தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…

 

ஈழத் தமிழர்களோ, தமிழ்நாட்டு தமிழர்களோ புலம் பெயர்ந்த நாடுகளுக்குச் சென்ற பிறகும் கூட ஜாதி சங்கங்களாக, ஜாதி உணர்வாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

பிள்ளைமார், தேவர், நாயுடு, வன்னியர், கவுண்டர், முதலியார், செட்டியார், உடையார், முத்தரையர், நாடார் இன்னும் பிற தீவிர ஜாதி உணர்வாளர்கள், அதாவது தன் ஜாதி அடையாளத்தை பகிரங்கமாக வெளிபடுத்திக் கொண்டும், ஜாதி சங்கங்களில் பொறுப்புக்களில் இருப்பவர்களும், தன் ஜாதிதான் இந்த உலகத்தில் சிறந்தது என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் பிரச்சாரம் செய்பவர்களும் கூட;

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகளில் முதன்மையான ஜாதியான ‘தமிழுணர்வு’ சைவ பிள்ளைமார்கள் அதிகம்.

அதிலும் யாழ்பாணத்து சைவ பிள்ளைமார்கள் திருநெல்வேலி (தமிழ்நாடு) சைவ பிள்ளைமார்களைவிட தங்களை உயர்வானவர்களாக கருதுபவர்கள். அவர்களின் மதிப்பிற்குரிய தலைவராகவும் பிரபாகரன் இருக்கிறார்.

ஒரு வேளை பிரபாகரன் சக்கிலியராகவோ, பறையராகவோ, பள்ளராகவோ, அவ்வளவு ஏன் இஸ்லமியராகவோ இருந்திருந்தால் அவரை ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக ஒத்துக் கொண்டிருப்பார்களா?

தமிழகத்தில்கூட பிரபாகரனை தீவிரமாக ஆதரிக்கிற ‘முற்போக்காளர்கள்’ முற்றிலுமாக அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள்.

திராவிட இயக்கங்களை பெரியாரை விமர்சிக்கும்போதும், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, தந்திரமாக ‘செட்டு சேர்க்கும்’ பாணியில் அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் குறிப்பிடுகிறார்கள்.

மற்ற நேரங்களில் பொதுவான தமிழர் தலைவர்களாக காமராஜ், முத்துராமலிங்கம் போன்ற இந்திய தேசியத்தை வலியுறுத்தியவர்களை விமர்சனம் அற்று ஆதரிப்பது போல் கூட அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும்  ஆதரிப்பதில்லை.

ஆதிக்க ஜாதிக்காரர்கள் குறிப்பாக, மீன் உணவு சாப்பிடுவதின் மூலமாககூட மீனவர்களோடு மறைமுகமாக கூட தொடர்பற்ற ‘சைவ’ பிள்ளைமார்கள்,

தன்னுடைய மீனவ சமுதாயத்தை எப்படி இழிவாக பார்க்கிறார்கள், என்கிற கண்ணோட்டம் பிரபாகரனுக்கு இருந்திருந்தால், அவரை தமிழீழ தலைவராக ஆதிக்க ஜாதிக்காரரகள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத்தமிழர்களும்

45 thoughts on “தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…”

 1. நீங்கள் குறிப்பிட்டது  மிக சரியானது.
  தமிழ்ததேசியம் பேசுகிற பிள்ளைமார்களின் தலைவரான பழ. நெடுமாறனும் தீவிர பிரபாகரன் ஆதரவாளர். திராவிட இயக்க எதிர்ப்பாளர்.
  தமிழகத்தில் ஆளே இல்லாத அவருடைய கட்சிக்கு புலம் பெயர்ந்த பிள்ளைமார்கள், சைவ முதலியார்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு.

 2. //பெரியார் ஒரு தலித்தாகவோ, இஸ்லாமியராகவோ, மீனவராகவோ பிறந்திருந்தால் அவரை திராவிட இயக்கமோ, திரவிடர்களோ ஏற்றுக்கொண்டிருப்பார்களா? //டவுட்டு//
  -அருள்எழிலன்

  பெரியாரை இஸ்லாமிய விரோதிகளும், தலித் விரேதிகளும்தான் ஆதரிப்பார்கள் என்பது போன்று அண்ணன் அருள் எழிலன் எழுதியிருந்தார். அதற்கு தக்க பதில் தந்திருந்தார் பெரியார் திராவிடர் கழக தோழர் அன்பு தனசேகர்.

  அதன் பிறகு வழக்கம்போல் அண்ணன் அருள் எழிலன் பதில் சொல்லமால் பறந்து விட்டார்.
  அதற்கு முன் கத்தோலிக்க கிறித்துவ மதம்தான் மீனவர்களுக்கு உயர்வை தந்தது. திராவிட இயக்கம் தரவில்லை என்று எழுதினார்.
  அதற்கும் பெரியார் திராவிடர் கழக தோழர் பிரபாகரன் அழகிரிசாமி அருமையான பதிலை எழுதியிருந்தார்.
  அதற்கு பதில் தராமல் ஓடிவிட்டார் அருள் எழிலன்.

  அப்படியே பதில் தந்தால், உடனே ஜாதி வெறியர்கள் என்றும் தனிப்பட்ட முறையில் ஒருவரின் ஜாதியை கண்டுபிடித்து அவரை ஜாதி வெறியராக சித்தரித்து விடுவார்.

 3. ஒரு வேளை பிரபாகரன் சக்கிலியராகவோ, பறையராகவோ, பள்ளராகவோ இருந்திருந்தால், மதிமாறன் கண்டிப்பாக ஆதரித்திருப்பார்.பிரபாகரனைப்போல் இந்த உலகில் யாருமே பிறக்கவில்லை.அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று நாள்தோறும் பரணி பாடியிருப்பார்.
  அவர் ஜாதி வெறி அப்படி.இளையராஜா என்ன செய்தாலும் அப்படிதான் எழுதுவார்

 4. யாழ்பானத்தில் சைவ பிள்ளைமார் என்ற ஜாதி இல்லை. யாழ்பாணத்தில் மாப்பாண முதலியார், உடையார், சைவ வெள்ளாளர் போன்ற வெள்ளாள ஜாதியின் உள் பிரிவுகள் உள்ளது. போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் வெள்ளாள ஜாதியினர் பிரபாகரனை ஆதரிக்கவில்லை. வெள்ளாள தலைவர்களால் வழி நடத்தப்பட்ட இயக்கங்களையே ஆதரித்தனர். ஆரம்ப காலங்களில் பிரபாகரன் குறைவான ஆளணியையும் ஆயுத பலத்தையும் கொண்டிருந்தார். LTTE கரையார் இயக்கம் எனவே தொடக்க காலங்களில் அறியப்பட்டது. அதில் பெரும்பாலும் (முழுவதும் அல்ல) கரையார் சமூக உறுப்பினர்களே இருந்தனர். ஆனால் காலப்போக்கில் பிரபாகரன் போராட்டத்தில் தனியுருமை எடுத்துக்கொண்ட பின் அவர்கள் பிரபாகரன் சார்புள்ளவர்களாக காட்டிக்கொண்டார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை.

 5. புலம் பெயர்ந்த ஈழ தமிழர் வெளிப்படையாக ஜாதி சங்கங்கள் ஆரம்பிப்பதில்லை. ஊர் பெயர்களிலேயே சங்கங்கள் இருக்கும். ஆனால் இதற்க்கு அடிப்படையாக இருப்பது சாதிதான். மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் வேறு வேறு ஊர் சங்கங்களில் இருந்தது கொண்டு மோதுவார்கள் .

 6. “யாழ்பாணத்து சைவ பிள்ளைமார்கள் திருநெல்வேலி சைவ பிள்ளைமார்களைவிட தங்களை உயர்வானவர்களாக கருதுபவர்கள். ” இதில் சைவ பிள்ளைமார் என்பதை மாற்ற வேண்டும். சைவ வெள்ளாளர் என்பதே சரியானது. உங்களுக்கு யாழ்ப்பாண பூகோள அமைப்பு தெரியாது எண்பது தெளிவாக புரிகின்றது. திருநெல்வேலி யாழ் பாண நகருக்கு உள்பட்ட இடம். உங்களுக்கு புரியிற மாதிரி சொன்னால் பெசன்ட் நகரும் சாஸ்திரி நகரும் போல. யாழ்பாண சைவ வெள்ளாளர் திருநெல் வேலி சைவ வெள்ளாளர் என்ற பிரிவுகள் கிடையாது.

 7. தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்–இவ்வளவு தூரத்துக்கு பிரபலமாக ஆகியிருக்க மாட்டார். எப்போழுதே காணாமல் போயிருப்பார்.

 8. இந்த கொடுமையான சாதி சங்க அவலங்கள் தமிழ் நாட்டை விட்டு சென்றும் பீடை ஒழியாமல் தழைத்து வளருகிறது.
  காரணம் படித்திருந்தாலும் பகுத்தறிவு வளராததே. ராக்கெட் விடும் பொறியியல் வல்லுநர் அறிவியலை நம்பாமல் எழு மலையானை
  வேண்டுவதை போல. பார்பன புரட்டான சாதியை விளக்கி பள்ளிகளில் சொல்லி கொடுக்க வேண்டும். ஓரளவு தீரலாம்.

 9. அண்ணன் அருள் எழிலன் தலைவர் பிரபாகரன் ஒரு மீனவர் என்பதில் மகிழ்ச்சியடைபவர். அதில் ஒன்றும் தவறில்லை.

  தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் கத்தோலிக்கராக பரதவசமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால், இன்னும் கூடுதல் மகிழ்ச்சியடைவார் அண்ணன் அருள் எழிலன்.

  ஆனால் தலைவரோ இந்து மீனவர். கரையான் என்ற சமுகத்தை சேர்ந்தவர்.

 10. இலங்கையில் கல்வி மேம்பாடு ஒடுக்கப்பட்ட மக்களிற்க்கு ஏற்பட காரணம் ஒன்று மிசனரிகளின் தாக்கம். இதில் கத்தோலிக்கம் சேராது. மற்றையது சிங்கள அரசை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சரான கன்னங்கரா என்பவரால் கொண்டுவரப்பட்ட இலவச கல்வி திட்டம்.

 11. என்னதான் கல்வி மேம்பாடு ஏற்பட்டாலும் யாழ்பானத்தில் பல கோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் உள் நுழைய தடை இருந்தது (படித்த சமூகத்தில் மேம்பட்ட நிலையை அடைந்த ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் விதி விலக்கு) ஆனால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட திராவிட இயக்க தாக்கம் ஈழத்திலும் பிரதி பலித்து பல ஆலய உள் நுழைவு போராட்டங்கள் நடந்தது உண்மை.

 12. கத்தோலிக்க மதம் போர்த்துகேயர்களால் ஈழத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. போர்த்துகேயர் மத மாற்றத்தில் கவனம் செலுத்தினார்களே தவிர கல்வியில் கவனம் செலுத்தப்பட வில்லை. அப்படியும் வழங்கப்பட்ட கல்வி மத போதகர்களிட்கான கல்வியாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தான் ஈழத்தில் கல்வி மேம்பாடடைய காரணமாக இருந்தார்கள். அதற்க்கு முன் தமிழ் மொழி மற்றும் நீதி நூல்கள் படிப்பதுதான் கல்வியாக இருந்தது. இதுவும் மேல் சாதியினருக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கிறிஸ்தவர்களா மதம் மாறியவர்களுக்கு தொழில் கல்வி அளித்தார்கள். இதனால் ஒடுக்கப்பட்ட மக்களில் மதம் மாறி படித்தவர்கள்
  ஆங்கிலேய அரசில் பதவி பெற்றார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து அதிகாரம் செலுத்துவதை பொறுக்காத மேல் சாதியினர் தாமும் போட்டிக்கு கிறிஸ்தவர்களின் கல்லூரிகளுக்கு சென்று படித்தார்கள். அதற்க்கு முன் கிறிஸ்தவ கல்லூரிகளுக்கு செல்வதை இழிவாக கருதினார்கள்.
  அனால் இலவச கல்வி முறை வந்த பின் மேலும் சகல ஜாதியினரும் கல்வி கற்று முன்னேற வழி வகுத்தது. (வர்க்க வேறுபாடுகளை கல்வியில் குறைத்தது)

 13. //அதிலும் யாழ்பாணத்து சைவ பிள்ளைமார்கள் திருநெல்வேலி (தமிழ்நாடு) சைவ பிள்ளைமார்களைவிட தங்களை உயர்வானவர்களாக கருதுபவர்கள். அவர்களின் மதிப்பிற்குரிய தலைவராகவும் பிரபாகரன் இருக்கிறார்.//

  //தன்னுடைய மீனவ சமுதாயத்தை எப்படி இழிவாக பார்க்கிறார்கள், என்கிற கண்ணோட்டம் பிரபாகரனுக்கு இருந்திருந்தால், அவரை தமிழீழ தலைவராக ஆதிக்க ஜாதிக்காரரகள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?//

  இதில் முரண்பாடு இருப்பதாக தெரிகிறது. பிரபாகரன் பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவரா அல்லது மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரா? இதற்கு என்ன பதில்

 14. பிரபா நீங்கள் சொன்ன வகைகளுக்குள் இருந்திருந்தாலும் கூட நிச்சயம் தலைவராகத்தான் இருந்திருப்பார். அவர் தலைவரானது ஆயுதத்தாலும் அது சார்ந்த வெற்றிகனாலுமே தவிர – சாதியினால் அல்ல. கரையார் சமூகம் ஒரு ஆதிக்க சமூகம்தான் – ஆனால் வெள்ளாளர்களுக்கு கரையாரும் தாழ்த்தப்பட்ட சமூகம்தான். அதெல்லாத்தையும் விடுங்க – தமிழ்செல்வன் யார்..? அவர் ஈழத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட நளவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை தங்களின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளில் ஈழ தமிழ் சமூகம் அனுப்பி வைத்தது எப்படி.. —

  மதிமாறன் சும்மா தனக்கு தெரியாத விடயங்களை மூக்கைப் போட்டு கழுத்தை அறுத்துக்கொள்ளக் கூடாது.

 15. பிரபாகரனின் பூர்வீகம் கேரளா.
  http://articles.economictimes.indiatimes.com/2009-05-18/news/28467165_1_prabhakaran-poonthalathazham-kks-road

  இவரின் தந்தையின் பெயரிலுள்ள “பிள்ளை”, நாயர் சாதியை குறிப்பதாகும்.
  http://en.wikipedia.org/wiki/Pillai_%28Nair_title%29

 16. நல்லதொரு பதிவு ! தாம் சார்ந்த சாதிய அடிப்படையிலேயே தமிழர்கள் தம் தலைவர்களையும் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பது மிக உண்மை.

  ஆனால் பிரபாகரன் சைவ வெள்ளாளர் அல்ல. அவர் கரையார் எனப்படும் கடல் சார்ந்த வியாபார சமூகத்தை சேர்ந்தவர்கள்.

  ஆனால் பிரபாகரன் ஒரு வெள்ளாளர் பெண்ணை மணந்த பின் தம்மையும் ஒரு வெள்ளாளராகவே கருதி வந்தார். அதன் பின் யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களும் பிரபாகரனை தலைவராக சிக்கல் இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள்.

 17. @ Ethicalist – உங்களுக்கு யாழ்ப்பாண பூகோள அமைப்பு தெரியாது எண்பது தெளிவாக புரிகின்றது. திருநெல்வேலி யாழ் பாண நகருக்கு உள்பட்ட இடம். உங்களுக்கு புரியிற மாதிரி சொன்னால் பெசன்ட் நகரும் சாஸ்திரி நகரும் போல. யாழ்பாண சைவ வெள்ளாளர் திருநெல் வேலி சைவ வெள்ளாளர் என்ற பிரிவுகள் கிடையாது.

  மதிமாறன் சொன்னது தமிழ்நாட்டில் இருக்கும் திருநெல்வேலியை .. யாழ்ப்பாணத்து திண்ணவேலியை அல்ல ! நீங்கள் தான் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள் ..

 18. Ethicalist – பரதவரும் கரையாரும் ஒரே ஜாதியை குறிக்கும் பெயர்கள். பரதவர்கள் என்ற பெயர் பாவனையில் இல்லை

  @ கரையாரும் பரதவரும் ஒரே சாதி இல்லை சகோ. கரையார் இன்றளவும் தமிழ் – சிங்கள சமூகத்தில் தனி சாதியாக உள்ளது. பரதவர் என்போர் மன்னார் முதல் நீர் கொழும்பு வரையிலான இடங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இலங்கை மக்கள் தொகை கணிப்பில் பரதவரை தனி இனமாகவும் சில முறை குறிப்பிட்டு இருந்தனர்.

  பரதவர்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள். அவர்கள் தூத்துக் குடி போன்ற பகுதிகளில் இருந்து போர்த்துகேயே காலத்தில் இலங்கைக்கு குடியேறியவர்கள்.

  கரையார் என்போர் தம்மை குருகுலத்தார் என்றும் அழைப்பதுண்டு. கரையாருக்கு தனியே குலக் கொடி, குல வரலாறு எல்லாம் உண்டு ..

  பார்க்க :

  http://karava.org/

 19. @ M.Natarajan – இதில் முரண்பாடு இருப்பதாக தெரிகிறது. பிரபாகரன் பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவரா அல்லது மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரா? இதற்கு என்ன பதில்

  பிரபாகரன் கரவார் அல்லது கரையார் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கரையோரத்தில் வாழ்ந்தாலும் மீனவர்கள் அல்ல. மீன் பிடியிலும் ஈடுபடுவார்கள். அவர்கள் தம்மை குருகுல சத்திரியர் என்றே அழைத்துக் கொள்வார்கள்… வியாபாரிகளாகவும் இருந்துள்ளனர்…

 20. @ Ethnicken – பிரபா நீங்கள் சொன்ன வகைகளுக்குள் இருந்திருந்தாலும் கூட நிச்சயம் தலைவராகத்தான் இருந்திருப்பார். அவர் தலைவரானது ஆயுதத்தாலும் அது சார்ந்த வெற்றிகனாலுமே தவிர – சாதியினால் அல்ல.

  உண்மை தான்.. ஏனெனில் மக்கள் பிரபாகரனை வாக்குப் போட்டு தலைவராக்கவில்லை. தமது முயற்சியாலும், குரூர போராட்டக் குணத்தாலும் தலைவரானார். பின்னர் காலங்களில் பிற சாதியினர் அச்சம் மற்றும் வேறு வழியின்றி அவனை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள்….

  ஆக ! சாதியால் தான் தலைவர் ஆனார் என மதிமாறன் சொல்வது பிரபாகரனுக்கு பொருந்தாது.

 21. @ Anil – பிரபாகரனின் பூர்வீகம் கேரளா. …

  உண்மையாக இருக்கலாம் .. ஏனெனில் யாழ்ப்பாணத்தவர் பலருக்கு கேரளத்து தொடர்புகள் இருக்கின்றன… இது சந்திரபானு இலங்கையை படையெடுக்கும் போதிலிருந்து வரலாற்றில் இடம்பெற்றவையே. வீரகேரளர்கள் சந்திரபானுவின் படையில் வந்த பின்னர் யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்டனர்.

  சங்கிலி மூன்றாம் மன்னன் காலத்திலும் கேரள கடற் படைகள் யாழ்ப்பாண படைகளோடு இணைந்து செயல்பட்ட குறிப்புகளும் உண்டு..

  பிள்ளை என்பது பல சாதிகளில் இருக்கும் பட்டப் பெயர் தான். நாயர், கரவார் இருவர்களும் சத்திரிய சாதிகள் என்பதால் தொடர்புகள் நிறைய இருக்க வாய்ப்புண்டு !!!

  இன்றைய சிங்களவத் தலைவர்களின் மூதாதையர் கூட சிலர் தமிழ்நாட்டில் இருந்து போனதாக படித்திருக்கின்றேன் … !!!

 22. @ இக்பால் செல்வன் “பிள்ளை என்பது பல சாதிகளில் இருக்கும் பட்டப் பெயர் தான். நாயர், கரவார் இருவர்களும் சத்திரிய சாதிகள் என்பதால் தொடர்புகள் நிறைய இருக்க வாய்ப்புண்டு”
  தமிழ் நாட்டை பொறுத்தவரையில் பிள்ளை என்பது சாதி பெயர். ஆனால் ஈழத்தில் அது சாதி பெயர் இல்லை. சகல சாதிகளிலும் பிள்ளை என்று முடியும் பெயர்கள் உள்ளது. தற்போதைய இளையர்களின் பெயர்களில் பிள்ளை இல்லை. 1960 முன் பிறந்தவர்களின் பெயர்களில் பிள்ளை என்று முடிவது சாதாரண விடயம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் பெயர்கள் கூட பிள்ளை என்று முடியும். எ+கா – வள்ளி பிள்ளை, தெய்வானை பிள்ளை, சின்னபிள்ளை ETC. அது மட்டுமல்ல யாழ்பாணத்தில் பெண் மகளை பிள்ளை என்றே அழைபார்கள். ஆண் மகனை பிள்ளை என்று அழைப்பதில்லை. பறையர் சாதிகளில் கூட பிள்ளை என்று முடியும் பெயர் கொண்ட முதியோர்களை இன்றும் காணலாம். ஆனால் ஈழத்தில் சாதியை குறிக்கும் பெயரை வைத்திருப்பவர்கள் பிராமணர்களே. குறிப்பாக சர்மா என்று பிராமணர்களுக்கு பெயர் முடிவதை இன்றும் காணலாம். (பெரும்பாலும்). 30 OR 40 வருடங்களுக்கு முன் முதலியார், உடையார் என்று சாதியை குறிக்கும் பெயரை உடையவர்கள் இருந்தார்கள். ஆனால் அந்த வழக்கு இப்போதில்லை. மட்டக்களப்பில் போடியார் என்று முடியும் பெயர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அது சாதி பெயரா அல்லது அந்தஸ்தை குறிக்கும் பெயரா என்று தெரியவில்லை.

 23. @ இக்பால் செல்வன் “மதிமாறன் சொன்னது தமிழ்நாட்டில் இருக்கும் திருநெல்வேலியை .. யாழ்ப்பாணத்து திண்ணவேலியை அல்ல ! நீங்கள் தான் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள் ..” நான் பின்னூட்டம் இடும் போது மதிமாறன் அவர்கள் “திருநெல்வேலி (தமிழ்நாடு” என்று எழுதியிருக்கவில்லை. வெறுமனே “திருநெல்வேலி” என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். நான் பின்னூட்டம் இட்ட பின் அவர் திருத்தியிருக்க வேண்டும். திண்ணை வேலி என்பது பேச்சு வழக்கு. சரியான பெயர் “திருநெல்வேலி தான்.

 24. யாரவது கேரளாவில் இருக்கும் ஈழவர் என்ற சாதி தொடர்பாக விளக்க முடியுமா? விக்கி பீடியாவின் படி (http://en.wikipedia.org/wiki/Ezhava) According to legend and some Malayalam folk songs, the Ezhavas were the progeny of four bachelors that the king of Ceylon sent to Kerala at the request of the Chera king Bhaskara Ravi Varma, in the 1st Century AD. These men were sent, ostensibly, to set up coconut farming in Kerala. Another version of the story says that the Sri Lankan King sent eight martial families to Kerala at the request of a Chera king to quell a civil war that had erupted in Kerala against him.
  ஆனால் மேலும் இது தொடர்பாக அறிய விரும்புகிறேன்.

 25. @இக்பால் செல்வன்
  “அவனை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள்….” ஒருமையில் நீங்கள் குறிப்பிட்டதன் நோக்கம் ஏதாவது தனிப்பட்ட விரோதம் ? ஹஹஹா. இல்லை பெரும்பாலும் இணையத்தில் விமர்சனம் செய்யும் போது நாம் யாரை விமர்சிக்கின்றோமோ அவரை ஒருமையில் குறிப்பிடும் வழக்கம் இல்லை அதுதான் கேட்டேன்.

 26. பிரபாகரன் என்ன சாதியில் பிறந்திருந்தாலும் அவனிடம் இருந்த உறுதியான மனதுதான் அவனின் இந்தநிலைக்குக்காரணம். தம்மினத்துக்கு அடித்தவனைத் திருப்பி அடிக்கவேண்டுமென்றுதான் நினைத்தானேதவிர சாதிக்காக எந்த ஒருகாலத்திலும் அடிபணியவில்லை. அவனைப்பற்றி எவ்வளவோ பொய்ப் பிரச்சாரங்கள் பலமான அரசாங்கங்கள் (இந்தியா, இலங்கை), பலவீனமான (நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது)நிலயில் இருந்த ஒரு இயக்கம் மக்கள் மத்தியில் வளர்ந்தது என்றால் அதுவும் சாதிரீதியாகப் பிரிந்திருந்த மக்கள், பிரபாகரனின் கட்டுக்கோப்பான ஒருனிலைதான் காரணம். அவன் எதற்கும் பயப்படவில்லை, யாருக்கும் பயப்படவில்லை, தான் செய்வதைத்ச் சரியென நினைத்து உறுதியோடு செய்தான். தளபதி பால்றாஜைக்கூட புலிப் போராளிப்பெண்ணினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்றுகூட பல பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. எமக்குந்தெரிந்தவரை புலம்பெயர் தமிழர்களும் சரி, ஈழத்துத் தமிழர்களும் சரி புலிகள் என்கிறபொழுது சாதியை ஒருனாளும் வெளிப்படுத்தியதில்லை. உள் மனதிற்குள் அவர்கள் வைத்திருப்பதைப்பற்றி நான் இங்கு பேசமுடியாது. அதை யாரும் பேசமுடியாது. ஆனால் சாதிக்காக ஒருவனை அடித்துக் கொலை செய்தார்கள் என்று அவனது கட்டுப்பாட்டிலிருந்தபொழுது ஒரு நாளும் நாம் கேள்விப்பட்டதே இல்லை. அவரது தளபதிகள் பலர் வெவ்வேறு சாதிக்காரர்கள் அங்கும் சாதிக்கு முக்கியத்தும் இல்லை திறமைக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது. அவன் சரிய பிழையா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும் ஆனால் தேவையில்லாமல் ஒருவனை இல்லாத பொய்களைச் சொல்லி அழிக்கவே முடியாது. அவன் ஒரு சிறந்த வீரன். இன்றையகாலம் மக்கள் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து ஏமாற்ற முடியாது காரணம் எல்லாரும் இலகுவாக உண்மையை அறிகிற தொழில் நுட்பம் கிடைக்கக்கூடிய விலையில் உள்ளதே காரணம். அவரிருக்கிற ஒரு சிறந்த இடத்தை எந்த ஒரு தமிழனாலும் அடைய முடியாது. இது நான் உணர்ந்தது.

 27. // கரையாரும் பரதவரும் ஒரே சாதி இல்லை சகோ. கரையார் இன்றளவும் தமிழ் – சிங்கள சமூகத்தில் தனி சாதியாக உள்ளது. பரதவர் என்போர் மன்னார் முதல் நீர் கொழும்பு வரையிலான இடங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இலங்கை மக்கள் தொகை கணிப்பில் பரதவரை தனி இனமாகவும் சில முறை குறிப்பிட்டு இருந்தனர்.

  பரதவர்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள். அவர்கள் தூத்துக் குடி போன்ற பகுதிகளில் இருந்து போர்த்துகேயே காலத்தில் இலங்கைக்கு குடியேறியவர்கள்.

  கரையார் என்போர் தம்மை குருகுலத்தார் என்றும் அழைப்பதுண்டு. கரையாருக்கு தனியே குலக் கொடி, குல வரலாறு எல்லாம் உண்டு ..///

  திரு. Ethicalist

  திரு. இக்பால் செல்வன் இந்த விளக்கத்திற்கு உங்களிடமிருந்து பதில் இல்லையே?

 28. கரையர் வகுப்பு மக்கள் தமிழகத்தின் இராமேசுபுரத்தில் மீன்பிடித் தொழிலிலும் அதைச் சார்ந்த வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். பரதவ இன மக்கள் குமரி மாவட்டத்தின் பிள்ளைத் தோப்பின் ஒரு பகுதியிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் வைப்பாறு, வேம்பாறு வரைக்கும் பரவியிருக்கிறார்கள். இராமேசுபுரத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பரதவ இன மக்கள் வைப்பாறு, வேம்பாறு பகுதியிலிருந்து அங்கு குடியேறியவர்களாவர்.
  நெல்லை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் பெரும்பாலும் இயக்கத்தினர் சர்வ சாதாரணமாக
  வந்து செல்லும் பகுதியாகவே இருந்து வந்தது. இந்த மாவட்டக் கடலோரப் பகுதிகள் முழுக்க முழுக்க மீனவரில் ஒரு பிரிவான பரதவ மக்கள் மட்டுமே வாழ்கின்ற இடம். இவர்கள் அனைவருமே கத்தோலிக்க பிரிவைச் சார்ந்தவர்கள். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெகு இயல்பாகவே அம்மீனவ மக்களோடு உறவாடியிருக்கிறார். நெல்லைக் கடலோரப் பகுதிகளில் தேசியத் தலைவர் அவர்களோடு இயல்பாக உரையாடியவர்கள், இயக்கத்தினரின் நடவடிக்கைகளை நேரில் கண்டவர்கள் சொல்லக் கேட்டவை இவை. இந்தப் பிணைப்பிற்கு முதன்மைக் காரணம், தலைவர் அவர்களும் நம் மீனவர் இனத்தைச் சார்ந்தவர் என்பதினால் கூட, அப்படி ஒரு பாசம் தலைவர் மேல் அம்மக்களுக்கு இருந்திருக்கலாம்! அல்லாமல் மீனவர் சமூகத்துக்குள் தலைவர் என்ன பிரிவு, எந்த மதம் என்று அம்மக்கள் பார்த்திருந்தால் அப்படி ஒரு நேசம் தலைவர் மேல் இருந்திருக்க வாய்ப்பில்லை. காசிமேடுமன்னாரு.

 29. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு மலையாளி என்கின்ற பொய்ப் பரப்புரையை சிலகாலமாக தமிழர்களின் எதிரிகளால், இந்திய அரசின் கைக்கூலிகள், இந்தியாவின் காலை நக்குவதன் மூலம் இந்திய அரசிடமிருந்து கடித்துத் துப்பிய எலும்புத்துண்டு கிடைக்காதா என்று அலையும் சில கருணாவின் வாரிசுகள் அவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் மலையாள மொழி வரலாறு பற்றியோ மலையாளிகளைப் பற்றியோ அறிந்தவர்கள் அல்ல! திராவிட மொழிக் குடும்பம் கடைக்குட்டியாக ஈன்றதே மலையாளம். இந்த மலையாளத்தின் அகவையோ அய்ந்நூறு முதல் அற்நூறு ஆண்டுகள் வரையே! அதுவும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகுதான் மலையாளம் என்பது ஒரு மொழி என்ற முடிவுக்கு வந்தார்கள். தமிழ் மொழிச் சிதைவு ஒரு காலகட்டத்துக்கு வந்து நின்றது பதினைந்தாம் நூற்றாண்டில்தான். அதன் முன் வரை தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சேரநாடுதான். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு பேச்சு வழக்கு இருப்பது போலவே அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்கு தமிழ் மொழிச் சிதைவுக்கும் சமர்கிருதக் கலப்புக்கும் ஏற்றதாக எளிதாக இருந்தமையால், மலையாளம் என்ற கள்ளக் குழந்தை உருவாகிப் பிறந்தது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே!
  இப்படியிருக்க.. மலையாளி என்பவன் நான்கு தலைமுறைக்கு முன்பு தமிழன்தான். ஒருபேச்சுக்கு.. இப்போதுள்ள கோவை வட்டாரப் பகுதிகள் இன்னும் ஒரு முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சிதைவினாலோ மலலயாளக் கலப்பினாலோ புதிய ஒரு மொழிப் பகுதியாக உருவாகலாம். அப்போது கோவையைச் சார்ந்தவர்களை, அவர்களது உறவினர்களை இந்த கருணாவின் அடியார்கள் என்ன சொல்லுவார்கள்?
  குமரி மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் ஒரு பிரிவான முக்குவர் இன மக்கள் மய்யக் கேரளக் கடற்கரை வரைக்கும் பரவியிருக்கிறார்கள். கேரளத்தின் கடற்கரை மக்களான முக்குவர்களின் தாய்மொழி மலையாளம். குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் கொல்லங்கோடு வரையுள்ள மீனவ மக்களான முக்குவ இன மக்களின் தாய்மொழி தமிழ்! இதனாலேயே இவர்களை கேரளத்தவர்கள் என்று கருணாவின் ஏவலர்கள் அழைப்பார்களா? அல்லது கேரளத்துலுள்ள முக்குவ இன மக்களை தமிழர்கள் என்று இந்த கருணாவின் நாதாரிகளைப் போன்ற அங்குள்ள சக மலையாளிகள் அவர்களை அழைப்பார்களா? என்ன ஒரு கூறுகெட்டத் தனம் இவர்களுக்கு…! இந்திய அரசின் குண்டியைக் கழுவிவிட்டே சுகம் கண்டு இலயித்துக் கிடக்கும் இந்த துரோகிகள், இனியாவது தன்னுடைய பின்புறத்தையும் முன்புறத்தையும் மூடிக்கொள்ள வேண்டும்.
  காசிமெடுமன்னாரு.

