காதல் ஜாதியை ஒழிக்காது….

love game

ஜாதிக்கு எதிரான, மதத்திற்கு எதிரான அரசியல் காரணங்கள் இல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் மத வெறியர்களாக, ஜாதி வெறியார்களாக  இருக்கிறார்கள்.

கணவன் என்ன ஜாதியோ அல்லது என்ன மதமோ அவனது அடையாளமே மனைவி மற்றும் குழந்தைகள் மீது வன்முறையாக திணிக்கப்படுகிறது.

குழந்தைகளின் ஜாதி அடையாளமாக கணவனின் ஜாதி அடையாளமும் அவனுது குடும்ப பழக்கமுமே கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று அடாவாடித்தனம் நிகழ்கிறது.இவைகளை ஒத்துக் கொள்ளாதபோது சண்டை, வன்முறை, விவாகரத்து போன்றவை ஏற்படுகிறது.

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களின் மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து, பொது அடையாளத்திற்கு அதாவது ஜாதி, மத எதிர்ப்பாளராக – பகுத்தறிவாளராக இருந்தால்தான் குழந்தைகளையும் சிறப்பாக வளர்க்க முடியும். காதலையும் காப்பாற்ற முடியும்.  காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இல்லையேல்…….

விரிவாக தெரிந்து கொள்ள, கீழ் உள்ள ஒலி சுட்டி……

பகுதி ஐந்து

12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம்.

‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன செய்திகள் ஆழமாக கேட்பவரை போய் சேரும். இன்னும் அதிகமானவர்கள் கேட்க முடியும்’ என்று நண்பர்கள்  கேட்டுக்கொண்டதால், ஒலி வடிவப் பேட்டியை ஒவ்வொரு கேள்விகளாக வெளியிடுகிறோம்.

இந்தக் கேள்விகளை தனித்தனியாக சிறப்பான முறையில் தொகுத்து எடிட் செய்த நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி.

கேட்க விரும்பினால், கீழே உள்ள ஒலி சுட்டியை அழத்தவும்.

12.4.2009 அன்று எடுத்தப் பேட்டி.

-தொடரும்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

2 thoughts on “காதல் ஜாதியை ஒழிக்காது….

  1. உண்மை அண்ணா ,
    பகுத்தறிவு சிந்தனை மேலோங்காதவரை காதல் மணமும் கசக்கும் என்பது உண்மையே.

    அரசு காதல் மணம் செய்தவரில் கணவன் எந்த சாதியை சார்ந்தவனோ அந்த சாதியையே குழந்த்தைக்கு ஏற்றுக்கொண்ட பழைய சட்டத்தை மாற்றி மனைவி தாழ்ந்த சாதி என்றாலும் அந்த சாதியை குழந்த்தைக்கு எடுத்துக்கொ்ள்ளலாம் என்ற போதும்

    நீங்கள் சொன்ன முற்போக்கு சிந்தனை இன்றி இல்வாழ்க்கை கசந்து போறது தான் அதிகம்.அது மாற மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்.அது பகுத்தறிவு மக்கள் மனதில் வர வேனும் என்ற ஒன்னுதான் வழி.

  2. அண்ணா,
    ஒலி வடிவில் நீங்கள் பதில் தருவதை தொடருங்கள். தினமும் உங்களது கருத்துகளை கேட்டு வருகிறேன்.

Leave a Reply

%d bloggers like this: