வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்
கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.
இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் சுதேசித் தொழிலின் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.
இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.
ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.
“வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி.
சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி.
1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.
கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன.
தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.
ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.
சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.
திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது
கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.
வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.
கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.
”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி.
மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.
நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.
வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.
அன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.
உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார்.
சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார்.
பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.
எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.
மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.
சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.
சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார்.
அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.
காந்திய ஏமாற்றிய ரூ.5000
காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.
கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.
சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்” என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.
அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.
இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.
வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம்
1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.
19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)
பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார்.
1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.
பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.
சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை.
திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.
1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.
பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் “கவுரவிக்க‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.
1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:
“கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.
இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.
அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.
எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.
-வே. மதிமாறன்
புதிய கலாச்சாரம் 2006
Congress yendraale Dhrogam dhaan, Kolaik kaarargalain kootamdhaan, Kollai pattalam dhaan…. idhil yenna thanniyaaga oru patiyal idal?
நீண்டதொரு அருமையான தகவலுக்கு நன்றி.
வளவன்
சரியாகச் சொன்னீர்கள். நாட்டுக்காக உயித்தியாகம் செய்த வாஞ்சினாதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். விடுபட்டுவிட்டது!
http://kgjawarlal.wordpress.com
தமிழர்கள் திரட்டி தந்த ரூ 5000 ஆட்டை போட்ட அல்ப மனிதரா காந்தி அவர்கள். என்ன கொடும இது. :((
Dear Mathi,
I’m a social worker presently working with a corporate. This article done something good on me. It’s good to remember our martyr’s in all way of our present life.
We’ll try to forward this to create a new revolution.
Regards,
Boopathi L
Let me know any new issues from ur side.
யாரு வாஞ்சிநாதனா ..? யாரு ஒரு தாழ்த்தப்பட்ட கர்ப்பிணி பெண் தன் அக்ரகாரத்தின் வழியாக கூட்டி சென்ற ஆஷ் துறையை சுட்டு கொன்றானே அவனா?
Jawahar நீங்கள் பிராமணரா?
நல்லதொருக்கட்டுரை. வாழ்த்துக்கள்.
தன் நலம் பாராமல், நாட்டின் அடிமைத்தனத்தையே எண்ணி, அதற்காக தன் வாழ்க்கையையே சிறையில் விலங்குகளுக்கிடையில் அடி வாங்கி வேதனையுடன் கழித்து தன் விடுதலைத் தாகத்தை வெள்ளை மரமண்டைகளுக்குப் புரிய வைத்து, நாட்டு விடுதலைக்கு ஆணி வேராக இருந்த ஈகையர் வ உ சி, பகத்சிங் போன்ற வரலாற்று நாயகர்களின் வரிசையில் சில போலி வேடதாரி வீரர்களும் இடம் பிடித்தது மட்டுமல்லாமல், வெள்ளையன் கூவி விற்றுக் கொண்டிருந்த சுதந்திரத்தை அவர்கள்தான் வாங்கியும் தந்தார்கள், அதனால் அவர்கள்தான் இந்த நாட்டுக்கே தந்தை, மாமா என்று கயிறு திரித்த பூணூல் மாமாக்கள், கொஞ்ச காலமாக வாஞ்சிநாதனையும் இந்த பட்டியிலில் சேர்த்து ஒரு மாவீரன் என்ற நிலைக்கு பேசி ஊரை ஏமாற்றலாம் என்று எண்ணீயிருக்கிறார்கள். இந்த பரப்புரைக்கு திரு வைக்கோ அவர்களும் பலியாகி வாஞ்சி நாதனை ஒரு விடுதலை போராட்ட வீரன் என்றும் பேசிவருவதுதான் மனதை உறுத்துகிறது. ஆஷ் ஐ கொன்று விட்டு வேறு வழியில்லாமல் தானும் தற்கொலை செய்து விட்டு, விட்டுச் சென்ற துண்டறிக்கையில் அவன் தெளிவாகவே கொலைக்குரிய காரணத்தைச் சொல்லியிருக்கிறான். சனாதன தரமத்தை மீறிய குற்றத்துக்காகவும், ( சாதி அமைப்பை மீறி, தெருவில் நடக்க தகுதியில்லாத ஒரு தமிழச்சியை, அந்த தமிழச்சியை மகிழுந்தில் ஏற்றி தன்னுடைய தெருவில் பயணித்ததை மன்னிக்க முடியாத கொடுஞ்செயல் என்று கருதியதால், மிலேச்சன் என்ற கேவலமானவனை விட தமிழன் அதை விடக் கேவலமானவன் என்று கருதியதால் ) இனியும் அதை மீறுபவர்களூக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்பதற்காகவுமே ஆஷ் வெள்ளையனை தான் கொன்றதாக! இதுவல்லாமல் அவனுக்கு எந்த விடுதலை எண்ணமும் கிடையாது, ஒரு வெங்காயமும் கிடையாது, மனம் ஒப்பி விருப்பத்தோடு வெள்ளையனின் காலைக் கழுவி, அவன் போடும் மிச்சம் மீதிக்களை பவ்வியமாகப் பெற்று, அவன் விருப்பத்தை நிறைவேற்றி அதில் இலாபம் கண்டு… இப்படி வெள்ளையனோடு இணைந்து மனமொப்பி வாழும் பார்ப்பானுக்கு, வெள்ளையனை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணம் அவன் கனவில் கூட எழாது.
அதிகார மாற்றத்தின் முன்பு வரையும் பார்ப்பனர்களின் வாழ்க்கைதான் கொண்டாட்டமாக இருந்தது, அதிகார மாற்றத்துக்குப் பிறகும் அவர்களின் ஆட்டம்தான் வானத்துக்கும் பூமிக்குமாக உள்ளது. அடி வாங்கி உயிரைக் கொடுத்த தமிழன் எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்காமல் உழல்வதும், வெள்ளையனுக்கு கூட்டிக் கொடுத்து அவன் காலைக் கழுவிய பார்ப்பன வந்தேறிகள் எல்லாவற்றையும் அனுபவித்து.. ஆனால் தன் கூட்டிக் கொடுக்கும் தொழிலைச் சரியாகவே செய்து கொண்டு சுக ஜீவியத்தில் மூழ்கித் திழைக்கிறார்கள். காசிமேடு மன்னாரு. kasimedumannaru789.wordpress.com.
அநீதி என்பதே அடிப்படையாக கொண்டு உள்ள பார்பனியம் இன்றும் அவாள்களால் போற்ற படுகிறது. பார்பனியம் சொல்லும் தத்துவங்களை அவர்கள் மேல் ஏற்றினால் தான் அவர்களுக்கு புரியும் அது எவ்வளவு கொடுமையானது என்று. அது வரை பார்ப்பான் உணர மாட்டான். தான் பார்ப்பான் என்று சொல்லி கொள்ளவே வருத்த படும் நிலை வரும்.
பாரதிதாசன் வருந்திய ஜாதி இருக்கிறது என்பானும் உள்ளானே என்ற நிலை மாறும்.
