அதிகமில்லை gentleman ரெண்டே வார்த்தைதான்

நேரடி திராவிட, திமுக எதிர்ப்பை எதிர்கொள்வது சுலபமானது. அவர்களே தன்னை அம்பலப்படுத்திக் கொள்வார்கள். மீதி வேலையைப் பார்த்தா போதும், முடிவுக்கு வந்துடும்.

நடுநிலை, முற்போக்கு சில நேரங்களில் திமுக வை ஆதரிப்பதுபோல் உள்குத்து வைப்பவர்களைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்துவதுதான் சிரமம்.

இவர்கள் நேரடி எதிரிகளை விட நுட்பமானவர்கள். ஆபத்தானவர்கள். பாராட்டிப் பேசிவிட்டு இடையில் ஒரு பொய்யைச் சொருகிவிடுவார்கள். அது உண்மைபோல் பதிவாகும். பிறகு எதிரிகள் அதை பிரபலப்படுத்துவார்கள்.

‘சர்க்காரிய ஊழல், திருட்டு ரயில், எமெர்ஜென்சியில் கைதாகவில்லை, முரசொலி பஞ்சமி நிலம்’ இவை நடுநிலையாளர்கள் திமுகவிற்கு எதிராக பரப்பிய வதந்திகள்.

இன்னும் நுட்பமாக திமுகவின் சாதனைகளை அதிமுக கணக்கிலும் எழுதுவார்கள். இப்படிதான் நேற்று, திமுகவின் சிறப்புகளை ஆதரவாளர் போல் அதிமுக பக்கம் தள்ளிவிட்ட மூத்த பத்திரிகையாளர் ரகுவின் செய்கையை அடுத்த நொடியோ கண்டித்தேன்.

அவர் கொந்தளித்தார்.

இன்னும் இரண்டு வார்த்தை வீசினால், அவருள் பதுங்கும் திமுக காழ்ப்புணர்ச்சியை அவர் வாயாலேயே அம்பலப்படுத்தமுடியும் என்று நினைத்தேன்.

என் நம்பிக்கையை ரகு வீணாக்கவில்லை.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading