‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது.
தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் காசு வாங்கிக் கொண்டு படுகொலை செய்கிற ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஜூனியர் விகடன் விகேஷ் மட்டுமல்ல, இன்னும் பல ‘எட்டப்பன்கள்-பச்சைத் தமிழன் புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான்கள் -ஆற்காட்டு நவாப்புகள்’ பத்திரிகை உலகில், பல பெரிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.. (நக்கீரன் மட்டும்தான் அம்சா சதியை அம்பலப்படுத்தியது )
ஆட்சியில் நடக்கும் ஊழல்களை துப்பறிந்து உலகத்துக்கு அம்பலப்படுத்துவதாக மார்தட்டுகிறது ஜூனியர் விகடன். ஆனால், தன் நிறுவனத்தில் இப்படி ஒரு ஊழல் நடப்பது உலகத்துக்கே தெரிந்த பிறகும், தனக்கு தெரியாமல் ஜூனியர் விகடன் துப்பு கெட்டு கிடந்தது எதனால்?
திடீர் என்று தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்கு விகேஷை மட்டும் பலியிட்டது எதனால்?
இதே ஜீனியர் விகடனும், இன்னும் பல பத்திரிகைகளும் ஈழத்தமிழர்களின் கொலைகளை நியாப்படுத்தியும், போராளிகளை காட்டிக் கொடுத்த துரோகிகளின் பேட்டிகளை பிரசுரித்தபோதும், எத்தனை பேர் இந்த பத்திரிகைகளை கண்டித்தார்கள்?
மாறாக, ‘நம்ம கிட்ட ஒரு பேட்டி எடுக்க மாட்டானா? நம்மள ஒரு கட்டுரை எழுத சொல்ல மாட்டானா?’ என்று நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு அலைந்தார்கள் எழுத்தளார்களும், பிரபலங்களும். அல்லது அதை கண்டித்தால் நாம அந்தப் பத்திரிகைகளில் எழுத முடியாது. நம்ம தொடர நிறுத்திடுவான். நம்ம பேட்டிய போட மாட்டானுங்க… என்று பம்மிக் கொண்டு கிடந்தார்கள்.
ஒரு பேட்டிக்கும், இரண்டு பக்கம் கட்டுரை எழுதற வாய்ப்புக்காகவும் பத்திரிகைகளின் மோசடிகளை கண்டிக்காமல், காந்தியின் குரங்குகளைப்போல், கண்ணை, காதை, வாயை மூடிக்கொண்டு சோரம்போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், ‘சமூக அக்கறை’ கொண்ட பெரும்பாலான எழுத்தாளர்களும், பிரபலங்களும்.
தமிழனல்லாவர்கள் யாராவது தமிழின விரோதிகளாக இருந்தால், ‘தமிழனாக இருந்தால் இதை செய்வானா?’ என்று சவடால் பேசுகிறார்கள், சில தமிழனவாதிகள். இன்று பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல முதலாளிகளும், பொறுப்பில் உள்ளவர்களும் பச்சை தமிழர்கள்தான்.
இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?
தமிழன் என்பதற்காகவே தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை அரசின் படுகொலைகளை நியாப்படுத்தி, ‘விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது, இடையில் சிக்கி பலியான தமிழர்கள்’ என்று படத்திற்கு கீழ் ஏதோ தமிழர்கள் தற்செயலாக கொல்லப்பட்டதுபோல் ‘புட்நோட்’ எழுதினார்கள்.
புலிகளை காட்டிக் கொடுத்தவர்களோடு உறவு வைத்துக் கொண்டு பணம் பார்த்தார்கள்.
இன்னொருபுரம் ஆதரவாக செய்தி வெளியிடுதைப்போல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய செய்திகளை, கட்டுக்கதைகளாக எழுதி அவர் படங்களை பிரசுரித்து, புலிகளின் ஆதரவாளர்களையும், வாசகர்களையும் ஏமாற்றி பணம் சேர்த்தார்கள்.
ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களுக்கு மேல், மிக கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறார்கள். பலர் நிர்வாணப்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்படுகிறார்கள். ஆனால் இந்த தமிழ் பத்திரிகைகள் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழர்களிடம் அரசியல் எழுச்சியை உண்டாக்குவதற்கு பதில், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், ‘ஈழ வரலாறு-இலங்கை வரலாறு-பிரபாகரன் வரலாறு’ என்று பழைய கதைகளை எழுதி, தமிழர்களை வெற்று பெருமை பேச வைத்து, பணம் பார்க்கிறார்கள்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போரடுகிறவர்களின் பாக்கெட்டில் கைவிட்டு திருடுகிறவனைப்போல், ஈழத் தமிழர்களின் துயரங்களை வைத்து பணம் சம்பாதிப்பவைகளாகத்தான் இருக்கிறது தமிழ் பத்திரிகைகள்.
தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலை, ஈழத்தமிழர்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை. அதன் மூலம் பலகோடி ரூபாய் பெரும் லாபம் அடைந்தவர்கள் தமிழ் பத்திரிகைகள்தான்.
எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம் என்று செயல்படுபவைகள்தான் தமிழ் பத்திரிகைகள்.
தமிழ் பத்திரிகையாளர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவளார்களான சில உணர்வாளர்கள்கூட, தங்கள் உணர்வை இணையங்களில் ரகசியமாக புனைப் பெயர்களில்தான், பகிர்ந்து கொண்டார்கள். ‘ஆபிசுக்கு தெரிஞ்ச பிரச்சினை.. யாருக்கிட்டயும் சொல்லாதீங்க…அதை எழுதுனது நான்தான்…’ என்கிற பாணியில்…
ஆனால், தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடுமையை உலகத்துக்கு அம்பலப்படுத்தியவர்கள், சிங்களப் பத்திரிகையாளர்கள்தான். தமிழர்களை கொன்று குவிக்கிற ராஜபக்சே அரசை கண்டித்து, தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார்கள் சிங்களப் பத்திரிகையாளர்கள். சிங்களப் பத்திரிகையாளர்களின் ஜனநாயகத் தன்மைதான், இன்று தமிழர்களின் துயரங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.
ஹிட்லருக்கு பிறகு, கடந்த் 50 ஆண்டுகளில் உலகில் இதுவரை, இதுபோன்ற ஒரு கொடூரத்தை எந்த நாடும் தன் சொந்த மக்களுக்கே செய்ததில்லை என்பதை நிரூபிப்பதைப்போல், தன் நாட்டில் வாழும் தமிழ் மக்களை மிக கொடுமையான முறையில் கொன்று ஒழிப்பவன் ராஜபக்சே. இவனின் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்காக, நாடு கடத்தப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 30.
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூரத்தை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டதால், சிங்கள அரசால் இதுவரை கொலை செய்யப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 20.
2006 ல் இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதற்காக, திஸ்ஸ நாயகம் என்கிற பத்திரிகையாளருக்கு (தமிழர்) 20 ஆண்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் துன்புறுத்தப்படுகிறார்.
இன்று இலங்கை ராணுவம் தமிழர்களை நிர்வாணப்படுத்தி, சுட்டுக்கொல்கிற கொடூரத்தை வெளி கொண்ர்ந்ததும் சிங்களப் பத்திரிகைளார்கள்தான்.
ஆனால், தமிழ் முதலாளிகளால், தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த தமிழ் பத்திரிகைகள்….. ச்சீ…
சவடாலாக பேசும் தமிழனவாதிகள் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் யோக்கியதை குறித்தும், பார்ப்பன அறிவாளிகளின் அயோக்கியத்தனத்தை பற்றியும் 16-02-2009 அன்று கு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கேள்விக்கு எழுதிய பதிலை மீண்டும் பிரசுரிக்கிறேன்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்?
-கு. தமிழ்ச்செல்வன்
‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.
‘ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது சிங்கள அரசு. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்கு தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.
இந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை. அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.
மற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.
‘சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது’ என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்த ‘சிங்களவர்கள்’ தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.
ஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போர்’ என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.
சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை?
காரணம், கொலை செய்யப்பட்ட அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் – யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.
ஆனால், பல தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, அவர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறும் எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.
நேர்மையான, திறமையான பத்திரிகையாளர்களை உடன் வேலை செய்கிற சக பத்தரிகையாளர்களுக்கும் பிடிப்பதில்லை. நிர்வாகத்திற்கும் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களை டம்மி ஆக்கி வைத்துக் கொள்வார்கள். அல்லது வேலையை விட்டு தூக்குவதற்கு நிர்வாகத்தோடு இணைந்து சக பத்திரிகையாளர்களும் சதி செய்வார்கள்.
நிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத, எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி. ஜாடிக்கேத்த மூடி.
குறிப்பு:
* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா?
* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.
* ‘தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது’ என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற ‘ஊதாரி-உதவாக்கரை-தரமான’ எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.
16-02-2009 அன்று எழுதியது.
(திஸ்ஸநாயகம் சிங்களப் பத்திரிகையாளர் அல்ல, தமிழ் பத்திரிகையாளார். – தமிழ் அரங்கம்)
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6233:2009-09-15-06-02-26&catid=137:2008-07-14-18-41-10
திருத்தம் செய்துவிட்டேன். தகவலுக்கு நன்றி தோழர்.
http://www.meenagam.org/?p=10434
உங்கள் கட்டுரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
உங்களின் இந்த பேட்டியும் இங்கே பொருத்தமானது
http://mathimaran.wordpress.com/2009/05/22/article-200/
ஹ்ம்ம்ம்ம்ம் தமிழ் வாழ்க,,, தமிழ் பத்திரிக்கை வாழ்க
எரிகிற ஈழப் பிரச்சினையில் கடைசியில் வந்து எவ்வளவு பிடுங்கலாம் என்றுதான் மணிமாறன் அவர்களும் செயல் படுகிறார் என்றே கூறலாம்.
ஈழப் பிரச்சினையை இன்னும் இன்னும் குழப்படி செய்ய வேண்டாம் என்று எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.
மதிமாறன் அவர்களின் எண்ணம், எழுத்து எல்லாம் பிராமண துவேஷம் என்பது என்பது யாவரும் அறிந்ததே!
இப்போது இத்தனை நாள் கழித்து ஈழப் பிரச்சினையில் தூங்கி எழுந்த நண்பர், அல்லது அவ்வப் போது நடை பெற்ற போராட்டங்களை பற்றிய சில செய்திகளை வெளியிட்டு விட்டு பட்டும் படாமல் தன்னை பாதுகாத்துக் கொண்டவர், அந்தப் பிரச்சினையை இப்போது பிராமணரகளுக்கு எதிராக விஷம் கக்க உபயோகிக்க வேண்டுமா?