 30. @ Ethicalist – // “அவனை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள் //

  அது எழுத்துப் பிழை தான் வேறு நோக்கமல்ல … !!! எதிரியாக இருந்தால் கூட ஒருமையில் விளிப்பதில்லை .. குழந்தைகளை கூட பன்மையில் தான் விளிப்பது வழக்கம் !!!

 31. //குமரி மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் ஒரு பிரிவான முக்குவர் இன மக்கள் மய்யக் கேரளக் கடற்கரை வரைக்கும் பரவியிருக்கிறார்கள். கேரளத்தின் கடற்கரை மக்களான முக்குவர்களின் தாய்மொழி மலையாளம். //

  முக்குவர்கள் இலங்கையிலும் இருக்கின்றார்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றார்கள். அங்கு அவர்களின் தொகை அதிகம் என படித்ததுண்டு .. கிழக்கு மாகாண முக்குவரின் வட்டார வழக்குச் சொற்களுக்கும் – குமரி மாவட்ட வட்டார வழக்குச் சொற்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு .. வடக்கு மாகாணத்தில் பல கிழக்கு மாகாணத்தவர்களை கேரளாவில் இருந்து வந்தோர் எனக் கூறுவதாகவும் கேள்விப்பட்டதுண்டு .. மேலும் கிழக்கில் மருமக்கள் தாய முறைமையும் இருந்துள்ளது என ஒரு சில நூல்கள் கூறுகின்றன. கிழக்கு வாழ் முஸ்லிம்களிடையேக் கூட மருமக்கள் தாய முறை இருந்தது என கூறுகின்றன… !!!

  குறிப்பாக மலையாளம் என்ற மொழி உருவாக முன்னர் தென் கேரளம் – தென் தமிழகத்தில் இருந்து மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு முக்குவர் குடியேறி இருத்தல் வேண்டும் என நினைக்கின்றேன் … !!!

  திருவாங்கூர் சமஸ்தானம் கூட வேணாடாக இருந்த போது தமிழாகத் தான் இருந்தது .. பின்னர் காலங்களில் தான் மலையாளமாக மாறியது .. இல்லை எனில் இன்று தென் கேரளமும் தமிழகமாகவே இருந்திருக்கும் .. !!!

 32. தமிழர் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பள்ளருள் ஒரு பிரிவான கரையாள வகுப்பை சேர்ந்தவர் ஆவார்… கரையார் பத்திரி நிறைய தமிழ் இலக்கியங்கள் உள்ளன… பிள்ளை என்பது பட்டமே… சாதி அல்ல…. பல சாதிகள்(சோலிய வேளாளர், அகமுடையார், கோனார், பறையர், எட்ஸெடர…) ஏன் கேரளாவில் கூட பல்வேறு சாதியினர்(மேனன், நம்பூதிரி, நாயர்) பிள்ளைப் பட்டம் கொண்டுள்னர்… மேலதிக தகவலுக்கு..

  http://mallarchives.blogspot.in/2012/11/blog-post_26.html

 33. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
  இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
  ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
  பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
  புறக்கணித்து வருகின்றார்கள்

 34. பிரபாகரன் பிள்ளை ஜாதியாக இருந்திருந்தால் இவ்வளவு தூரம் பயங்கரவாதத்தை மூட்டு இருக்க மாட்டார். உயர் ஜாதியினர் (பிள்ளைமார் ,முதலியார் போன்றவர்கள்) எதையும் ஆலோசித்து செயல்படுவார்கள். மகாத்மா காந்திபோல் அகிம்சை வழியையே விரும்புவார்கள். உதாரணமாக அமிர்தலிங்கம் செல்வா வரதராஜ பெருமாள் போன்றவர்கள்!! காரையார் என்ற மீனவ சமுதாயத்தை சேர்ந்த பிரபாகரன் போன்றவர்கள் தலைமை ஏற்க தகுது உடையவர்கள் அல்ல. பயங்கரவாதத்ததால் எதையும் சாதிக்க முடியாது.

 35. பிரபாகரன் அவர்கள் மீனவசமூகம் அவர் மனைவி வெள்ளாள சமூகம். தமிழ்ஈழ போராட்டம் சாதியைக்கடந்தது. எல்லாச்சாதியினரும் தம்மை அர்ப்பணித்துள்ளார்கள். யார்குற்றினாலும் அரிசியாகவேண்டும் என்ற மனப்பாங்கு மட்டும் தமிழரிடம் இல்லை. குறைந்தபட்சம் வரலாற்றில் இத்தாலிய ஐக்கியத்தையாவது முழுமையாக படித்திருந்தால் எமக்கிந்தக்கெதி ஏற்பட்டிருக்காது.

 36. தலைவர் பிரபாகரன் வெள்ளாளர் சமுதாயம் தான் இருந்தாலும் அவரை நம் நாட்டில் அனைத்து சாதியினரும் ஏற்றுக்கொள்கின்றனர்.ஏன் தாழ்த்தபட்டவர்கள் உட்பட போட்டு வருகின்றனர்.பிறகு ஏன் இப்படி கூறுகின்றீர்கள்.நாம் தமிழர் என்ற கோட்பாட்டில் வாழ வேண்டும்.
  தலீத் மக்கள் சும்மா இருந்தாலும் அமைப்புகள் சும்மா இருக்காது.

 37. மறத்தமிழன் “செபாஸ்டியன்” சீமானின் தொப்புள்கொடி உறவு பிரபாகரனும் தமிழ் முஸ்லிம் பாசமும்:

  “உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என கிருத்தவ மதத்தை சேர்ந்த செபாஸ்டியன் சைமன் எனும் சீமான் கூறியுள்ளார்”.

  தனி ஈழம் கிடைத்துவிடும் எனும் நிலை உருவானபோது, ராவோடு ராவாக 75,000 தமிழ் முஸ்லிம் குடும்பங்களை வடகிழக்கு மாகாணத்திலிருந்து அடித்து விரட்டிய பிரபாகரன் ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் பெரிய சத்தியசீலனாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு கொலைகார அயோக்கியன்தான்.

  முத்துப்பேட்டை பள்ளிவாசலில். நோன்பு மாதத்தில் தொழுது கொண்டிருந்த 400 தமிழ் முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள், ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் நீதியின் பாதுகாவலாராக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் கொலைகார அயோக்கியர்தான்.

  இன்று இலங்கையில் எந்த முஸ்லிமும் தன்னை தமிழ் முஸ்லிம் என்று சொல்வதில்லை. தங்களை சிங்கள முஸ்லிமென்றே சொல்கின்றனர். சொல்லப்போனால், தமிழ் பேசுவதை தவிர்த்து சிங்கள மொழியில் பேசுகின்றனர். விடுதலைப்புலிகளின் நிலை கண்டு “அல்லாஹ் பழிக்குப்பழி வாங்கிவிட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.
  ————-

  இலங்கை இன அழிப்பு போரில் சிங்கள ராணுவம் 150,000 தமிழரை கொன்று குவித்தது. பார்ப்பனர் அனைவருக்கும் முழு பாதுகாப்பு கொடுத்தது. ஒரு பார்ப்பனர் கூட பாதிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், பார்ப்பனரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய ராணுவம், சிங்கள ராணுவத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. குறிப்பாக பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பதுங்கியிருந்த அனைத்து இடங்களையும் விலாவரியாக லிஸ்ட் போட்டு கொடுத்தது. இன அழிவு செய்து முடிந்ததும், சுப்ரமண்ய சுவாமி நேரடியாக ரஜபக்சேவுக்கு மலர்ச்செண்டு கொடுத்து “பேஷ் பேஷ். ரொம்ப நன்னா செய்தேள். இன்னும் நல்லா ஒதைங்க” என்று வாழ்த்தினார்.
  ———-

  உண்மையை சொல்லப்போனால், முஸ்லிம்களை கொன்ற விடுதலைப்புலிகளை இந்திய ராணுவத்தை அனுப்பி அட்ரஸ் இல்லாமல் சட்னி செய்த ப்ராஹ்மின்ஸை 40 கோடி முஸ்லிம்கள் ரகசியமாக பாராட்டுகின்றனர்.

  “உங்களுடைய எதிரியை வைத்தே எதிரிகளை அழிப்பேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
  ———————

  “செபாஸ்டியன்” சீமான் தன்னுடைய தொப்புள்கொடி உறவின் பந்தத்தையும் தமிழ் முஸ்லிம் பாசத்தையும் என்னோடு பேசட்டும். நான் திருப்பி பேசினால் “நாண்டுக்கிட்டுதான் சாகனும்”.

 38. தமிழீழ அழிவுக்கு காரணம் ஜாதி வெறியே:

  இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர் வேதனையுடன் சொன்னது: “எங்களிடம் ஜின்னாவைப் போல் ஒரு தலைவன் இருந்திருந்தால், இந்நேரம் எங்களுடைய ஈழ நாட்டில் பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக நாங்களும் வாழ்ந்திருப்போம். கூட இருந்தே குழிப்பறித்து விட்டனர் அயோக்கியர்கள்”.
  ——————

  இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர் அனைவருமே தமிழ்க்கிருத்துவர்தான் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. முன்னூறு வருடங்கள் ஈழத்தில் வாழ்ந்தும், அறுபது வருடங்கள் தனிமாகாணம் நடத்தியும், பதினைந்தே நாட்களுக்குள் ஈழத்தையும் அதன் தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து ஈழத்தமிழனை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான் சிங்களன். இன்று கிழிந்த பாவாடையும் பட்டனில்லாத சட்டையும் அணிந்துகொண்டு, சிங்கள வெறியன் முன்னால் ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கிறாள் உமது ஈழத்தாய். இதற்கு யார் காரணம்?

  1990ல் தமிழீழ விடுதலை வரப்போகிறதென தெரிந்ததும், ஜாதி வெறி தலைதூக்கியது. நீ தலைவனா நான் தலைவனா என தொப்புள்கொடி உறவுகள் ஒருவரையொருவர் போட்தள்ள ஆரம்பித்தனர். “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு” என்பது போல் சிங்கள ராணுவம் சரியான தருணத்துக்கு காத்திருந்தது. நேரம் வந்தது. விடுதலைப்புலிகளை அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டான்.

 39. கடவுளுக்கே கூட எதிரிகள் இருப்பார்களா ? அல்லாஹ்வுக்கு எதிரிகள் உண்டு என்றால் அவர் கடவுளே அல்ல .

Leave a Reply