தன் நலம் பாராமல், நாட்டின் அடிமைத்தனத்தையே எண்ணி, அதற்காக தன் வாழ்க்கையையே சிறையில் விலங்குகளுக்கிடையில் அடி வாங்கி வேதனையுடன் கழித்து தன் விடுதலைத் தாகத்தை வெள்ளை மரமண்டைகளுக்குப் புரிய வைத்து, நாட்டு விடுதலைக்கு ஆணி வேராக இருந்த ஈகையர் வ உ சி, பகத்சிங் போன்ற வரலாற்று நாயகர்களின் வரிசையில் சில போலி வேடதாரி வீரர்களும் இடம் பிடித்தது மட்டுமல்லாமல், வெள்ளையன் கூவி விற்றுக் கொண்டிருந்த சுதந்திரத்தை அவர்கள்தான் வாங்கியும் தந்தார்கள், அதனால் அவர்கள்தான் இந்த நாட்டுக்கே தந்தை, மாமா என்று கயிறு திரித்த பூணூல் மாமாக்கள், கொஞ்ச காலமாக வாஞ்சிநாதனையும் இந்த பட்டியிலில் சேர்த்து ஒரு மாவீரன் என்ற நிலைக்கு பேசி ஊரை ஏமாற்றலாம் என்று எண்ணீயிருக்கிறார்கள். இந்த பரப்புரைக்கு திரு வைக்கோ அவர்களும் பலியாகி வாஞ்சி நாதனை ஒரு விடுதலை போராட்ட வீரன் என்றும் பேசிவருவதுதான் மனதை உறுத்துகிறது. ஆஷ் ஐ கொன்று விட்டு வேறு வழியில்லாமல் தானும் தற்கொலை செய்து விட்டு, விட்டுச் சென்ற துண்டறிக்கையில் அவன் தெளிவாகவே கொலைக்குரிய காரணத்தைச் சொல்லியிருக்கிறான். சனாதன தரமத்தை மீறிய குற்றத்துக்காகவும், ( சாதி அமைப்பை மீறி, தெருவில் நடக்க தகுதியில்லாத ஒரு தமிழச்சியை, அந்த தமிழச்சியை மகிழுந்தில் ஏற்றி தன்னுடைய தெருவில் பயணித்ததை மன்னிக்க முடியாத கொடுஞ்செயல் என்று கருதியதால், மிலேச்சன் என்ற கேவலமானவனை விட தமிழன் அதை விடக் கேவலமானவன் என்று கருதியதால் ) இனியும் அதை மீறுபவர்களூக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்பதற்காகவுமே ஆஷ் வெள்ளையனை தான் கொன்றதாக! இதுவல்லாமல் அவனுக்கு எந்த விடுதலை எண்ணமும் கிடையாது, ஒரு வெங்காயமும் கிடையாது, மனம் ஒப்பி விருப்பத்தோடு வெள்ளையனின் காலைக் கழுவி, அவன் போடும் மிச்சம் மீதிக்களை பவ்வியமாகப் பெற்று, அவன் விருப்பத்தை நிறைவேற்றி அதில் இலாபம் கண்டு… இப்படி வெள்ளையனோடு இணைந்து மனமொப்பி வாழும் பார்ப்பானுக்கு, வெள்ளையனை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணம் அவன் கனவில் கூட எழாது.
அதிகார மாற்றத்தின் முன்பு வரையும் பார்ப்பனர்களின் வாழ்க்கைதான் கொண்டாட்டமாக இருந்தது, அதிகார மாற்றத்துக்குப் பிறகும் அவர்களின் ஆட்டம்தான் வானத்துக்கும் பூமிக்குமாக உள்ளது. அடி வாங்கி உயிரைக் கொடுத்த தமிழன் எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்காமல் உழல்வதும், வெள்ளையனுக்கு கூட்டிக் கொடுத்து அவன் காலைக் கழுவிய பார்ப்பன வந்தேறிகள் எல்லாவற்றையும் அனுபவித்து.. ஆனால் தன் கூட்டிக் கொடுக்கும் தொழிலைச் சரியாகவே செய்து கொண்டு சுக ஜீவியத்தில் மூழ்கித் திழைக்கிறார்கள். காசிமேடு மன்னாரு. kasimedumannaru789.wordpress.com
http://www.anindianmuslim.com/2010/08/children-hit-for-sitting-on-mat.html
pls do not follow the congress ,it was only for lairs,it was not have any develop for peoples and society, only congress people always qurall each other do not self improve , they grap others peoples .pls think urself and do it
other side of Gandhi is dangeroues:Gandhi was going hands in hand with Rajaji!
Gandhi disgraced Kamaraj:
let us disgrace Gandhi!
miga seerantha katturai. tamizh samugathin mithu kari umizhvathu pola ullathu. ethu nadathallum kandum kanamal sellum suyalam pidithavanaga irukkiran thamizhan. endru thiruthuvana. thodarthu ezhuthukkal thozhar. nandri
உண்மையையும், உண்மையான தலைவர்களையும் மறைப்பதே இங்கு நடக்கும் அரசியலாகப் போய்விட்டது. வ.உ.சியின் வரலாற்றோடு, தெரிந்தேயிராத பல செய்திகளையும் உள்ளடக்கிய இந்த கட்டுரை மிகவும் முக்கியமானது.
நன்றி.