இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

சேரனின் பாரதி கண்ணம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவருடைய வெற்றிக்கொடிக்கட்டு படமும் சிறந்த படம்தானே?

-விஜய ராஜன், சென்னை.

‘வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது; உயர்வு, தாழ்வு பார்க்காமல், தொழில் ரீதியாக எதையும் மட்டமாக நினைக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்’ என்பதுதான் அந்த படம் சொல்ல வந்த செய்தி.

ஆனாலும், அந்தப் படத்தின் வடிவேலு – பார்த்திபன் காமெடி காட்சிகள், மலம் அள்ளும் தோழர்களை கேவலப்படுத்தி, கேலி செய்து அவமானப்படுத்தியது.

மையமாக சொல்லவருகிற கருத்துக்கு எதிராக அந்தப் படத்திலேயே, நேர் எதிரான கருத்தை காமெடியாக காட்டுவது; கேலிக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும்கூட. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை இழிவாக சித்தரிப்பது தண்டனைக்குரியது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

தேர்தலில்… எம்.ஜி.ஆர், பாணியில் திமுக

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

ஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?


2 thoughts on “இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

  1. நல்ல அலசல்
    /*ஆனாலும், அந்தப் படத்தின் வடிவேலு – பார்த்திபன் காமெடி காட்சிகள், மலம் அள்ளும் தோழர்களை கேவலப்படுத்தி, கேலி செய்து அவமானப்படுத்தியது */
    வெளிநாட்டில் மலம் அல்லும் கதாபாத்திரத்தைதான் கேலி செய்வதாக அமைந்துள்ளது,
    படத்தின் கருவும் அதுதான்
    /*வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது */

Leave a Reply

%d bloggers like this: