழருக்கு வாழ்த்துகள்!

  இன்றைய அரசியல் சூழலில் சில ஜீவிகள் (தமிழ் தேசியவாதிகள் உட்பட) மார்க்ஸியம் நமது சூழலுக்கு ஒத்து வராது. மார்க்ஸியம், சர்வதேசியவாதம் என்பது ஏதோ ஒரு கற்பனாவாதம் என்பது போலெல்லாம் கருத்துரை பரப்புகின்றன.

  அவர்களுக்கு எளிமையாக அவர்கள் வழியிலேயே அவர்கள் பாணியிலேயே அடிக்கிற மாதிரியான கட்டுரை.

  வாழ்த்துக்கள்!

  தோழமையுடன்,
  சர்வதேசியவாதிகள்
  http://www.vrinternationalists.wordpress.com

 3. திருவள்ளுவர் பறையர் என்று ஏதோ ஒரு புண்ணாக்கு சென்ற பதிவில் வெளியிட்டது.

  இப்படி எல்லோரையும் தன் சாதி என்று சுருக்கி பார்க்கும் மனோநிலையில் இருப்பவர்கள் உலகலாவிய அளவில் சிந்தித்து பார்ப்பது இல்லை. தமிழின் பெருமையாக கூறும் வள்ளுவரே 2000 ஆண்டுகளுக்கு முன் சர்வதேசிய கண்ணோட்டத்தில் இருந்தார். ஆனால் விஞ்ஞான பூர்வமாக மனித குலம் தழைக்க சர்வதேசியம் பேசும் மார்க்ஸியம் மட்டும் இவர்களுக்கு கசப்பாக இருக்கிறது.
  சரியான நேரத்தில் சரியான பதிப்பு.

  மனிதனை மனிதன் ஒடுக்கும் எல்லா முறைகளிலிருந்தும், எல்லா விதமான சுரண்டலிலிருந்தும் மீட்பது மார்க்ஸியம் மட்டுமே!

  இன்னும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.
  வாழ்த்துகள்!

 4. நல்ல பதில். திருவள்ளுவரை தமிழனவிரோதி என்று தமிழனவாதிகள் சொல்லாமல் இருந்தால் சரி.

 5. திருச்சிக்காரன் போன்றவர்கள் வள்ளுவரையும் ஆன்மிகவாதி என்று குட்டையை குழப்புவார்கள்.

 6. முற்றிலும் புதிய சிந்தனய் மதிமாறனின் இந்த கருத்துக்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் உணர்வு, பகுத்தறிவு என்னும் நிலய்யிலிருந்து மார்க்சியம் என்ற அடுத்த நிலய்க்கு மாறவேண்டிய தேவயய் நினய்வூட்டியுள்ளார் நண்பர் மதிமாறன் அவர்கள். எவருக்கும் புலப்படாத இந்த புதிய சிந்தனய் நண்பர் மதிமாறனுக்கே உரித்ததாகும், நண்பா வாழ்த்துக்கள்.. எங்கியோ போயிட்ட நண்பா.. தமிழன், கோடிமுனய்.

 7. ///150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது?///

  மார்க்சியத்தினால்தான் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்.

 8. புறம்போக்கு, ஆட்டோ சங்கர், திருச்சிக்காரன் மூன்று பேரும் ஒருவர்தான்.

 9. சுந்தரம், நான் முன்பு புறம் போக்கு எனற பெயரில் எழுதி வந்தவன், அந்தப் பெயரைக் காரணம் காட்டி கருத்துக்கள் புறக்கணிக்கப் பட்டதால் என் சொந்த வூரை பெயராக வைத்து எழுதி வருகிறேன்.

  அது மட்டும் இல்லாமல், திருச்சிக் காரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்த பின், புறம் போக்கு என்ற பெயரில் எழுதுவதை நிறுத்து விட்டேன். இ தில் எந்த நேர்மைக் குறைவும் இல்லை.

  ஆட்டோ சங்கர் எனற பெயரில் எழுதுவது நான் அல்ல. நீங்கள் ஒரு முறை திருச்சிக் காரனுக்கு இதுக்கும் நேர்மை கூட என்று எழுதியதால் ஆட்டோ சங்கர் என்னைக் கோர்த்து விட்டு சென்று விட்டார். ஆனால் நீங்கள் என்னை என்னை எத்தனை பேர் இட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம்.

  தானைத் தலைவரே சொன்னது போல ஆயிரம பேர் வைத்து அழைத்து எனக்கு அஸ்டோத்திர நாமாவாளி பாடினாலும், எனக்கு அட்டியில்லை.

  நான் தொடர்ந்து சகோதரர் வே. மதிமாறனின் தளத்திலே, திருச்சிக் காரன் என்ற பெயரிலே மட்டும், மக்கள் நன்மைக்கான சமூக ஒருங்கிணைப்பு, சமத்துவக் கருத்துக்களை, தொடர்ந்து எழுதுவேன். நீங்கள் கவலைப் பட வேண்டாம்.

 10. thangal bathilgal paaratirkuriyavai… thodarattum….

Leave a Reply

%d bloggers like this: