தாலிக்கு எதிரான போராட்டம்! – பரபரக்கும் சர்ச்சை

11065621_778355162241613_192408593_o

மக்கள் ரிப்போர்ட் இதழில்..

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்குப் பெருமையைத் தருகிறதா சிறுமையைத் தருகிறதா கடந்த மார்ச் 8ம் தேதி ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என இந்துத்துவாவினர் அந்தத் தொலைக்காட்சி மீது வன்முறை தாக்குதல்களை நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தாலி சர்ச்சை பரபரத்த நிலையில், ஏப்ரல் 14ம் தேதி சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவித்து மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது திராவிடர் கழகம்.

இதனைத் தாலி அறுக்கும் போராட்டம் என இந்துத் துவாக்கள் திரித்துக் கூற, இதையே மீடியாக்களும் பிரதிபலிக்கின்றன. இது தாலி அறுக்கும் போராட்டமல்ல; தாலி அகற்றும் போராட்டம் எனத் தி.க. தரப்பு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தாலி சர்ச்சை குறித்து, பெரியாரியல் & அம்பேத் கரியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான வே. மதிமாறனிடமும் பாஜ கவின் மாநிலத் துணைத் தலைவரான வானதி சீனிவாசனிட மும் தனித்தனியே கேள்விகளை முன் வைத்தோம். அவர்களின் பதில்கள் இதோ…

வே. மதிமாறனிடம்
==================

? இந்து மக்கள் தாலியை புனித மாகக் கருதுகின்றனர். அவர்களை காயப்படுத்தும் வகையில் தாலிக்கு எதிரான இந்தப் போராட்டம் தேவையா?

வே. மதிமாறன்:

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தி.க தலைவர் வீரமணி அறிவிதிருப்பது தாலி அறுக்கும் போராட்டமல்ல; தாலி அகற்றும் போராட்டம். பெரியார் கொண்டு வந்த திருமண முறை என்பது இந்தியாவிலேயே யாரும் செய்யாத சிறப்பான திருமண முறை. இதில் புரோகித மறுப்பு, பார்ப்பன எதிர்ப்புப் போன்றவற் றைத் தாண்டி முக்கியமான பங்கு என்ன வென்றால் பெண்ணு
ரிமை சார்ந்து இருப்பது.

இந்துக்களின் திருமண முறை என்பது முழுக்க முழுக்கப் பெண் களுக்கு எதிரான திருமண முறையாக இருக்கிறது என்பதால் இதனை மாற்றவே சுயமரியாதை திருமண முறையைப் பெரியார் கொண்டு வந்தார்.

சுயமரியாதைத் திருமண முறைகளை மூன்று விதமாகப் பெரியார் பிரிக்கிறார். சுயமரியாதைத் திருமணத்தில் பாதி என்று பெரியார் எதைச் சொல்கிறார் என்றால்… அய்யர் இல்லாமல் ஒரே சாதிக் குள் செய்து கொள்ளும் திருமணத்தை பாதிச் சுயமரியாதைத் திருமணம் என்று ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார். இதேபோல, அய்யரை வைத்து இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் இதையும் பாதி அளவுக்கான சுயமரியாதைத் திருமணமாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.

அடுத்து, அய்யரும் இல்லாமல் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த வர்கள் (சாதி மறுப்பு) திருமணம் செய்து கொள்வதை முழுமை யான சுயமரியாதைத் திருமணம் என்கிறார் பெரியார்.

மூன்றாவதாக ஒன்றைச் சொல் கிறார் பெரியார். அது புரட்சிகரத் திருமண முறை! இந்தப் புரட்சிகரத் திருமண முறையில் அய்யரும் கிடையாது. எந்த மத அடையாளத்தோடும் திருமணம் செய்யக் கூடாது. அது இந்து மதம் என்று கிடையாது; இஸ்லாம், கிறிஸ்தவம் உட்பட எந்த மதப்படியும் செய்யாமல் தாலியும் கட்டாமல் நடக்கிற திருமணம்தான் புரட்சிகரத் திருமணம் என்கிறார் தந்தை பெரியார்.

ஆக, கட்சிக்குள் வருபவர்கள் எல்லோருமே பெரியாரின் இந்தக் கண்ணோட்டத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கட்சிக்குள் வருபவர்கள், பெண் எடுக்கும் இடத்தில் (சாதி மறுப்புத் திருமணமாக இருந்தாலும்) தாலி மட்டும் கட்டணும் என்று சொல் கிறார்கள் என்று வருவார்கள். சுய மரியாதை திருமணத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி மட்டும் சில வேளை நடக்கும்.

இப்படித் தாலி கட்டி சுயமரியா தைத் திருமணத்தை நடத்தி விட்டு, அதன் பின் தாலி கட்டுவது என்பது பெண்ணை அடி மைப்படுத்துவது என்று தன் மனைவிக்கு அதைப் புரிய வைப்பது! பெரியார் எந்தக் கருத்தையும் சொல்வார். ஆனால் ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார். அதுதான் அவருடைய ஜனநாயகம்!

மனைவிக்குப் புரிய வைத்து அவரின் சம்மதத்தோடுதான் தாலியை அகற்ற வேண்டும். பெண்ணின் சம்மதமில்லாமல் செய்தால் அது பெண்ணடிமைத்தனமாக, பெண் மீதான வன்முறையாக மாறிவிடும்.
அதனால், தாலியைக் கட்டி திருமணம் செய்து கொள்ளச்சொல் லும் பெரியார் அதன் பின், தாலி என்பது எவ்வளவு இழிவானது, உன்னை அடி மைப்படுத்தத்தான் ஆண் கட்டுகிறான் என்பதை அந்தப் பெண்ணுக்கு புரிய வைக்கச் சொல்கிறார்.

அந்தப் பெண், ஆமாம்… இது அடிமைப்படுத்துதல்தான் என்று புரிந்து இந்தத் தாலி தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்த பின்னர் அதே சுய மரியாதை திருமணம் செய்து கொண்டவர்கள் இன்னொரு மேடையில் ஏறி, தான் கட்டிக் கொண்ட இந்தத் தாலி எனக்கு வேண்டாம்; இது அடிமைத்தனம் என்று அவிழ்த்துப் போடுவதற்குப் பெயர்தான் தாலி அகற்றும் விழா.

இது அந்தப் பெண்களே முழுச் சம்மதத்தோடு செய்வது. தன் மனைவியே ஆனாலும் கருத்தை திணிக்கக் கூடாது என்பது பெரி யாரின் கொள்கை.

பெண்கள் தாலி கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்; அதை அகற்ற முடியாது என்று சண்டை போடுகிறார்கள் என்றால் அதை அப்போதைக்கு விட்டு விடு! அவர்களுக்குத் தொடர்ந்து புரியவை! அவர்கள் என்றைக்குப் புரிந்து கொள்கிறார்களோ அன்றைக்கு அழைத்து வந்து தாலி அகற்றும் விழாவை நடத்திக் கொள். இதை த்தான் பெரியார் சொல்கிறார். தாலி அகற்றும் விழா இதுதான். இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை!

தாலி அகற்றும் விழாவில் மிக அதிகபட்சமாகப் பெண்ணுரிமை, பெண்களுக்கான சுதந்திரம், பெண்ணியக் கருத்துதான் முதன் மையானது. அதனால்தான் தாலி கட்டக் கூடாது என்ற கருத்து டையவர் இத்தனை நாட்கள் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழ்ந் திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு புரிய வைத்திருக்கிறார்.
ஒருவரை கொள்கை சார்ந்து மாற்ற வேண்டுமே தவிர வன்மு றையால், பிடிவாதத்தால் மாற்றக் கூடாது என்பதுதான் பெரியா ரின் கொள்கை.

14ம் தேதி நடக்கும் தாலி அகற்றும் விழாவை அய்யா வீரமணி தன் கட்சியில் உள்ளவர்களுக்காகத்தான் நடத்துகிறார் என்பது கூடப் புரியாமல் இந்துப் பெண்களின் தாலியை எல்லாம் அறுக்கி றார்கள் என்று பொய் பேசி திசை திருப்புகிறார்கள்.

இது இந்துப் பெண்களுக்கு எதிரானது அல்ல; தாலி கட்டிக் கொள்வதுதான் இந்துப் பெண்களுக்கு எதிரானது.

வானதி ஸ்ரீனிவாசனிடம்….
======================

? தி.க. நடத்தவிருக்கும் தாலி அகற்றும் விழாவை தாலி அறுக்கும் போராட்டம் என்று கூறி இந்துப் பெண்களைத் தூண்டி விடுவ துபோல் பாஜகவினர் திசை திருப்புவது சரியா?

! வானதி ஸ்ரீநிவாசன் :

அப்படி நாங்கள் யாரும் சொல்லலையே சார்… பாஜக தாலி அறு கும் போராட்டம் என்று அதைச் சொல்லவில்லை. அவர்கள் என்ன போராட்டம் நடத்துகிறார்களோ அதற்குத் தான் நாங்கள் மாற்றுக் கருத்தைச் சொல்கிறோம். இந்தப் போராட்டம் தேவையில்லை என்று நாங்கள் சொல்லி வருகிறோம்.

