அவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..

ஆதரவு, அனுசரணை, கருணை, அன்பு, காதல் என்ற உணர்வுகளை உண்மைக்குள் நிரம்பி, மனிதர்களை ஆழ்ந்து நேசிக்கச் சொல்கிறது இந்தப் பாடலின் மெட்டு.

உடன் ஒலிக்கிற பியானோ, சிதார், கிபோர்ட்; ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை இனிமைகளால் செய்யப்பட்டது என்பதை உறுதியாக அறிவிக்கிறது.

‘உன் நெஞ்சிலே பாரம்..’ – முடிவில் ஒலிக்கிற புல்லாங்குழல், ‘உனக்காகவே நானும்..’ – மீண்டும் ஒலிக்கிற புல்லாங்குழல்.. என்ன சொல்றது?
‘இந்தப் பாடலின் உன்னதத்தை இன்னும் கூடுதலாக உணர, நான் பெண்ணாக இல்லையே’ என்கிற ஏக்கத்தை, கேட்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படுத்துகிற பாடல்.

ஆனால், படத்தில் ஒரு பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றுகிறவன் திட்டமிட்டுப் பாடுவதுபோல் இந்தப் பாடலை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ருத்ரையா.

ஒரு ஏமாற்றுக்காரனால் இவ்வளவு உன்னத இசையைத் தரமுடியுமா? அதெப்படி முடியும்..?
எனக்கு இந்தப் பாடல் தருகிற உணர்வை, பாடல் காட்சி தரவில்லை என்று சொல்வதை விட, தர‘வே’ இல்லை என்றே சொல்வேன்.
காட்சிக்கான சூழல் நினைவுக்கு வரும்போதெல்லாம் இயக்குநர் இந்தப் பாடலின் ‘உண்மையை’ அவமதித்துவிட்டதாகவே தோன்றுகிறது.

12 September at 12:50

இயக்குநர்களை, நடிகர்களை வீழ்த்திய இசையமைப்பாளர்

பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார்

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

4 thoughts on “அவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..

  1. Leelakumar Leela · 3 mutual friends
    சின்னதாயி படத்தில் அரும்பரும்பா பாடல் கேட்டு இருக்கிறீர்களா
    Unlike · Reply · 3 · 12 September at 13:04
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி கோட்டைய விட்டு வேட்டைக்கிப் போகும் சொடலமாட சாமி

    நா ஏரிக்கர மேலிருந்து எட்டுத்தெச பாத்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல

    படம் மறந்தாலும் பாட்டு மனசுல நின்னு போச்சு
    Unlike · Reply · 2 · 12 September at 13:08
    Bharathi Mithran
    Bharathi Mithran enakum piditha paadal..,aanal ivalavu aazhnthu yosikkavillai….deep observation thozhare
    Unlike · Reply · 1 · 12 September at 13:08
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றிஃ
    Like · Reply · 13 September at 23:11
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2014/03/18/avatharam-796/

    ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத…
    MATHIMARAN.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 5 · 12 September at 13:10
    வேல்துரை ராஜ்குமார்
    வேல்துரை ராஜ்குமார் உங்க கவுண்டர் காக, எல்லாம் ஏத்துக்கமுடியாது,
    Like · Reply · 12 September at 13:21
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ‘எங்க கவுண்டர்’ யாரு?
    Like · Reply · 2 · 12 September at 13:22
    வேல்துரை ராஜ்குமார்
    வேல்துரை ராஜ்குமார் i mean counter point
    Like · Reply · 1 · 12 September at 13:23
    வேல்துரை ராஜ்குமார்
    வேல்துரை ராஜ்குமார் அவள் அப்படித்தான் …
    Like · Reply · 12 September at 13:25
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 5 mutual friends
    ஒரு ஏமாற்றுக்காரனால் உன்னத இசையைத் தரமுடியுமா என கேட்டிருக்கிறீர்கள். செயல் திறனுக்கும், தனி மனித அறத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. பல உதாரணங்கள் உண்டு. உன்னதமான கலைஞன் அறத்தை மதிப்பவனாக இருந்தால் நல்லது.
    Like · Reply · 2 · 12 September at 14:00
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi good point
    Like · Reply · 1 · 12 September at 13:23
    Sathya Chella
    Sathya Chella · 7 mutual friends
    “Good point Mr Ambedkar ” nu neenga pesnadhu nyabagathuku varudhu
    Unlike · Reply · 1 · 12 September at 14:35
    Sathya Chella
    Sathya Chella · 7 mutual friends
    I have seen all your videos in net..
    Like · Reply · 12 September at 14:36
    Sathya Chella
    Sathya Chella · 7 mutual friends
    All athupadi
    Like · Reply · 12 September at 14:36
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 13 September at 23:12
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Sumathy Thangapandian
    Sumathy Thangapandian இந்தப் பாடலின் இசையமைப்பும் குரலும் வரிகளும் கேட்கும் ஓவ்வொரு முறையும் எனக்குள் எழுப்பும் உணர்வை எப்படிச் சொல்ல தோழர்Mathimaran V Mathi இதன் கைப்பிடிப்பில் உலகத் துயரனைத்தும் கடந்து விடலாம்
    But i second Balasubramanian muthusamy’ s comment above-:))( அதோடு கலை என்பது செயல் திறன் மட்டும் சார்ந்ததல்லவே)
    Unlike · Reply · 2 · 12 September at 15:12
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ஆமாம்.
    Like · Reply · 13 September at 23:15
    Priyakumar Paul
    Priyakumar Paul · 2 mutual friends
    I apologize for writing in English,
    Ilayaraja is somebody who understands the nature of Tamils more than anyone, like the director, actor or even the writer who wrote the story.
    Thank you Mr Mathimaran for seeing Raja as he is.
    I’m proud of living in the same time as Ilayaraja rules Tamil’s hearts.
    Thank you again.
    Priyan
    Unlike · Reply · 2 · 12 September at 17:52
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2015/06/17/raja-1097-1/

    பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார்
    MATHIMARAN.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 1 · 12 September at 22:01
    Mukesh
    Mukesh TRUE SIR
    Unlike · Reply · 1 · 12 September at 23:37
    Krishna Krishnaa
    Krishna Krishnaa · 2 mutual friends
    Annaa…ithellam nakku thevaye illa naama kolgaiyai parapura velaya paakalam nethu thaan ingarsal history padichen great vulagalaviya sindhanaigonda oru thalaivan periyarai potra marantha kootathin madamai thiruthuvom
    Like · Reply · 13 September at 00:14
    தஞ்சை தவசி
    தஞ்சை தவசி · Friends with S Mathiyazhagan and 1 other
    அரிச்சந்திரன் வடிவிலும்
    துச்சாதனன்கள்
    ஆண்களில் உண்டு
    இந்திரன்போல
    திறமைகள்
    காட்டுவார்கள்!!…
    ஏமாற பெண்கள் தயாராக
    இருக்கக்கூடாது ?
    அவள்
    அப்படி இருக்கக்கூடாது
    அவள் அப்படித்தான்
    இருக்க
    படைக்கப் பட்டாளா??
    காட்சிஅதை தத்ரூபப்படுத்தி
    பாடல் மூலம்
    அகச்சலனம் சினிமாவாய்
    விரிகிறதாய் நான்
    கருதுகிறேன்…
    Like · Reply · 13 September at 12:19
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2014/03/07/johnny-788/

    உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி
    MATHIMARAN.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 2 · 13 September at 16:34
    குறிஞ்சி நாடன்
    குறிஞ்சி நாடன் அருமை தோழர் …மனித முகங்களையே பார்த்து கொண்டிருந்த என்னை போன்ற சாதரண ரசிகனையும்,இசையின் நுட்பங்களை கேட்க வைத்தது நீங்கள்தான்….நன்றி இசையால் இனைவோம்
    Like · Reply · 13 September at 16:55
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி. மகிழ்ச்சி.
    Like · Reply · 1 · 13 September at 23:14
    Pushpaa Hashraj
    Pushpaa Hashraj · 11 mutual friends
    நான் இந்த பாடலை ரசித்திருக்கிறேன்.படத்தை பார்க்கவில்லை. கோயில் புறா படத்தில் வரும் அமுதே தமிழே பாடலை சோர்வு வரும் போதெல்லாம் கேட்பேன். நாதசுரத்தில் வரும் கொண்டாட்டம் மிகுந்த அந்த இசையை நீங்கள் சுவைத்ததுண்டா?
    Like · Reply · 1 · 13 September at 19:03
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2013/08/14/pasamalar-668/

    மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’
    ‘மலர்ந்தும் மலராத… பாதிமலர் போல..’ கேட்பவர்களுக்கு சிறகு முளைக்க வைக்கும்…
    MATHIMARAN.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 14 September at 11:02
    Nelson Michael
    Nelson Michael · 2 mutual friends
    சரிதான் தோழா….!
    Unlike · Reply · 1

  2. உண்மையில் இந்த காணொளியை இப்பொழுது தான் முதலில் பார்க்கிறேன், இந்தப் படத்தையும் பார்க்கவில்லை. முதலில் ஒருவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு இவர் மனதை சமாதானப்படுத்தி வாழ்க்கைக் கொடுக்கிறார் என்று தான் எண்ணினேன். உங்கள் கருத்தை அந்தக் காணொளியின் பின்னூட்டமாக மஸ்கட் மஸ்தான் கொடுத்திருந்தார். அதை வாசித்த பின் அந்த உன்மத்தம் சரிந்து தான் போனது, இசை என்னவோ மனதுக்குள் ரீங்காரம் இட்டுக்கொண்டு தான் இருக்கிறது. உன்னத இசைக்குப் பொறுத்தமில்லாத காட்சி அமைப்பு.

Leave a Reply

%d bloggers like this: