காங்கிரசை முற்றிலுமாக ஒழிக்க எளிய வழி
நேற்று காலை தஞ்சையிலிருந்து தோழர் நா.இரவிச் சந்திரன் தேர்தல் முடிவுகள் பற்றி பேசினார். அவர் பெரியார் பற்றாளர். ஆசிரியர்.
மோடி வெற்றி பெற்றதை குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். தருமபுரி, கன்னியாகுமரி குறித்தும் அவர் வருத்தம் இருந்தது. திமுக முற்றிலும் தோற்றுப்போனதற்காகவும் வருத்தப்பட்டார்.
இருந்தாலும் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது அவருக்கு ஒர் ஆறுதல்.
“ஆனா.. தஞ்சையில் காங்கிரஸை விட கம்யுனிஸ்டுகள் குறைவான ஓட்டு வாங்கியுள்ளனர். இத்தனைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையில் தான் இருக்கிறது. அதை விட முக்கியம் காங்கிரசுக்கு எதிராக, கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக நெடுமாறன் பிரச்சாரம் செய்தார். அப்படியிருந்தும் கம்யுனிஸ்ட், காங்கிரசிடம் பின் தங்கி விட்டது” என்றார்.
நான் சொன்னேன்: இதுல இருந்து என்ன தெரியது.. இன்னும் காங்கிரசை முற்றிலுமாக ஒழிக்கணும் என்றால் அதற்கு ஒரே வழி, எப்பபாடு பட்டாவது நெடுமாறனை காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும், என்றேன்.
நேற்று (18-5-2014) facebook ல் எழுதியது.
இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்
எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்
தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…
அதுகூட தேவை இல்லை.மதிமாறன் காங்க்ரெஸ் கட்சியை ஆதரித்து இரண்டு கட்டுரை எழுதினால் போதும்.
நினைவிற்கு வந்த ஒரு விசயத்தைதிரு. மதிமாரனுக்காக இங்கே பகிர்கிறேன்.
எரிபொருள் சிக்கனம் பற்றி வலியுருத்துவதர்க்காக ஒரு விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.
சிகப்பு, ஆரஞ்சு,மற்றும் பச்சை வண்ணமடிக்கப்பட்ட சம எடை கொண்ட மூன்று லாரிகள் காண்பிக்கப்பட்டன.மூன்றிலும் சம அளவில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
முதலில் சிவப்பு வண்ண வண்டி மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பயணித்து 25 கி.மீ.தூரம் பயணித்தும் எரிபொருள் இல்லாமையால் நின்றுவிட்டது.
அடுத்து புறப்பட்ட ஆரஞ்சு நிற வாகனம் மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் பயணித்து 45 கி.மீ.தூரம் பயணித்ததும் எரிபொருள் இல்லாமையால் நின்றுவிட்டது.
அடுத்து புறப்பட்ட பச்சை நிற வாகனம் மணிக்கு 45 கி.மீ.வேகத்தில் பயணித்து 60 கி.மீ.தூரம் பயணித்ததும் எரிபொருள் இல்லாமையால் நின்றுவிட்டது.
பின்னர் பார்வையாளர்களிடம் “இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்” என கேட்டபொழுது
“அனைத்து வாகனங்களுக்கும் இனிமேல் பச்சை நிறம் மட்டுமே அடிக்கவேண்டும், அப்பொழுதுதான் எரிபொருள் நீண்ட தூரதிர்க்கு (தீராது)வரும்” என பதிலளித்தார்களாம்.
பெரியாரின் கருத்துக்களையும் பலபேர் இப்படிதான் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
என்ன செய்வது?உலகத்தில் எல்லோரும் நம்ம வேலுமணி மாதிரி அறிவு கொழுந்தா பிறக்கவில்லயே?
எங்களை போன்ற சாமானியரின் அறிவை விடுங்கள் .நீங்கள் தான் பகுத்தறிவு சிங்கங்கள் ஆச்சே ?பின்னர் ஏன் கவலை?