இஸ்லாத்தில் தாலி கிடையாது. ஆனாலும் தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களும் தாலி அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்திற்குள் அவர்களும் வந்து விடுகிறார்கள்.

அப்படியிருக்கும்போது, தி.க.காரர்கள் வந்து அதை நாங்கள் அகற்றுகிறோம்; இது பகுத்தறிவு என்று சொன்னால் எப்படி? தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தாலி அகற்றுவது என்பது ஒட்டு மொத்தமாக எல்லா மதத்தினரையும் புண்படுத்துவது மாதிரிதான் இருக்கிறது.

இன்னொரு விஷயம், எல்லாப் பெண்க ளும் தாலியை அகற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை; எங்கள் இயக்கத்திலுள்ளவர்கள், கொள்கையை ஏற்றுக் கொண்டவர்க ளைத்தான் தாலியை அகற்றச் சொல்கிறோம் என்றுதானே அவ ர்கள் சொல்கிறார் கள்? நான் கேட்கிறேன்… அவர்கள் இயக்கத்திலிருப்பவர்கள்; கொள்கைப் பிடிப்பு இருப்பவர்கள் தாலியே போட வேண்டாமே! அப்புறம் எப்படித் தாலி அகற்றுக்கிற கேள்வி வந்துச்சு?

தாலி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தாலியை எதற்குச் சார் போட வேண்டும்? தாலியே போடாதவர்கள் அப்புறம் எதற்கு அதை அகற்றுவதற்கு ஒரு போராட்டத்தை வைக்க வேண் டும்? தாலி மீது நம்பிக்கை இல்லை என்றால் போகட்டுமே! தாலி போட வேண்டும் என்று யாரும் அவர்களுக்குச் சொல்ல வில்லையே!

ஆனால் தாலியை கல்யாணத் தில் நாங்க அடையாளத்திற்காகப் போடுவோம். அப்புறமா அதை அகற்றுவோம் என்று சொன் னால் அதில் என்ன அர்த்தம் இருக்கு?

இந்தப் போராட்டம் தமிழ் நாட்டில் ஒட்டுமொத்த பெண்களையே காயப்படுத்துகிற மாதிரி யாகத்தான் இருக்கு. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவப் பெண்கள் தாலி அணிகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் என்று மட்டுமில்லை கிறிஸ்தவர்களின் திருமணத்தில் தாலி என்று சிலுவையையாவது வரைந்து போட் டுக் கொள்கிறார்களா இல்லையா?

ஆக, தாலி அகற்றுவது என்பது எல்லோரையும் இழிவுபடுத் துவதுபோலத்தானே இருக்கிறது! இது பெண்களை இழிவுப டுத்தும் போராட்டம் என்று கூடச் சொல்லலாம்!

நன்றி: மக்கள் ரிப்போர்ட்.

மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்

தினத்தந்தி: ஆதித்தனார் திறமையல்ல; பெரியாரின் திறமை

தந்தி ‘பாண்டே.. ஆண்டே’ களுக்கு..

7 thoughts on “தாலிக்கு எதிரான போராட்டம்! – பரபரக்கும் சர்ச்சை

  1. பெரியார் எந்தக் கருத்தையும் சொல்வார். ஆனால் ஏற்றுக் கொள்ளச் சொல்லி
    யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார். அதுதான் அவருடைய ஜனநாயகம்!

    மனைவிக்குப் புரிய வைத்து அவரின் சம்மதத்தோடுதான் தாலியை அகற்ற வேண்டும்.
    பெண்ணின் சம்மதமில்லாமல் செய்தால் அது பெண்ணடிமைத்தனமாக, பெண் மீதான
    வன்முறையாக மாறிவிடும்.
    அதனால், தாலியைக் கட்டி திருமணம் செய்து கொள்ளச்சொல் லும் பெரியார் அதன்
    பின், தாலி என்பது எவ்வளவு இழிவானது, உன்னை அடி மைப்படுத்தத்தான் ஆண்
    கட்டுகிறான் என்பதை அந்தப் பெண்ணுக்கு புரிய வைக்கச் சொல்கிறார்.

    அந்தப் பெண், ஆமாம்… இது அடிமைப்படுத்துதல்தான் என்று புரிந்து இந்தத்
    தாலி தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்த பின்னர் அதே சுய மரியாதை
    திருமணம் செய்து கொண்டவர்கள் இன்னொரு மேடையில் ஏறி, தான் கட்டிக் கொண்ட
    இந்தத் தாலி எனக்கு வேண்டாம்; இது அடிமைத்தனம் என்று அவிழ்த்துப்
    போடுவதற்குப் பெயர்தான் தாலி அகற்றும் விழா.

    இது அந்தப் பெண்களே முழுச் சம்மதத்தோடு செய்வது. தன் மனைவியே ஆனாலும்
    கருத்தை திணிக்கக் கூடாது என்பது பெரி யாரின் கொள்கை.

  2. Fais Faisal இமேஜ் வடிவில் இருக்கும் மேற்கண்ட செய்தியை எழுத்து வடிவில் படிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்…. https://www.facebook.com/reporterfaisal/posts/778488188894977
    22 hrs · Edited · Like
    வே மதிமாறன் தோழர் Fais Faisal இந்த இணைப்பு This content is currently unavailable என்று காட்டுகிறது.
    22 hrs · Like · 1
    Madhivanan Durai · 4 mutual friends
    Vanathi Srinivasan knocked out.. Super anna
    21 hrs · Like · 1
    கவி பாரதி முத்துசாமி · 5 mutual friends
    தோழர் மதிமாறன் கருத்தை மரியாதைகுறிய வானதி சீனிவாசன் நான்கு முறை படிக்க வேண்டும் ஆனால் Rss மூளைக்கு பத்து முறை படித்தாலும் புரியுமா என்பது சந்தேகம் தான்
    20 hrs · Like · 5
    Mohamedihshanullah Mohamedihshanullah Thaali agatrum poraattam,yella mathathinaraiyum punpaduthumaaaaaaaam?muslimgalil “thaali”undaam,…….? appadinaa naan thaali katta maranthuttaena?enna koduma sagotharare………….
    9 hrs · Like
    Mohamedihshanullah Mohamedihshanullah Mathimaaran-vaatham, vaanathi-pidivaatham…….
    9 hrs · Like
    Kingsly Thomas நல்ல ஒரு உதாரணம்….சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒரு பாடகியின் கணவர் இறந்து சில நாட்களுக்கு உள்ளாகவே (டிசம்பர் 21 இல் மறைவு)ஒரு வாரத்திற்கு பின் அவர் டிசம்பர் கச்சேரியில் பூவும் பொட்டுமாக மங்களகரமாக கலந்து கொண்டார்.ஒரு குடும்பத்தில் யாரவது இறந்தால் …See More
    7 hrs · Like
    Selvaraj Ksraj · Friends with புதிய பாமரன் and 16 others
    வாழ்வியலில் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது அவர்களின் பிலைப்புக் காக பெரியாரை விமர்சிப்பது இன்று எந்தஜாதியிலும் விதவைகள் சீருடைஅணிவதில்லை பெரியார் வாழ்நாள் முழுதும் என்னக்கூரிநாரோ அதைத்தான் இன்று மக்கள் அனுபவத்தில் ஏற்றுக்கொண்டனர்
    5 hrs · Unlike · 2

  3. 14ம் தேதி நடக்கும் தாலி அகற்றும் விழாவை அய்யா வீரமணி தன் கட்சியில் உள்ளவர்களுக்காகத்தான் நடத்துகிறார் என்பது கூடப் புரிந்தும் புரியாதததுபோல் இந்துப் பெண்களின் தாலியை எல்லாம் அறுக்கி றார்கள் என்று பொய் பேசி திசை திருப்புகிறார்கள்.

  4. ..// இந்துக்களின் திருமண முறை என்பது முழுக்க முழுக்கப் பெண் களுக்கு எதிரான திருமண முறையாக இருக்கிறது என்பதால் இதனை மாற்றவே சுயமரியாதை திருமண முறையைப் பெரியார் கொண்டு வந்தார்.//..பெண்களுக்கு எதிரான திருமண முறை இஸ்லாமியர்களுடடையது. (இங்கு இந்து முறையில் பெண் ஒரே மணையில் பையனுடன் அமர்வாள். அவள் கழுத்தில் தாலியை கணவர் கட்டுவார்).
    இஸ்லாமியத் திருமணங்களில் பையனை ஒரு முறை கூட சந்திக்காமல், முகத்தைக் கூடப் பார்க்காமல் சம்மதம் = குபூல் = தெரிவித்தால் நிகாஹ் முடிந்தது; முதலிரவிலே தான் கணவன் முகத்தையே பார்ப்பார். அவன் குருடனோ நொண்டியோ குரூரமானவனொ காஜி செய்து வைத்த கணவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரியாரிஸ்டுகள் இந்த திருமண முறையை மாற்ற, பெண்ணுக்கு கொஞ்சமேனும் உரிமை கொடுக்கும் வண்ணம் மாற்ற முயற்சி, போராட்டங்கள் செய்யலாமே!

  5. ஏதாவது செய்து தங்களது இருப்பை காட்டவேண்டாம்?

Leave a Reply

%d bloggers like this: