பாரதிராஜா: கலைஞன் தேவராகிய கதைச் சுருக்கம்

பாரதிராஜாவை திறமையான இயக்குநர் இல்லை என்பது போல் போன தங்கம் இதழில் நீங்கள் குறிப்பிட்டது ரொம்ப அதிகம்.

என். மலைச்சாமி, திருப்பூர்.

‘திறமையான இயக்குநர் இல்லை’ என்று நான் குறிப்பிடவில்லை.

தமிழின் மிக அழகியலான, நேர்த்தியான முதல் திரைப்படம் 16 வயதினிலே. இந்தப் படத்தின் நாயகன் எளிய சப்பானி. படத்தில் யாருக்கும் ஜாதிய அடையாளம் இல்லை. கிழக்கே போகும் ரயிலில் சவரத் தொழிலாளிதான் நாயகன். இவை எல்லாம் பாரதிராஜா என்கிற கலைஞன் எடுத்த படங்கள்.

மண்வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே இவைகள் எல்லாம் பாரதிராஜா என்கிற தேவர் எடுத்த படங்கள். முதல் மரியாதை திரைக்கதையும், காட்சி அமைப்பும் நவீனமாக, அழகியலோடு இருந்தாலும் அதன் ஜாதி உணர்வு இயக்குநரின் கலை நேர்த்தியை ஒரு குறுகிய வட்டத்தினுள் சொருகி விட்டது.

முதல் மரியாதையில், வடிவுக்கரசி சிவாஜிக்கு எதிராக தன் உறவினர்களை (தேவர்) அழைத்து விருந்து வைப்பார். உறவினர்கள் சிவாஜியை இழிவாக பேசும்போது, அருவாளை உருவி, ‘நான் தேவன்டா..’ என்று ஜாதி வீரம் பேசுவார். அப்போ விருந்து சாப்பிடுறவங்க யாரு சீனாக்காரங்களா?

ஒரு தலித் பெண்ணை கொலை செய்தது தன் ஜாதிக்காரனே என்று தெரிந்தும் அவனுக்கு தண்டனை வாங்கித் தந்த நீதிமான் என்று சிவாஜி கதாபாத்திரத்தை தலித் தோழன் அடையாளத்திற்குள் திணிக்க முயன்றாலும், தன் காலில் குத்திய முள்ளைக் கூட குனிந்து எடுக்காமல், ‘செங்கோடா..’ என்று  ஒரு  தாழ்த்தப்பட்டவரை அழைத்து, அந்த முள்ளை எடுப்பது போன்ற காட்சியில் தலித் விரோதமும், ஜாதி திமிரும்தான் வெளிப்பட்டது.

பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்க வந்த வேதம் புதிது, பார்ப்பனியத்தின் இன்னொரு வடிவமான சுயஜாதி அபிமானத்தை சுற்றி வந்து மீண்டும் பார்ப்பனியத்தின் கால்களிலேயே விழுந்தது. அதனால்தான் வயது முதிர்ந்த அந்த பாலு தேவர், பார்ப்பன சிறுவன் முன் பரிதாபமாக கை கட்டி நின்றார்.

பாரதிராஜா திறமையானவர்தான். தமிழ் சினிமாவின் வடிவத்தையே தலைகீழாக மாற்றிய மகா கலைஞன்தான். ஆனால்…

அவர் பெரிய இயக்குநராக பிரபலமாவதற்கு முன் கலைஞனாக இருந்தார். பிரபலமான பிறகு தேவராகிவிட்டார். ஆனாலும், அவர் இயக்குர் ஆனதற்கு, அவருடைய ஜாதி உணர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதை அவர் உணரத் தவறிவிட்டார்.

ஆம், ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிய எஸ்.பி. பாலசுப்பிரணியம் தெலுங்கர். அவரை உதவியாளராக சேர்த்துக் கொண்ட புட்டண்ணா ஒரு கன்னடர். அவரின் முதல் பட தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு தேவர் இல்லை.

பாரதிராஜாவை மிகப் பெரிய இயக்குநராக கொண்டாடுகிற தமிழர்களில் தேவர் ஜாதி அல்லாதவர்களே மிக மிக மிக அதிகம். ஆனால், அவர் படமோ தேவர் ஜாதி தமிழர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது.

இது என்ன நியாயம்?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பாரதிராஜா சொல்வது உண்மையா?

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

19 thoughts on “பாரதிராஜா: கலைஞன் தேவராகிய கதைச் சுருக்கம்

  1. முதல் மரியாதையை படத்தில் சிவாஜி, ஒரு படிப்பறிவற்ற, கிராமத்து பண்ணையார். அப்படிப்பட்ட ஆளுமை அப்படித்தான் இருக்கும். அது படத்தில் இயல்பாகவும் இருந்தது. (அது நியாயமா என்றால் நான் இல்லை என்று சொல்வேன் என்பது வேறு விஷயம்). அதே பாரதிராஜா கிழக்கு சீமை படத்தில் உண்மை, லாஜிக், நியாயம் என்று சகலத்தையும் மீறி ஜாதி பெருமை பேசி இருந்தார். அதை யாராலும் மறுக்க முடியாது. தாஜ் மஹால் படத்திலும் அப்படித்தான். அனால் அந்த படத்தின் நாயகனும் பாரதி ராஜாவின் மகனுமான மனோஜ், மலையாளி நடிகை திருமணம் செய்து கொண்டாரே… உலகபுகழ் வாய்ந்த ( அப்படித்தானே அவர் படங்களில் சொல்கிறார்) தேவர் ஜாதியில் பெண் எடுத்திருக்க வேண்டியதுதானே? அது ஒரு புறம் இருக்கட்டும். மனோஜின் குழந்தை தேவரா? மலையாளியா? தன் தந்தையின் ஜாதி பெருமையை தூக்கி கடாசிவிட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்த மனோஜ் பாராட்டுக்குரியவர். அவரை விட்டுவிடுவோம். பாரதிராஜாவின் பதில் என்ன?

  2. பாரதிராஜா சாதி வெறி கலைஞர்.முதல் படியில் ஜாதியில்லை
    என்று பாம்மாத்து செய்வது பல படி ஏறிய பின்ஜாதி பெருமையை
    துாக்கி பிடிப்பது .இதுக்கு பேரு பச்சோதந்தி தனம்மில்லையா?

    மேல்ஜாதியில் திருமணம் முடிப்பது ஜாதி மறுப்பு திருமணமல்ல,
    கீழ்நிலை ஜாதியும் மேல்நிலை ஜாதியும் திருமணம் முடிப்பதே!
    ஜாதி மறுப்பு திருமணமாகும்

  3. என்று ஜாதி வீரம் பேசுவார். அப்போ விருந்து சாப்பிடுறவங்க யாரு சீனாக்காரய்களா?//

    படிச்சிட்டு சத்தமா சிரிச்சிட்டேன் எங்க மேனேஜர் வரை சிரிப்பு சத்தம் கேட்டு என்னப்பா என்று கேட்க அனைவரும் படித்து ஆம் உண்மை தான்… பாரதிராஜா இப்பேர்பட்ட ஆளா ந்னு எளிதி புரிந்து கொண்டனர்.

    தொடர்ந்து சாதிவெறியர்களின் அய்யோக்கிய தனங்களை மிக எளிதாக புரிந்து கொள்ளும் படி எழுதும் உங்கள் பணிக்கு நன்றி

  4. என்று ஜாதி வீரம் பேசுவார். அப்போ விருந்து சாப்பிடுறவங்க யாரு சீனாக்காரய்களா?//

    படிச்சிட்டு சத்தமா சிரிச்சிட்டேன் எங்க மேனேஜர் வரை சிரிப்பு சத்தம் கேட்டு என்னப்பா என்று கேட்க அனைவரும் படித்து ஆம் உண்மை தான்… பாரதிராஜா இப்பேர்பட்ட ஆளா ந்னு எளிதி புரிந்து கொண்டனர்.

    தொடர்ந்து சாதிவெறியர்களின் அய்யோக்கிய தனங்களை மிக எளிதாக புரிந்து கொள்ளும் படி எழுதும் உங்கள் பணிக்கு நன்றி

    ஸ்ரீதர்

  5. இந்த நாட்ல வீண் ஜம்பம் விதண்டாவாதமும் பேசுற ஒரே ஜாதி பாரதிராஜா கூட்டந்தானென்று எல்லோருக்கும் தெரிந்ததே.ஆனா அங்கேதான் பன்னீர்சசெல்வங்களும் இருக்கிறார்கள்.

  6. எந்த ஜாதியைப்பற்றி படம் எடுப்பது என்பது அவர் உரிமை.உங்கள் ஜாதியைப்பற்றிதான் படம் எடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.பிடித்தால் மக்கள் பார்ப்பார்கள்

  7. //தன் காலில் குத்திய முள்ளைக் கூட குனிந்து எடுக்காமல், ‘செங்கோடா..’ என்று ஒரு தாழ்த்தப்பட்டவரை அழைத்து, அந்த முள்ளை எடுப்பது போன்ற காட்சியில் தலித் விரோதமும், ஜாதி திமிரும்தான் வெளிப்பட்டது.//

    // யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல.. ///

  8. Bharathiraja started showing his caste colour from Man vaasanai itself….upto Sigappu Rojakkal, puthiya Vaarppugal he was ok..then only he turned to a fanatic towards his caste….One thing we should keep in mind…Balachandar has demoralised Brahmin community in almost all his films, but he has been hailed by them only…If any body follows Bharathiraja one would conclude
    that Thevar means weapons,,,alcohol brewing…family fights…etc…if you remember in one scene in Kizhakku Seemaiyile where the villagers meet to discuss about the family issue one character
    will be distributing Saaraayam to every one.But unfortunately Thevar community did not realize that they are exploited and exposed in a bad manner to the world..Steven Spielberg did one service to his Jew Community in one film called Schindler’s List by showing the plights of Jews during the holocaust and that was the real service to the community…But Bharathiraja proudly declares that his community is KUTRA PARAMBARAI…!The de- notified community has come a long way after independence and Nadar community also has come a long way but not even one film from that community people showing their community in bad light..the agony is ,many people who have followed his trend did the same damage to their own community by following his foot steps..that is why the trend was settled in cinema..Madurai means..Aruval and Koduval…he is the culprit..He may argue that it is history ..but why you should highlight the negative aspects alone? there are so many educated in all fields from the same community .But he is giving a poor colour for this generation also…Vivek is also following the same..though he was introduced by a brahmin ..when he had issues with Sun TV he played the caste card..like karunas…to some extent Vairamuthu also playing caste card in his stories..They should remember they are assets for all Tamils..This is how the cinema people are en cashing on EZHAM TAMILS…If they have not depended on Tamizh Nadu they would have achieved their goal long back..But their issue is used here only for getting clapping in meetings and cinema halls.The mere ego between MGR and Karunanidhi was the net result we lost Prabakaran..This is not cinema but the portrayal.. of our history to the feature…But people like Bharathiraja are pseudos…You can call this as suicide….

    Since i do not know Thamizh Typing here my emotions are translated in English to some extent only….

  9. எங்கள் ஜாதியை பற்றி எங்க குலத்த சேர்ந்த யாராவது தான் படம் எடுக்க முடியும். எவன் சொன்னான் ஜாதி இல்லைன்னு. எங்களுக்கு இருக்கது ஜாதி வெறி இல்லை. ஜாதி பற்று. உங்களுக்கு தேவைனா உங்க ஜாதியை பற்றி படம் எடுத்துகங்கடா . எங்கலுக்கு ஜாதி வெறி வர வைக்கிறதே உங்க வாய் சவால்டல்கதான் .

  10. see singam you will see caste propaganda that we are worshiping …..god and grocery shop comment you will see some indirect way. latest you can see annatchi thing in idarkkuthane aasai pattatai balakumara.

    every body is like that only, like director samy

  11. in tamil nadu caste is like blood group everybody has that stupit feeling without any bias, if you have done 100 mtrs sprint world record wont you say about this to your successors? your successors wont say about you to their successors ? the fact is valor and warrior life is all what people like most.study tamil silapathikaram ,aga400 pura400.you will get the answer why people in that seduction. people like warrior ,brave ,see sucise types of martials that time.see kumarikandam pandyan dynasty.they have reason to do so .most of all tamil speaking persons are from 40000 years old pandian dynasty .in force who is working in officers house wont get respect like that time who went to serve in palace indoor wont get respect.

  12. than kalil kuthiya mullai edukka sonnavar bharathiraja illa that is insight of that social scene

    you are saying to take a movie about drug dealer and drug addict with out showing drugs. we can but will it be fulfilled ?

    artist different from racist

    will you give your sister to a low caste? be practical.

  13. everybody know top caste to bottom that there is not anything in this world but its a family as a million er wont give her daughter to a beg er, we wont as he takes money as factor we do take valor courage brave as factor . i ill bring my grand ma you fight with her if you win i agree that we dont have courage k its a family
    ?

  14. //எங்கள் ஜாதியை பற்றி எங்க குலத்த சேர்ந்த யாராவது தான் படம் எடுக்க முடியும். எவன் சொன்னான் ஜாதி இல்லைன்னு. எங்களுக்கு இருக்கது ஜாதி வெறி இல்லை. ஜாதி பற்று. உங்களுக்கு தேவைனா உங்க ஜாதியை பற்றி படம் எடுத்துகங்கடா . எங்கலுக்கு ஜாதி வெறி வர வைக்கிறதே உங்க வாய் சவால்டல்கதான் .//

    Theruvula pichai edukkurvan un jaathi nu therinja sothula paathiya eludhiyada kudukka pora. Yen indha jaathi veri? Mudhala manushana irunga da!

  15. Ungal katturaikku ennudaiya nandrigalai theyrivithu kolkindren… Unmaiyil velicham

Leave a Reply

%d bloggers like this: