இஸ்லாமியர் வெறுப்பாளன் அதுவே என் வெற்றியின் ரகசியம்

திட்டமிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுகிறார் 29 பைசா பிரதமர்.
அவருக்கு முஸ்லிம் ஓட்டுகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல அதன் உள்ளீடு. இறைநம்பிக்கை வழியாக இந்துக்கள் ஓட்டை பெறுவதை விடவும், இஸ்லாமியர் வெறுப்பின் வழியாக இந்து உணர்வைக் கட்டமைத்து ஒட்டுமொத்தமாகப் பெறலாம் என்பதே அவர் திட்டம்.
குறிப்பாக ஹரியான, உ.பி. ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த முறையைத்தான் பல ஆண்டுகளாக கையாள்கிறார்கள். ராமர் கோயில் அதன் பக்தி வடிவம்.
இந்த நான்கு மாநிலங்களில் பெரும்பான்மை பெற்றுவிட்டால், நாட்டை பிடித்துவிடலாம் என்பது அவர்கள் திட்டம்.
அவரின் முஸ்லிம் வெறுப்பு எந்த அளவிற்குப் புகழ் பெறுகிறதோ அந்த அளவிற்கு அவருக்கு லாபம். அதனால்தான் தொடர்ந்து பேசுகிறார்.
எதிர்க்கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் தன்னை ஒரு இஸ்லாமிய வெறுப்பாளன் என்று தொடர்ந்து பேச வேண்டும். அது இந்துக்கள் ஓட்டை தனக்குப் பெற்றுத் தரும் என்பது அவர் திட்டம்.
அவரின் இஸ்லாமியர் எதிர்ப்பு பின்புலத்தில் இந்துக்களுக்கு எதிரான நயவஞ்சகம் இருக்கிறது என அம்பலப்படுத்திப் பேசுவதுதான் அதை உடைக்கும் வியூகம்.
இந்துக்களைப் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவராக அடையாளப்படுத்தி அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், நெசவு, இட ஒதுக்கீடு எல்லாவற்றையும் சூறையாடியவர்தான் 29 பைசா PM என அடையாளப்படுத்துவதே
குறிப்பாக இதை தேசியக்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் -வே. மதிமாறன்