மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்
மாடை புனிதமாகவும் மாட்டுக்கறி உண்பதை இழிவாகவும் கருதும் பிற்படுத்தப்பட்ட பார்ப்பன அடிமைகளிடம்; மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்துவதே பெரியார் வழி.
அதுவே டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொண்ட அரசியல் பணி.
நன்றி திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைவர் வீரமணிக்கும்.
“மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்துவதே பெரியார் வழி.” இதற்குப்பின் உள்ள கருத்தை ஆதரிக்கிறேன், ஆனால், இது அறிவுபூர்வமான பெரியார் வழிப் போராட்டம் என்ற கருத்தை நான் எதிர்கிறேன். பெரியார் வழி பகுத்து அறியும் வழி. தன் கருத்துக்களையே பகுத்து அறிந்தபின் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பாடம் சொன்னவர் அவர். பார்பான் மாட்டை புனிதம் என்கிறான், மாட்டிறைச்சியை உண்பது இழிவு என்று சொல்கிறான், அதை எதிர்ப்பதற்கு ஒரே வழி மாட்டிறைச்சி உண்பதே என்பது பகுத்தறிவு அல்ல அது மடமை. ஒரு எடுத்துக்காட்டுக்காக (தவறாக எண்ணவேண்டாம்) …. பார்ப்பான் xxx உண்பது இழிவு என்றால், உடனே, அவ்வாறு சொல்லும் பார்ப்பனர்களை எதிர்க்க அந்த xxxஐ உண்பதுதான் பெரியார் வழி என்றா சொல்வது? அது ஏற்க்கத்தக்கதல்ல.