“அங்கே துயர் அடையும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்று பாருங்கள். மக்களை அடைத்து வைப்பது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.
வன்னியிலே காட்டு விலங்காக பிறந்து இருந்தால் கூட மனிதனை விட மேலான நிலைதான். முள் கம்பிக்குள் இருப்பவர்களிடம் ஆயுதம் இல்லை என்றால் வெளியே விட வேண்டியதுதானே! இலங்கை அரசு ஒரு கொடுமையான இன அழிப்பு செயலை செய்து வருகிறது.
முள் வேலிக்குள் அவதிப்படுவது இந்துவாக இருந்தாலும், கிருஸ்தவராக இருந்தாலும், இசுலாமியராக இருந்தாலும், யாரக இருந்தாலும் குரல் கொடுப்போம்.
இந்து மதத்தில் மனிதாபிமானம் முக்கிய பங்கு வக்கிகிறது.
“அத்வேஷ்ட (வெறுப்பிலாமல்),
சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),
கருண ஏவ ச (கருணையுடன் )”
என்பது இந்து மதத்தின் அடிப்படை யாகும்.
தயவு செய்து இங்கே ஈழத் தமிழ் அரசியலைக் கலக்க வேண்டாம், என்று எல்லா நண்பர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.” என்பதே ஈழப் பிரச்சினையில் நம் நிலை!
பிராமணர்கள் அமைப்பு ரீதியில் ஆங்காங்கு போராட்டங்கள் நடை பெறும் போது அதில் கலந்து கொண்டு தான் இருந்தார்கள்.
என்ன மதிமாறன் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக சட்டைக்கு வெளியே ஒரு பூணூலை வாங்கி போட்டுக் கொண்டு கலந்து கொள்ள வேண்டுமா?
எத்தனை செட்டியார்கள், எத்தனை முதலியார்கள் என்று கணக்கு எடுத்து வைத்து இருக்கிறார்களா?
ஒரு சில பணக்காரப் பார்ப்பனர்கள் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக எழுதினால் எல்லா பார்ப்பனரும் அப்படியா?
ஈழப் பிரச்சினையில் ஈழத் தமிழருக்கு யார் யார் எல்லாம் பச்சைத் துரோகம் செய்தார்கள்?
மைய அரசில் அங்கம் வகித்து மைய அரசின் தூணாக விளங்கியது யார்?
மைய அரசு கவிழும் நிலையில் இருந்த போது அதைக் காப்பாற்றிய தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 நாடாளு மன்ற உறுப்பினர்கள் எந்த எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?
ஒரு பார்ப்பனராவது எம்.பி யாக இருந்தாரா?
என்பது எல்லாம் ஈழ்த் தமிழருக்கு நன்கு தெரியும். இங்கெ இருக்கும் தமிழிருக்கும் தெரியும்.
சாதிக் காழ்ப்புணர்ச்சியின் அசிங்கமான முகத்தை மதிமாறன் அவர்கள் வெளிப் படுத்துகின்றார்.
சுவிஸ் தமிழ் ஒலிபரப்பில் , புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு……….. நடப்பதை அங்கு போனவர்கள் – அங்கு இருந்தவர்கள் ( இலங்கை தமிழர்கள்) கலந்துரையாடுகிறார்கள். கேளுங்கள்.
http://www.radio.ajeevan.com/
ஒரு மணி நேரம் ஒலி வழி கலந்துரையாடல்
http://www.zshare.net/audio/65527037788f9126/
//தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூரத்தை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டதால், சிங்கள அரசால் இதுவரை கொலை செய்யப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 20.
2006 ல் இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதற்காக, திஸ்ஸ நாயகம் என்கிற பத்திரிகையாளருக்கு 20 ஆண்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் துன்புறுத்தப்படுகிறார்//
மெல ஃபுளோ சரியா ஒர்கௌட் ஆகலண்ணே.
***
சன் , கலைங்கர் டீவியெல்லாம் பார்ப்பான் பேச்சக் கேட்டு கெட்டுப் போய்டாங்க…பாவம்…நெக்ஸ் டைம் பாத்து நடந்துக்க சொல்லலாம் , ஓ.கே ?
அப்புறம் அண்ணா ஸ்பெஷல் எதுவும் கிடையாதா ?
‘இது தாண்டா அண்ணா – பெரியாரை முதுகில் குத்திய துரோகி’ அப்படினு ஒரு தலைப்பப் போட்டா மக்கள் அரண்டுட மாட்டாங்க ?
தமிழர்கள் பெருமை பேசியே வீணை போனவர்கள் ! துரோகத்துக்கு பெயர் போனவர்கள் ! இதனால்தான் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்களிடம் கண்டிப்பாக நடந்து கொண்டதாக கூறி உள்ளார்கள்.இங்கு நடத்த படுகிற பத்திரிக்கை எல்லாம் மக்களை எப்படி முட்டாளாக வைத்து கொள்ளலாம் என்று தான் யோசிக்கிறார்கள். அதற்கு முதல் அமைச்சரே தலைமை வகிக்கிறார்.பார்ப்பார்கள் தங்களது தமிழர்கள் மீதான காழ்புணர்ச்சியை ஈழ பிரச்சினையில் வெளிப்படையாக காட்டினார்கள் .
//பிராமணர்கள் அமைப்பு ரீதியில் ஆங்காங்கு போராட்டங்கள் நடை பெறும் போது அதில் கலந்து கொண்டு தான் இருந்தார்கள். //
Good Joke ..!
//ஒரு சில பணக்காரப் பார்ப்பனர்கள் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக எழுதினால் எல்லா பார்ப்பனரும் அப்படியா?//
எல்லா பார்பனர்களும் அப்படித்தான் இது குழந்தைக்கு கூட தெரியும் ! உங்களுக்கும் தெரியும் !
சகோதரர் Matt அவர்களே,
//ஒரு சில பணக்காரப் பார்ப்பனர்கள் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக எழுதினால் எல்லா பார்ப்பனரும் அப்படியா?//
எல்லா பார்பனர்களும் அப்படித்தான் இது குழந்தைக்கு கூட தெரியும் ! உங்களுக்கும் தெரியும் //
கட்டைப் பஞ்சாயத்து பாணியில் தீர்ப்பு வழங்கி விட்டீர்கள்.
காழ்ப்புணர்ச்சி சிந்தனையை ஆக்கிரமித்த நிலையிலே இப்படித்தான் நடக்கும்.
ஜனவரி முதல் மே வரை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் முழு இன அழிப்பைக் கட்டவிழ்த்த காலத்திலேயே, நான் பல பிராமணர்களுடன் பேசிய போது அவர்கள் இது கொடுமையான செயல், இதை இந்திய அரசாங்கம் தலையிட்டுத் தடுக்க வேண்டும், எவ்வகையிலும் சிங்கள ராணுவத்துக்கு உதவி செய்யக் கூடாது என்றே பேசினார்கள்.
குறிப்பாக பெண்கள், வன்னியில் பெண்கள் மிகவும் கஷ்டப் படும் சூழல் உள்ளது என்று வருத்தத்துடனும், கோவத்துடனும் கூறினார்கள்.
இதை கூறுவது உண்மையை விளக்கத்தானே தவிர சர்டிபிகேட் வாங்க அல்ல.
ஆனால் நெஞ்சுக்கு தேவை மனசாட்சி ,அது நீதி தேவனின் அரசாட்சி!
அத்தனை செயககைக்கும் அவன் சாட்சி, மக்கள் அரங்கத்தில் வராது அவன் காட்சி !
என்ற வகையிலே எங்கள் மனசாட்சிக்கு நாங்கள் நேர்மையான வகையிலே நடந்து கொள்வோம்.
சாதிக் காழ்ப்புணர்ச்சியை எப்போது வேண்டுமானாலும் அரங்கேற்றிக் கொள்ளலாம். அது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதானே உள்ளது?
எனவே நாங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதி விட ஈழ்த் தமிழர் படும் சித்திரவதை தீர வேண்டும் என்பதே எங்களின் முன்னுரிமை!
ஈழப் பிரச்சினையில் ஈழத் தமிழருக்கு யார் யார் எல்லாம் பச்சைத் துரோகம் செய்தார்கள்?
மைய அரசில் அங்கம் வகித்து மைய அரசின் தூணாக விளங்கியது யார்?
மைய அரசு கவிழும் நிலையில் இருந்த போது அதைக் காப்பாற்றிய தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 நாடாளு மன்ற உறுப்பினர்கள் எந்த எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?
ஒரு பார்ப்பனராவது எம்.பி யாக இருந்தாரா?
என்பது எல்லாம் ஈழ்த் தமிழருக்கு நன்கு தெரியும். இங்கெ இருக்கும் தமிழிருக்கும் தெரியும்.
ஈழத் தமிழர்களின் காவலர் போல வேடமிட்டு, பெரிய ஆர்ப்பாட்டங்கள், வாய்ச் சவாடல்கள் எல்லாம் நடத்தி விட்டு, கடைசியில் ஈழத் தமிழார் நோகும் வண்ணம், இந்தியத் தமிழரும் வியக்கும் வண்ணம் நடந்து கொண்டது யார் என்பது எல்லாத் தமிழருக்கும் தெரியும்.
அங்கே தமிழ் இனம் அழிவதை வாய்ப்பாக வைத்து, தங்கள் சாதிக் காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் வடிகாலாக இங்கே பயன் படுத்த வேண்டுமா?
இப்போது மிக முக்கியம் அங்கே அழியும் தமிழரைக் காப்பதுதான்!
இது நம்முடைய போராட்டம், இதைத் தாங்கிப்பிடியுங்கள்.
http://supperlinks.blogspot.com/2009/09/blog-post_7852.html
இது நம்முடைய போராட்டம், இதைத் தாங்கிப்பிடியுங்கள்
http://supperlinks.blogspot.com/2009/09/blog-post_7852.html
திருச்சிக்காரன் அவர்களே ! எல்லோருடைய எண்ணமும் பார்பனர்கள் தவறான எண்ணத்தை விட்டு வெளி வர வேண்டும் எல்லா மக்களையும் சமமாக பாவித்து சமூகத்தில் கலக்க வேண்டும் என்பதுதான். இந்து ராம் செய்த வேலைகளுக்கு ராஜபக்சே லங்க ரத்னா விருது வழங்கி உள்ளான்.தாம்ப்ராஸ் (பிராமண சங்க நாளேடு) ல் LTTE ஓட ஓட விரட்டி அடிக்கபட்டார்கள் என்று வன்மத்தோடு எழுதுகிறான். எத்தனை பார்ப்பார்கள் இவர்களை வெளிபடையாக கண்டித்தீர்கள். உடனே பார்ப்பான் மட்டும்தான் ஜாதியை பின்பற்றுரானா அப்படினு கேட்க கூடாது ..ஏன் என்றால் பார்பான் மட்டும் தான் ஜாதி அடையாளங்களை வெளிப்படையாக செய்கிறான், மற்றவர்களை கெடுத்ததும் அவன்தான் . ஈழ பிரச்சனையில் பார்ப்பார்கள் மத்திய அரசை கண்டிப்பது காங்கிரஸ் என்பதற்காக தான் இதுவே bjp யாக இருந்து இருந்தால் கண்டித்திருக்க மாட்டார்கள் , மாநில அளவிலும் அப்படிதான்..நாங்கள் கருணாநிதியும் மத்திய அரசும் தான் காரணம் என்று சொன்னால் ஆமாம் என்பீர்கள் , பார்பன பத்திரிகைகளை சொன்னால் அமைதி காப்பீர்கள் !
///ஈழப் பிரச்சினையில் ஈழத் தமிழருக்கு யார் யார் எல்லாம் பச்சைத் துரோகம் செய்தார்கள்?
மைய அரசில் அங்கம் வகித்து மைய அரசின் தூணாக விளங்கியது யார்?
மைய அரசு கவிழும் நிலையில் இருந்த போது அதைக் காப்பாற்றிய தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 நாடாளு மன்ற உறுப்பினர்கள் எந்த எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?
ஒரு பார்ப்பனராவது எம்.பி யாக இருந்தாரா? ///
அரசியல்வாதிகளின் முடிவு அதிகாரிகளை பொறுத்துதான் ! அதிகாரிகளை கேட்காமல் அரசாங்கம் முடிவு எடுக்க முடியாது ,ஈழ பிரச்னையில் இந்தியா சார்பில் பங்கேற்ற MK Narayanan மற்றும் Menon போன்ற வர்கள் யார் என்று சொல்லவும் வேண்டுமா? தவறான பிரசாரத்தின் மூலம் மக்களை தடம் மாற செய்து இன உணர்வை இல்லாமல் அற்று போகுமாறு செய்ய இங்கு நிறைய பேர் உள்ளனர் குறிப்பிடும் படியாக 90% பிராமணர்கள்.உதாரணம் துக்ளக் சோ ,இந்து ராம் , சுப்ரமணியசாமி. குமுதம் ,ஆனந்த விகடன் போன்ற கயவர்கள் சினிமா மோகத்தை மக்களிடம் திணித்து மக்களுக்கு தேவையான மக்கள் சிந்திக்க வேண்டிய விடயங்களை மழுங்கடிகின்றனர். இதனால் மக்கள் தன் இன மக்கள் அழிவையே அலச்சிய படுத்தினர்.மக்களுக்கே அக்கறை இல்லாத போது அரசியல் வாதிகள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும் .இப்போது புரிகிறதா, இன அழிப்பில் பார்பனர்களின் பங்கு என்ன என்பது.
சகோதரர் Matt அவர்களே,
//அரசியல்வாதிகளின் முடிவு அதிகாரிகளை பொறுத்துதான் ! அதிகாரிகளை கேட்காமல் அரசாங்கம் முடிவு எடுக்க முடியாது //
நீங்கள் புரிந்து கொள்ளாமல் எழுதுகிறீர்களா? இல்லை இப்படி நினைத்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம் என்று எழுதுகிறீர்களா?
மைய அரசு பணியில் இருப்பவர்கள் அமைச்சர்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்கலாம். ஆனால் இறுதி முடிவு அமைச்சரின் கையில் தான்.
அமைச்சர் கூறியதை அதிகாரிகள் மறுக்க முடியாது.
வெளியுறவு செயலாளராக இருந்த ஏ. பி. வெங்கடேஸ்வரனை
இராசீவ் காந்தி ஒரே நாளில் தூக்கி எறியவில்லையா?
அரசாங்கம் செயல்படுவது அமைச்சரின் விருப்பப் படிதான். கேபினெட் கூட்ட முடிவுப் படிதான்!
அத்வானியின் ரத யாத்திரை நிறுத்தப் பட்டதைக் காரணம் காட்டி, பி.சே.பி வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்க வில்லையா?
40 தமிழ் நாட்டு எம்.பி. க்களில் 10 பேர் மட்டும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தால் கூட அரசாங்கமே கவிழ்ந்திருக்கும்.
இதை துருப்புச் சீட்டாக பயன் படுத்தி மைய அரசை நெருக்கி ஈழப் பிரச்சினையில் தமிழருக்கு சாதகமாக நிலையை எடுக்கும்படி செய்து இருக்கலாம்.
அதுவும் அப்போதைய சூழ்நிலையில் மைய அரசின் தோழனாக, காவலனாக இருந்தது தமிழக அரசியல் கட்சிகள் தான், இடது சாரிகள் கை விட்ட நிலையில் தமிழாக எம்.பி.க்களை அவர்கள் மிகவும் நம்பி இருந்தனர்.
வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும், இன்று போவார், நாளை போவார் என்று எதிர் பார்க்கப் பட்டு இரண்டு மாதம் ஆகியும் போகவில்லை.
பத்திரிகையாளர்கள், “வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு ஏன் போகவில்லை? ” என்று அவரை அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்த ஒரு மூத்த தமிழக அமைச்சரைக் கேட்ட போது,
“சந்திப்பது என்றால், கதவைத் திறந்து கொண்டு போய் பார்க்க முடியுமா? ” என்று எரிச்சலுடன் பதில் அளித்தார், தமிழ் நாட்டைச் சேர்ந்த மைய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர்.
நீங்கள் உண்மையை விருப்பு வெறுப்பின்றி அணுகவும்.
தனக்குப் பிடித்தவர்கள் துரோகம் செய்தால் அப்படியே அமுக்கி வாசிப்பது, தனக்குப் பிடிக்காதவர்கள் தலையில் பழியைக் கட்டுவது – இதனால் தான் இன்றைக்கு தமிழ் இனம், உலகில் எந்த இனமும் சந்திக்காத ஒரு அழிவை, கொடுமையை சந்திக்கிறது.
சகோதரர் Matt அவர்களே,
//துக்ளக் சோ ,இந்து ராம் , சுப்ரமணியசாமி//இவர்கள் யாரும் பிராமணர்களின் பிரதிநிதியோ, தலைவர்களோ அல்ல! பெரும்பான்மையான பிராமணர்கள் தாம்ப்ராஸ்ல் உறுப்பினரும் அல்ல. அங்கு என்ன நடக்கிறது என்பதுவும் தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு அவர்கள் உருப்படியான எதையும் செய்யவும் இல்லை.
இவர்களால் பிரமணர்களுக்கு கெட்ட பெயரும், தொல்லையும் தானே தவிர பிரமணர்களுக்கு இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது.
எல்லா தமிழர்களைப் போலத்தான் நாங்களும். அரசியலில் பிரமணர்களுக்கு இருந்த செல்வாக்கு இராசாசி காலத்தோடு முடிந்து விட்டது.
ஆனால் அடிப்படையில் லஞ்சத்தையும், அராஜகத்தையும் எதிர்ப்பவர்கள். அது சரிதான் என்றே நினைக்கிறேன். .
மிக பெரிய விளக்கம் கொடுத்து அதிகாரிகள் ஒன்றும் தெரியாதவர்கள் போலவும் அவர்கள் பங்கு இல்லாதது போலவும் சாமர்த்தியமாக எழுதயுள்ளிர்கள்.அதிகாரியின் மூலம் தான் அரசியல்வாதிகள் நோட்டம் பார்ப்பது நிலைமையை உணர்வது ,பிறகு ஆலோசனைகளை பெறுவது ,அதன் பிறகுதான் முடிவு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில்.
//வெளியுறவு செயலாளராக இருந்த ஏ. பி. வெங்கடேஸ்வரனை
இராசீவ் காந்தி ஒரே நாளில் தூக்கி எறியவில்லையா?//
இதற்கு கூட வேறொரு அதிகாரியின் ஆலோசனை இல்லாமல் தூக்கி எரிந்து இருக்கமாட்டார்.
//தனக்குப் பிடித்தவர்கள் துரோகம் செய்தால் அப்படியே அமுக்கி வாசிப்பது, தனக்குப் பிடிக்காதவர்கள் தலையில் பழியைக் கட்டுவது – இதனால் தான் இன்றைக்கு தமிழ் இனம், உலகில் எந்த இனமும் சந்திக்காத ஒரு அழிவை, கொடுமையை சந்திக்கிறது.///
நான் வெளிப்படையாக ஏற்கனவே சொல்லிவிட்டேன் கருணாநிதியும் மத்திய அரசும் தமிழர்களுக்கு செய்தது துரோகம் தான் .அந்த இடத்தில bjp மற்றும் ஜெயலலிதா இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். அப்படி நடந்து இருந்தால் நீங்கள் அமுக்கி வாசிதிருபீர்கள் !
//ஆனால் அடிப்படையில் லஞ்சத்தையும், அராஜகத்தையும் எதிர்ப்பவர்கள். அது சரிதான் என்றே நினைக்கிறேன். .//
இதுக்கு பேருதான் பார்பன பாசம்கிறது, இவர்கள் ஈழ பிரச்னையில் நடந்து கொண்டது அராஜகம் இல்லையா , மக்களை திசை திருப்புவதும் ,ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் சுயநலமற்ற தலைவனை தீவிரவாதி என்றும், மக்களை பணய கைதியாக பிடித்து வைத்து கொண்டார் என்றும் அடிப்படை அதாரம் இல்லாமல் பொய்யை பரப்புவது ஊழல் இல்லையா ! ஏன் ராஜபக்சே பற்றி ஒரு பார்ப்பானும் பேச மாட்டேன்கிறான் கூலி கொடுக்கும் முதலாளி என்றா ?
“……….பிராமணர்களுக்கு கெட்ட பெயரும்………”
பிராமணர்கள்னா யாரு……….?
நீங்கள் பிராமணர்னா மற்றவர்கள் யாரு? முதலில் சமூகத்தோடு ஒன்றி வாழப்பழகுங்கள்…
சட்டைக்குள் இருக்கும் பூணூலை அறுத்தெறியுங்கள்…..
பூணூலோடு, தங்களை பிராமணராக நினைத்துக் கொண்டு வரும் நீங்கள் அன்போடு பேசினாலும்…எங்களை அன்போடு பேச உங்கள் பூணூல் தடைவிதிக்கிறது
சகோதரர் மகிழ்நன் அவர்களே,
பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சொல்லாமல் இருந்தால் “பார்ப்பான் பூணூலை மறைத்து எழுதுகிறான்” என்கிறார்கள்.
நான் யாரையும் சந்திக்கும் போது அவர்களின் சாதி என்ன என்று கேட்பது இல்லை. ஆனால் என்னை சந்திப்பவர்கள் (குறிப்பாகத் தமிழ்கள்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.
பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.
சாவுக்கான சடங்கு முதல் பிற எல்லா சடங்கையும் செய்ய பூணூல் தேவையாக உள்ளது.
சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு. (நான் பீலா விடுவதாக எண்ணக் கூடாது. சில பொருள்களை நாம் புனிதமாக என்னும் போது அதை மீறி சில செயல்களை செய்யத் தயங்குவோம். உதாரணமாக சிகரெட் பிடிக்க நினைத்து சிகரெட்டை எடுக்கும் போது அப்பா வந்தால் அதை நிறுத்தி விடுகிறோம்)
மேலும் பூணூல் அணிவதை நிறுத்தினால் அது நான் பயந்து கொண்டு செய்வதாக இருக்கும். அது தவறு, நான் பிறர் யாரையும் மனதால் தாழ்வாக எண்ணாத வரையில், பூணூலை எடுப்பது அது பிறரை தாஜா செய்வதற்காக செய்யப் படும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.
பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.
நான் உங்களை, நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது என்று கேட்டால் நீங்கள் அதிர்ச்சியோ வருத்தமோ அடையக் கூடாது.
சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.
நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.
நீங்கள் ஏன் பூணூல் அணிந்து சந்தியாவந்தனம் செய்யக் கூடாது?
தமிழிலோ, வட மொழியிலோ எதில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். பொறுமையாக நான் கூறியதில் தவறு இருக்கிறதா அல்லது ஆக்க பூர்வமா என்று எண்ணிப் பாருங்கள்!
சகோதரர் Matt அவர்களே,
//வெளியுறவு செயலாளராக இருந்த ஏ. பி. வெங்கடேஸ்வரனை
இராசீவ் காந்தி ஒரே நாளில் தூக்கி எறியவில்லையா?//
இதற்கு கூட வேறொரு அதிகாரியின் ஆலோசனை இல்லாமல் தூக்கி எரிந்து இருக்கமாட்டார்//
இராசீவ் காந்தி முடிவு எடுக்கும் போது அருகில் இருந்து பார்த்தது போல எழுதுகிறீர்கள். எப்படி இருந்தாலும் அதிகாரிகளை பந்தாடும் சக்தி ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதைப் புரிந்து கொண்டால் சரி.
//அந்த இடத்தில bjp மற்றும் ஜெயலலிதா இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். அப்படி நடந்து இருந்தால் நீங்கள் அமுக்கி வாசிதிருபீர்கள்//
பி..சே. பி யை யோ , ஜெயாவையோ தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஜெயா உஊழால் , அராஜகம் செய்வதில் பெயர் பெற்றவர். நீங்கள் எல்லாவற்றியும் நீங்களாகவே யூகம் செய்து கொள்கிறீர்கள் சகோதரர்!
//மிக பெரிய விளக்கம் கொடுத்து அதிகாரிகள் ஒன்றும் தெரியாதவர்கள் போலவும் அவர்கள் பங்கு இல்லாதது போலவும் சாமர்த்தியமாக எழுதயுள்ளிர்கள்.அதிகாரியின் மூலம் தான் அரசியல்வாதிகள் நோட்டம் பார்ப்பது நிலைமையை உணர்வது ,பிறகு ஆலோசனைகளை பெறுவது ,அதன் பிறகுதான் முடிவு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில்//
அதிகாரிகளுக்கு பங்கு இல்லை என்று நான் கூறவில்லை.
அதிகாரிகளை அடக்கி வைக்கும் அதிகாரம் பொறுப்பில் இருப்பவருக்கு இருக்கிறது என்றுதான் கூறுகிறேன்.
தனக்கு முடிவு எடுக்கும் பொறுப்பும், அதிகாரமும், முடிவை மாற்றும் வலிமையும் உள்ள போதும் நடப்பது நடக்கட்டும், என்று இருந்தால், அதற்குக் காரணம் சுயநலம் தானே!
(1)ஹிட்லருக்கு பிறகு, கடந்த் 50 ஆண்டுகளில் உலகில் இதுவரை, இதுபோன்ற ஒரு கொடூரத்தை எந்த நாடும் தன் சொந்த மக்களுக்கே செய்ததில்லை என்பதை நிரூபிப்பதைப்போல், தன் நாட்டில் வாழும் தமிழ் மக்களை மிக கொடுமையான முறையில் கொன்று ஒழிப்பவன் ராஜபக்சே. இவனின் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்காக, நாடு கடத்தப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 30.
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூரத்தை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டதால், சிங்கள அரசால் இதுவரை கொலை செய்யப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 20.
These figures are not right. The United Peoples Freedom Alliance (UPFA) government came into power in April 2004 with the present President Mahinda Rajapaksa as its prime minister. Never before in the history of Sri Lanka have such a number of journalists and media workers been killed in such a short period of time.
During this period, intimidations and threats against journalists and media increased manyfold. This situation resulted in more than 50 journalists leaving Sri Lanka fearing persecution: Austria 01; Australia 03; Canada 03; Denmark 01; France 12; Germany 04; India 05; Malaysia 01; Netherlands 02; Nepal 02; Norway 02; Switzerland 16; UK 10; USA 02. The majority of them are Thamils and not Sinhalese.
Since 2004 34 journalists and media workers have been killed with no recourse to justice since the present government was formed. Out of 34 killed, 30 were from the Tamil community, three (NOT 20) were Sinhala journalists and one Muslim.
In addition, 10 journalists and media workers were abducted. Journalist Jeyaprakash Tissainayagam, his printer Vetrivel Jesiharan and Jesiharan’s wife Vadivel Valarmathi remain in custody since their arrest in 2008 March. These unresolved killings and abductions clearly demonstrate the culture of impunity that prevails in Sri Lanka.
The United Peoples Freedom Alliance (UPFA) government came into power in April 2004 with the present President Mahinda Rajapaksa as its prime minister. Never before in the history of Sri Lanka have such a number of journalists and media workers been killed in such a short period of time.
During the same period, intimidations and threats against journalists and media increased unabated. This situation resulted in more than 50 journalists leaving Sri Lanka fearing persecution: Austria 01; Australia 03; Canada 03; Denmark 01; France 12; Germany 04; India 05; Malaysia 01; Netherlands 02; Nepal 02; Norway 02; Switzerland 16; UK 10; USA 02.
Among the 50 journalists the majority are Thamils. The Journalists for Democracy in Sri Lanka (JDS) is not exclusively Sinhalese. There are Thamils also. Again not all those Sinhalese journalists who got killed or fled the country did so because they supported the LTTE/Thamils. These journalists were mostly critical of the government’s abuse of human rights and suppression of media freedom.
திருச்சிக்காரன், ஒரு விடயத்தை எளிதாக புரிந்து கொள்ள சொல்லினால் ,உடனே பக்கத்தில் இருந்து பார்த்தாயா என்று கேட்க கூடாது.
//அதிகாரிகளுக்கு பங்கு இல்லை என்று நான் கூறவில்லை.
அதிகாரிகளை அடக்கி வைக்கும் அதிகாரம் பொறுப்பில் இருப்பவருக்கு இருக்கிறது என்றுதான் கூறுகிறேன்.
தனக்கு முடிவு எடுக்கும் பொறுப்பும், அதிகாரமும், முடிவை மாற்றும் வலிமையும் உள்ள போதும் நடப்பது நடக்கட்டும், என்று இருந்தால், அதற்குக் காரணம் சுயநலம் தானே!//
ஆமாம் சுயநலம் தான்! யாரும் மறுக்க வில்லையே .. ஆனால் இதன் அடிப்படை காரணத்தை ஆராய்தால் அதிகாரிகளின் ,பத்திரிகைகளின் பங்கே அதிகம் உள்ளது என்று புரியும்.
Good article
முகப்பு – வலைப்பதிவு – தொடர்புக்கு
உங்களுக்குத் தெரிந்த தட்டச்சு முறையைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யவும். உதவிக்கு பக்கத்தின் இறுதிப் பகுதிக்குச் செல்லவும்.
தெரிவு செய்க: தமிழ்-ஆங்கிலம் தமிழ் தட்டச்சு (F12 – English)
பச்சைதமிழனில்லை,பச்சோந்தி தமிழன் அய்யா,
உதவி
இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் ‘anbu’ என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை ‘அன்பு’ என்று மாற்றித்தறும். பொதுவாக ஆங்கில தட்டச்சு முறை மட்டும் தெரிந்தவர்கள் ‘தமிழ்-ஆங்கிலம்’ முறையையும் ‘தமிழ் தட்டச்சு’ முறையையும் தெரிவு செய்து பயன்படுத்தவும்.
சில உதாரணங்கள்:
இடையில் ஆங்கில எழுத்துக்களை வரவழைக்க F12 -ஐ அழுத்தவும். மீண்டும் F12 – ஐ அழுத்தும் போது பழைய முறையப் பெறலாம்.
அன்பு – anbu, அப்பா – appaa, தமிழ் – thamiz, அழகு – azaku
ழ – za
ஞ – nja
ந – wa
ங் – ng
ஞ் – nj
ந் – w
யூ – yU
கூ – kU
கே – kE
கெ – ke
ண் – N
ன் – n
நன்றி: தகடூர் எழுதி
——————————————————————————–
முக்கிய அறிவிப்பு:
இந்த இணையதளம் கடந்த ஆகஸ்த்து 8ம் நாள் முதல் கயவர்களால் தாக்கபட்டு இருந்தது. தற்பொழுது சரிசெய்யப் பட்டு விட்டது. இன்னும் சில நாட்களில் இது பற்றி வலைப்பதிவில் எழுத இருக்கிறேன்.
உங்களுடைய ஆதரவுகளுக்கும், புரிதல்களுக்கும் எனது நன்றிகள்.
இப்படிக்கு
ஆல்பர்ட் குமார்
——————————————————————————–
பச்சைதமிழனில்லை,பச்சோந்தி தமிழன் அய்யா,